Thursday, August 19, 2010

இரவும் பகலும்..வரும்...3

TRICHY
காலையில் எழுந்ததிலிருந்து ஜானு சுறுசுறுப்பாக


இயங்குவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

மனசு சமாதானமாய் விட்டது போல என்று என் பேப்பர்,ஃபைல்ஸ்,கணினி

என்று மூழ்கிவிட்டேன்.

ஆஹா, மறக்காமல் வாங்கி வந்திருந்த சந்தேரி பட்டுப் புடவையையும் கொடுத்துவிட்டுத்தான் காப்பியே

குடித்தேன்.

ஹ்ம். என்ன எல்லாம் செய்ய வேண்டி இருக்குப்பா, என்று என் மனசிலியே

ஒரு அலுப்பு தட்டியது.

ஆவலோடு புடவையைப் பிரித்தவளின் முகத்தில்

முதலில் ஏமாற்றம் ,பிறகு போனால் போகிறதென்ற உணர்ச்சி!!'ஏம்மா உனக்குப் புடவை பிடிக்கலையா. என்ன ஆச்சு??''

ரொம்ப நன்றாக இருக்கு. நல்ல சாரி. இந்த நீலக்கலர் கட்டி ரொம்ப நாளாச்சு.'' ரொம்ப தான்க்ஸ் பா,''

என்று,எனக்கு கைகொடுத்துவிட்டு உள்ளே எடுத்துக் கொண்டு போய் ஸ்வாமி சந்நிதியில் வைத்தாள்.

அப்பாடி ஒரு சங்கடம் தீர்ந்தது. அவளிடம் இருக்கும் வர்ணத்தையே வாங்குவதே

எனக்கு ஒரு பழக்கமாகி யிருந்தது.

இந்தத் தடவை அப்படியில்லை என்று மனசு திருப்தி யாக இருந்தது.

அன்று பார்த்து வெளியூரிலிருந்து வரும் அமெரிக்கன் கஸ்டமர்

மார்க்'' ஐ வரவேற்று, திரிசூலம் ட்ரைடெண்ட் ஹோட்டலில் தங்க வைக்க  வேண்டிய பொறுப்பும் இருந்தது.

மார்க் உடன் அவன் குடும்பமும் வருகிறது. அவர்கள் எங்கயாவது

டின்னருக்கு அழைத்துப் போக வேண்டும்.

மகிழ்ச்சி!
அப்படியே ஜானுவின் பிறந்த நாளையும் கொண்டாடின மாதிரி இருக்கும் என்று நினைத்தேன். வரிசையாக மகன்களும்,மருமகள்களும்,பேரன்,பேத்தி


எல்லோரும் வாழ்த்துகள் சொல்ல தொலைபேசியில் அழைத்தார்கள்.

மகிழ்ச்சியாக அவர்களுக்கு ஆசிகள் சொல்லி வாழ்த்தினாள்.

உண்மையாகவே சந்தோஷம் தெரிந்தது அவள் முகத்தில்.நானும் அவள் செய்த இட்லி,காரமில்லாத சட்டினி ,எல்லாம்

சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினேன்.

ஒண்ணும் ஸ்வீட் கிடையாதா என்று கேட்க நினைத்தேன்.

சரி நாமே வாங்கி வந்தால் போகிறது. என்ற நினைப்பு .

வண்டியை எடுத்துக் கொண்டு மீனம்பாக்கத்துக்கு விரைந்தேன்.
பாதிவழியில் மகனிடமிருந்து கைபேசியில் அழைப்பு ஒலித்தது.

அப்பா, அம்மாவை கோவில் எங்கயும் அழைத்துக் கொண்டு போகலியா''

இல்லடா,எனக்கு அமெரிகன் க்ளையண்ட் வரான். அவனை

செட்டில் செய்துவிட்டு வீட்டுக்குப்

போக மதியத்துக்கு மேல் ஆகிவிடும். சாயந்திரம் வேணா பார்க்கலாம்.

நீங்கள் எல்லாம் எப்ப வருவீர்கள்? என்று கேட்டேன்.

அதைச் சொல்லத்தான் போன் செய்தேன் பா.
நாங்கள் வர இரவாகிவிடும்.வேலூர் தங்கக் கோவில்

பார்க்கணும்னு சொன்னதால் அங்கே கிளம்பிவிட்டோம்.அங்க அம்மா பேரில அர்ச்சனை செய்யலாம்னு சித்ராவும் சொன்னாள் பா.''

சரிப்பா,பத்ரம் .டேக் கேர்,என்று சொல்லிவைத்த போது மனம்
கொஞ்சம் தளர்ந்தது. பாவம் ஜானு.
அடுத்தாற்போல சொல்லிவைத்த மாதிரி இரண்டாம் பிள்ளை,

'அப்பா நாங்க கோனே ஃபால்ஸ் போலாம்னு இருக்கோம்பா.

இன்னிக்கு ஒரு நாள் தானே மாலினிக்கும் லீவு.

இரவு வந்துடுவோம். சாப்பிட்டுவிட்டே வரோம்.

பிறந்தநாள் அன்றாவது அம்மாவுக்கு வேலை இல்லாமல் இருக்கட்டும்''

என்று சொன்னான்.

சட்டென்று என்னை யாரோ இடித்தது போல உணர்ந்தேன்.
மனம் ,கை இரண்டும் சேர்ந்து செயல் பட,
என் பர்சனல் காரியதரிசியை அழைத்தேன்.

''சீனு,ஒரு உதவி செய். உடனே கிளம்பி மீனம்பாக்கம் வா.''

மார்க்கையும் குடும்பத்தையும் நாம் வரவேற்கலாம்.

நான் வீட்டிற்குத்

திரும்பி விடுவேன்.
நீ மற்ற வேலைகளைக் கவனித்துக் கொள். அவனும் குடும்பமும்
இன்று உன் பொறுப்பு. எங்கே போகணும்னு
சொன்னாலும் அழைத்துப் போ.''

என்று சொன்னதும் அவன் தயங்கினான்.

எங்களுக்கு இன்று திருமணநாள் சார். மனைவி ரொம்ப எதிர்பார்ப்புகளோடு இருக்கிறாள்.

சினிமா,டின்னர் என்று சொல்லிவைத்திருக்கிறேன் சார். முதலிலேயெ தெரிந்திருந்தால்
அட்ஜஸ்ட் செய்திருப்பேன். இப்ப எப்படி.....''
என்று இழுத்தான்.......................தொடரும்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

10 comments:

துளசி கோபால் said...

ஆமாம். நமக்கு ஒரு நல்ல நாளுன்னாலும்......'கடமை' முடிச்சு கடைசியில் நேரம் இருந்தால்தான் நமக்கு.


பலசமயம் இப்படி ஆகி இருக்கு.

உள்ளூர்லே இருந்தால் அட்லீஸ்ட் சண்டையாவது போடலாம்:(

வல்லிசிம்ஹன் said...

சில சமயம் சண்டை போடக் கூட மறந்துவிடும் துளசி:0)
அப்புறம் இன்னோரு நாள் நினைவுக்கு வரும்போது ஆறிய கஞ்சி!!

துளசி கோபால் said...

அப்படியெல்லாம் ஆறவிட்டுறமாட்டேன்.
மைக்ரோவேவில் சூடாக்கி திரும்ப ஆரம்பிச்சுருவேன்:-))))

Sumathi said...

இதை படிக்கும்போது எங்களின் பெற்றோர் நினைவு வருகிறது வல்லிம்மா. நாங்களும் தள்ளி இருந்தே வாழ்த்தும், ஆறுதலும் எல்லவற்றுக்கும் சொல்லவேண்டியிருக்கிறது வல்லிம்மா :(

வல்லிசிம்ஹன் said...

எங்க மைக்ரொவேவ் சுத்தினா கரண்ட் அதிகமாகும்..அதான் மனசிலியெ அடுப்பு இருக்கே. அது கொதிச்சு கொதிச்சு அடங்கி ப்ரஷர் அதிகமாகும். அடப் போப்பான்னு விடவேண்டியதுதான்.:)

வல்லிசிம்ஹன் said...

வாங்க சுமதி. வெளியூர்ல இருக்கறவங்களைப் பத்தி இப்ப பேச்சு இல்லைப்பா. கூடவே இருந்துட்டு ,நல்ல நாளாப் பார்த்து வெளியூர் போறவங்களைப் பற்றித்தான். எங்கயோ தப்பு இருக்குன்னு தெரிகிறது. முடிவில சொல்கிறேன்:)

அமைதிச்சாரல் said...

நல்லாருக்கு வல்லிம்மா..

ஆறின கஞ்சியோ கொதிச்சதோ, 'கொடுத்ததை'(?)குடிச்சுட்டு சத்தமில்லாம இருக்கிற ஆட்களை என்ன செய்யலாம்?? :-))))))

கோமதி அரசு said...

அம்மாவை பிறந்த நாளில் தொந்திரவு செய்ய வேண்டாம் என்று என்னும் குழந்தைகள் அம்மாவை ஓட்டலுக்கு அழைத்து சென்று இருக்கலாம். அவள் மகிழ்ந்து இருப்பாள்.மாலை வந்து கொண்டாடலாம் என்று நினைத்து இருக்கலாம்.

கணவரின் உதவி ஆளும் தன் மனைவியை அழைத்துக் கொண்டு சினிமா, ஒட்டல் என்று போகும் போது, கணவரும் அப்படி மனைவியை அழைத்து செல்ல நினைத்தும் முடிய வில்லை போலும்.சில நேரங்களில் இப்படி தர்மசங்கடம் ஏற்படுவதும், குடும்பத்தில் பிணக்கு ஏற்படுவதும் உண்டு.

கதை நல்லா போகிறது.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா சாரல். ''கொடுத்ததை''க் குடித்து விடும் கல்லுளிமங்கன்''டைப்பை ஒண்ணும் செய்ய முடியாது. இந்த்க கதையின் நாயகர் இரண்டுங்கெட்டான்:) மனைவியைவிட அலுவல் மேல் பிரியம் ஜாஸ்தி.:(

வல்லிசிம்ஹன் said...

வரணும்மா கோமதி. சில ஆண்களுக்கு மனைவியின் அருமை சீக்கிரம் புரிவதில்லை.தந்தையைப் பார்த்தே அதே போல நடக்கும் மகன்களும் இருக்கிறார்கள்.மாறுவதற்கு நாம் தன் கற்றுத்தரணும்.:)