Blog Archive

Tuesday, December 25, 2012

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்

அனைவரையும் விழிக்க்வைத்து புத்துணர்வு கொடுத்தவள்



நோற்றுச் சுவர்க்கம் பதிவு காணொம்.
பாடல் பாசுரம் இது.
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ  வாசல் திறவாதார்.
நாற்றத்துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் தரும் புண்ணியனால் பண்டு ஒருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ
ஆற்றல் அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்.
இதை  எழுதிப் பிரசுரித்து  பின்னூட்டங்கள் வந்து நான் பதில் எழுதி எல்லாம் ஆச்சு.

ஒரு வேளை மாயன் கொண்டு போனானோ.:)



கும்பகரணனின் கொடையால் ஒரு பெண் தூங்கிவிடுகிறாள்.
ஆண்டாளுக்கோ இவள்   நாராயணனை மறந்து உறங்குகிறாளே.

நோன்பிருந்து சுவர்க்கம் போகும் வழியைப் பார்க்க வேண்டாமா.
நாராயணன் தரும் பறையை வாங்க வேண்டாமோ.
ஊரெங்கும்  துளசி மணம் சூழ அதை அனுபவிக்காமல்


ஆற்றல் இருந்தும்  பண்புகள் நிறைந்த மங்கையாக
 இருந்தும் உறங்குகிறாளே  இவள் இந்த அனுபவத்தை விட்டு விடக் கூடாதே என்று எழுப்புகிறாள்.


அம்மா தாயே  கோதாம்மா  நீ சொன்ன அர்த்தத்தில் என் பதிவு வேறு படாமல் இருக்க நீயே அருள் வேண்டும்.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

3 comments:

இராஜராஜேஸ்வரி said...

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

அழகான படம் ..

வல்லிசிம்ஹன் said...

அன்பு இராஜராஜேஸ்வரி படமிருக்கப் பதிவைத் தொலைத்தேன். மீண்டும் எழுதிவிட்டேன். அன்பின் வருகைக்கு நன்றி.

ராமலக்ஷ்மி said...

அருமையான விளக்கம். நன்றி வல்லிம்மா.

[எழுதும் பதிவுக்கு எப்போதும் ஒரு back up வைத்துக் கொள்ளுங்கள்.]