Blog Archive

Thursday, January 17, 2013

புதுத் திட்டங்கள்

பழையனகழிதலும் புதியன புகுதலும்
எந்தப் பாதை?
விளக்கே திருவே வேதனுடைய நற்பிறப்பே

மார்கழி முப்பதுநாட்களும் ஓடியாகிவிட்டது.
அதே ஆண்டாள், அதே ரங்கமன்னார்
என்னைப் பார்த்துக் கேள்வி கேட்பது போலத் தோன்றுகிறது.
இதற்கப்புறம் என்ன..எங்களை இப்படியே விட்டுவிட்டு

என்ன எழுதப் போகிறாய்.

யோசிக்கிறேன். கண்ணிநுண் சிறுத்தாம்பு,மதுரகவி ஆழ்வார்
 பாசுரங்களுக்கு.........
அது உன் தகுதிக்கு மேற்பட்டது இல்லையா.

ஆமாம். அந்தப் பாசுரங்களைப் படிக்கச் சொல்லி அம்மா சொல்லி இருக்கிறார்.

படிக்கலாம். அர்த்தம்கூடப் புரிந்துகொள்வாய்.
அதைப் பொருள் பிறழாமல் உன்னால் தர இயலுமா.?
ஏற்கனவே  எழுத்துப் பிழை நிறைய வருகிறது. உனக்கோ எழுதியவற்றைச் சரிபார்க்கும் வழக்கம் இல்லை:(

பதிவு எழுதவேண்டும்தான். அதற்காக மகாப் பெரியவர்களின் வார்த்தைகளை
நோக வைத்துவிடாதே.
சரிதான் .
கண்ணுக்கும் ஓய்வு தேவை.
கொஞ்ச நாட்களுக்கு.
   மற்றவர்கள் பதிவுகளைப் படிக்கலாம்.
நடைப் பயிற்சிக்குப் போகலாம் .
புத்தகக் கண்காட்சிக்குப் போகலாம்.
சரவணன் மீனாட்சி பார்க்காமல் இருக்கலாம்:)

வேற வேலையா இல்லை.ஹூம்.
சரி நாளை பார்க்கலாம்.:)




 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

22 comments:

sury siva said...

// சரவணன் மீனாட்சி பார்க்காமல் இருக்கலாம்:)//

இந்த சீரியல் இப்ப ரொம்ப ஸ்டேல் ஆகிவிட்டது. மீனாட்சியின் மாமியார் சொல்வது செய்வது எல்லாமே ஒரு வித
செய்ற்கைத் தன்மை இருக்கிறது. மிகவும் போர்.

அடுத்து கனா காணும் காலங்கள் கதை என்னவென்றே தெரியவில்லை. கல்லூரி சம்பவங்கள் நடப்பதைப் பார்த்தால்
இன்றைய கல்லூரிகளில் இது தான் நடக்கிறதோ படிப்பு என்று எதுவுமே கிடையாதோ எனத் தோன்றுகிறது.

கருத்தம்மா, மண்வாசனை எல்லாமே மாமியார் ஆதிக்கம். அவுட் ஆஃப் டுடேஸ் ட்ரென்ட்.

7 ஸி ஓரளவு தேவலை. ஆனா இழுத்துண்டு போறது .

தரும யுத்தம் முடியறதுக்கு 11.15 ஆகிடறது.

விடிஞ்சா திரும்பவும் கருத்தம்மா...

என்று முடியும் இந்த சீரியல் தாகம் ?

வாக்கிங் போலாம்னா பனி ரொம்பவே இருக்கீறதே !!

மீனாட்சி பாட்டி.

கோமதி அரசு said...

புதுத் திட்டங்கள் அருமை.
பாசுரங்கள் விரைவில் எதிர்ப்பார்க்கலாம்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் மீனாட்சி அம்மா. ஸ்டேல்தான்.ஒருநாள் விட்டு ஒருநள் பார்த்தால் கூட நகர மாட்டேன் என்கிறது. சிந்துபைரவியும் தட்டுதடுமாறுகிறது. எனக்கு மண்வாசனை மாமியார் குரல் பிடிக்கும்:)
நீங்கள் உறவுகள் தொடர்கதை பார்க்கிறீர்களா:)9 மணிக்குத் தூங்கபோகும் வழக்கம் எனக்கு. பசங்களோட பேசி முடிச்சா அன்றையப் பொழுது ஓவர்:)பனி வீட்டிலியே தாக்குதே. பழைய எலும்புன்னு அதுக்கும் தெரிந்திருக்கிறது.:)

வல்லிசிம்ஹன் said...

செய்யலாம் என்கிறீர்களா கோமதி.
சரி நன்றாக உருப்போட்டுவிட்டு சாமிமேல பாரத்தைப் போட்டுத் தொடங்கலாம்.நன்றி மா. உங்களுக்குத்தான் என் மேல் எவ்வளவு நம்பிக்கை.

Unknown said...

கண்ணிநுண் பசுரசுங்கள் தங்கள் எளிய எழுத்துக்களில் படிக்கக் காத்திருக்கிறேன் அம்மா ஆழ்வார்கள் ஆசி வேண்டும்.

Geetha Sambasivam said...

உனக்கோ எழுதியவற்றைச் சரிபார்க்கும் வழக்கம் இல்லை:(//

ஹிஹிஹி, சேம் ப்ளட், நானும் சரி பார்ப்பதில்லை பெரும்பாலும், சில சமயங்களில் முக்கியமான பதிவுகள் என்றால் ஒரு தரம் ஆதாரங்களைச் சரியாக் கொடுத்திருக்கோமானு பார்த்துப்பேன். :))))

Geetha Sambasivam said...

கண்ணி நுண் சிறுத்தாம்பு, பல விளக்கங்களைக் கேட்டிருக்கேன். ஸ்ரீரங்கம் மோஹனரங்கன் கூட எழுதி இருக்கார். இருந்தாலும் உங்கள் புரிதலில் படிக்க ஆசை.

துளசி கோபால் said...

ஆஹா..... மதுரகவி ஆழ்வாரா!!!!!!

பயப்படாம ஆரம்பிங்க. எல்லாம் தானாக வரும்.

வெயிட்டீஸ்.

RAMA RAVI (RAMVI) said...

அதே ஆண்டாள் அதே ரங்கமன்னாராக இருந்தாலும்,ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் ஒரு புதுமை.அலுப்பது இல்லை. பெருமாளைப்பற்றி படிக்கும் பொழுதோ, கேட்கும் பொழுதோ அலுக்குமா என்ன?? மதுரகவி ஆழ்வார் பசுரங்களை அனுபவிக்க காத்திருக்கிறேன்.

ஸ்ரீராம். said...

சீரியல்கள் எல்லாம் பார்க்கிறீர்களா? எப்படிப் பொறுமை இருக்கிறது?

வல்லிசிம்ஹன் said...

அன்பு இந்திரா,படிப்பளவிலியே எனக்கு கண்ணி...தெரியும். பெரிய பரீட்சைதான். தெளிவோடு அணுகப் பர்க்கிறேன்மா. நன்றி.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா. இது ரொம்ப முக்கியமான பக்திப் பாசுரங்கள். ரொம்பவே எச்சரிக்கையோடு
இருக்கணும். மோகனரங்கன் ஜி எங்கே நான் எங்கே.இப்ப உண்மையாவே பயமா இருக்கு.:(

வல்லிசிம்ஹன் said...

தானா வருமா:) துளசி காத்திருக்கத்தான் வேண்டும். முதல் பாட்டுதான் பாடம் ஆகி இருக்கு.:)

வல்லிசிம்ஹன் said...

மதுரகவி பதிவுக்காரரே வந்துவிட்டார். ரமா.எனக்காகப் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கோ. கையில நல்லபடியா எழுத வரணும்னு.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

தலை எழுத்துதன் சீரியல் பார்க்காஇக்கிறது. முதலில் ஒரே ஒன்று என்று ஆரம்பித்தேன்.ஸ்ரீராம்

கண் பிரச்சினை கணினி பக்கம் போகத்தடை விதிச்சதிலிருந்து,வேற வழியில்லாமல் ஒண்ணு இரண்டாச்சு,ரெண்டு இப்போ மூணாச்சு:))

ராமலக்ஷ்மி said...

மனதுக்குப் பிடித்தப் புதுத் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்த வாழ்த்துகள்:)! சிறிய இடைவெளிக்குப் பிறகு பாசுரங்களுக்கான விளக்கங்களை வழங்கலாமே? எண்ணத்தைத் தந்த இறைவனே எழுதவும் வைத்திடுவார்.

வல்லிசிம்ஹன் said...

மனதுக்கு இதமான வார்த்தைகள் ராமலக்ஷ்மி.
ஆழம் தெரியாமல் காலைவிடுவது டென்ஷன் கொடுக்கும்.

அஸ்திவாரம் ஒழுங்காகப் போட்டபிறகுதான் எழுதுவேன். புரிதலுக்கு ,மிக நன்றிமா.

வெங்கட் நாகராஜ் said...

பட்டியல் நல்லா இருக்கும்மா.....

சற்றே ஓய்வு எடுத்துக்கொள்ளுங்களேன்!

வல்லிசிம்ஹன் said...

நீங்கள் சொல்வது உண்மைதான் வெங்கட்.வேறு வீட்டு வேலைகளும் இருக்கின்றன. நடைப்பயிற்சி கட்டாயம் செய்தே ஆக வேண்டும்.தீர்க்கமாக யோசித்துச் செய்ய வேண்டிய விஷயம் எழுத்து. சரியாகச் செய்யவில்லையானால் தலைவலி வந்துவிடும்!! மிக மிக நன்றிமா.

ஸ்ரீராம். said...

ராமலக்ஷ்மி எவ்வளவு அழகிய வரிகளில் பின்னூட்டம் அமைத்திருக்கிறார்? நம்பிக்கையூட்டும் வரிகள். நான் இன்னும் வளரணும்!

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
அன்பில்லாதவர் யாரும் இங்கு இல்லை.

அதை வெளிப்படுத்துவதில் வேற வேற வழிகள்.

நான் சொன்னேனே ஒரு நண்பரைப் பற்றி.உனக்கு டயபெடிஸே இல்லை'' என்று.அவருக்கு என் மேல் இல்லாத அக்கறையா.அவருள்ளத்தில் இருக்கும் ஆதங்கம் வருத்தம் அந்தவார்த்தைகளில் வெளிப்படுகிறது. அதுபோலத்தான் நீங்களும்.நீங்கள் வளர்ந்தவரே.சந்தேகம் வேண்டாம்.

மாதேவி said...

எழுதுங்கள் படிக்கக் காத்திருக்கின்றோம்.

கிராமத்துக்குச் சென்றதால் தொடரமுடியவில்லை. விடுபட்டவற்றை தொடர்கின்றேன்.