ஆதிமுதலான
ஓம் காரப் பெருமானே
எம்
அன்பு கணபதியே
மயிலை
லஸ் முனையில்
நவக்கிரஹ
கணேசனாக அமர்ந்து
நினைத்தால்
ஓடிவந்து கைகொடுக்கும்
தும்பிக்கையானே
கோலாஹலாமான
பந்தலில் இன்னிசை முழங்க உன்
சதுர்த்தி
நாள் அரங்கேறிக் கொண்டிருக்கும்.
நான்
இங்கிருந்தே உன் விபூதியைத் தரித்து உன்னையும் துதிக்கிறேன்.
அன்பர்
துயர் நீக்கி அருள் புரியும்
உன்னை
என்றும் மறவாமல் இருக்க அருள் புரிவாய்.
லஸ்பிள்ளைய்யாருக்கு எங்கள் தலையாய நமஸ்காரங்கள்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்