Blog Archive

Friday, June 27, 2014

ஃபெங் ஷுவியும் நானும்

அருள் தரும்  அம்மாஜி:)
தண்ணீர் சத்தம் கேட்க வேண்டும்!!
Add caption
Add caption

 வாஸ்து டால்ஃபின்

Feng shui எனும் ஃபங் ஷ்வே என் வாழ்க்கையில் புகுந்தது எப்போதுனு யோசித்தேன்...உட்காரப் போனேன்...............உடனே

ஓஹோ வடக்குப் பார்த்து உட்காரக் கூடாதோ!!!

 தெற்கே பார்த்துத் திரும்பி உட்கார்ந்து கொண்டேன். அம்மா சாமி கும்பிடுதுனு மினிம்மாவும் விடை வாங்கிக்கொண்டு வீட்டுக்குப் போனாள்.

ஒரு ச்சின்ன ஸ்டூல். அதில ஒரு கண்ணாடி பௌல். தண்ணீர் நிரப்பி அதில் இரண்டு கல்லு,கொஞ்சம் எண்ணை,ஒரு ஃப்ளோட்டிங் தீபம், கொஞ்சம் பூக்கள் உதிர்த்துப் போட்டுக் கண்திருஷ்டிக்கு ஒரு வேப்பிலை, பக்கத்திலேயே ஒரு சிங்கப்பூர் சாம்பிராணி.. இன்ஸ்டண்ட் மாயாலோகம்.

த்யானம் செய்ய வசதியா, ஒரு நாற்காலி,போற வறவங்களுக்கு இடைஞ்சலா வெளி வாசல் ,பின் வாசலுக்கு நடுவில் தான் இதெல்லாம் இருக்கும்.

கைல ஜபமாலை. ,கழுத்தில ருத்த்ராட்சம்.. போதுமா. இப்பவே ஒரு பிக்சர் கிடைத்திருக்குமே. எல்லாம் நம்ம விஷுவலைசேஷனோட பெருமை.......

இது ஒரு பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்னால் வீட்டுக்கு நலம்னு நான் கத்துக்கிட்ட சீன வாஸ்து.

வீட்டில ஏதவது நல்லது நடக்கணும்னால் இது போல தீபம்,தியானம் ,சி (chi) சக்தி,,சிவப்பு ,பச்சை,கறுப்பு,மஞ்சள் நிறங்களோட மகிமை,

யின் அண்ட் யாங், நான் எலியா,புலியானு ஆராய்ச்சி....





அதாவது இந்த வருஷம் பிறந்தா இந்த மிருகம்னு சைனீஸ் ல இருக்கும்

அது பிரகாரம் நான் எலினு தெரிஞ்சுது., எங்க வீட்டுக்காரர் முயல்னோ வேற ஏதொ போட்டு இருந்தது. எலியும் பூனையும்னால் கூட ஒத்துக் கொள்ளலாம்.

எலியும் முயலும் சினேகமா இருக்குமான்னும் அப்போது திடீர்னு சந்தேகம். ஆனால் நாங்க சகித்துக் கொள்கிற சதிபதியா இருந்ததால எலியும் முயலும் தோழமை சக்திகள்தானு உறுதிப் படுத்திக் கொண்டேன். :)))

அப்படி ஒரு வாஸ்து பிரமை ஒரு பத்து மாதம் வரை ஆட்டி வைத்தது. வாஸ்து சாஸ்திரம் தப்பு என்றோ சைனீஸ் மட்டம் என்றோ சொல்ல வரவில்லை. நான் வாஸ்து விஷயத்தில் நடந்து கொண்டவிதம் கொஞ்சம் விபரீதம்..

நம்ம வீட்டுக்கு வரவங்க போறவங்களுக்கெல்லாம் வாஸ்து அறிவுரைகளை வாரி வழங்குவோம்.

தாராளமாக வழங்கப்படும்.இந்த அறிவுரைகளைக் கேட்டு,அவர்கள் சுற்றிய ரீலோடு அது திருப்பி எனக்கேஇன்னும் சொல்லப் போனனல் வரவங்க எல்லார் மூலமாவும் எனக்கு ஹிண்ட்ஸ் வர ஆரம்பிச்சுது..

"ஏங்க இந்த டைனிங் டேபிள் கிழக்கு மேற்கா இருக்கலாமே,

தெற்கு பார்த்து சோஃபாவைப் போடலாமே. சம்பந்தம் பேச வரவங்களுக்கு மேல்கையா நீங்க இருக்கணும்.(அப்போது எங்க பையன்களுக்குத் திருமணம் முயற்சிகள் செய்து கொண்டிருந்தநேரம் )

இதென்ன ரம்மியா, நான் ட்ரம்ப் கார்டு விளையாட. மேல் கை,கீழ் கை என்றுபேச.

காம்பவுண்ட் சுவருல பிள்ளையார் வரஞ்சிடலாம். தெருவில இருந்து கண் போடறவங்க கிட்டே இருந்து தப்பிக்க வழி.

வீடு கட்டின விதமே சரியில்லீங்க, ஒரு மாதிரி அகல நீளமெல்லாம் ஆராயம கட்டிட்டாங்க."

இதெல்லாம் சொன்னவங்க, வீட்டுக்குப் பெயிண்ட் அடிக்க வரவங்க,ஏசிக்காக சுவரில இடிச்சுக் கட்டினவங்க, குளிக்கிற அறையில டைல்ஸ் போட்டவங்க,காண்ட்ராக்டர்.....இவங்களைத் தவிர புதிசா வீடு கட்டினவங்களும் அடங்கும்.

நாங்களா கேப்போம்.....??என்னிக்காவது கேட்டு இருந்தாத்தானே.......

அதற்குப்பதில் மௌண்ட்ரோடுக்குப் படையெடுத்தேன்,அப்ப ஒரு புகழ்பெற்ற ஃபங்ஷுவே கடை அங்கே இயங்கிக்கொண்டிருந்தது.(இப்ப மூடிட்டாங்கன்னு கேள்விப்பட்டேன். :)))

ஆஹா, அந்த அனுபவத்த இப்ப நினைச்சாலும் கலங்கறது மனசு.

எவ்வளவு பெரிய முட்டாளை எங்க அம்மா அப்பா உலகத்துக்கு

வாரி வழங்கி இருக்காங்கனு.

அங்க இருந்த கடை சொந்தக்காரங்க நான் உள்ள நுழைந்ததும் ஒரு நல்ல நாற்காலியில் உட்கார வச்சாங்க. நானும் சுத்திமுத்திப் பார்த்தேன்.

கொஞ்சம் இருட்டு,வாசனை மெழுகுவர்த்திகள் வெளிச்சம் கொடுத்தன.

அத்தனூண்டு சின்னக் கடைக்குள்ள,மணிகள்,விண்ட்சைம்ஸ்,விதவிதமான ஆமை,டிராகன்,தவளை,சிரிக்கிற, குண்டா இருக்கிற புத்தா பொம்மைகள், மாலைகள்,வர்ணம் நிறம்பிய கூழாங்கற்கள்,திபேத்தியன் இசையோடு,சாம்பிராணி வாசனையோடு,பக்கத்திலேயெ சிவலிங்கம், குட்டி மீன்கள்,மோதிரங்கள்......

ஒருமாதிரி அம்மனொ சாமியோ(இப்பத்தி மொழிப்படி மந்திரிச்சுவிட்ட ஆடு) நிலைமைக்குப் போகும்போது

அந்த அம்மா உங்களுக்கு என்ன மாதிரி பிரச்சினைனு என்கிட்ட சொன்னா நான் தீர்த்துவைக்கிறேன்.

இடிக்க வேணாம்,கட்ட வேணாம். ரெய்கி,சைனீஸ் வாஸ்து இதில சொல்லப் படாத நிவாரணமே இல்லை.அப்படின்னு சொல்லி விதமான மணிமாலைகள்,மோதிரங்கள்,சிகப்பு வெல்வெட் பைகள்,விசிறிகள்,பறக்கிற வாத்துகள் படம், பெரிய பொம்மைமீன் சிகப்புக் கண்ணோட,டர்ட்டில் டோவ் இன்னும் சில பொருட்கள் மறந்துவிட்டது. (எல்லாப் பொருட்களையும் ஒரு கணிசமான

விலைக்கு வாங்கிக் கொண்டேன், வாங்க வைக்கப் பட்டேன்:))))

அதற்கும், அதாவது என் மறதிக்கும் ஏதோ மந்திரிச்சுக் கொடுத்தாங்க.)

அப்புறம் என் நடவடிக்கையே மாறிவிட்டது.





சும்மா இருந்த வீட்டு வரவேற்பறை வண்ணக்குவியலாக மாறியது

வீட்டு வாசலைப் பார்த்து வெங்கடாசலபதி படம்,பக்கத்துலேயே பிள்ளையார்

அவங்க படத்துக்குக் கீழே ஒரு சிகப்பு வெல்வெட் சக்கரம்,
அதுக்கும் கீழே மஞ்சள்தங்கக் கலரில் ஓம்,

பேரனுக்காகக் கட்டின ஊஞ்சலில் மயிலிறகுக்கொத்து.
அத்ற்கு மேலெ காற்றில் ஆடினால் சத்தம் செய்யும் விண்ட்சைம்.

அது சரியா,சிங்கம் வந்து உட்கார்ந்து டிவி ஃபான் போட்டதும்
 கிளின்க் க்ளாங் சத்தம் போட ஆரம்பிக்குமா.டிவீல "டை ஹார்ட்" cinema
பார்ப்பாரா,

இந்தக் கசமுசாவைக்கேட்பாரா.....

அதுக்கு ஒரு ரப்பர்பாண்ட் போட்டுவிட்டார். விஷயம் தெரியாத நான்
''கோவில்மணி ஓசைதன்னைக் கேட்டதாரோனு பாடிக்கொண்டு
கூடத்துக்கு வந்தால் அது வாய் மூடி மௌனியாக இருக்கு.



இந்த கட்டறதும்,அவுத்துவிடறதும் ஒரு நான்கு நாட்கள் நடந்ததும்
நான் அந்த விண்ட்சைம்ஸை மாடிக்கு மாற்றினேன்.

அடுத்தாற்போல இந்த ஆசைகளை எழுதி கயிற்றில்கல்லோடு சேர்த்துக் கட்டி
சுவர்மூலையில் தொங்கவிடுவது,அதுவும் தெற்குமூலை
 இரு பசங்களுக்கும்
சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் என்று எழுதி ஒரு கத்திரிப்பூ கலர் தாளில் சுற்றி
அதில் ஒரு அமெதிஸ்ட் கல்லையும் கட்டி பட்டு நூலில் ஜன்னல் கம்பிகளில் கட்டி வைத்தேன். மீதியை நாளை பார்க்கலாம்:))))))))))





எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

35 comments:

சாந்தி மாரியப்பன் said...

//கைல ஜபமாலை. ,கழுத்தில ருத்த்ராட்சம்.. போதுமா. இப்பவே ஒரு பிக்சர் கிடைத்திருக்குமே.//

சாமியாரிணி மாதிரி ஒரு சித்திரத்தைக் கற்பனை செஞ்சுக்கிட்டேன். கலக்குறீங்க வல்லிம்மா :-))

//போற வறவங்களுக்கு இடைஞ்சலா வெளி வாசல் ,பின் வாசலுக்கு நடுவில் தான் இதெல்லாம் இருக்கும்.//

அதானே.. வாஸ்துப்படி அங்கதான் வைக்கணுமாம்.

நகைச்சுவை உங்க கட்டத்தில் அழுந்த உட்கார்ந்து கொண்டு விட்டது. ரசிச்சு வாசிச்சேன்.

இந்த வாஸ்துவை மையமா வெச்சு ஒரு இடுகை எழுதி பாதியில் நிக்குது. சட்ன்னு முடிக்கணும்ன்னு உங்க இடுகை ஞாபகப்படுத்திருச்சு :_)

திண்டுக்கல் தனபாலன் said...

இவ்வளவு வஸ்து... சே... வாஸ்து பொருட்கள் இருப்பது இன்று தான் தெரியும்...!

நல்ல பாட்டு... தொடருங்கள் அம்மா...

துளசி கோபால் said...

நீங்க வேணாமுன்னு எடுத்த அத்தனை ஐட்டங்களும் நம்ம வீட்டில் 'அழகுப் பொருட்கள்' வரிசையில் உக்காந்துருக்கே!!!!!

நாளைக்குக் கட்டாயமாப் பாருங்க. விட்டுடாதீங்க ப்ளீஸ்:-)

இராஜராஜேஸ்வரி said...

கைல ஜபமாலை. ,கழுத்தில ருத்த்ராட்சம்.. போதுமா. இப்பவே ஒரு பிக்சர் கிடைத்திருக்குமே. எல்லாம் நம்ம விஷுவலைசேஷனோட பெருமை.....

இப்போது தெளிவாகிவிட்டதா..??!

Yaathoramani.blogspot.com said...

சொன்ன விஷயமும் சொல்லிச் சென்றவிதமும்
வெகு வெகு சுவாரஸ்யம்
வாழ்த்துக்கள்

கோமதி அரசு said...

''கோவில்மணி ஓசைதன்னைக் கேட்டதாரோனு பாடிக்கொண்டு
கூடத்துக்கு வந்தால் அது வாய் மூடி மௌனியாக இருக்கு. //
ஆஹா! பாட்டை தொடரவிடாமல் கட்டிவிட்டதே வாஸ்து மணி,
மாடியில் கொண்டு மாட்டிய போது தொடர்ந்து பாடினீர்களா?
பாட்டை கேட்க ஆவல்.

Geetha Sambasivam said...

ஓஹோ வடக்குப் பார்த்து உட்காரக் கூடாதோ!!!//

தினம் தினம் வடக்குப் பார்த்து உட்கார்ந்து தான் எழுதறேன். கணினியில் மேயறேன்.!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
எனக்கு என்னமோ இதில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. வாங்கிச் சேர்க்க மாட்டேன். ஆனால் நம்மவரோ நேர்மாறாக ஷாப்பிங் மன்னர்! :)))) இப்போல்லாம் என்னோடு சேர்ந்து அவருக்கும் ஆசை துறந்துவிட்டது. மாத்தியாச்சு! :((((

நமக்கு என்ன வேணுமோ, எது கிடைக்கணுமோ அதை எந்த வாஸ்துவாலும் தடுக்க இயலாது. கிடைக்கவேண்டியது கிடைத்தே தீரும். அதனால் வாஸ்து கிட்டே எல்லாம் போகிறதே இல்லை! எல்லாத்துக்கும் நம்ம நண்பர் பிள்ளையார் தான் லொங்கு லொங்குனு ஓடி வந்தாகணும். :)))))))

Geetha Sambasivam said...

இயல்பான நகைச்சுவை வெகு சரளமாக வருது. :))))) சாரலோட பின்னூட்டம் படிச்சதும் சிரிப்பு இன்னும் ஜாஸ்தியாச்சு.

ஸ்ரீராம். said...

நம்பிக்கைகள் வாழ்க. நான் கூட வடக்கு நோக்கி அமர்ந்துதான் டைப் அடிக்கிறேன்! என்ன ஆகும்? :))

ராஜி said...

பாட்டு படிக்க நல்லா இருக்கு..., அதை உங்க குரல்ல பாடி பதிவா போடுங்கம்மா இன்னும் நல்லா இருக்கும்

வல்லிசிம்ஹன் said...

இது ஒரு மீள் பதிவு நண்பர்களே.2007இல் எழுதியது:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல் இது போல லைட் நகைச்சுவை அப்போது என்னால் முடிந்தது. இனிமேலும் முயலலாம்.:)
நன்றிமா .எப்படி ரசிக்கிறீர்கள்!!கட்டத்துல வந்து உட்கார்ந்துவிட்டதா:)

வல்லிசிம்ஹன் said...

இதெல்லாம் ஒண்ணுமே இல்லை தனபாலன். எங்க பசங்க பாவம் அவங்களுக்கும் தாயத்து,மோதிரம் எல்லாம் போட்டுவிட்டேன்.
கண்மறைவில எடுத்துடுவாங்கனு தெரியும். ஒரு மகன் மோதிரம் தொலைந்தே போச்சு என்றுவிட்டான்:)

வல்லிசிம்ஹன் said...

பார்த்துடலாம் துளசி. உங்க வீட்டு அழகு பொருட்கள் எல்லா விதத்திலியும் இருக்குமே.

வல்லிசிம்ஹன் said...

ஓஹோ!இராஜராஜேஸ்வரி. தெளிஞ்சு பத்துவருடங்களாகிவிட்டதும்மா.
அதனால் தான் இப்போ என்னையே பார்த்து சிரிக்க முடிகிறது.:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் ரமணி சார்.
உங்கள் ரசனை என்னைக் கௌரவிக்கிறது. மிகவும் நன்றி.

sury siva said...


jabulingame jada thara.


https://www.youtube.com/watch?v=hV9TPCseQ10

subbu thatha

வெங்கட் நாகராஜ் said...

எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை... முன்பு வீட்டில் இப்படித்தான் ஒரு விண்ட்சைம் தொங்கவிட, காற்றில் அசைந்து ஆடி மணியோசை கேட்டபடியே இருக்கும். பாட்டி ஒரு நாள் ”கீழே எங்கேயோ மாடு தலையை ஆட்டிண்டே இருக்கே, மணி சத்தம் இங்க வரைக்கும் கேட்குது....” என்று சொல்ல எல்லோரும் சிரித்தது நினைவில் வந்தது.....

அப்பாதுரை said...

சூயென்னு ஒரு தவச சாப்பாட்டு ஐட்டம் செய்வாங்க எங்க தாத்தா வீட்டுல.. அதுவோனு நெனச்சேன் சட்டுனு.

வாஸ்து ஜோசியம் சொல்லிக் கொழுத்த பணக்காரர் ஒருத்தரை எனக்குத் தெரியும் - ஒரு நாளைக்கு அஞ்சாயிரம் ரூபாய் கன்சல்டிங்க் சார்ஜ் வாங்குவார் தொண்ணூறுகளில். இன்றைக்கு குஜராத் இப்படி இருக்க தன்னுடைய வாஸ்து தான் காரணம்னு போன வருசம் பாத்தப்ப சொன்னாரு. என்ன செய்ய!

கிளி ஜோசியம் போல வாத்து ஜோசியம்னு நான் கிண்டலடிப்பேன். ஆமதாபாத்ல இவர் கடை திறந்தப்ப நானும் போயிருக்கணும். ஹ்ம்ம்.

Geetha Sambasivam said...

//சூயென்னு ஒரு தவச சாப்பாட்டு ஐட்டம் செய்வாங்க எங்க தாத்தா வீட்டுல.. அதுவோனு நெனச்சேன் சட்டுனு.//

ஹெஹெஹெஹெ, அது சூயென்லாயும் இல்லை, மா-சே-துங்கும் இல்லை அப்பாதுரை. சுகியம் அல்லது சுய்யம் அல்லது சுய்யன். மாவட்டத்துக்கு மாவட்டம் உச்சரிப்பு மட்டும் மாறுபடும். சிராத்தத்துக்கு மட்டுமில்லாமல், சரஸ்வதி பூஜை, விநாயக சதுர்த்தி, கிருஷ்ண ஜயந்தி, நவராத்திரியில் செய்யும் சுமங்கலிப் பிரார்த்தனை போன்றவற்றிலும் இடம் பெறும். :))))))) என் அப்பா வீட்டில் இது இல்லாத பண்டிகையே கிடையாது ஒரு காலத்தில்! :)))))

வல்லிசிம்ஹன் said...

harahara siva siva aroharaa
Subbu sir thanks.

வல்லிசிம்ஹன் said...

நிலைமை அப்போது அப்படி இருந்தது வெங்கட்.:)

இப்பூ சர்வm சிவா மயம் சர்வம் நாராயண தத்துவம் என்றிருக்கிறேன் :)

வல்லிசிம்ஹன் said...
This comment has been removed by the author.
வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா , உங்களுக்கே சிரிப்பு வந்ததா:)
தன்யளானேன் :)
அது ஒரு கிரேசி காலம்!!!

ராமலக்ஷ்மி said...

வாஸ்து நம்பிக்கைகள் நிம்மதியை விடக் குழப்பத்தையே அதிகம் ஏற்படுத்துகின்றன. நல்ல பகிர்வு:)!

மாதேவி said...

ஹா..ஹா நல்ல நகைச்சுவை.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ராமலக்ஷ்மி. மதி கலங்கும்போது இது பித்துவிஷயங்களைச் செய்யச் சொல்லுமாம்.

வல்லிசிம்ஹன் said...

நன்றிமா. மாதேவி.

ஸ்ரீராம். said...

மீள் மீள் பதிவா? எது வரை பழைய கமெண்ட், எதிலிருந்து புதிய கமெண்ட் என்றும் தெரியவில்லை! நானும் முன்பே பின்னூட்டம் இட்டிருக்கிறேன்! அப்போது அதற்கு நீங்கள் பதில் சொல்லாததால் இப்போது அதற்கு(ம்) சொல்லி விடுங்கள்!! :))))))

வல்லிசிம்ஹன் said...

ஸ்ரீராம். said...
நம்பிக்கைகள் வாழ்க. நான் கூட வடக்கு நோக்கி அமர்ந்துதான் டைப் அடிக்கிறேன்! என்ன ஆகும்? :))//நம்பிக்கைகள் நல்லதாக இருந்தால் வடக்கு தெற்கு ஒண்ணும் செய்யாது ஸ்ரீராம். இது முதல் பதில்.......

வல்லிசிம்ஹன் said...

இரண்டாவது பின்னூட்டத்துக்கு என்ன பதில் இரண்டாவதாகப் பிரசுரம் செய்தாச்சு ஸ்ரீராம்.....சரியா.

ஸ்ரீராம். said...

:))))))))

ok...ok!

Angel said...

ரொம்ப சுவாரஸயமா இருக்கும்மா வாசிக்க ...அந்த சிங்கப்பூர் சாம்ப்ராணி and that idea of floating candle with rose petals is really artistic !! ஒரு செகண்ட் கற்பனை செய்து பார்த்தேன் !! நல்லாத்தான் இருக்கு :)


Thenammai Lakshmanan said...

ஹாஹாஹாஹா படிச்சு படிச்சு சிரிச்சுட்டே இருக்கேன் வல்லிம்மா.

நாங்க வீடு கட்டும்போதுதான் குழப்புவாங்க.

அப்புறம் இரண்டு வருஷத்துக்கு ஒரு தரம் சில சமயம் 6 மாசத்துக்கு ஒரு தரம். ட்ரான்ஸ்பர்ல வீடு மாத்தும்போது எந்தத் திசையில் மெயின் வாசல் அடுப்படி எங்கன்னு இங்கேருந்து ஃபோன்ல வீட்டுக்காரர்கிட்ட கேட்டா அவர் பாவம்.. ஹாஹாஹா எப்படியோ 20 வீடுகளுக்கு மேல மாறிட்டோம். பணி மாறுதல்னால :)

Geetha Sambasivam said...

மறுபடி படிக்க நல்லா இருந்தது.
அமெதிஸ்ட் கல்லுனா என்ன??? இப்போத் தான் கவனிச்சேன். அமெதிஸ்ட் கல்லைக் கட்டினதா எழுதி இருக்கீங்க! :)