சாய்வதற்கு முன் என்னைப் பிடி! |
இறைவனுக்கு நன்றி இந்த மலரின் அழகுக்கு |
வேறு விதமான லில்லி |
லில்லி மலர் |
அம்மாவுக்கு |
அன்பு ஒன்றே தான் காரணம். முகமறியாத ஒரு அம்மாவுக்கும்,அக்காவுக்கும்,
தோழிக்கும்,தங்கைக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்லி என்னை நாள் முழுவதும் உருக வைத்த இணைய நட்புகளுக்கு என்
நன்றிகள்.ஆயிரம்,பல்லாயிரம்,கோடி வணக்கங்கள்.
வாழ்க வளமுடன்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
28 comments:
வாழ்த்துக்கள் அம்மா... நன்றி...
நல்ல படங்கள். பிறந்த நாள் நல்ல படியாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.
ச்சோ............ ச்ச்ச்வீட்!
நல்லா இருங்கப்பா!
லில்லி அப்படியே தூக்குது:-))))
நமக்கு எல்லாம் நம்மிடம் அன்பாய் நாலுவார்த்தை பேசினால் நாள் எல்லாம் மகிழ்ச்சி தான்.
மலர்கள் எல்லாம் அழகு.
வாழ்க வளமுடன்.
மீண்டும் வாழ்த்துகள். பூக்களின் படங்களுக்கு நன்றிகள்> வாழ்க! வாழ்க!!
மேலும் பல்லாண்டு பல்லாண்டு ப்ல நூற்றாண்டுகள் சந்தோஷமாக வாழ்க!!!
லில்லி மலர்கள் அழகு. மகிழ்ச்சி வல்லிம்மா.
சர்வ மங்களாணி பவந்து
//எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்//
எனக்கும் வரும்போது
புளியோதரையும்
தயிரன்னமும்
கிடைக்கட்டும்
சுப்பு தாத்தா
www.subbuthatha.blogspot.in
பிறந்த நாள் வாழ்த்துகள். அழகான மலர்கள்.
வல்லிம்மா வீட்டு லில்லிகள் அழகு. இந்த மலர்களைப்போலவே எப்பவும் மலர்ச்சியா இருக்க வாழ்த்துகள்:-)
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
மலர்கள் அழகு. நன்றிக்கு ஒரு நன்றி.
நலமாக வாழ்க.
வாழ்த்துகள் அம்மா. மலர்கள் அழகோ அழகு!
அழகிய மலர்கள்.வீட்டில் மலர்ந்தவையோ?
சற்றே தாமதமானாலும் என் மனம் நிறைய மகிழ்வுடன் என் நல்வாழ்ததுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க வளமுடன், நலமுடன், மகிழ்வுடன் என்றும்! மலர்கள் அத்தனையும் வெகு அழகு வல்லிம்மா!
நன்றி தனபாலன்,
உங்கள் வாழ்வும் வளம் பெற வாழ்த்துகள்.
வரணும் கடைசிபென்ச்.
எல்லாமே நல்லபடியே நடந்தன.
நம்ம ஊரிலயும் இவ்வளவு அழகாக் கிடைக்கும் என்று இப்போதுதான் தெரிகிறது. குழந்தைகள் இணையம் மூலம் அனுப்பின மலர்கள் துளசி.
ஹாப்பி யுகாதி மா.
நமக்கு எல்லாம் நம்மிடம் அன்பாய் நாலுவார்த்தை பேசினால் நாள் எல்லாம் மகிழ்ச்சி தான்.//
அத்தனையும் உண்மை கோமதி. அன்பு வார்த்தைகள் போதும். தங்கம் வேண்டாம்.பட்டுப் புடவை வேண்டாம்.
நல்ல எண்ணங்கள் கொண்ட நட்புகள் இருந்தால் போதும்.
பல்லாண்டு சரி. அதென்ன நூறாண்டு கோபு சார்.:)
நன்றி.மிக நன்றி.
ராமலக்ஷ்மிக்குப் பிடிக்காத மலரும் உண்டா.
மலர்களைப் பார்த்ததும் உங்கள் நினைவு வந்ததுமா.
மிக நன்றி .
வரணும் சுப்பு சார்.
புளியோதரையும் தயிரன்னமும் ஸ்பெஷல் உண்டு. என்னிக்கு என்று சொல்லுங்கள்.
இன்று யுகாதித் திருநாள்.
இன்று உங்கள் இல்லத்தில் ஆரோக்கியமும் ஆநந்தமும் பெருகவேண்டும் என்றுவாழ்த்துகள் அனுப்புகிறேன்.
நன்றி கீதா, நீங்கள் தான் பதிவு போட்டு அசத்திவிட்டீர்களே. யுகாதிதின வாழ்ழ்த்துகள் மா. எல்லா நலனும் பெருகவேண்டும்.
வரணும் இந்திரா,.
நம்வீட்டில் ஆர்க்கிட் மலர்கள் மட்டுமே.
லில்லி பயிரிடவில்லை.
எல்லோருக்கும் நீங்கள் சொன்னது போல ஆகிவிட்டது.
அத்தனை பேரோட நல்வாழ்த்துகள் வந்து சேர்ந்தன.
அத்ற்கே என் நன்றிகள் உடனே சொல்லணும். யுகாதி நந்நாள் வாழ்த்துகள்.மா.
அன்பு சாரல். வீட்டு லில்லிகள் இல்லை.
பொக்கே லில்லிகள்.!!
குழந்தைகள் அனுப்பியவை.
மலர்களின் அழகு மனதுக்கு இதம். அவைகளின் மென்மை நமக்கு உரம்.
வாழ்த்துகளுக்கு மிக நன்றி.
முகப்புத்தகம் மூலம் ஏற்கனவே வாழ்த்துகளைச் சொல்லி இருந்தாலும், இங்கேயும் சொல்லிக்கிறேன்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வல்லிம்மா....
நன்றி வெங்கட். நான் முகப்புத்தகம் பக்கம் போய் நாட்களாச்சு. இன்றுதான் போய்ப் பார்த்தேன்.
வாழ்த்துகளுக்கு மிக மிக நன்றிமா.
தாமதமாக நன்றி சொல்கிறேன்.
அன்பு துரை,அன்பு ஸ்ரீராம்,அன்பு பாலகணேஷ்.
மன்னிக்கணும்.உங்கள் எல்லோருக்கும் என் வாழ்த்துகளும்.
பிந்திய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்கின்றேன்.
Post a Comment