Blog Archive

Wednesday, August 25, 2010

மா யா பஜார் பார்த்த பாதிப்பு.

ஆஹா இன்ப நிலவினிலே

அம்மா உங்களைப் பார்த்து எல்லாரும் பயப்படராங்கம்மா..


மாய எதிரிகளை அழிக்கிறேன் தாயே



நமோ கிருஷ்ணா ,வாசுதேவா.




கண்டம் துண்டம் செய்யும் கடோத்கஜன்:)





டும் இந்த இணைப்பின் கல்யாணம்:)







நேற்று எதேச்சையாக ,மதியம் தூக்கம் பிடிக்காமல் தொலைக்காட்சியைப் பார்க்கப் போனால் குட்டி வத்சலாவின் பிறந்த நாள் அமோகமாக நடந்து கொன்டிருக்கிறது.இந்தப் படத்தை எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காது.எல்லாப் பாடலும் அருமை.அதில் பலே பலே தேவா. யாரோ அறிவார் உன் மாயா என்று தொடங்கும் அந்தப் பாடல் எப்போது கேட்டாலும் மன்ம் உருகும்.''உலகினில் சுகதுக்க ஊஞ்சலிலேதினம் உனது மாயை விளையாடுதய்யா.அறிவார் யார் அறியார் யாரோ...என்று செல்லும் அந்தப் பாடல். ஒரு மூன்று மணி நேரம் பழைய மவுண்ட் ரோடு தியேட்டர், கெயிட்டி என்று நினைக்கிறேன் அங்கெ போய்விட்டேன்.அம் அஹ ,இம் இஹி, உம் உஹூ!!எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.






Posted by Picasa

15 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) ஆஹா இன்ப நிலவினிலே எனக்கும் பிடித்த பாட்டு.

Geetha Sambasivam said...

என்னோட பதிவைப் பார்த்துட்டீங்களா?? அட?? படம் எடுத்திருக்கலாம் இல்லை?? எனக்குப் படம் பார்க்கிற சுவாரசியத்தில் அது நினைப்பே இல்லை! :( நல்லா எடுத்திருக்கீங்க படங்கள் எல்லாமே. எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத படம்.

துளசி கோபால் said...

நானும் ஆவலோடு பார்க்க உக்காந்தா.... சிக்னல் வராம சொதப்பிடுச்சு:(

போனமுறை சென்னை விஜயத்துலே டிவிடி வாங்கினேன். அதை நியூஸியில் வச்சுட்டு வந்துருக்கேன் நாலுமுறை பார்த்துட்டு.

சாந்தி மாரியப்பன் said...

எனக்கு கல்யாண சமையல் சாதம் பாட்டுதான் ஞாபகம் வருது :-)))

Anonymous said...

கடோத்கஜன் கொஞ்சம் சாஃப்ட் மாதிரி இருக்கும். பயமாவே இருக்காது

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் .முத்து.அதுவும் என்.டி.ஆர்,சந்தியா இருவரும் மாறி உட்கார்ந்து பாடும்போது முகபாவம் பிரமாதமா இருக்கும்:)

வல்லிசிம்ஹன் said...

ஓ.பார்த்துட்டேன். என்னோட இன்னோரு பதிவில தான் இந்த மகளிர் சக்தி இணைப்பு இருக்கிறது. அதில சில சமயம் இன்றைய பதிவுகள் தெரியும். அதைப் பார்த்ததும் உங்க பதிவுக்கு வந்துட்டேன்:)
இனிமே காமிராவைக் கை பக்கத்தில வச்சுக்கோங்க.

வல்லிசிம்ஹன் said...

அட ராமா! துளசி. இந்த டாடாஸ்கை இப்படிப் பாடு படுத்துகிறதே. போன வாரம் ரொம்ப சுவாரஸ்யமா ஒரு படம் பார்க்கிறபோது ரெண்டே ரெண்டு தூறல். அவ்வளவுதான் படம் காயப். நியூசி போய் இன்னோரு தடவை பார்த்துடுங்க:)

வல்லிசிம்ஹன் said...

ரொம்பச் சின்னக் குழந்தைகளாகிடுவோம் நாம் , சாரல் இந்தப் படம் பார்க்கும்போது.
என்ன ஒரு கம்பீரம். ரங்காராவ். சான்ஸே இல்ல.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் அம்மிணி. எனக்கு ஓபிலிக்ஸ் பார்க்கும்போது கூட கடொத்கஜன் ஞாபகம் வரும். பட்,நம்ம ரங்கராவ் மாதிரி நமோமாதா சொல்ல யாராலும் முடியாது:)

Unknown said...

நானும் இந்த படத்தை இங்கு பத்துநாள் முன்புதான் பார்த்தேன் வல்லிம்மா.எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காது நன்றாக இருக்கும்:))))

கோமதி அரசு said...

எனக்கும் இந்த படத்தில் எல்லாமே பிடிக்கும். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத படம்.

நானானி said...

இப்படத்தை திலி-பாலஸ்-டி-வேல்ஸில் பார்த்த ஞாபகங்கள் எல்லாம் வந்தது. ஒரு முறை பார்த்தால் ஞாபகம்...நான் பல முறை பார்த்திருக்கிறேனல்லவா? அதுதான் ஞாபகங்கள்!!!
கடோத்கஜ சாவித்திரி பிடிக்கும்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

நமோ வல்லியம்மா நமோ நமஹ! :)
நமோ மாதா நமோ நமஹ! :)

வல்லிசிம்ஹன் said...

பிள்ளையார் சதுர்த்தி அதுவுமா நமஸ்காரம் சொல்ற பிள்ளைக்கு ஆசீர்வாதங்கள்:)
என் பிள்ளையும் இதையே செய்வான்.
நாந்தான் அவனுக்குப் பிள்ளையாராம்:)