Blog Archive

Thursday, December 27, 2012

கனைத்திளம் கற்று எருமை கன்றுக்கிறங்கி

ஸ்ரீராமபட்டாபிஷேகம்
இராம ராவண யுத்தம்
திருமங்கைஆழ்வார்
கண்ணாடி அறையில் ஆண்டாளின் பாசுரம் வடிவு
மாலழகன்

 அன்ன வயல் புதுவை ஆண்டாள் 
அரங்கற்குப் பன்னு திருப்பாவை
பல்பதியம் பாடிக்கொடுத்தாள்
நற்பூமாலைச் சூடிக்கொடுத்தாளைச் சொல்லு
சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே
தொல்பாவைபாடிக்கொடுத்த
பைவளையாய்
நாடி நீ வேங்கடவற்கு எம்மை விதி
என்ற இந்நாமம் நாம் கடவா வண்ணமே நல்கு.

**************************************************
இன்றைய பாசுரம்  12 ஆம் நாள் மார்கழி

கனைத்திளம் கற்றெருமை கன்றுக்கு இறங்கி
நினைத்துமுலை வழியே  நின்று   பால் சோர
நனைத்தில்லம்  சேறாக்கும்  நற்செல்வன் தங்காய்

பனித்தலை வீழ  நின் வாசல் கடைபற்றி
சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற
மனத்துக்கினியானை பாடவும் நீ  வாய்திறவாய்
இனித்தா ன்  எழுந்திராய்  ஈதென்ன பேருறக்கம்!!
அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோர்  எம்பாவாய்!!
****************************************************
எம்பாவாய்,  மாஹாலக்ஷ்மியே சீதையாக அவதரித்தாள். பட்ட மஹிஷி அவள். ஸ்ரீராமனைப்   பின்பற்றிக் கானகம் சென்றாள்.

அவள்   உலகத்து மக்களை ரட்சிப்பவள்.
அவளைப் போலவே   இதோ இந்த  மஹிஷமும்
தன்கன்றின் மேல் கோண்ட பாசத்தால் யாரும் கறக்காமல்
தானாகவே  பாலைச் சொரிகிறது..
அந்தப் பாலோ கட்டுக்கடங்காமல்  பெருகி உன்வாசலில் இருக்கும் நிலத்தை நனைத்துச் சேறாக்கிவிட்டது.

சில்லென்ற பனி எங்கள் தலையில்  இறங்குகிறது.
காலடியில் சில்லென்று பால்சேறு இன்னும் குளிரைக் கூட்டுகிறது.


ஸ்ரீராமனுக்குக் கோபம் வந்தது சில நேரங்களில் தான். அவன் இனியவன். மனத்தால் நினைத்தாலே குளிர வைப்பவன்.
தம்பி இலக்குவன் வீழ்ந்தபோது வந்து காப்பாற்றிய
அனுமனை இராவணனின் பாணங்கள் தாக்கி
பொன்மலையில் சிவந்த(ரத்தம்வழிய)  பூக்கள் பூத்தது போல
தன் பக்தன் நின்ற கோலம் அவனைச் சீற்றத்துக்குள்ளாக்கி

ஸ்ரீராமன்  எய்தான் தன் பாணத்தை. வென்றான் இலங்கைக் கோமானை.
அவனைப் பாட வேண்டாமா.
எழுந்திரம்மா. இப்படி உறங்கலாமா. அக்கம்பக்கம் எல்லோரும் அறிவார்கள் நீ
இன்னும்  எழவில்லை என்று. சீக்கிரம் அவர்கள் மெச்ச
எங்களுடன் வந்து இறைவனை நாடுவாய்  என்று இனிதாக மொழிகிறாள்.






 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

11 comments:

jeevagv said...

எப்போதும்போல படங்களும் பாடல் பொருளும் அருமை!

துளசி கோபால் said...

ஹைய்யோ!!!!!


ராமராவண யுத்தம் படம் சூப்பர்மா!!!! இதுவரை பார்த்ததே இல்லை!

சாந்தி மாரியப்பன் said...

கண்ணாடி அறைக்காட்சியை விட்டுக் கண்ணை எடுக்க முடியவில்லை. அருமை வல்லிம்மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஜீவா. பொருளின்னும் அருமையாக இருந்திருக்கலாம்

வல்லிசிம்ஹன் said...

அள்ளித்தர கூகிளார் இருக்கிறாரே துளசி.சரியான தலைப்பைக் கொடுத்ததும் ராவணன் ஆயுதங்களோட வந்துட்டார்ப்பா.;)

வல்லிசிம்ஹன் said...

கோவில்களில் காண்ணாடி அறைகள் பொதுவாக உற்சவ மூர்த்திகளை ஏளச் செய்வதற்கு ஏற்பாடு செய்வதுண்டு. ஆனால் ஸ்ரீரங்கத்தில் இந்த ஏற்பாடுகள் ஆண்டாளின் திருப்பாவைக் காட்சிகளாக உருவாகின்றன என்று படித்தேன். நன்றி சாரல்.

வல்லிசிம்ஹன் said...
This comment has been removed by the author.
ஸ்ரீராம். said...

படங்களும் அழகு. பகிர்வும் அருமை.

பால கணேஷ் said...

கண்ணாடி அறைக் காட்சியும், திருமங்கை ஆழ்வாரும் கண்களை நிறைத்து அகல விடாமல் செய்தன. அழகுத் தமிழ்ப் பாசுரம் மனதை நிறைத்து விட்டது. டபுள் ட்ரீட்!

வல்லிசிம்ஹன் said...

வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக மிக நன்றி ஸ்ரீராம்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கணேஷ், எல்லப் படங்களும் குகிளார் கொடுத்தார். தேடுதல் இருந்தால் பலனும் உண்டு இல்லையா.
நன்றி மா.