Blog Archive

Wednesday, December 26, 2012

கணங்கள் பல கறக்கும் கற்றுக் கறவைகள்

ஆண்டாள் கோவிலும் பால்கோவாவும்
கறவைகள்
Add caption




குற்றமொன்றிலாத கோவலன்
 மற்றொரு வீட்டுப் பெண்ணையும் எழுப்ப வருகிறாள்  ஆண்டாள்.
அந்த வீடோ பல நூறு கறவை மாடுகளையும் கொண்டது.
அந்தக் கறவை மாடுகளோ நிற்காமல் பால் சுரப்பவை.  ஆஅண்டாள் தன் வில்லிபுத்தூரை ஆய்ப்பாடியாக நினைத்ததுமே பகவான் திருமால்,
அந்த ஊரையே பசுக்கள் அதுவும் வள்ளல் பசுக்கள் கொண்ட ஊராக  மாற்றிவிட்டானாம்.  மனைவி நினைத்ததையே  செய்யும்   கண் அவன்!!


அந்தவீட்டுடையவனோ   காவலன் ஒரு கோவலன். கோக்களைக் காத்து ரட்சிப்பவன்.   தன்னைப் பகைக் கண்ணோடு பார்ப்பவர்களை அழித்து தன் சுற்றத்தைக் காப்பவன்.
அவனுடைய தங்கையோ பொற்கொடி போன்ற அழகு   கொண்டவள்.


புனமயிலே என்று அழைக்கிறாள் ஆண்டாள்.எழுந்திரு அம்மா. அக்கம்பக்கத்துத் தோழிகள் அனைவரும் வந்துவிட்டார்கள்.
உங்கள் வீட்டு முற்றத்தில் காத்து நிற்கிறார்கள். முகில்வண்ணன்  எனும் பெருமாள்  ,அவனைப் பாடக் காத்திருக்கிறார்கள்.
நீயோ இப்படி ஒரு மாய உறக்கத்தில் ஆழ்ந்து  ஒரு சிறு சொல் கூடப் பேசாமல்

உறங்குவது முறையல்ல  எழுந்திரு என்கிறாள்.

வில்லிபுத்தூர்வளம் பாடும் பாசுரம் இதோ.

கற்றுக் கறவை கணங்கள் பல கலந்து 
செற்றார் திறலழிய சென்று செருச் செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலன் தன் பொற்கொடியே
புற்றரவல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து நின்
ம்ற்றம் புகுநு முகில்வண்ணன் பேர்பாட'
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி  நீ
எற்றுக்கும் உறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.


அன்பினால் ஆண்டாளை வணங்குவோம்.







எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

9 comments:

sury siva said...

//மனைவி நினைத்ததையே செய்யும் கண் அவன்!!//

ஸ்ட்ராங்க்லி அப்ஜெக்ட் யுவர் ஆனர் !!

சுப்பு ரத்தினம் , நரசிம்மன், கோபால் , வெங்கட ராஜ் இவங்க எல்லாரும்
முதல் வரிசைலே உட்கார்ந்து இருப்பதை பார்க்கலையா !!

சுப்பு தாத்தா.

வல்லிசிம்ஹன் said...

சுப்பு சார். எனக்குப் புரியலையே. நீங்கள் எல்லோரும் கண் அவன் தானே. மறு பேச்சு பேச மாட்டீர்களே.

மனைவி சொல்லே மந்திரம்.
இதைப் பின்பற்றினால் இன்பங்கள் பெருகும். சுபங்கள் நடக்கும். இதுதெரியாதவர்கள் நீங்களா.:)
ம்ஹூம் நான் ஒத்துக்க மாட்டேன். மீனாட்சி மாமி,துளசி, ஆதி, எல்லாம் வாங்கப்பா.:)

துளசி கோபால் said...

தோ.... வந்தேன்.

மறு சொல் பேச விட்டுருவோ அந்த கண் அவரை? ஊஹூம்... நெவர்.

ரங்ஸ்களே! சாந்தி நிலவ வேண்டும் என்றால் தலையை மட்டும் ஆட்டுங்க. இது முதல் பாடம். கடைசியும் இதுதான் கேட்டோ:-)))))

இராஜராஜேஸ்வரி said...

காவலன் ஒரு கோவலன்.

நல்லா பாடம் நடந்திருக்கிறது ...

நன்கு பாடம் கற்றிருப்பார்கள் என்று நம்புவோம் ..

sury siva said...

அம்பேல்...அம்பேல்...

நான் சொல்ல வந்ததெல்லாம் என்னன்னே புரிஞ்சுக்கல்லயே !!
பெருமாளே !! இதுவும் உன் திருவிளையாடலா !!

மனைவி சொல் மந்திரம் என்பதற்கு முன் உதாரணம் என்றால்
முன் நின்று இருக்கும் சுப்பு தாத்தா.....முதலியோர் அல்லவோ ??

மனைவி நினைத்ததையே செய்யும் கண் அவனா ?

மனைவி நினைத்ததேயே செய்யும் கண்,மூக்கு, காது, வாய்,
மனி பர்ஸ் எல்லாமே நாங்கதானே !!

வாங்க கோபால் சார் ! வெங்கட ராஜ் சாரே !!
இந்த அறப்போராட்டத்துக்கு துணை நிற்க.

சுப்பு தாத்தா.

வல்லிசிம்ஹன் said...

துளசிமா. சுப்பு சார் சொன்னது வேறு அர்த்தத்தில்:)
நாம் தான் தப்பாகப் புரிந்து கொண்டுவிட்டோம்.:)
மன்னிக்கணும் சுப்பு சார். இவ்வளவு தீவிர பக்தராக இருப்பீர்கள் என்று தெரியாமல் போச்சே:)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் இராஜராஜேஸ்வரி. நிலம்,பெண்கள்,மாடுகள் எல்லாம் ஒரு காவலனின் பாதுகாப்புக்கு உட்பட்டவை தானே. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

சுப்பு சார் தப்பான புரிதலுக்கு வருந்துகிறேன்.:)
உடல் பொருள் அனைத்தும் மனைவிக்கே அர்ப்பணம்னு சொல்லிவிட்டீர்கள். மீனாட்சி அம்மா கிட்ட சொல்லிடறேன்.

துளசி கோபால் said...

எள் என்று 'ள்'ளைச் சொல்லி முடிக்குமுன்னே எண்ணெயா!!!!!!!

ஆஹா ஆஹா அடடா அடடா. .