Friday, August 20, 2010

இரவு போய் பகல் வந்தது

.
 என்ன செய்வதென்று யோசித்தபடியே மீனம்பாக்கம் வந்து சேர்ந்தேன். சிறிது நேரக் காத்திருப்பிற்குப் பிறகு


மார்க் மற்றும் மனைவி, இரண்டு அழகுக் குட்டி தேவதைகளைப் போல

பெண் குழந்தைகள் எல்லோரும் நீண்ட பயணத்தை முடித்த களைப்போடு,வெளியே

வந்தார்கள்.

அமெரிக்காவின் கொலராடோ மாகாண சீதோஷ்ணத்துக்கும் சென்னையின்

உஷ்ணத்துக்கும் தாக்குப் பிடிக்க முடியவில்லை, அவர்களுக்கு.



என் நீண்ட நாள் பழக்கத்தினால் உரிமையோடு பழகுவான்.

''ராக்ஸ்'(என் பெயர் ராகவன்) எங்களால் இன்று எங்கும் வர முடியாது.

நாளையும் என் சம்பந்தப் பட்ட எல்லா சந்திப்புகளையும்

ஒத்தி வைத்துவிடு.

வயிறும் சரியில்லை. வீ நீட் டோட்டல் ரெஸ்ட்'' என்றபடி அவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த



வண்டியில் ஏறிச் சாய்ந்து கொண்டான். அவன் மனைவியும் என் முகத்தில் தெரிந்த கேள்விகளைப் புரிந்தவள் போல,

அவர் சாப்பிட்டது ஏதோ ஒத்துக் கொள்ளவில்லை.

ஹி ஷுட் பி ஓகே டுமாரோ. சாரி ராக்ஸ். உங்களூடன்

சாயந்திரப் பொழுதை இனிமையாக உங்கள் மனைவியுடனும் சேர்ந்து

கொண்டாட நினைத்திருந்தோம்.'' என்றாள்.

எனக்கு அப்போதுதான் மார்க் அனுப்பியிருந்த வாழ்த்துகள் நினைவுக்கு வந்தது.

அதைக்கூட ஜானுவிடம் சொல்லவில்லையே என்று என்னையே நொந்து கொண்டேன்.





அவர்கள் வண்டியைத் தொடர்ந்து என் வண்டியைச் செலுத்தியபடி ட்ரைடெண்ட் ஹோட்டலை.

வந்தடைந்தேன்.

மார்க் குடும்பத்தின் ,அறையில் அவர்களை அமர்த்திவிட்டு,ஏதாவது உதவி தேவையா என்று கேட்க ஆரம்பிக்கும்

போதே ஹெதர், மார்க்கின் மனைவி,தன் பெட்டியைத் திறந்து அழகான (பொம்மை)

ஸ்விஸ் வீடு ஒன்றை என் கையில் கொடுத்தாள்.

ம்ம். ஓப்பன் இட் '' என்ற அன்புக் கட்டளையோடு.

திறந்ததும் ஜானுவுக்கு மிகவும் பிடித்த ஆங்கிலப் படப் பாடல் எடெல்வைஸ் '' பின்னணியில் ஒலிக்க இரு சிறுவர்கள் சுழலுவது போல அமைந்திருந்த அந்தப் பரிசை பார்த்தவண்ணம் இருந்தேன்.



நீ ஒருதடவை சொல்லி இருக்கிறாய் ராக்ஸ். உன் மனைவிக்கு சவுண்ட் ஆஃப் மியுசிக்

படம் மிகவும் பிடிக்கும் என்று. நேற்று சூரிக் ஏர்போர்ட்டில் இதைப் பார்த்ததும் ஹெதர்

தனக்கும் உன் மனைவிக்கும் என்று இரண்டு வாங்கிவிட்டாள்.'' என்று

அந்தக் களைப்பிலும் சிரித்தபடி மார்க் சொன்னான்.



அறுபது ஒரு நல்ல வயது. வாழ்க்கையைப் புதிதாக ஆரம்பிக்கும் சமயம். கடமைகள் முடிந்து

நமக்கென்று நேரம் ஒதுக்க வேண்டும் இல்லையா ராக்ஸ்'' என்ற ஹெதரை நன்றியுடன் பார்த்தேன்.



நாங்கள் வார முடிவில் அவளைப் பார்க்க வருகிறோம்.

நீ இப்போது கிளம்பு. நல்ல பொக்கே வாங்கிக் கொடுத்தாயா' என்று கண்சிமிட்டினான் மார்க்.

பதில் சொல்ல முடியாமல் தலை ஆட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பினேன்.

பிறகு எல்லாமே வேகமாக நடந்துவிட்டன. வீட்டை அடைவதற்கு முன்

நல்ல பூங்கொத்து ஒன்றையும், ஜானுவின் ஆல்டைம் ஃபேவரிட் சோன்பப்டி ஒரு பெட்டியும்

வாங்க நான் மறக்கவில்லை.

வீட்டை அடைந்த போது மதியம் 12 ஆகியிருந்தது.



சாப்பிடலாமா என்ற படி வந்த ஜானுவை புதிதாகப் பார்த்தேன்.

நேற்று போல இன்று ஏன் புலம்பவில்லை.எப்பொழுதும் போலவே

சிரித்தமுகம்.

சிரித்தபடியே சொன்னாள், வேற யாரும் கண்டுக்கலைன்னால் என் பிறந்த நாள் எனக்கு

முக்கியம் இல்லாமல் போய்விடுமா. சந்தோஷமாகத் தான் எழுந்திருப்பேன் என்ற முடிவுடனேயெ

நேற்று தூங்கப் போனேன்'' என்றாள்.



ஓகே இங்க பார் என்று பூங்கொத்தை அவளிடம் நீட்டினேன்.

ஒரு நொடியில் முகம் சிவந்துவிட்டது அவளுக்கு. அய்ய என்ன இது என்றபடி வாங்கிக் கொண்டவளின் கையில் இனிப்புப் பொட்டலத்தையும் பெரிய வாழ்த்து அட்டையையும் நீட்டினேன்.



அம்மாடி என்னது இது எங்க வீட்டுக்காரருக்கு என்ன ஆச்சு என்று திரும்பப் போனவளின்

கையில் 'ஹெதர்' கொடுத்த பரிசுப் பொட்டலத்தையும் திணித்தேன்.

அவள் முகம் பெரிதாக மலர்வதைப் பார்த்து எனக்கும் சந்தோஷம் தொற்றிக் கொண்டது.



பேச்சு நின்று கண்கள் கலங்குவதைப் பார்த்ததும் ,

பதினைந்து வயதில் என்னுடன் இணைந்த

என் பழைய ஜானுவே வந்தது போல என் மனம் நெகிழ்ந்தது.



''சரி.உனக்குப் பசிக்கிறதா இப்ப?. இல்லை ,வெளியில் வரத் தயாரா'' என்றதும்

போலாமே, புடவையைப் பிரிக்கக் கூட இல்லை. இதோ ஒரு நிமிடத்தில் வந்துவிடுகிறேன்' என்று உள்ளே

விரைந்தாள்.

அடுத்த பத்து நிமிடங்களில் வாழ்க்கையிலேயே முதன் முறையாகச் சட் சட் என்று

ரெடிமேட் முடிவுகளை எடுத்து , தொலைபேசியில் முடிக்க வேண்டிய சமாசாரங்களைச் சொல்லிவிட்டு

வீட்டின் ஜன்னல்கள் கதவுகள் எல்லாவற்றையும் பத்திரப் படுத்தினேன்.

சத்தம் கேட்டு வெளியே வந்த ஜானு, என்னப்பா சாப்பிடத்தானே போகிறோம். அதற்கு என்னத்துக்கு இவ்வளவு முஸ்தீபு செய்கிறீர்கள்'' என்றாள்.



சாப்பிடலாம் ,அப்புறம் வெளிலயும் போகலாம்' என்றபடி அவளை

வலுவில் இழுத்து வண்டியில் முன் சீட்டில் உட்கார வைத்தேன்.

எதேச்சையாகப் பின்னால் திரும்பியவளின் கண்கள் விரிந்தன.

'என்ன பெட்டி எல்லாம் இருக்கு' எங்க போறோம்?



வண்டி நெடுஞ்சாலையை நோக்கிப் பயணிப்பதைப் பார்த்து,

என்ன தீர்மானம். எங்கதான் போறோம்'' என்றவளிடம் சொன்னேன்.

முதலில் சாப்பிட ஹைவேயில் இருக்கும் பத்மம் ரெஸ்டாரண்ட்.

அப்புறம்...என்று நிறுத்தினேன்.

அப்புறம் மதுராந்தகமா என்று கேட்டாள்.

இல்லையே... ஸ்ரீரங்கம்.!! என்று வெகு நாட்களுக்குப் பிறகு மனசு லேசாகி வாய் நிறைந்த

சிரிப்புடன் அவளைப் பார்த்தேன். நானும் நல்லவன்தான் இல்லையா.:))


இன்னுமொரு டிஸ்கி

*******************************
அன்புத் தோழி துளசியின் சந்தேகம், பொட்டி இருந்தால் பெண்டாட்டிக்குத் தேவையானதை எடுத்து வைத்தார்னு எப்படிச் சொல்ல முடியும். நமக்கு என்ன வேணும்கறது நமக்குத்தானே தெரியும்? என்பதுதான் அது.இவர்கள் கையில் க்ரெடிட் கார்ட் இருக்கிறது. அப்படியே ஏதாவது வேண்டுமானால் வாங்கிக் கொள்ள கடைகள் ஏராளம். ராகவனுக்கு என்ன பயமென்றால், கொஞ்சம் தயங்கினாலும் தன் மனம் மாறிவிடப் போகிறதே என்பதுதான்.:)அதுதான் நொடியில் தீர்மானிக்கப் பட்ட நல்ல பயணம் இது.
**************************
அவர்கள் இருவரும் இரவே சென்று ஸ்ரீரங்கனைத் தரிசித்து,மலைக் கோட்டைப் பிள்ளையாரையும் சேவித்துவிட்டு அடுத்த நாள் பகலில் கிளம்பி ,புதிதாகப் போடப்பட்டிருக்கும் நல்ல சாலையில் 5 மணி நேரப் பயணத்தில் தங்கள் வீட்டுக்கே வந்து விட்டார்கள்:)

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

20 comments:

சாந்தி மாரியப்பன் said...

அமர்க்களப்படுத்திட்டீங்க வல்லிம்மா. சூப்பர்.

துளசி கோபால் said...

ஆஹா..... பெருமாள் தரிசனமா!!!!

ஹைய்யோ!!! சூப்பர் முடிவு!

அசத்திட்டேள் போங்கோ:-)))))

Unknown said...

கதையின் முடிவு நன்றாக உள்ளது வல்லிம்மா:))))

Paleo God said...

ஓ இத பார்ட் பார்ட்டா படிக்கனுமா? சாரி, நான் இதை மட்டும்தான் படிச்சேன்.. ஆனாலும் நுனுக்கமா நிறைய சொல்லிட்டீங்க. ஒருவேளை தி.ஜா வின் அம்மா வந்தாள் படிச்ச கையோடு படிச்சதால இருக்குமோ என்னமோ? :))

என்னமோ போங்க ஒரு ஈசி சேர்ல அக்கடான்னு சாஞ்சிக்கலாம் போல இருக்கு. :))

Matangi Mawley said...

wow! :) super ponga!! :D
shrirangam touch enna romba eerthuduththu!! :D romba azhaga kondu poirukkeenga kathaya! :)

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா சாரல்.
கற்பனையில் என்னவெல்லாம் சந்தோஷத்தைப் புகுத்த முடியும்னு யோசித்த தோட பலன் ,இந்தக் கதை.ரசித்ததற்கு மிகவும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வரணும்மா துளசி, இப்பதான் வேண்டப்பட்டவர் ஒருத்தர், கதைல ஹீரோவை முதலிலேயே அறிமுகப்படுத்தலியேன்னு சுட்டினார். முதல் கட்டத்திலே நீங்க க்ளூ கொடுத்திருக்கவில்லைன்னால் பிழையா எழுதி இருப்பேன் நன்றிமா.ஆமாம் , ஸ்ரீரங்கம் தான் நான் போகணுனு நினைத்த இடம். ஹீரோ காரைக் கிளப்பிட்டார்:)

வல்லிசிம்ஹன் said...

சுமதிக்குப் பிடித்ததா:)
ரொம்ப ஒப்வர் ரொமாண்டிக்கா இருக்குமோன்னு நினைத்தேன். கற்பனைதானே....பாவம் அந்த அம்மா சந்தோஷமா இருந்தால் தப்பில்லைன்னு தோன்றியது:)))

வல்லிசிம்ஹன் said...

அடடா!!! சங்கர், இப்பவே ஈசிசேர்ல சாய்ஞ்சுக்கறதா.:) அம்மா வந்தாள் ல அந்த அம்மா வேறயாச்சே. தனியா இல்ல காசிக்குப் போகிறாள்.?? இந்த ஜானும்மா பரவாயில்லை. கார்ப்பரேட் கணவனைஅனுசரித்துக் கொண்டு போகப் பழகிக் கொண்டுவிட்டாள். உங்க கவிதைகளையும்,ஈஸிசேரையும் சேர்க்க முடியவில்லை:))நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

Hello Mathangi.
ok. Now when I write the next story I will begin in Srirangam. okyaa:)

thanks maa.

துளசி கோபால் said...

கார்ப்பரேட் கணவன்

இந்தத் தலைப்பு அட்டகாசமா இருந்துருக்கும்:-))))

வல்லிசிம்ஹன் said...

அப்படியெல்லாம் மாட்டிக்கற மாதிரி இல்லப்பா நான். டூ மெனி ஆஃப் தெம் அரௌண்ட் மி:)))0

திவாண்ணா said...

நல்ல மனசோட ஒரு விஷயத்தை செய்ய நினைச்சா பகவான் வழி செய்துடுவான். நல்ல கதை அக்கா!

வல்லிசிம்ஹன் said...

நிஜம்தான்.
சமயம் கிடைக்கணும்.நல்ல மனம் இருக்கணும். அதற்குத்தானே நல்ல வேலைகளை உடனே செய்னு நமக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள். நன்றி தம்பி வாசுதேவன்.

கோமதி அரசு said...

நல்ல முடிவு என்று சொல்வதைவிட நல்ல ஆரம்பம் என்று சொல்லலாம்.

தனக்காகவும் பிள்ளைகளுக்காகவும் வாழ்ந்தவளுக்கு அவள் பிறந்த நாள் பரிசாக அவளை புரிந்து கொண்ட நல்ல கணவன் கிடைத்தது மிகவும் சந்தோஷம்.

உச்சி பிள்ளையாரும்,அரங்கநாதனும் ஜானுவுக்கு வாழ்வில் மகிழ்ச்சி
என்றும் தங்க அருள் புரிந்து இருப்பார்கள்.

வல்லிசிம்ஹன் said...

முதலில் தங்கச்சி கோமதிக்கு வாழ்த்துகள். இப்பதான் ''தேவதை''யில் உங்களைப் பார்த்தேன்.
இன்னும் நல்ல முன்னேற்றங்கள் வாழ்க்கையில் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

நீங்கள் சொல்வது போல அவர்களுக்குப் புது ஆரம்பம் தான். எல்லோருக்கும் ஒரு திருப்பம் வேண்டும் இல்லையா:)
நன்றிம்மா.

கோமதி அரசு said...

அன்பு அக்கா, உங்கள் வாழ்த்துக்கு நன்றி. தேவதையில் வந்தது பற்றி நீங்கள் சொல்லி தான் தெரியும்.
இனி மேல் தான் பார்க்க வேண்டும்.

நன்றி.

வல்லிசிம்ஹன் said...

இந்தப் பத்திரிகையில் தான் நம் பதிவர்களின் முகங்களே எனக்குத் தெரியவருகிறது:)
அறிமுகம்,கூட. கட்டாயம் வாங்கிப் படியுங்கள். கோமதி.

Matangi Mawley said...

sreerangam oru oramaa idukkula vathuttu ponaa kooda enakku romba kushiyaa irukkum padikkarathukku! :D

நானானி said...

மொத்த கதையையும் மொத்தமா படிச்சிட்டே வந்தேன்.
ஜானுவைப் போலவே நானும் நெகிழ்ந்தேன். ஒரு சுகமான வாழ்க்கையை வாழ்ந்து....எழுதி காட்டீட்டீங்க!!!!

கோவிந்தா கோவிந்தா சரணம்.

வல்லிசிம்ஹன் எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும். [20:34, 9/9/2026] Revathi Narasimhan: Good Morning dear. [23:03, 9/9/2026] Subha.: இன்று ஒரு தக...