நான் விழித்திருந்தேன்
எண்ணிலாக் கனவுகளில் எதை எதையோ நினைத்திருந்தேன்.
அம்மாவுடன் ரசித்த நிலவு
கணவருடன் நடந்த நிலவு
பிள்ளைகளுடன் சோறூட்டிய நிலவு
இன்று நட்புகளுடன் உரையாட
இந்த நிலவு.
எங்கிருந்தாலும் வந்து எட்டிப் பார்க்கும் நிலவே
என்றுமே நீ எனக்குச் சாட்சி.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
13 comments:
புகைப்படம் பதிவேற்றுவதில் எதோ சிரமம்.
ஒரு முறைக்கு இருமுறை வந்து விட்டன படங்கள். சீர்செய்து போடணும்..
கேமிராவின் கண்களுக்குக் கூச்சப்பட்டு மரங்களின் மறைவில் பம்முகின்ற வெண்ணிலா...! இருளின் நதியில் மூழ்குகின்ற வெளிச்ச வெண்ணிலா....
ஒரு மிக அழகான பாடல் வரிகளில் ஆரம்பித்து அதற்கு இணையான இன்னொரு பாடலை நினைவு படுத்தி முடித்திருக்கிறீர்கள்
வரணும் ஸ்ரீராம். வெண்ணிலா வானில் வரும் வேளையில்
என்று ஆரம்பித்திருக்கணும்.
நம்மூருக்கு வந்துவிட்டால் இத்தனை சௌகரியமாகக் கண்ணில்
படாது. கட்டிடங்கள் மறைக்கும்..
கிடைக்கும் வரை காபம் அனுபவிக்கலாம்:)
மிகவும் நன்றி மா. சிக் கெனப் பிடிக்கிறீர்கள்.
.வெரி ஷார்ப்.
ஆயிரம் நிலவுகள் வருவதுண்டு...ஆனால் அத்தனை நிலவிலும் ஒரு நினைவுண்டு.
உண்மைதான் நானானி. ஆயிரம் பிறைகள் கண்ட பிறகு ,
அவ்வளவும் நினைவுக்கு வரவேண்டும் என்றும் பிரார்த்திக்கிறேன்.
நன்றி மா.
எங்கிருந்தாலும் எட்டிப் பார்க்கும் நிலா....
மரங்களின் பின்னிருந்து நிலா எட்டிப்பார்க்கும் மூணாவது படம் ரொம்ப அழகு வல்லிம்மா..
வல்லிம்மா,
புடவைப் பதிவு திரும்ப ஆரம்பிச்சிருக்கேன். வந்து பாருங்க
நீங்கள் விழித்திருந்து பேனாவாலும், கமாராவாலும் படைத்தவை எங்களுக்கு அருமையான விருந்து
ஆமாம் மாதேவி..நிலா எந்தப் பருவத்திலும் அழகுதான்.
வரணும்பா சாரல். நானும் அரை மணி நேரம் காத்திருந்து
பார்த்தேன். நிலாம்மா சைடிலியே நகர்ந்து போய் மறைந்து விட்டார்கள்.
அன்பு தென்றல், கட்டாயம் வருகிறேன்.
வணக்கம். டாக்டர். நாட்கள் கழித்து உங்களைப் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி.
காத்திருந்தால் முகம் காட்டுவேன் என்று அடம் பிடிக்கும்
நிலாப் பெண்ணுக்கு மரியாதை செய்யத்தானே வேணும்.
Post a Comment