Blog Archive

Thursday, April 11, 2013

யுகாதி தின வாழ்த்துகள்

யுகாதி நந்நாள் வாழ்த்துகள்
மீண்டும் மலர்கள்

 எந்த சுபதினம் வந்தாலும்   கொண்டாடாமல்    விட மாட்டார்  பாட்டி.
அதுவும் யுகாதி மேல் அத்தனை  பிரியம்.
இரண்டு நாட்கள் வீடு  அல்லோலகல்லோலப் படும்.

முதலில் வாயிலில் மாவிலை கோர்ப்பதிலிருந்து
கிணற்றுச் சகடைக்கு எண்ணெய் பூசி
கிணற்றுப் பிடிச்சுவரிலும்  பூக்கள்  நிறைய வைக்கச் சொல்வார்கள்.
சாயந்திரவேளை வந்ததும்   அந்த மலர்களோடு நீரும் சேர்த்து  கிணற்றுக்குள்
சேர்த்துவிடுவார்கள்.கிணற்றின் மேல் தீபமும் ஏற்றி வைக்கச் சொல்வார்கள்.

யுகாதி புதிய உடைகளும் உண்டு.
பூரன் போளியும்,பச்சடியும்  முக்கியம்.

வெங்கடாசலபதிக்குத் தனி மாலை!
எனக்கு எல்லாம் அதிசயமாக  இருந்தது முதலில்.

பிறகுதான் பாட்டியின் அணுகு முறை புரிந்தது.

அவர்கள் சம்பந்தம் செய்து கொண்டது   ஒரு  மைசூர்
வைஷ்ணவக் குடும்பத்தில்.

அங்கே கர்நாடக  பழக்கவழக்கங்கள்,பண்டிகைகள்
எல்லாம்   பாட்டியின் பெண் பழகிக்கொள்ள  அவைகள் இங்கேயும் வந்துவிட்டன.

என்னவாக இருந்தால் என்ன?
சந்தோஷமாக இருப்பது மனிதர்களின் முதல் உரிமை.
இருக்கவே இருக்கிறது எதிர்பாராத   திருப்பங்கள்.
சந்தோஷ வங்கியை நாம் நிரப்பிக்கொள்ளவரும்

தினங்களில் நிரப்புவோம்.
பிறகு செலவழிப்போம்.

அனைவருக்கும்  யுகாதிப் பொன்னாள்   நல்வாழ்த்துகள்.


 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

10 comments:

சாந்தி மாரியப்பன் said...

//சந்தோஷமாக இருப்பது மனிதர்களின் முதல் உரிமை. இருக்கவே இருக்கிறது எதிர்பாராத திருப்பங்கள்.//

அதேதான் வல்லிம்மா.

அனைவருக்கும் யுகாதி தின நல்வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

யுகாதி தின நல்வாழ்த்துக்கள் அம்மா...

வெங்கட் நாகராஜ் said...

அனைவருக்கும் இனிய யுகாதி தின நல்வாழ்த்துகள்......

Anonymous said...

தங்களுக்கும் தங்கள் வாசகர்களுக்கும் இனிய உகாதி வாழ்த்துக்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

அனைவருக்கும் யுகாதிப்பண்டிகை நல்வாழ்த்துகள். சிறப்பான பதிவுக்குப் பாராட்டுக்கள்.

Unknown said...

நானும் உங்களைப்போலவேதான் பாட்டியின் நினைவுகளில் மூழ்கி விடுகிறேன்.எத்தனை சோதனைகள் வந்தாலும் துவளாமல் குடும்பத்தை தாங்கியவர் என் தந்தை வழி பாட்டி.அனைவருக்கும் யுகாதி நல் வாழ்த்துக்கள் அம்மா.

கோமதி அரசு said...

தினங்களில் நிரப்புவோம்.
பிறகு செலவழிப்போம்.

அனைவருக்கும் யுகாதிப் பொன்னாள் நல்வாழ்த்துகள்.//

நன்றாக சொன்னீர்கள். தினங்களை அன்பால் நிரப்புவோம் அதை பின்பு செலவழிப்போம்.

பாட்டியின் பண்டிகை நினைவுகள் அருமை.
அனைவருக்கும் யுகாதி பாண்டிகை வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

தங்களுக்கும் அனைவருக்கும் இனிய யுகாதி தின நல்வாழ்த்துகள்.

ஸ்ரீராம். said...

யுகாதி வாழ்த்துகள் அம்மா.

துளசி கோபால் said...

இனிய யுகாதி வாழ்த்து(க்)கள் வல்லி.