Blog Archive

Wednesday, June 30, 2010

மகிழ்ச்சியான நேரம் மதிக்கப் படும் நேரம்

 பரபரக்கும்  காலை நேரம்.
சாண்ட்விச்களை அழகாக   பாலிதீன் உறைகளில் அடுக்கி, இறுக்க மூடிவைத்து
அதற்கான பழுப்பு நிறப் பையில் போட்டு  இரண்டு மகன்களிடமும்   கொடுத்தாள் ஊர்மிளா.
ஆ!!!!! மாம்! நாட் அகெயின்.
நான் ஸ்கூலில்  பீட்சா  சாப்பிட்டுக்கறேனேம்மா.

நானும் ,மழலையில்   சொன்னான்  இரண்டாமவன்.


வாரத்துக்கு ஒரு நாள்   பீட்சா  சரிப்பா. தினம் கிடையாது.
என் க்ளாஸ்  ல   ஜோ  தினம் காந் டீன் ல தாம்மா    சாப்பிடறான்.
அவன் அம்மா வேலைக்குப் போகிறாள்  பா  . அவளுக்கு  நேரம் கிடைக்காது.
அதனால் லன்ச்   பாக்  கொடுக்க முடியாது.
நல்ல  வேளை  நீ   ராதா ஆண்ட்டி   மாதிரி   லெமன் ரைஸ் கொடுக்காம  இருக்கியே.


பாப், ஆண்ட்ரூ  எல்லாம் என் டெஸ்க் பக்கம் வந்தாலே
''
யக்கீ!!!  ன்னுட்டுப் போறாங்க.

ஏன்  உன் ஃப்ரண்டு    தேவ்யானி, லேகா,அஷ்ரயா  எல்லாரும்  என்ன கொண்டு
வராங்க. அவங்களும் உன் வகுப்புதானே.

ஓ,தே  ப்ரிங்  சப்பாத்தி,கூர்மா''  மா.   தே  ஈட் இன் ,அஸ்  அ  க்ரூப்.

அதனால அவங்களுக்குப் பிரச்சினையே இல்லமா.
எனக்குதான்    சிநேகிதர்கள் எல்லாம்  வேற     வகுப்பில இருக்கிறதனால்
நான்    பாப் உடனும்  ஆண்ட்ரூவோடயும் தான்    லன்ச் ப்ரேக்  எடுத்துக்கறேன் மா''.

சரி நேரமாச்சு. ஃபர்ஸ்ட் பெல்லுக்கு முன்னால் இரண்டு பேரும்  கிளம்புங்க.
இருவரும் அவரவர் சைக்கிள்களில்  ஹெல்மட்டை  மாட்டிக் கொண்டு
பள்ளியை நோக்கி விரைவதைப் பார்த்து ரசித்தவண்ணம்
உள்ளே வந்தவளை  டெலிபோன்  மணி  அழைத்தது.

அவளுடைய  அமெரிக்க  தோழி   ஈவ்லின்.


''ஹேய்   ஊர்மி  ,கான்  ஐ  ப்ரிங் மை சன்ஸ்    ஃபார்  லன்ச்

திஸ் வீக் எண்ட்"?
என்ன  சமாசாரம் என்ற கேள்விக்கு வந்த பதில்,
'' ஓ, தே  ஜஸ்ட்  லவ்  யுவர்  லைம் ரைஸ் அண்ட் ரெய்த்தா'':0)

உன்    சமையல்   இந்தியா  ரெஸ்டாரண்டை  விட  நன்றாக இருக்கிறது.

























எல்லோரும் வாழ வேண்டும்.

Thursday, June 24, 2010

540,சூறாவளியும் சிகாகோவும்



lightening  in Chicago
parking lot


அம்மா சைரன்ஸ் சத்தம் நிறையக் கேட்கிறது. நீ பத்ரமா இருக்கியாம்மா.

நானும் சின்னவனும் பத்ரமா இருக்கோம்பா. நீ அங்கயே ஸ்டீபனோட இரு.மழை
நிக்கட்டும்.
பேஸ்மெண்டுக்கு ரெண்டு பேரும் போயிடுங்கோ.
டொர்னாடோ வார்னிங் முடிஞ்சதும் மேல வந்தாப் போறும்.
'அதுக்குத் தாம்மா போன் செய்தேன். நீ முதல்ல டெலிபோனை ஸ்பீக்கர்ல போடு. அதை எடுத்துண்டு பேஸ்மெண்டுக்குப்
போய்விடு.
இங்க வெதர் ரேடியோ இருக்கு.
பக்கத்துக் கவுண்டியைத் தாண்டினதும் நான் வரேன்'
பேஸ்மெண்ட்ல பாத்ரூம் கப் போர்டில உட்கார்ந்துக்கோ.
பயப்படாதம்மா.''

பள்ளியில் கற்றுக் கொடுத்த டொர்னாடொ எச்சரிக்கைப் பாடங்கள்,
அந்தப் பயங்கரப் புயல்,இடி,மழையில் பேரனுக்குத் தெளிவாகப் பேசக் கற்றுக் கொடுத்திருக்கின்றன.
இன்று காலை வழக்கம்போல சிகாகோவுக்குத் தொலைபேசியபோது ,

மின்சாரம் இருக்கும்மா,ஆனால் என் வாழ்க்கையில் இது போலச் சூறாவளியையும்,இடி மின்னலையும் கருமேகங்களையும் பார்த்ததில்லை என்று இன்னும்
பதட்டம் தணியாத குரலில் மகள் பேஇயதைக் கேட்டதும்
கலங்கிப் போனேன்.

அபரிதமான அழகு.அதீதமான இயற்கை வளம்,

மூச்சு நிற்கவைக்கும் பிரம்மாண்டம்.
கூடவே அஞ்சக் கூடிய
சீதோஷ்ணம். காற்று.
இதுதான் அமெரிக்கா:(
வாயு பகவான் முழு வீச்சில் ஆடிய ஆட்டம் மரங்கள்
விழுந்திருக்கின்றன.
நல்ல வேளையாக டொர்னாடோ இவர்களது இடத்தின் வருவதற்கு முன்னமே
வலு இழந்துவிட்டதாம். ஆனாலும் இடி மின்னல் தாக்கம்
கண்ணைக் கூச வைத்துவிட்டதாக மகள் சொன்னாள்.

என்னை அவள் நிலையில் வைத்துப் பார்த்தேன். ம்ஹூம்.:(
எனக்கு நம்ம ஊர் வெய்யில் எந்த நாளும்
எந்த நிலையிலும் எனக்குப் பிடிக்கும்பா.


எல்லோரும் வாழ வேண்டும்.
Posted by Picasa

Tuesday, June 22, 2010

ஜுன் பிட் படம்



இவங்கதான் பேரன் பள்ளி யில் மிகவும் பாராட்டப்படும் டீச்சர். குழந்தைகளிடம் மிக அன்பாக இருப்பவர்.
அவர் படத்தை மீள் முயற்சியாக போட்டிக்கு அனுப்புகிறேன்:)இன்னோரு படம் ஹேலோவீனுக்காக செத்துக்கப்பட்ட பரங்கிக்காய்:)



எல்லோரும் வாழ வேண்டும்.
Posted by Picasa

Monday, June 21, 2010

மாமியாருக்கு ஒரு சேதி






மகனுடைய திருமண ஆல்பத்தைப் புரட்டிப் பார்த்து

எல்லா உறவுகளையும் மீண்டும் பார்த்த சந்தோஷத்தில் ஆல்பத்தை மூடி
வைத்து உறையில் போட்டேன்.


ஒரு அழகான ஆனந்தத்தை மட்டுமே பிரதிபலிக்கும் அந்த இரண்டு நாட்களை நிறைவாகப் பதிவு செய்த புகைப்படக் காரரை மனம் வாழ்த்தியது.




மணமக்களைச் சுற்றியே படங்களை எடுக்காமல் வந்தவர்களையும்
முக்கியப் பட்டவர்களை விட்டுவிடாமல்
எடுத்திருந்தார்.
முதன் முதல் வீட்டுக்கு வந்தபோது அவரிடம் விவரமாக உறவினர்கள் பற்றிச் சொல்லி இருந்தேன்.
திருமணங்கள் நிச்சயிக்கப் படும்போது,
கவனிக்க வேண்டிய பல விஷயங்களில் இந்த வீடியோவுக்கு மிகவும் பிரதான இடம் கொடுக்கப் படுவது நமக்குத் தெரியும்.

பல திருமணங்களில் தாலி முடியப்பட்ட அடுத்த நிமிடம் ஒரு படை திருமண மேடையை நோக்கி விரையும்.
அன்பு உறவினர்கள்தான்.


முன்பு இந்தக் கும்பலில் நானும் இருப்பேன்.:)

கால் தடுக்கி விழும் வாய்ப்புகள் அதிகரிக்கவே நான் கீழே நின்றே திருமணம் செய்துகொண்ட தம்பதிகளை அட்சதை தூவி ஆசீர்வாதம் செய்வதை வழக்கப் படுத்திக் கொண்டேன்.
முக்கால்வாசி வீடியோக்காரர்கள் தலையில் விழும்:)

இதைத் தடுக்கவே எங்கள் முதல் மகன் திருமண வீடியோக்ராஃபரிடம் அவரையும் அவரது கொற்றக் குடை தூக்கி(அதான் விளக்குப் பிடிப்பவர்)யையும் கொஞ்சம் இடம் பார்த்து நின்றுகொண்டு வருபவர்களை மறைக்காமல் தம்பதிகளையும் தொந்தரவு செய்யாமல், என்ன செய்யலாம் என்று கலந்தாலோசித்தோம். நல்ல் திர்மானக்களோடு அட்வான்ஸ் தொகையையும் வாங்கிச் சென்றார்.
அந்தப் பையன் மகா ஆர்வம் காட்டி படங்கள் எடுத்தார். என்னை அளவுக்கு அதிகமாகவே பலப்பல முகபாவங்களில் எடுத்திருப்பதைப் பிறகு தான் தெரிந்து கொண்டேன்.
இந்தத் திருமணம் அவரது இரண்டாவது ப்ராஜெக்ட். மிகக் கவனமாக வேலைகளைச் செய்தார்.
திருமணம் முடிந்து மகனும் மருமகளும் தேநிலவு போய் வந்த பிறகு
எல்லோரும் உட்கார்ந்து வீடியோக்களையும் பட ஆல்பங்களையும் பார்த்துக் களித்தோம்;)
அப்பதான் வந்தது சங்கடம்.:(

பெண் வீட்டுக்காரர்களின் படங்கள் குறைவாகவே இருந்தன. முக்கியமாக மாலை மாற்றும் ஒரே மாமாவே பல இடங்களில் இருந்தார். இன்னும் இரண்டு மாமாக்களைக் காணவில்லை. அதே போல மருமகளின் அப்பாவும் அம்மாவும்
திருமணக் களைப்பில் ஓய்வாக இருந்த போதும், பசி அளவு கடந்து போய்க் கடைசி பந்தியில் அவர்கள் உண்ணும் போதும் எடுத்திருந்தார்.

இப்பப் புரிந்திருக்குமே. நான்,என் கணவர் மற்ற மூன்று பிள்ளைகள் எல்லோரும் பளாபளா என்று நிறையப் படங்களில் சந்தோஷப் புன்னகையோடு போஸ் கொடுக்கச் சில படங்களில் மட்டுமே

மணமகளும் வீட்டவரும் காட்சி அளித்தார்கள். முகம் சோர்ந்து, ஒரு துளி சிரிப்பு கூட இல்லாமல்....
இதைப் பார்த்த புது மருமகள் முகத்தில் ஈயாடவில்லை.

ஏதோ திட்டமிட்டு இது நடந்த மாதிரி ஆகிவிட்டது.
உடனே வீடியோக்ராபரை அடுத்தக் கல்யாணத்துக் கிளம்பும் முன்னால்
பிடித்தோம்.
வந்தவரைப் பிடித்து உலுக்கிவிட்டான் புது மாப்பிள்ளை.

இது எப்படி ஆச்சு. அவங்க வீட்டுக்காரங்களை இப்படிக் கவனிக்காம விட்டீங்களே.திருமணம் இரண்டு வீட்டு பிணைப்பு இல்லையா. அதுக்கு அடையாளமாத் தானே ஆயிரக் கணக்கில் உங்களுக்குக் கொடுத்துப்
படங்கள் எடுக்க வைத்தது என்று அடுக்கவும்,
அந்த இளைஞன் நடுங்கிவிட்டார்.

பொதுவா பொண்ணு வீட்டுக்காரங்களோட வீடியோக்ராபர் அவங்களைக் கவனிப்பார். நான் உங்க வீட்டு பக்க ஆளுங்களையே எடுத்தேன் சார்.
அவங்க வீட்டிலயும் இப்படித்தான் அந்தப் போட்டோக்காரரும் செய்தார்''னு அவர் சொன்னதும்தான் ,
நாணயத்தின் அடுத்த பக்கம்(மணிரத்னம் கூட இந்த ஃப்ரேஸை உபயோகப் படுத்தினார்,ராவணன் முன்னோட்டத்தின் போது:) ) தெரிந்தவனாக,தெளிந்தவனாக
தன் புது மனைவியைச் சமாதானப் படுத்த உள்ளே விரைந்தான்.

மாமியாராக முதல் முதலாகச் சந்தித்தப் பிரச்சினையை எளிதில் ஊதித் தள்ளிய எங்க வீட்டுக்காரருக்கு நன்றிகள் சொல்லிவிட்டு, அவர்கள் வீட்டு வீடியோவைக் கொடுத்தனுப்பும்படி சம்பந்தியம்மாவுக்குப் போன் செய்தேன். அடையாரிலிருந்து ஒரு இரண்டு மணி நேரத்தில் அவங்களும் மத்த இரு பெண்களோடவும் , மனம்,முகம் கொள்ளாத சிரிப்போடு சம்பந்திகள் வந்தார்கள். வீடியோவோடுதான்.
ஒன்று இல்லை இரண்டு இல்லை நாலு சிடீக்கள்!!!
பார்க்கப் பார்க்க என்னுள் ஏதோ மிரள ஆரம்பித்தது.:)
நாங்கள் முதலில் பந்தலில் நுழையும் போது இருந்தோம்.
ஆரத்தி எடுத்து படிகளில் ஏறியதற்கப்புறம்,
ஊஞ்சல் காட்சிகளில் எங்கள் தலைகள் மட்டும் தெரிந்தது:)


தாலிகட்டும் நேரம் தவிர மற்ற நேரத்தில் எங்கள் யாரையுமே(மாப்பிள்ளை தவிர) பார்க்க முடியவில்லை.!!!!
அப்பாடா தானிக்கு தீனி என்று மனசு அமைதி அடைந்தது:))))))

இப்போது எல்லாம் உனக்கு நீ எனக்கு நான் என்ற சந்தோஷமான லைன் ஆஃப் கண்ட்ரோலில் சம்பந்திகள் இயங்குகிறோம்.:)










எல்லோரும் வாழ வேண்டும்.
Posted by Picasa

Thursday, June 17, 2010

அனைத்து தந்தையர்களூக்கும் தந்தையர் தின வாழ்த்துகள் ஜூன்20



வழி காட்டிய தந்தை,
வருத்தப்பட்டால் தேற்றிய தந்தை

, உயிரின் கடைசி மூச்சு இருக்கும் வரை மக்களின் நலனையே  நினைத்த என் தந்தைக்கும் என் தம்பிக்கும் என் அஞ்சலிகள். அப்பா,தம்பி உங்கள் உழைப்பு வீணாகவில்லை. முத்தான செல்வங்கள் நேர்மை வழியில் நடந்து கொண்டிருக்கிறார்கள்.

இன்னும்  பல மழலைச் செல்வங்கள் வரக் காத்து இருக்கிறேன்.

உங்கள் உறவு,பாசம்
கண்முன்னால் தெரியாவிட்டாலும், அதை வலுப்படுத்த எத்தனையோ சகோதரர்களும்,தம்பிகளும்,பிள்ளைகளும் கிடைத்திருக்கிறார்கள்.

அந்தச் செல்வங்களுக்கு  இன்று  தந்தையர் தின வாழ்த்துகளை மனம் நிறைய
அள்ளிக் கொடுக்கிறேன்.

அணைக்கும் தந்தையைப் பெற்ற செல்வங்கள்  ,நாளை அவர்களது குழந்தைகளையும் இதே அன்பு வழியில்  நடத்திச் செல்லுவார்கள்.

தாத்தாக்களுக்கும்,
அவர்களது பிள்ளைகளுக்கும்,
பிள்ளைகளின்   பிள்ளைகளுக்கும்(நாளைய தந்தையர்)
வாழ்த்துகள். உங்கள் அன்பு செழிக்கட்டும்.





எல்லோரும் வாழ வேண்டும்.
Posted by Picasa

Wednesday, June 16, 2010

வானமீதில் நீந்தியோடும் வெண்ணிலாவே...ஒரு புகைப்படப் பதிவு





எல்லோரும் வாழ வேண்டும்.

வானமீதில்  நீந்தியோடும் வெண்ணிலாவே
நீதான்  வந்ததேனோ  ஜன்னலுக்குள்  வெண்ணிலாவே....
நானும் உன்னைப் பார்த்துவிட்டால்  வெண்ணிலாவே
முகம் நாணியே மறைவதேனோ வெண்ணிலாவே.......

பட்டப் பகலில்    ஜோதி     வீசும்  வெண்ணிலாவே
உன்னைப் பார்ப்பதும்  ஓர்  விந்தையன்றோ  வெண்ணிலாவே

வட்டமான   உன் முகத்தில் வெண்ணிலாவே
ரெண்டு வண்டுகள் சுழல்வதேனோ  வெண்ணிலாவே!!
வானமீதில்   நீந்தியோடும்  வெண்ணிலாவே.............

கோமதியின் காதலன்  படம்
பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன்.
வானொலியில் கேட்டேன்.  இங்கே  பதிந்திருக்கிறேன்.:)

கூல்டோடில்   கேட்கலாம்.
குரலும்,பாட்டும்,நிலவும் சேர்ந்து  ஒரு காவியத்தையே
 படைத்தது  அந்தக் காலம்.
ஒரு ஜன்னல், அதில் ஒர் அழகான  பெண்,அதிர்ஷ்டவசமாகப் பார்த்த ,கவிதையுள்ளம் கொண்ட ஒரு நாயகன்....இதெல்லாம்  அப்பொழுதுதான் சாத்தியம்.

இந்தப் பாடலைப்  பாடினாலே  ஏதோவிஷயம் இருக்கிறது என்று பெற்றோர்கள் சந்தேகப் பட்டதும்  உண்டு.
எதுவில்லாமல்  இந்தப் பாட்டைப்  பாடி
அம்மா   என்னை  ஜன்னல் பக்கம் நிற்காதே
என்று சொன்ன நாட்களும்  உண்டு.அப்போது  வயது  பத்திருக்கும்  எனக்கு:)
















Posted by Picasa

Tuesday, June 15, 2010

சிரித்து வாழ வேண்டும்


ஜூன்  மாதப் புகைப்படப் போட்டிக்காக  இந்தச் சகோதரர்களின் படத்தை அனுப்ப வேண்டும் என்று நினைத்தேன்.

அதைவிட அவர்களின் வாழ்க்கைச் சிறப்பை எழுதலாம் என்றே தோன்றியது.
இவர்கள் இருவரும் தாண்டி வராத சோதனைகளே   இல்லை.  சின்னவ  பெரியவருக்கு  விரும்பிச்  செய்த உதவிகள் பல .அதே போல,பெரியவர் தன் சிறிய (20)  வயதிலிருந்து   குடும்பத்துக்குப் பாடுபட்டு,தன் அம்மாவுக்கும் தம்பிகளுக்கும் மிக மிக
உதவியாக இருந்தார்.
சமீபத்தில் ஒரு திருமண நிகழ்வில் இவர்களைச் சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது.

எத்தனை  துன்பமோ,தடங்கலோ வந்தாலும் சிரித்துக் கடக்கும் மனப்பக்குவத்தை இவர்களிடம் கற்க வேண்டும் என்று தோன்றியது.
ஒரே ஒரு க்ளிக் செய்து கொண்டேன்.
அகம் நக  நகைக்கும்  புறம்.
முகம்  முழுவதும் சிரிப்பு. அன்பு.

இவர்களது  தோழமை தொடர ,பாசம் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.


எல்லோரும் வாழ வேண்டும்.
Posted by Picasa

Friday, June 11, 2010

என்றும் வசந்தம்

''பாட்டி,நான் உனக்கு காயெல்லாம் கட் செய்து கொடுக்கிறேன்.
காஃபி கூட மைக்ரொவேவ்ல போடுவேன்.
உன்னோடயே இருந்துடறேனே. அம்மா அப்பா மட்டும் போட்டும்''
இது ஸ்விஸ் பேத்தியின் கொஞ்சல்.
''இந்த ஊர்ல கொசு இருக்குடா,, கால் வைக்கிற இடமெல்லாம் அழுக்கு இருக்கும்,
தோட்டத்திலிருந்து பூச்சியெல்லாம் உள்ள வந்துடும்''
நீதான் அந்த பெரிய புஸ் புஸ் வச்சிருக்கியே, நாம அதெல்லாம் விரட்டிடலாம்.
நான் சமத்தா சாப்பிடறேன்.

அப்புறமா புதுப் பாப்பா வந்தாட்டு நாம ''பாசல்'' போகலாம்.

இப்படி விதமா விதமாகப் பேசி இங்கேயெ இருக்கேன்னு சொன்ன குழந்தை இதோ கிளம்பப் போகிறது:)

நீ கோவிந்தா உம்மாச்சி,சாயித்தாத்தா உம்மாச்சி எல்லார்கிட்டயும் பெசிண்டிரு பாட்டி.
நான் அப்புறமா வரேன்.
அப்பா பாவம் ,தனியா இருக்கப் பயமா இருக்கும். நான் அவாளோடயே போகிறேன் என்று
''டோரா'' பையையும் தூக்கிக் கொண்டது.

வசந்தமெல்லாம் கொஞ்ச நாட்கள் தான் என்று நமக்குத் தெரியாதா என்ன!!!



எல்லோரும் வாழ வேண்டும்.

Saturday, June 05, 2010

மணநாள் வாழ்த்துகள் துளசிகோபால்.




miss.Thulasi weds mr. Venugopal today. June 5th .






எங்கள் அன்புதுளசி(என்கிற) ராஜராஜேஸ்வரிக்கும்

அன்பு அருமைத் தம்பி கோபால் என்கிற வேணுகோபாலுக்கும் கல்யாண நாள் இன்னிக்கு.
பதிவுலகத்தின் இனிய தம்பதியருக்கு அனைவரும் அழகான மாலைகளும் , பூங்கொத்துகளும் அனுப்பும்படி பெண்வீட்டைச் சேர்ந்த நாச்சியாரம்மா கேட்டுக்கிறாங்க:)
உங்கள் அன்பு வாழ்த்துகள் அவர்கள் வாழ்வை மேலும் சிறப்பிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
துளசிக்கு மிகவும் பிடித்த பத்மநாப ஸ்வாமி அவர்கள் இருவரையும் பொன் போல் காப்பாற்றுவார்.
வாழ்க தம்பதியர்
வளமோடும்
பெற்ற மகளோடும்
இனிய குணத்தோடும்,அன்போடும்,ஆரோக்கியத்தோடும் நன்றாக இருக்கணும்.
p.s.
ப்ளாக்ஹெட்டரில் இருக்கும் மிட்டாய் கேக் எல்லாம் வர குழந்தைகளுக்குச் சரி பாகமாகப் பகிர்ந்து கொடுக்கப்படும்.:)
@தக்குடு, நீ சின்னக் குழந்தை,அதனால் ரெண்டு ஹெல்பிங் எடுத்துக்கலாம்:)

எல்லோரும் வாழ வேண்டும்.




Posted by Picasa

Friday, June 04, 2010

நந்தவனம்


பால்கனியில் ஒரு பச்சை வனம்..
இடம் துபாய்.




எல்லோரும் வாழ வேண்டும்.
Posted by Picasa



செய்தவர் எங்கள் வீட்டுத் தோட்டக்கார எஜமானர்.

Tuesday, June 01, 2010

பொக்கிஷங்கள்




எல்லோரும் வாழ வேண்டும்.
Posted by Picasa
தங்கம் கொடுத்த தக்குடுவுக்கும்,வைரப் பதக்கம் கொடுத்த அமைதிச்சாரலுக்கும் கோடி

கோடி நன்றி.
தக்குடு பாண்டி தங்கம் கொடுத்ததோடு நிற்கவில்லை.
அன்பு வார்த்தைகளால் ஒரு தங்க மழையே பொழிந்து விட்டார்.

அமைதிச்சாரல் தனக்குக் கிடைத்த வைரப் பதக்கத்தை என்னுடன்
பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
அவர்கள் இருவரின் பரந்த மனசுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.

இங்க வந்திருக்கும் ஸ்விஸ் பேத்தியிடம் இவைகளைக் காண்பித்தால், பாட்டி நீதான் ஏற்கனவே கம்மல் எல்லாம் போட்டுண்டு இருக்கியே, நான் எடுத்துக்கிறேனெ ரெண்டையும் என்றது. ஓ உனக்கு அப்படியே தருகிறேன் என்று சொல்லி ப்ரிண்ட் எடுத்துக் கொடுத்துவிட்டேன். மஹா சந்தோஷம்.:)