Blog Archive

Saturday, May 04, 2013

நசுங்கிய விரல்

பார்த்துப் போகணும்


 முந்தைய காளியப்பாவும் இன்றைய  பில்ராத்
மருத்துவமனையில் அந்த ஃபியட் வண்டி வந்து நின்றது.

பத்து வருடங்களுக்கு முன்னால்  டாக்டர்  டி.ஜே.செரியன்  தலைமை மருத்துவராக அங்கே இருந்தார்.

அவரிடம் மருத்துவம்  செய்து கொண்டவர்கள் தான் நாங்க எல்லோரும்.
மிரட்டியே  சரி செய்து விடுவார்.

அம்மாவுக்கு    இருதய அடைப்பு வந்த போதும் காப்பாற்றிக் கொடுத்தார்.
அம்மா ஆப்பரேஷன்  செய்து கொள்ள மறுத்துவிட்டார்.

நான் இப்படியே இருந்துவிட்டுப் போகிறேன்.
என்று சொல்லிவிட்டார்.
  அதற்கு டாக்டர் போட்ட கண்டிஷன்  ஒவ்வொரு மாதமும் என்னை வந்து பார்த்து  செக் அப் செய்து கொள்ளணும்.
அம்மாவும் சரி என்று  சொல்லிவிட்டார்.
இரண்டாவது மாத செக் அப்பின்போது எங்கள் வீட்டில் இருந்தார்.

சின்னத்தம்பியும் நானும்  எங்களிடம் அப்போது இருந்த
வண்டியில் அம்மாவை மெதுவாக உட்காரவைத்து

காளியப்பாவுக்கு வந்தோம்.

அன்று பார்த்து   ஒரே  நெரிசல்  வண்டிகள் நிறுத்தும் இடத்தில். அம்மா உட்கர்ந்து செல்ல சக்கர நாற்காலி எடுப்பதற்காக அவசரமாக 

இறங்கினேன்.

கதவைச் சாத்திவிட்டேன்.
அம்மா  ஆஆ  என்று அலறுவது கேட்டது.
என்னவென்று கதிகலங்கிப் போய்த் திரும்பினால்
அம்மவின் விரல் வண்டிக் கதவில் மாட்டி இருக்கிறது.
ப்புவைவிட மெல்லிய என் அம்மாவின் சுண்டு விரல். :(


அவசரமாகக் கதவைத் திறந்து அவளை இறங்கவேண்டாம் என்று சொல்லிவிட்டு உள்ளே ஐஸ் எடுக்க ஓடினேன். அதற்குள் தம்பி

கொண்டுவந்துவிட்டான். அம்மாவைப் பார்த்து அவன் கண்ணில்

கண்ணீர்.
அம்மாவலியைப் பொறுத்துகொண்டாலும் விரல் துடிப்பது தெரிந்தது.

பிறகு டாக்டர்   என்னைக் கோபித்தது தனிக்கதை.
சுண்டுவிரலுக்குப் ப்ளாஸ்டர் சுற்றி,  உடனே ஒரு வலிபோக்கும் ஊசியும் போட்டார்.

அத்தனை பேரும் என்னைக் குற்றவாளியாகப் பார்த்தாலும்
அம்மா மட்டும்
என் கையைத் தன்மடியில் வைத்துக் கொண்டு வந்தார்.

ஏன் இந்தக் கொசுவத்தினு பார்க்கறீங்களா.
நானும் என் சுண்டுவிரல் மோதிர விரல் இரண்டையும் அம்பிகா
கடை க்ரில்லில் நசுக்கிக் கொண்டேன்.
சுண்டு விரலில் ஃப்ராக்சர்.


வைத்தியர் கட்டுப் போட்டு கையை உயர்த்தி ஆசீர்வாதம் போஸில் வைக்கச் சொல்லி இருக்கிறார்.

அம்மா  என்னை மன்னித்துவிடு.

வலியில் நீ பட்ட அவஸ்தையை உணர்கிறேன்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

29 comments:

sury siva said...



//நானும் என் சுண்டுவிரல் மோதிர விரல் இரண்டையும் அம்பிகா
கடை க்ரில்லில் நசுக்கிக் கொண்டேன்.
சுண்டு விரலில் ஃப்ராக்சர்.//

ஆனா, ஃபோட்டோவைப்பார்த்தால் சுண்டு விரலை விட்டு விட்டு,
மோதிர விரலையும் நடு விரலையும் அல்லவா
கட்டு போட்டு இருக்கிறார்கள்.

இந்த இரண்டையும் கட்டிப்போட்டாலே சுண்டு விரல்
அமைதியா இதோட ஒட்டிணு இருக்குமா..?

ஒண்ணுமே புரியலையே...

இல்லை உங்க கையிலே மோதிரம் போட்டு இருக்கு.
அதுனாலே அது மோதிர விரல் தான்.
நடுவிலே நடுவிரல் இருக்கு. அதுனாலே அந்த பெயர் குழப்பமும் இல்ல.

இந்தப்பக்கம் ஆள்காட்டி விரல், சிங்கம் எங்க இருக்காருன்னு சொல்லிக்கிட்டே இருக்கும்.
அதுக்கப்பறம் கட்ட விரல்.
அது எல்லாம் சரிதான்.

சுண்டு விரலில் ஃப்ராக்சர் என்கிறீர்கள்.

ஒரு வேளை அந்த கையா இருக்குமோ...

இன்னிக்கு சனிக்கிழமை இல்லயா. அந்தப்பக்கம் அனுமார் அந்த கோ ஆபரேடிவ் பாங்க்
அனுமார் வரச்சொல்லி இருக்கார்.

வந்தால் பார்க்கிறேன்.

சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in

Geetha Sambasivam said...

கடவுளே, சீக்கிரம் சரியாகப் பிரார்த்தனைகள். நானும் நிறைய நசுக்கிக் கொண்டாலும் நல்லவேளையாகப் ஃப்ராக்சர் எல்லாம் இல்லை. எப்படித் தட்டச்சறீங்க? பத்திரம், சர்க்கரை உடம்பு வேறே. சீக்கிரமா குணமாகணும்.

ADHI VENKAT said...

அம்மாவின் வலியை இன்று நீங்கள் உணர்ந்தீர்களா....

நசுங்கிய விரலில் உள்ள வலியை உணர முடிகிறது...

விரலை கவனித்துக் கொள்ளுங்கள் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அது கூகிள் படம் சுப்புசார்.
எனக்குப் போட்டிருப்பது சுண்டுவிரல் மோதிர விரலைச் சுற்றித்தான்.
இந்தப் பக்கம் வந்தால் கட்டாயன் வருவீர்கள் என்று எதிர்பார்க்கீறேன்.

உங்க விரல்கள் கவிதையும் குழப்பம் இல்லாமல் நன்றாக இருக்கிறது. இருக்கிறது

வல்லிசிம்ஹன் said...

இடதுகையிலதான் நசுக்கலும் ஃப்ராக்சரும் கீதா. ஒற்றைவிரலால் டைப் செய்கிறேன்;)
சரியாகிடும்.வலிதான் படுத்துகிறது.
நன்றி மா.
சர்க்கரை கண்ட்ரோலில் தான் இருக்கிறது. ஒருவாரத்தில் பிரித்துவிட்டு மீண்டும் கட்டிவிடுவார்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஆதிமா.

எது நடந்தாலும் அம்மா நினைவுதான்:*

நல்ல திடமாக இருக்கும் எனக்கே இப்படி வலித்தால், அவருடைய பலவீனமான உடல் எப்படி வருந்தி இருக்கும்.!!அந்த நினைவுதான்.
நன்றி மா.

ஸ்ரீராம். said...

மெதுவாக, ஜாக்கிரதையாக இருந்திருக்கக் கூடாதா? வலி பின்னுமே... அம்மாவின் வழியை இப்போது உணர்ந்தது நெகிழ்ச்சி. சீக்கிரம் குணமடையட்டும். வலியில்லாமல் இருக்கட்டும். சீக்கிரம் சிரமமில்லாமல் ஒரு வாரம் ஓடட்டும்.

ராமலக்ஷ்மி said...

அடடா, வலி அதிகமாய் இருக்குமே. விரைவில் குணமாகப் பிரார்த்தனைகள். அம்மாவை நினைவு கூர்ந்திருப்பது ஸ்ரீராம் சொல்லியிருப்பது போல நெகிழ்வு.

இராஜராஜேஸ்வரி said...

வைத்தியர் கட்டுப் போட்டு கையை உயர்த்தி ஆசீர்வாதம் போஸில் வைக்கச் சொல்லி இருக்கிறார்.

அம்மாவின் நினைவு அந்தந்த காலக்கட்டத்தில் வருவதும் அதிகரிப்பதும் தவிர்க்கமுடியாத்தே..!

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஸ்ரீராம்.
கைப்பிடியைப் பிடிக்கப் போனால் வெய்யில் சூடு. அதில் ஏறி இருந்தது,
அதற்குப் பயந்து தடுமாறி,இரும்பு க்ரில்லைப் பிடித்தேன்.
அதன் குணம் நன்றாகப் பிடித்துவிட்டது. நல்லவேளை மிச்ச எட்டுப் படிகளில் உருளாமல் இருந்தேனே;)நன்றிமா. கட்டாயம் சீக்கிரமாகச் சரியாகிவிடும்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராமலக்ஷ்மி.
ஒரு வார்த்தை கூட அம்மா என்னைநோகும்படிச் சொல்லவில்லை. மஹா பெரிய மனுஷி.

இது சின்ன வலிதான் சரியாகிவிடும்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் இராஜராஜேஸ்வரி.
குழந்தை பெற்றூக் கொள்ளும்போதும் அம்மா நினைவு வருவது போல
அவள் ஆதரவை மனம் எப்போதும் தேடுகிறது.

Ranjani Narayanan said...

நீங்கள் எழுதியிருப்பதைப் படிக்கும்போதே வலி தெரிகிறதே!
சீக்கிரம் விரல் குணமாகட்டும்!
அம்மாவைப் பற்றிய வேறு சந்தோஷமான நினைவுகளை மனதில் ஏற்றிக் கொள்ளுங்கள். இந்த வலி போய்விடும்!

மாதேவி said...

விரைவில் நலம் பெற வேண்டுகின்றோம். சற்று ஓய்வு எடுங்கள்.

கோமதி அரசு said...

வைத்தியர் கட்டுப் போட்டு கையை உயர்த்தி ஆசீர்வாதம் போஸில் வைக்கச் சொல்லி இருக்கிறார்.//

வலியை மறந்து ஆசிர்வாதம் செய்யுங்கள் எல்லோரையும்.
மறுபடியும் எங்கும் இடித்துக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
வலி தெரியாமல் இருக்க மாத்திரைகள் கொடுத்து இருப்பார்கள் அல்லவா!
விரைவில் விரல் குணமாகிவிடும்.

அம்மாவின் வலியை உணர்ந்து அம்மாவை நினைத்துக் கொண்டதும், அம்மா உங்கள் கைகளை ஆதரவாய் வருத்தபடாதே என்று பிடித்துக் கொண்டது நெகிழ்வு.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//நானும் என் சுண்டுவிரல் மோதிர விரல் இரண்டையும் அம்பிகா
கடை க்ரில்லில் நசுக்கிக் கொண்டேன்.
சுண்டு விரலில் ஃப்ராக்சர்.//

அடடா, கேட்கவே கஷ்டமா இருக்கு. ஜாக்கிரதையாப்பார்த்துக்கோங்கோ.

அம்மாவின் நினைவு அந்தந்த காலக்கட்டத்தில் வருவதும் அதிகரிப்பதும் தவிர்க்கமுடியாத்தே.

அம்மா உங்கள் கைகளை ஆதரவாய் வருத்தபடாதே என்று பிடித்துக் கொண்டது நெகிழ்வு.

Anonymous said...

அடக்கொடுமையே. சீக்கிரம் விரல் சரியாகட்டும்.

மகேந்திரன் said...

நம்மால் எந்தத் துன்பம் வந்தாலும்
அதை உடனே மன்னிக்கக்கூடிய உள்ளமல்லவா தாய்..
அவருக்கு ஈடு இணை இந்த உலகத்தில் யாருமிலர்...
==
கேட்கவே மனதுக்கு சங்கடமாக இருக்கிறது அம்மா...
பார்த்து பத்திரமா இருங்க...
உடல்நிலையை பார்த்துகோங்க...

அப்பாதுரை said...

என் கண்களிலும் நீர்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ரஞ்சனி.தோழியின் வீட்டுக்குப் போகும் வழியில்தான் இந்த சோதனை.
அவர் வீட்டுக்குப் போனதும் ஐஸ் வைத்து சிஸ்ருஷை செய்ததும் கொஞ்சம் வீக்கம் குறைந்தது.
உடனே அம்மா நினைவுதான் வருகிறது.நல்ல நினைவுகளையும் நினைப்பதுண்டு. உங்கள் அக்கறைக்கும் கனிவுக்கும் மிக நன்றி.

துளசி கோபால் said...

இத்தனை வலியையும் பொறுத்துக்கிட்டு எப்படித்தான் இருக்கீங்களோன்னு மனசில் ஒரு வலி எனக்கு.

பத்திரம். கவனமா இருங்க.ப்ளீஸ்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி,
வெளியே போகும்போது தனியாகப் போவதைத் தவிர்த்து விட்டிருந்தேன்.

சரி இது இது நடக்கவேண்டும் என்றால் சகித்துக் கொள்ளத்தான் வேணும். இல்லையாமா. நன்றிபா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி.
எனக்கு ,தவறுகளுக்குத் தண்டனை என்பதில் மிக மிக நம்பிக்கை:)

பதறாத காரியம் சிதறாது என்பதும் உண்மை.
இரண்டும் சிலசமயங்களில் கைமீறிபோகிறது.
இப்பொழுது வலது கையின் மதிப்பு கூடிவிட்டது.கவனமாக இருக்கேன்மா. இறையின் அருளும் கூடினால் வெல்லமுடியாதது உண்டா என்ன.எனக்கு அடிபட்டது பர்ரிக் கவனம் இல்லை. அம்மா எப்படித் துடித்தாரோ என்பதுதான் புத்தியை வாட்டுகிறது.நன்றி அம்மா.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் கோபு சார் . அன்னையை மிஞ்சிய தெய்வம் யார். வருகைக்கும் அன்பு வார்த்தைகளுக்க்கும் மிகநன்றி.

வல்லிசிம்ஹன் said...

சரியாகிவிடும் பாண்டியன்.
கொஞ்சம் பொறுமை தேவை:)நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மகேந்திரன், எத்தனையோ பேருக்கு அடிபடுகிறது. அதில் நானும் ஒருத்தி.

அம்மா நினைப்புதான் ரொம்ப வாட்டிவிட்டது.
ஒரு நோயாளியைக் கவனிப்பதில் நான் தவறினேன் அதுதான் இங்கே செய்தி.
உண்மைதான்.அன்னை என்றோ மன்னித்திருப்பார்.என் குற்ற உணர்ச்சிக்கு வடிகால் இந்தப் பதிவு.
நன்றி மகேந்திரன்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் துரை. உங்கள் அம்மா நினைவும் வந்திருக்கும்.சீக்கிரம் வந்து பாருங்கள்.நன்றி மா.
என் சின்னத்தம்பி அம்மாவிடம் அளவு கடந்த பாசம் வைத்தவன்.

வல்லிசிம்ஹன் said...

துளசிமா.
என் வலியைத் தாங்கக் கூடிய வயதுதானே எனக்கு. அம்மாவுக்காகத் தான் பதிவு:)

VOICE OF INDIAN said...

மின் கட்டண உயர்வுக்கு வழி வகுக்குது அரசு உஷார் மக்களே; கருத்துக்களை பதிவு செய்ய உள்ள வாய்ப்பை பயன்படுத்துங்கள்


தங்களுக்கு ஒரு வேண்டுகோள்
அத்தியாவசியமாக நாட்டு நலன் கருதி தாங்கள் அனைத்து நண்பர்களுக்கும் தெரியப்படுத்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் வந்த பின் கூச்சல் இடுவதை விட வரும் முன் காப்பதே சிறப்பு அந்த வகையில் பெரும்பான்மையான மக்களின் நலன் கருதியும் மே 8,10,17 ஆகிய தேதிகளில் முறையே திருச்சி மதுரை கோவை நகரங்களில் நடைபெறும் தமிழ் நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மின் கட்டண உயர்வு குறித்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் பங்குபெற வேண்டியும் அதன் விபரங்களை www.vitrustu.blogspot.com
அதன் விபரங்களை முழுமையாக அளித்துள்ளேன் மேலும் தகவல் தேவைப் படினும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவும் தொடர்பு கொள்ளவும் 9444305581 பாலசுபரமனியன் அல்லது இந்தியன் குரல் உதவிமையங்களில் நேரில் வந்தும் விளக்கம் பெறலாம் நட்புடன் பாலசுப்ரமணியன் இந்தியன் குரல்