பாட்டி ஸ்டோரி சொல்லு.
பாட்டி தூங்காதே ஸ்டோரி சொல்லு.
XV எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Add caption |
ராதா என்கிற அன்புமனம் கொண்ட பெண்ணின் பாசப் பிணைப்பு எப்படி அவளுடைய அத்தையையும் மகிழ்ச்சி வட்டத்தில் ஆழ்த்துகிறது என்பதே
என்பதே கதை.
கீதா எனும் எழுத்தாளர் எழுதிய சிறுகதை.
லதா என்ற பெயரோடு ஒரு ஓவியர் அப்போதெல்லாம் சாண்டில்யன் கதைகளுக்கு ஓவியம் வரைவர்,. நிறைய நாட்கள் கழித்துதான் தெரியும் அவர் ல.தாமோதரன் என்று:)
அது போல இது எழுத்தாளரும் ஆணா பெண்ணா என்று தெரியவில்லை.
கதை நன்றாக இருந்தது.
அண்ணனின் பாசத்தை எதிர்பார்த்து அவன் பெண்ணின் திருமணத்துக்குச் செல்லும் தங்கை.
ஒரு ஆறு மாதங்களுக்கு முன் தான் தன் பதினைந்து வயது மகனை இழந்தவள்.
அப்போதெல்லாம் டைபாய்ட் வியாதிக்குப் பிழைப்பவர்கள் கொஞ்சமே.
கணவனின் சேமிப்பான 500ரூபாயும் கரைய மகனையும் இழக்கிறார்கள்.
ஆரம்பத்தில் அருமையாக இருந்த அண்ணன்,மத்திய சர்க்கார் வேலை கிடைத்து டெல்லிக்குச் சென்றதும் சிறிது மாறுகிறான்.
அவன் மனைவி நீலா முழுவதும் மாறிவிடுகிறாள்.
நாத்தனாரின் மகன் மறைவுக்குக் கூட அவளால் வர மனம் ஒப்பவில்லை.
ஜெயத் துக்கும் இரண்டு பெண்குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும்.
அங்கே அண்ணனுக்கும்
17 வயதில் ராதை என்கிற பெண்ணும் இரண்டு ஆண் குழந்தைகளும் .
கனு கார்த்திகைக்கு இரண்டு ரூபாய் அனுப்புவதோடு(????????????????????)
அவன் தன் பாசத்துக்கு அணை போட்டு விடுகிறான்.
மனைவியைப் பகைத்துக் கொள்ள மனமில்லை.
இந்த நிலையில் ஜெயத்துக்குக் கடிதம் வருகிறது.
''ராதைக்குத் திருமணம் செய்யப் போவதாகவும்.சென்னையில் உள்ள
தன் பங்களாவுக்குக் குழந்தைகள் கணவரோடு வந்து திருமணத்தில் கலந்துகொண்டு
கௌரவிக்கவேண்டும் என்று தேதியும் குறிப்பிட்டு
அண்ணன் எழுதி இருக்கிறான்.
ராதையின் மேல் ஜெயத்துக்கு எப்பவுமே ஒரு பிணைப்பு. இறந்த தன் அம்மா போலவே இருக்கிறாள். அமைதியான குணம் என்று எப்பொழுதும் மெச்சிக் கொள்வாள்.
அவள் மனம் குழப்பத்தில் தவிக்கிறது.
குழந்தை இப்போதுதான் தவறியிருக்கிறான் தான் திருமணவைபவங்களில் கலந்து கொள்ளவேண்டுமா என்று.
இரவு வேலை முடிந்து வரும் கணவனிடமும் முறையிடுகிறாள்.
அவனும் திருமணத்துக்குப் போவதுதான் பண்பு என்று முறையை எடுத்துச் சொல்கிறான். நம் துன்பம் நம்மோடு. அந்தக் குழந்தையை நாம் வாழ்த்தாமல் யார் வாழ்த்துவது என்று அடுத்த நாள் பணத்துக்கு ஏற்பாடு செய்யவும் ஒரு வழி சொல்கிறான்.
ஜெயம் போட்டுக் கொண்டிருக்கும் ஆறு பவுன் சங்கிலியை பாங்கில் அடைமானம் வைத்து 300 ரூபாய் கொண்டு வருகிறான்,
இரயில் செலவு,ராதைக்குத் திருமணப் பரிசாக தங்கமுலாம் பூசின மோதிரம்
குழந்தைகளுக்குப் புது துணிமணிகள் ,ஜெயம் கழுத்துக்கு ஒரு கவரிங் செயின் என்று
வாங்கி வருகிறான்.
ஜெயம் முதலில் கிளம்பிக் கல்யாணத்துக்கு முன்னால் செய்ய வேண்டிய
சமாராதனை மற்ற நல்ல விசேஷங்களில் கலந்து கொள்ள சென்னை வருகிறாள் குழந்தைகளுடன்.
அவள் குடும்பத்துக்கு ஒரே பெண்.
அதனால் அண்ணன் அவளை முன்பாகவே வரச் சொல்லி எழுதி இருந்தான்.
ரயிலடிக்கு வரும் அண்ணனின் மகன் சேகர் அத்தையைப் பாசத்தோடு அழைத்துச் செல்கிறான்.
அங்கே பங்களா கொள்ளாமல் மன்னி நீலாவின் தங்கைகளும் அம்மா,சித்தி என்று நிறைந்திருக்கிறார்கள்.
வந்திறங்கும் ஜெயத்தை வந்தியா என்று வரவேற்று உள்ளே சென்றுவிடுகிறாள் நீலா.
கல்யாணப் பெண் ராதா ஓடிவந்து அத்தையைக் கட்டிக் கொள்கிறாள்.
இருவர் கண்ணிலும் தவறிவிட்ட மோகனின் நினைவு கண்ணீரை வரவழைக்கிறது.
கண்கொத்திப் பாம்பாகப் பார்க்கும் ராதாவின் அம்மம்மா(!)
'நன்னாயிருக்கடி ரெண்டு பேரும் செய்யறது. கல்யாணப் பொண்ணா லட்சணமா சிரிச்ச முகத்தோடு இரு என்ன்று ராதாவை அழைத்துச் சென்று விடுகிறால்.
வரும் இரண்டு நாட்களிலும் ஜெயம் புறக்கணிக்கப் படுகிறாள்.
ஒரு சாதாரணப் புடவை கல்யாணத்துக்கு வாங்கித்தருகிறாள்
நீலா.
அவளுக்கும் அவள் உறவினர்களுக்கும் நல்ல பட்டுப் புடவைகள் வந்து சேருவதை ஜெயம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறாள். திருமணத்துக்கு முதல் நாள் ஜெயத்தின் கண்வனும் வந்து சேர அவனுக்கும் வேட்டி அங்கவஸ்திரம் வைத்துக் கொடுக்கப் படுகிறது.
திருமணம் மிக ஆடம்பரமாக நடக்கிறது.
கச்சேரி,கதாகாலாட்சேபம் என்று மூன்று நாட்கள் போனதே
தெரியவில்லை.
திருமணம் முடிந்த கையோடு கணவனையும் குழந்தைகளையும்
அழைத்துக் கொண்டு திருச்சி திரும்பிவிடுகிறாள்.
வந்தவளுக்குத் தனக்கு நேர்ந்த அவமானங்களை நினைத்துத் துக்கம் பொங்கி வருகிறது.
பிறகு மனதைத் தேற்றிக் கொள்கிறாள்.
பணம் ஒன்றுதானே நம்மிடம் இல்லை. மற்றபடி நல்ல கணவன்,மணிமணியாகக் குழந்தைகள் .
என்று திருப்திப் பட்டுக் கொள்கிறாள்.
இரண்டு நாளில் ஒரு மதிய வேளையில் அத்தை.... என்று குரல் கேட்கிறது.
வாசலில் கார் நிற்கும் சத்தம் ,கதவுகள் சாத்தப் படும் சப்தம் கேட்டதும் விரைகிறாள் கதவைத் திறக்க.
அங்கெ புதுமணம் மாறாமல் நிற்கிறார்கள் ராதையு ம் அவள் கணவன் மாதவனும்.
ஆச்சரியம் விலகாத நிலையில் ஜெயம் நிற்க வண்டியிலிருந்து வண்டி ஓட்டுபவர் பலவித பிஸ்கட் டப்பாக்கள்,பழங்கள் துணிமணிப் பெட்டிகள் என்று கொண்டு வைக்கிறான்.
அதில் ஒரு புடவைப் பெட்டியை எடுத்து அத்தை கையில் கொடுத்து இருவரும் வணங்குகிறார்கள்.
என்னம்மா ராதா இதெல்லாம் என்று ஜெயம் கேட்க,
ராதை சொல்கிறாள்.
'அத்தை எங்க மாமியார் ரொம்ப நல்லவர்.
நீங்கள் கல்யாணத்தில் நடத்தப் பட்ட விதத்தை எல்லாம் பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறார்.
நானும் கல்யாணம் முடிந்த கையோடு அவர்களுடன் மதுரைக்குச் சென்றுவிட்டேன்.
அங்கேதான் என்னை அருகில் வைத்துக் கொண்டு உறவுகளின் பெருமைகளை எடுத்துச் சொன்னார்.
உங்க அம்மா மாதிரி நீ இருக்காதே.
அன்பும் அரவணைப்பும் எப்பொழுதும் நாமும் தரவேண்டும் .பெற வேண்டும்.
நீ உடனே மாதவனை அழைத்துப் போய் உன் அத்தையைப் பார்த்துவிட்டு வா.
நம்வீட்டிற்கும் வரச் சொல்லி அழைப்பு கொடுத்துவிட்டு,கோவில்களெல்லாம் பார்த்துவிட்டு வாருங்கள் என்று அனுப்பினார் அத்தை'' என்று மூச்சுவிடாமல் சொல்லி முடிக்கிறாள்.
ஜெயத்தின் வருத்தமெல்லாம் மறைந்துவிடுகிறது. ஒரு பாசம் விலகினால் என்ன.இந்தக் குழந்தையின் அன்பினால் என் மனத்தை நிரம்பச் செய்துவிட்டானே இறைவன் என்று கடவுளை நினைக்கிறாள். .
கதை எல்லார் வீட்டிலும் ஏதாவது ஒரு விதத்தில் நடந்திருக்கும்..
எனக்கு மிகவும் பிடித்தது. உங்களுக்கெல்லாம் எப்படியோ.:)
,
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
சின்னவன் பக்கத்தில் படுத்துக் கொண்டு தவடையைப் பிடிக்கப் பெரியவன் சிரிக்கிறான்.
கிஷா! பாட்டி படுத்துக்கொண்ட பிறகு கதை கேட்டால் நிறைய
கதைகளைக் கலந்துவிடுவாள்.:)
'பாட்டி ! ஆதிமூலமே சொல்லு. அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். என்று தன்னுடைய ஃபீஸிக்ஸ் புத்தகத்தில் ஆழ்ந்தான்.
பெண் அமெரிக்கத் தோழியுடன் தன் வீட்டுச் செடிகளைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தாள்.
நடு நடுல பிள்ளைகளைக் கண்டித்தாள்.
பாட்டிக்கு ப்ரஷர் ஜாஸ்தி ஆகிடும். படுத்தாதீங்கடா''
பாட்டி எலஃபண்ட் ,க்ராக் கதை சொல்லூ
சரிடா.
கஜேந்திரன்னு ஒரு நல்ல யானை இருந்தது.
.அது உம்மாச்சிக்குத் தினம் ஒரு லோட்டஸ் பூவை எடுத்துக் கொண்டு கோவிலுக்குக் கொண்டு போய் க் கொடுக்கும்.
அங்க உம்மாச்சி காலில் அதை வைப்பார்க்கள்.
ஏய் சின்னவா எல்லா யானையும் நல்லது இல்லை
சிலது வயல்ல புகுந்து சாப்பிட்டுடும்.
போ அண்ணா. யானை நல்லது .இல்ல பாட்டி.?
ஆமாண்டா. ரொம்ப நல்லதுமா.
சொல்லு சொல்லு.
அன்னிக்கு ஒரு நாள் அதுவழக்கம் போல தன் சிநேகிதர்களோடயும் அம்மா யானையோடயும் வந்து நல்ல தாமரையா
எடுக்கும் போது அங்க ஒரு முதலை வந்துட்டது.
முதலையா.வாட் இஸ் முதலை.
டேய் க்ராக் டா. ஓ அதுவா நான்பார்த்திருக்கிறேன்.
ஸ்லைமி க்ரீச்சர்!!
அது என்ன பண்ணித்து. யானை காலைப் பிடிச்சுண்டுத்தா.
ஆமாம்.
உம்மாச்சி ஓடி வந்து சுத்ஸ்ரீஷன் சக்கிரம் போட்டதும் அது ஓடிப் போயிடுத்தா?
??????????
இது நான். உனக்குத்தான் தெரிஞ்சிருக்கே என்னைச் சொல்லச் சொன்னியே?
நீ வேற மாதிரி சொல்வியோன்னு பார்த்தேன்.
கதையை நீதான் மாத்திட்டியே. முதலை ஓடிப் போயிடுத்துன்னு சொன்னியே.
ஆமாம் பாட்டி யூ ஷுட் நாட் கில் எனி ஒன்.!!!
ஓகே.
உம்மாச்சிக்கு எப்படித் தெரியும் இந்த யானை அவரைக் கூப்பிடலையே.
'
ஓ!1பாட்டி! உனக்குத் தெரியல.
உம்மாச்சி பார்த்துண்டே இருப்பார்.
யார்க்காவது ட்ரபிள்னு தெரிஞ்சால்
ஹி வில் கம் ஃப்ளையிங்.
ஓ! அப்படி மாறிடுத்தா கதை.
சரி நீ சொல்லு
ஆதிமூலமே, நாராயணா'
ஆடிமூலமே நானான்னா.
சரிடா அவரும் வந்துடுவார் கதை கேட்க
இப்ப தூங்கு.
நாளைக்கு ராமர் கதை. என்றபடி அம்மாவைட் தேடிப்போனான்.:)
புதுயுகப் பேரன்.:)
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
16 comments:
இன்னிக்கு குழந்தைகள் இங்கிலீஷ் கலந்து கதை சொல்றதோட நிறைய சேஞ்சும் பண்ணி சொல்ல வேண்டியிருக்கு. கதை சொன்ன அனுபவத்தை ரசிச்சுப் படிச்சேன். அருமை.
//பாட்டி படுத்துக்கொண்ட பிறகு கதை கேட்டால் நிறைய
கதைகளைக் கலந்துவிடுவாள்.:)//
ச்சோ ஸ்வீட் :-)))))
அனுபவம் அருமை..
சுவாரஸ்யமா பொழுது போகுது போல.... ! தம்ழும் ஆங்கிலமும் கலந்து கதை ஜோராத்தான் இருக்கு.
ஆதிமூலமே, நாராயணா! :))))))
ஆங்கிலம் கலந்த கஜேந்த்ரமோக்ஷம் அருமை .குழந்தைகளுடன் நாமும் குழந்தையாக மாறும் குதூகலமான நேரம் தொடரட்டும் அம்மா
ஆங்கிலம் கலந்த கஜேந்த்ரமோக்ஷம் அருமை .குழந்தைகளுடன் நாமும் குழந்தையாக மாறும் குதூகலமான நேரம் தொடரட்டும் அம்மா
கதைகளையும் காலத்திற்கேற்ப மாற்றிச் சொல்ல வேண்டியிருக்கிறது.... :)
ரசித்தேன்....
எலிஃபெண்ட் அண்ட் க்ரோக் கதை சூப்பர். அதுவும் அந்தக் குழந்தை சொல்லித்து பாருங்கோ!!!
//ஓ!1பாட்டி! உனக்குத் தெரியல.
உம்மாச்சி பார்த்துண்டே இருப்பார்.
யார்க்காவது ட்ரபிள்னு தெரிஞ்சால்
ஹி வில் கம் ஃப்ளையிங்.//
அது!!!!! தான் உண்மை. உம்மாச்சிக்கு நம்மைக் காப்பாத்தறதைத் தவிர வேறென்ன வேலை?
ரசித்துப் படித்தேன் அம்மா ! நன்றி !
//யூ ஷுட் நாட் கில் எனி ஒன்.!!!//
நியாயம்தானே:)?
இது கதை கேட்டுக் கொண்ட அனுபவம் நிரூ மா:)புதுக்கதை.நோ வொர்ரீஸ்.
பெரியவன் ,சின்னவருக்கு முன்னாலயே கதை கேட்டவர். அதனால் பாட்டியின் தூக்கம் தெரியும்.
போ பாட்டி ரெண்டு கதையாஇயும் ஒண்ணு சேர்த்துட்ட என்பான்:)
நன்றி மலர்.காலையில் கொஞ்ச நேரம் கிடைத்தது.இரவுக் கதை சொல்வதைப் பதிந்துவிட்டேன்:)
அருமை!
என் பேத்திக்கு கதை சொல்ல அய்டியா கிடைச்சாச்சு!
ஓ!1பாட்டி! உனக்குத் தெரியல.
உம்மாச்சி பார்த்துண்டே இருப்பார்.
யார்க்காவது ட்ரபிள்னு தெரிஞ்சால்
ஹி வில் கம் ஃப்ளையிங்.//
பேரக் குழந்தைகள் கதை சொல்லும் போது நாம் உலகையே மறந்து விடுவோம்.
நானும் என் பேத்தி கதை கேட்பதை எழுதி இருக்கிறேன். பேரனுக்கு விளையாடத் தான் கம்பெனி கொடுக்க வேண்டும். கதை கேட்க பொறுமை கிடையாது.
Post a Comment