Blog Archive

Tuesday, August 24, 2010

அழகு மிகு சென்னை

இது மண்ணின் பெருமை உரம்
அகற்றப் படக் கூடிய வெளிக் குப்பை
அழுக்கு என்பது என்ன? வெகு நாள் அடங்கிய
 தூசியா.


அழுக்கு வீட்டிற்குள் வரக் காரணிகள் என்ன.
வெளியிலிருந்து வரும் மாசு.

உள்ளிருந்தே மறைந்து வாழும் தூசு.

சென்னையே அழுக்கு நகரம் என்று சமீபத்தில்
 விமரிசிக்கப் பட்டதைப் பார்த்தேன்.

நமக்கும் தெரியும்.

சென்னை எப்படி இருந்தது.
அது இந்த 50 வருடங்களில் எப்படி மாறியிருக்கிறது.

எத்தனை வறுமை சூழ்நிலையில்

உழவர்கள் தங்கள் நில புலன்களை
விற்றுவிட்டு சென்னையை அடைக்கலம்

அடைந்தார்கள்..
விளைநிலங்கள் சிறுத்து வீடுகள் பெருத்து,
தண்ணீர் வளம் சுரண்டப்பட்டு,

மலைகளே கரைந்து,பெரிய நகரங்கள்
 உருவாகி இன்னும் எத்தனையோ


கணக்கிலடங்காத வினைகள் நடந்தே
இந்த நிலைமைக்கு நம் நகரம் வந்திருக்கிறது.



சிங்காரச் சென்னை உருவாவதற்கு
 முயற்சிகள் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

சிங்காரமாக இல்லாவிட்டாலும் சுத்தமாக இருக்க

நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய
வேலைகள் எத்தனையோ.

பொதுவில் குற்றத்தைச் சுமத்துவதை விட,

நம் முதுகு சுத்தமாக இருக்கிறதா
என்று பார்த்துக் கொள்ள வேண்டும்.

நம்வீட்டுக்குப்பைகள் ஒழுங்காக
அதற்கு உண்டான குப்பைத் தொட்டியை அடைகிறதா,

இல்லை அதற்கு வெளியே விட்டெறியப் படுகிறதா.

இதைக் கட்டாயம் கண்டு கொள்ளலாம்.

இதெல்லாம் செய்யக் கூடியவை.

இப்பொழுது வீட்டிற்கு முன்னால்
நீண்ட பள்ளம் வெட்டி கிட்டத்தட்ட ஒரு மாதமாகிறது.

ஏதோ கேபிள் போடுகிறார்களாம்.



எப்பொழுது முடிக்கப் போகிறீர்கள்
 என்று (இந்தப் பள்ளங்களால் வெளியே வரமுடியாமல் வீட்டுக்குள்ளயே முடங்கிய)

ஒரு பெண்மணி )) பணிசெய்பவர்களிடம் செய்த வாக்குவாதத்துக்கு நடுவில் மயங்கியே விழுந்து விட்டார்.

அவ்வளவு மன அழுத்தம் அவருக்கு.
சர்க்கரை இருப்பதால் நடைபயிற்சி செய்தே ஆக வேண்டிய கட்டாயம் அவருக்கு.

அது செய்ய முடியாமல் சர்க்கரை அதிகமாகி,ரத்த அழுத்தமும் அதிகரிக்க இது நடந்துவிட்டது.

நம்ப முடிகிறதா.

அவசர சிகித்சை அளித்து இப்பொழுது
இன்னும் இரண்டு வாரங்களில் அவரால் வீடு வர முடியுமாம்.

இதெல்லாம் எனக்கு எங்கள்
வீட்டில் வேலை செய்யும் பெண்

அளித்த செய்தி.

நகரின் நல்ல பகுதி என்று அழைக்கப் படும்
 மைலப்பூரிலேயே இந்த கதி.

இன்னும் இப்பொழுது அடாது பெய்து வரும் மழையினால்

பாதிக்கப் பட்ட ஒரு இடத்துக்குப் போக
 எண்ணினோம். எங்களுக்கு

மிகவும் வேண்டியவர் ஒருவரின்
உடல்நலம் விசாரிக்கத்தான் அங்கு

போய் வர நினைத்தோம்.

அவர்களிடமிருந்து வந்த அவசர செய்தி,
எங்க வீட்டைச் சுற்றி

தண்ணீர் நிற்கிறது. வெய்யில் வந்த பிறகு
வாருங்கள் என்ற செய்திதான் அது.

யாரைக் குற்றம் சொல்லி என்ன நடக்கப் போகிறது.

மனச்சுமை தான் அதிகரிக்கும்.

இவ்வளவு நடந்தாலும் இது நம் சென்னை. நம் மெட்ராஸ். இங்கிருப்பவர்கள் நம் மக்கள்.

அனைவரும் அவரவர் அளவில்
சுத்தமாக இருக்கத்தான் நினைக்கிறார்கள்.

மீண்டு வருவோம். ஆனால் அசுத்தத்தைக்
கூடச் சுத்தம் செய்துவிடலாம். உடலால்,சொல்லால்

ஒன்றுமே செய்யாமல் மனதில் நம் ஊரின் அழுக்கை வர்ணித்து
 நம்மை'' ஓ டர்ட்டி சென்னை'' என்கிறார்களே

அவர்கள் முதலில் தங்கள் எண்ணங்களைச்
சுத்தம் செய்து கொள்ளட்டும்.

மற்றவற்றை நம் சென்னைவாசிகள் பார்த்துக் கொள்வார்கள்.

சென்னையின் சுத்தம் வளரட்டும்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

11 comments:

துளசி கோபால் said...

என்னப்பா....சென்னைவாசிகளா அல்லாதவர்க்கு உ.கு. மெஸேஜ் வச்சுருக்கீங்க!!!!!!

ஸ்ரீராம். said...

என்ன சொன்னாலும், செய்தாலும் நம்ம ஊருதான் நமக்கு ஒசத்தி இல்லையா? பேசும்படம் (புஷ்பக்)படத்தில் கமல் ஐந்து நட்சத்திர ஓட்டலில் தூங்கப் போகும்போது தூக்கம் வராமல் தன் பழைய இடத்தின் இரைச்சலை டேப்பில் பதிந்து கொண்டு வந்து போட்டு விட்ட பிறகு தூங்குவார்...! அது நினைவுக்கு வருகிறது.

வல்லிசிம்ஹன் said...

புதுசா கேக்கறது இல்ல துளசி.
அவங்க அவங்களுக்கு அவங்க ஊரு நல்லா இருக்கலாம்.
அதற்காக நம்ம ஊரை எப்படிச் சொல்லலாம்.(நாம் சென்னையை அலுத்துக் கொள்ளுவோம் ,அது வேறு விஷயம். இந்த வெளியூர்க்காரங்க
இருக்காங்க பாருங்க.....ம்ம்ம் சொல்லி முடியாது:))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சென்னை ந்னு வர இடமெல்லாம் தில்லி ந்னு போட்டு படிச்சா அதும் நல்லாத்தான் இருக்கும்.. :)

காமன் வெல்த் கேம்ஸ்க்குஒரு பக்கம் அழகான வேலைகள், ஒருபக்கம் குழிகளும் சேறும் ந்னு ... ஆனா யாராச்சும்
இந்தியாவை சொன்னா மட்டும் பொறுக்காதாக்கும்.. நமக்கு..

சிங்கப்பூர் மாதிரி ஊருல அடிக்கடி லேசான மழை அவங்க ஊரு க்ளீனா க்ரீனியா இருக்கு.. இங்க எப்பவாச்சும் மழைன்னா அப்படித்த்தான் ந்னு சொல்லிக்குவோம்.. :)

Unknown said...

வெளிநாட்டில் வசித்தாலும் நம் ஊர்தான் நமக்கு உசத்தி வல்லிம்மா:))))

ராம்ஜி_யாஹூ said...

where is chennai pics

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம், ஓ...அது பெரிய நிஜமான உண்மை. எங்களுக்கு பெண் வீட்டுக்குப் போனால் அங்கிருக்கும் அமைதி பயமுறுத்தும். என் கட்டிலருகில் அவள் பழையபாட்டுக்கள் அடங்கிய சிடிகளையும் டிஸ்க் ப்ளேயரையும் வைத்துவிடுவாள்:))

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா முத்து. டெல்லி சொன்ன வாய்க்கு சர்க்கரை தான் போடணும். மயங்கி விழுந்தாங்கன்னு எழுதினேனே அவங்க டெல்லிககாரங்க!!
வந்து பத்து வருஷமாச்சு.ஏதோ ஜோர்பாக் அப்படீங்கற இடத்தில வசிச்சிட்டு இருந்தவங்க இங்க அரசாங்க வேலையா வந்திருக்காங்க. அவங்க அன்னிக்குப் போட்ட கூச்சல்,பிறகு வந்த மயக்கம்,இஸ்திரி பன்ற மீனா,இன்னோருத்தர்னு அவங்களைப் பக்கத்தில இசபெல்லாவில எமர்ஜென்சில அட்மிட் செய்திருக்காங்க,.
என்னமோ போங்க:))

வல்லிசிம்ஹன் said...

இல்லையா பின்ன, சுமதி.
நம்புவது கஷ்டமா இருக்கும்.
இதை பப்ளிஷ் செய்திட்டு,
பொதிகை தொலைக்காட்சியைப் பார்த்தால், அதில் ''ஸ்ரீநிதி சிதம்பரம்,'' நம் அழகு சென்னை'' என்ற பாடலுக்கு அபிநயம் பிடிச்சுட்டுக்கு இருக்காங்க!!!

வல்லிசிம்ஹன் said...

Ramji-yahoo,
pics have been uploaded. ok?

Several tips said...

நல்ல எழுத்து