ஸ்ரீசஹஸ்ரலிங்கம் |
ஸ்ரீகாமாக்ஷி தாயார் |
ஸ்ரீ மஹா ஸ்வாமிகள் |
மீனாக்ஷி கல்யாண சிற்பம் |
காமாக்ஷி,சங்கர பாலாஜி கோவில் |
சங்கரா தொலைக்காட்சியில் காஞ்சி மஹாபெரியவரைப் பற்றிய செய்திகளைத் திரு. சர்மா '
எனும் பெரியவர் தினம் காலையில் பகிர்வதாகத் தம்பியிடமிருந்து நேற்று செய்தி கிடைத்தது.
மஹானைப் பற்றிக் கேட்டாலே புண்ணியம். அதுவும் விவரமாக ஒருவர் சொல்கிறார் என்றால் சும்மா இருக்கலாமா.
இன்று காலை அவர் (ஆறேகால் மணி அளவில்)
அவர் பகிர்ந்து கொண்ட ஒரு சம்பவத்தை உடனே பதிய ஆசைப்பட்டேன்.
இதோ அந்த நிகழ்வு.
மஹா ஸ்ரீ பெரியவர் அலஹாபதில் சங்கரமடத்தோடு கூடிய கோவில் ஒன்றைக் கட்ட மனதில் நியமனம் செய்துகொண்டாராம்.
ஆஸ்தான ஸ்தபதி திரு .கணபதி ஸ்தபதி யிடம் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது.
உத்தரப் பிரதேசத்தில் அரசில் நல்ல அதிகாரியாக
இருந்த திரு.சி.எஸ்.ராமச்சந்திரன் அவர்கள் உதவியுடன் இந்தமிகப் பெரிய புண்ணிய காரியம் ஆரம்பித்தது.
யமுனையின் கரையில் இருப்பதால் எப்பொழுது வேண்டுமானாலும் வெள்ளம் வர ஹேது உண்டு என்று ஸ்வாமிகள்
அதற்கேற்றார்ப் போல அஸ்திவாரம் இருக்கவேடும்.
அதற்கு மேல் பதினாறு பெரிய தூண்கள் எழுப்பப் படவேண்டும். அதற்கு மேல் மூன்று தளங்களில் அருள்மிகு காமாட்சி அம்மன் கோவில்.
இரண்டாம் நிலையில் பாலாஜி. அவர் இருக்கும் மண்டபத்தில்
நூற்றெட்டுத் திருப்பதிகள் பற்றிய விவரங்கள்.
அதற்கு மேல் மஹாதேவரின் சந்நிதி.
அவர் மண்டபத்துக்கு மேலே பெரிய தென்னிந்திய கோபுரம்.
அப்பாடா நினைக்கவே பிரமிப்பாக இல்லையா.
இவ்வளவையும் மஹாபெரிய சுவாமிகளே வடிவமைத்துக் கொடுத்தாராம்.
திரு கணபதி ஸ்தபதி எப்போதும் மஹா ஸ்வாமிகளின்
பெருமைகளைப் புரிந்திருந்தாலும் இதுபோல
தீர்க்கமான திட்டத்தைப் பார்த்துப் பார்த்து அதிசயித்தாராம்.
பெரியவரை வணங்கி வேலைகளை ஆரம்பித்தாயிற்று.
கொஞ்ச மாதங்களில் ஒரு நாள், திரு ராமச்சந்திரன் மிக வருத்தத்தில் இருப்பதைப் பார்த்து ஸ்தபதிகள் கலங்கிவிட்டார்.
அவரை விசாரித்த போது, விஷயத்தைச் சொன்னார் சிஎஸ் ஆர்..
எனக்கு ரிடயராகும் வருடம் வருகிறது.
நான் அரசாங்கத்தில் வேலையில் இருப்பதால் சில வேலைகளைச் சிரமம் இல்லாமல் முடிக்க முடிகிறது. ஓய்வெடுக்கும் காலம் வரும்போது சுலபமாக வேலைகளை முடிப்பது சிரமம் ஆகிவிடுமே என்று சொல்லிமுடிப்பதற்குள் கண்களில் நீர் பெருக ஆரம்பித்துவிட்டதாம் அந்த நல்ல பக்தருக்கு.
அருமையான நண்பர் ஸ்தபதி அவர்களை இந்த விஷயம்
வெகுவாகப் பாதித்தது.
தெரிந்த ஒரே கடவுள் ஸ்ரீசரணரான ஸ்வாமிகள் தான்.
உடனே கலவையில் அப்போது முகாமிட்டிருந்த
மஹாபெரியவரைத் தரிசிக்க வந்துவிட்டார்.
கொஞ்சம் வருத்தம் கொஞ்சம் உரிமைக் கோபம் கலந்த குரலில்
பெரியவரிடம் சொல்லி ''உங்கள் அநுக்கிரஹம் இருந்தால் இந்த வருத்தமெல்லாம் வருமா.
தங்களின் முழு அநுக்கிரகம் இருந்தால் தான் மேற்கொண்டு எதுவும் நடக்கும் என்று சொல்லவும்,
பெரியவர் இவரை உற்றுப் பார்த்தாராம்.
அப்போ இத்தனை நாளா என் அநுக்கிரகம் இல்லைன்னு நினைக்கிறயா.
அப்போ சரி எல்லா அநுக்கிரகத்தையும் இப்போ கொடுத்திட்டேன். கவலைப் படாமல் போ'
என்று உத்தரவு கொடுத்தாராம்.
வரம்பு மீறிவிட்டோமோ என்று குழம்பியவாறு விமானத்தில் அலஹாபாத் வந்து சேர்ந்தார்.
அடுத்தநாள் காலை சி எஸ் ஆர், இவரைச் சந்திக்கும்போது
அவர் முகத்தில் பொங்கிய உற்சாகம் இவரைத்திகைக்க வைத்ததாம்.
என்ன விஷயம் என்ற போது தெரிய வந்தது பெரிய மகிழ்ச்சி.
உத்திரப் பிரதேச அரசாங்கமே இந்தக் கோவில் கட்டும் பணிகளுக்கு
வேண்டிய செலவு அத்தனையும் ஏற்றுக் கொள்வதாக கவர்ன்மெண்ட் ஆர்டரே போட்டுவிட்டதாம்.
இனி என்ன கவலை.!!
ஸ்தபதிக்கு உள்ளம் உடல் அத்தனையும் புல்லரித்துப் போனதாம்.
நேற்றுதானே ஸ்வாமிகளிடம் அடைக்கலம் புகுந்தேன்.
அதற்குள் இந்த செய்தியா.
இத்தனை அநுக்கிரகமும் வெள்ளமாக வந்ததோ என்று அதிசயித்து நின்றாராம் ஸ்தபதி..
பவசங்கர தேசிகமே சரணம்.
மஹா ஸ்ரீஸ்ரீ சந்திரசேகரேந்திர மஹா ஸ்வாமிகளின்
பாதகமலங்களில் சரணம்.
இந்தப் பதிவில் என்ன பிழை இருந்தாலும் மன்னித்தருள வேண்டும்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
35 comments:
எங்களுக்கும் வியப்பாகத்தான் இருக்கு...
நன்றி அம்மா...
தினம் தினம் கேட்போம். நல்லா இருக்கும். அழகாய்ச் சொல்லுவார். இந்த விஷயமும் முன்னர் படித்ததே. இந்தக் கோயிலுக்கும் போய்ப் பார்த்திருக்கோம். இதை ஒட்டியலொரு மடத்தில் தான் ஒரு பகல் தங்கினோம்.
மஹானைப் பற்றி நல்ல பகிர்வு அக்கா.
நம்பிக்கை என்றும் கைவிடுவது இல்லை. படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
வாசிக்கும்போதே மனசு தெளிஞ்சு போச்சுப்பா.
இவ்ளோ அழகான கோவிலை ஒரு முறை தரிசிக்கத்தான் வேணும்.
நம்ம பெஸண்ட் நகர் அஷ்டலக்ஷ்மி கோவில்கூட பெரியவர் சொன்னபடிக்குத்தான் கட்டப்பட்டதாம். மாடிப்படிக்கட்டுகள் இன்னும் கொஞ்சம் விஸ்தாரமா இருந்துருக்கலாம்னு நினைச்சேன். கூட்டம் அம்முதே!
//பெரியவர் இவரை உற்றுப்பார்த்தாராம்.
அப்போ இத்தனை நாளா என் அநுக்கிரகம் இல்லைன்னு நினைக்கிறயா.
அப்போ சரி எல்லா அநுக்கிரகத்தையும் இப்போ கொடுத்திட்டேன். கவலைப் படாமல் போ'என்று உத்தரவு கொடுத்தாராம்.//
பிறகென்ன? அடுத்தடுத்து அதிசயங்கள் தான் நடைபெற்றிருக்கும். ;)))))
பகிர்வுக்கு நன்றிகள்.
சிறப்பான தகவல். இரண்டு முறை இக்கோவில் சென்று தரிசித்திருக்கிறேன். கோவில் பற்றி எழுதியது இங்கே....
http://venkatnagaraj.blogspot.com/2012/11/blog-post_28.html
இத்தனை அநுக்கிரகமும் வெள்ளமாக வந்ததோ என்று அதிசயித்து நின்றாராம் ஸ்தபதி..
அருள் வெள்ளத்தில்
ஆழ்த்திய பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!
நன்றி தனபாலன். கடவுளின் அனுக்கிரகம் எப்பொழுதும் இருக்கிறது. கேட்டு வாங்கிக் கொள்ளத்தான் நமக்குத் தெரியவில்லை.
நான் நினைத்தேன்,நீங்கள் சங்கரா தொலைக்காட்சி சானல் பார்ப்பீர்கள் என்று தெரியும். கோயிலுக்கும் போயிருக்கிறீர்களா. இறையருள் எப்பொழுதும் உங்களோடு இருக்கிறது.
உண்மைதான் கோமதி.
தெய்வம் மனித ரூபத்தில் நடமாடிய நாட்களில் நாமும் இருந்திருக்கிறோம்.
இன்னமும் அந்த நம்பிக்கை இன்னும் நம்மிடம் வளரவேண்டும்
வாழ்க வளமுடன் கோமதி.
ஓ இது எனக்கு செய்தி துளசி.
எப்படியோ அந்த அருள் நம்மிடம் நிலைக்கட்டும்.அடுத்த முறை நீங்கள் தரிசிக்கவேண்டும்.
முடிந்தால் வரமிருந்தால் நானும் வருகிறேன்.
வரணும் கோபு சார்.
16 வருடங்கள் கழித்துக் கும்பாபிஷேகம் நடந்ததாம்.
எவ்வளவு உழைப்பாளர்கள் உழைத்திருக்கவேண்டும். அத்தனை பேருக்கும் அந்த மஹானின் அருள் பூரணமாகக் கிடைத்திருக்கும்.
கட்டாயம் படிக்கிறேன் வெங்கட்.
துளசி ஏற்கனவே சொன்னார்கள் . நீங்கள் இங்கே பயணம் செய்திருப்பதாக.
எனக்கும் இந்த பாக்கியம் கணவரோடு கங்கைக் கரைக்குப் போகும் பாக்கியம் வேண்டும்.நன்றி மா.
அன்பு இராஜராஜேஸ்வரி,
தங்கள் எழுத்துகளைப் படித்தும் இன்னும் கோர்வையாக எழுத ஆசை மேலிடுகிறது. சொல்லவந்ததைச் சரியாகச் சொல்லும் வழி முயற்சியால் தான் கிட்டும் பக்தி விஷயத்தில்.நன்றி மா.
ஆச்சரியமான சம்பவம். கோவிலின் படமும் அதன் கட்டமைப்பு குறித்த தங்கள் விவரிப்பும் அருமை. பகிர்வுக்கு நன்றி வல்லிம்மா.
ஆச்சர்யமான சம்பவம். இதுபோல நிறைய சம்பவங்களைக் கேள்விப் படும்போது மிக ஆச்சர்யமாக இருக்கும். உங்கள் கை தேவலாமா?
Hara hara shankara jaya jaya shankara!!!!
வரணும் ராமலக்ஷ்மி.
எத்தனையோ செய்திகள் நம்மைத் திசை திருப்பிவிடுகின்றன.சிலசமயம் நம் நம்பிக்கை குறைகிறது. இதுபோல மகிமைகளைக் கேட்கும் போது எல்லாம் நன்மைக்கே என்கிற எண்ணம் காக்கிறது/
அன்பு ஸ்ரீராம்,
சக்திகொண்ட சத்தியவான்கள் நமக்கு ஆச்சாரியர்களாக நம்மிடையே உலவி வந்திருக்கிறார்கள் நம் அதிர்ஷ்டம் அவர்கள் அருள் இன்னும் தொடர்கிறது.
நாமும் அவர்களுடன் தொடர்ந்து சலனமில்லாமல் நம்பிக்கை வைக்கும்போது வாழ்க்கை சுலபமாகிறது என்று தோன்றுகிறது.
நன்றி,
நாரதர் நாரதர்.
கேள்விப்படாத விபரம்.மிக்க நன்றி.
அற்புதமான கோயில் பற்றிய செய்திகளும்
படங்களும் மனதுக்கு இதமாக இருக்கிறது அம்மா..
இது போன்ற கதைகள் நெகிழ வைப்பது உண்மை.. எனினும், அரசாங்க அதிகாரத்தை கோவில் கட்டப் பயன்படுத்தியது தவறாகப் படவில்லையா?
வரணும் குமார். நல்ல செய்திகள் காதில் விழுவது எப்பொழுதுமே நம்பிக்கையைக் கூட்டுகிறது. நீங்களும் அங்கே போயிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
வரணும் மகேந்திரன்.நல்லகாரியங்கள் நடக்க நல்லவர்கள் உதவி எப்பொழுதுமே வேண்டும்.நடந்திருக்கிறது என்பதே நம் அம்பிக்கையை அதிகரிக்கிறது.
ஆமாம் துரை. பத்ரசலத்தில் பக்தராமதாஸ் நவாபின் பணத்தில் ஸ்ரீராமர் கோவிலைக் கட்டினார்.
இங்கு கோவிலைக் கட்ட நியமனம் செய்தவர் சந்யாசம் வாங்கிய மஹான்.
அத்தனை செலவையும் யுபி அரசாங்கம் ஏற்றுக் கொண்டது என்றால் பொறுப்பை ஏற்றுக் கொண்டது என்று பெயர்.
டில்லி லையாசன் ஆஃபீசர் ஒருவரைக் கேட்டால் எத்தனை ஊழல் எங்கெல்லாம் நடக்கிறது என்று சொல்வார்.
இன்னைன்ன வேலை இன்னார் செய்யவேண்டும் என்று வரும்போது
செய்ய மறுப்பவர்கள் பல நபர்கள் உண்டு.
அதில் அரசாங்க ஆர்டர் என்று வந்துவிட்டால் ஒரு சரித்திர நிகழ்வு ஏற்படக் காரணம் சுலபமாக அமைகிறது.
ஏன் கட்டவேண்டும்,
அரசுப்பணம் வரிப்பணம் என்றெல்லாம் கணக்குப் பார்த்தால்
மஹா பெரியவருடைய தலையீடு இருப்பதால் அங்கே ஊழல் நடக்கச் சாத்தியமே இல்லை.
பெருந்தனக்காரர்கள் கோவிலுக்குப் பணம் கொடுத்திருக்கலாம்.
ஸ்ரீ சர்மா சொன்ன சுருக்கத்தை நான் இங்கே பதிவு செய்தேன்:)
//அரசாங்க அதிகாரத்தை கோவில் கட்டப் பயன்படுத்தியது தவறாகப் படவில்லையா?//
@அப்பாதுரை, கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. கோயில் ஊழியர்களின் சம்பளத்தை நிர்ணயிப்பதும் அரசே. கோயிலின் வருமானத்துக்காக முன்பு இலவசமாக யாத்ரிகர்களுக்கு அளித்த பிரசாத விநியோகத்தை வியாபாரம் ஆக்கியதும் அரசே. அரசு கோயில் நிர்வாகத்தில் தலையிடுவது சரி என்றால் இதுவும் சரியே. :))))))))))
நன்றி கீதா. நல்ல கருத்தை அழகாக எடுத்துச் சொல்லிவிட்டீர்கள்.
ஹிஹிஹி, வல்லி, இது குறித்துச் சொல்ல நிறைய இருந்தாலும் இப்போதைக்கு இது மட்டும்!:))))) கோயிலில் கட்டண தரிசனத்தை ஏற்படுத்தினதும் அரசு தானே!
உண்மைதான் கீதா. தெய்வ தரிசனம் சினிமா டிக்கட் விற்பது போல ஆகிவிட்டது.
/நான் அரசாங்கத்தில் வேலையில் இருப்பதால் சில வேலைகளைச் சிரமம் இல்லாமல் முடிக்க முடிகிறது/ என்று சிஎஸ்ஆர் வருத்தப்பட்டதைச் சொல்ல வந்தேன். அரசாங்க வேலைக்கான நேரத்தையும் சலுகைகளையும் இப்படி செலவழித்ததைச் சொல்ல வந்தேன்.
அரசாங்கம் கோவில் கட்டுவதோ நிர்வாகிப்பதோ பற்றி சொல்ல வரவில்லை.
மனதில் தோன்றியதை சரியாகச் சொல்லாமல் கமலாக்கியதுக்கு மன்னிக்கணும்.
அரசாங்கம் கோவில் விஷயத்தில் தலையிடுவது யுகக்கணக்கில் நடந்து வருவது தானே? முன்னே ராஜாக்கள் செய்தார்கள் இப்போது மக்கள் தலைவர்கள் செய்கிறார்கள். கோவில் நிர்வாகத்துக்கென்று அமைச்சரவை இருந்ததாக சோழர்கள் வரலாற்றில் படித்திருக்கிறேன். ஊழல் அன்றைக்கும் இருந்திருக்கும் - என்ன.. கொஞ்சம் பயந்து பயந்து செய்திருப்பார்கள். இல்லையென்றால் அதையும் ஆண்டவன் மேலேயே போட்டு 'ஆட்டுவித்தாய் ஆடுகிறேன்' என்று சொல்லியிருப்பார்கள் :)
என்னங்க இது கீதாம்மா இப்படி சொல்றீங்க? அரசாங்கம் தப்பு செய்தால் நாம தப்பு செய்யுறது சரியாயிடுமா? (அரசாங்கம் யாருன்றது இருக்கட்டும்). ரைட்டு..அடுத்தது நம்ம தத்த்தி பக்கம் போலாம்னு இருக்கேன்.. அங்கேயும் தோளை விட்டு இறங்க சான்சு கிடைக்கும்னு தோணுது.. ஹிஹி.
துரை, நீங்கள் சொல்ல வந்தது இப்போது புரிகிறது.
ஒரு நல்ல பதவியில் இருப்பவருக்குச் செய்ய முடியும் வேலைகள் சிரமப்பட்டாவது முடிக்க நம் அரசாங்கத்தில் முடியும். எல்லாவற்றுக்கும் சிவப்புநாடா குறுக்கே நிற்கும். இவரும் தன் பதவியைநல்லபடியாகத்தான் உபயோகித்திருப்பார்.
கமலிசம் நல்ல பிரயோகம்:)
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_9.html) சென்று பார்க்கவும்... நன்றி அம்மா...
//அரசாங்கம் கோவில் விஷயத்தில் தலையிடுவது யுகக்கணக்கில் நடந்து வருவது தானே? முன்னே ராஜாக்கள் செய்தார்கள் இப்போது மக்கள் தலைவர்கள் செய்கிறார்கள்.//
ராஜாக்கள் நிர்வாகம் செய்யலை, யாத்ரிகர்களிடம் பணம் வசூலிக்கவில்லை. கோயில்களுக்கு மான்யங்களைக் கொடுத்தார்கள். அதுவும் தங்கள் சொந்த சொத்துக்களை தானமாக வழங்கினார்கள். கோயில் பூசாரிகளை/அர்ச்சகர்களை மதித்தார்கள். அவர்கள் ஆலோசனைகளை ஏற்றார்கள். ஹிஹிஹி, இன்னும் நிறைய இருக்கு! இதை எல்லாம் பார்த்துட்டுத் தான் நம்ம சூரியன் அஸ்தமனமே ஆகாத நாடு இங்கே நாடு பிடிக்க வந்தப்போ முதல்லே இங்கே ஒழிக்க வேண்டியது கோயில்களையும், அதன் பூசாரிகள், பிராமணர்கள், கல்விச்சாலைகளாக இருந்த குருகுலங்கள் எனத் திட்டமிட்டு ஒழித்துக் கட்டினாங்க.:)))))))))))))
//கோவில் நிர்வாகத்துக்கென்று அமைச்சரவை இருந்ததாக சோழர்கள் வரலாற்றில் படித்திருக்கிறேன். ஊழல் அன்றைக்கும் இருந்திருக்கும் - என்ன.. கொஞ்சம் பயந்து பயந்து செய்திருப்பார்கள். இல்லையென்றால் அதையும் ஆண்டவன் மேலேயே போட்டு 'ஆட்டுவித்தாய் ஆடுகிறேன்' என்று சொல்லியிருப்பார்கள் :)//
அந்தக் காலத்தில் பக்தியில் பயம் கலந்திருந்தது. தவறு செய்தவகர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். எந்த அரசனும் கோயில் நிர்வாகத்தில் தலையிட்டு இப்படிச் செய், அப்படிச் செய்னு சொன்னதாகப் படிச்சதில்லை!
//என்னங்க இது கீதாம்மா இப்படி சொல்றீங்க? //
ஹிஹிஹி, கீதாம்மா??? எங்கே பிடிச்சீங்க?? எப்போலேருந்து இது???? மீ த எஞ்சாயிங்!
//அரசாங்கம் தப்பு செய்தால் நாம தப்பு செய்யுறது சரியாயிடுமா? (அரசாங்கம் யாருன்றது இருக்கட்டும்). //
தப்பெல்லாம் செய்யலை, அரசுப் பணத்தைக் கையாடவில்லை. நிர்வாக வசதிகளுக்கு அதிகாரம் கையில் இருப்பது நன்மை என நினைத்தார். ஆனால் அவரையும் மீறி அரசு தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டது.
//ரைட்டு..அடுத்தது நம்ம தத்த்தி பக்கம் போலாம்னு இருக்கேன்.. அங்கேயும் தோளை விட்டு இறங்க சான்சு கிடைக்கும்னு தோணுது.. ஹிஹி.//
போங்க, போங்க, வரேன், மெதுவா. அதிலே நிறையவே இருக்கு. எப்போ முடியுமோ தெரியலை. :)))))
மேற்கொண்டு நம்ம மோதலைத் தனியா வைச்சுக்கலாம். வல்லி தாங்க மாட்டாங்க! :)))))))))
இந்த மாதிரியான கோவில்களைப் பற்றிப் படிக்கும்போது இந்தியாவிலேயே எத்தனை இருக்கு பார்க்க என்று தோன்றும்.
மகா பெரியவாளின் அனுக்ரஹம் எப்போது எப்படி கிடைக்கும் என்றே சொல்லமுடியாது, இல்லையா? வியப்பான சம்பவம்!
Post a Comment