ஜூன் மாதப் புகைப்படப் போட்டிக்காக இந்தச் சகோதரர்களின் படத்தை அனுப்ப வேண்டும் என்று நினைத்தேன்.
அதைவிட அவர்களின் வாழ்க்கைச் சிறப்பை எழுதலாம் என்றே தோன்றியது.
இவர்கள் இருவரும் தாண்டி வராத சோதனைகளே இல்லை. சின்னவ பெரியவருக்கு விரும்பிச் செய்த உதவிகள் பல .அதே போல,பெரியவர் தன் சிறிய (20) வயதிலிருந்து குடும்பத்துக்குப் பாடுபட்டு,தன் அம்மாவுக்கும் தம்பிகளுக்கும் மிக மிக
உதவியாக இருந்தார்.
சமீபத்தில் ஒரு திருமண நிகழ்வில் இவர்களைச் சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது.
எத்தனை துன்பமோ,தடங்கலோ வந்தாலும் சிரித்துக் கடக்கும் மனப்பக்குவத்தை இவர்களிடம் கற்க வேண்டும் என்று தோன்றியது.
ஒரே ஒரு க்ளிக் செய்து கொண்டேன்.
அகம் நக நகைக்கும் புறம்.
முகம் முழுவதும் சிரிப்பு. அன்பு.
இவர்களது தோழமை தொடர ,பாசம் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.
எல்லோரும் வாழ வேண்டும்.
26 comments:
வயது மீறிய என் வாழ்த்துக்கள் அவர்களுக்கு.
பாராட்டு உங்களுக்கு.
arumai :)
வாழ்த்த மனம் இருந்தால் போதும்.வயசெல்லாம் எதுக்கு?
நானும் வாழ்த்துகின்றேன்.
கள்ளமிலா அந்த பொக்கை வாய் சிரிப்பு, கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்க விரும்பாத, நிகழ்வை ரசிக்கும் மனப்பாங்கு தெரிகிறது.
இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.
வணங்குகிறோம் நாங்களும். உங்கள் வாழ்த்துக்களையும் வழிமொழிகிறேன்.
சூப்பர். எனது வாழ்த்துக்களும்
இருவருக்கும் வாழ்த்துகள்.
இரு அன்பு உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்,வணக்கங்கள்.
வாங்க கருணாகரன், வாழ்த்த வயதே வேணாம்னு எனக்கு நம்பிக்கை:)
நன்றி.
தான்க்ஸ் பா எல்.கே.
அதனே துளசி.!!
நான் இப்ப வயசைப் பத்தி எல்லாம் பேசறதே இல்லை தெரியுமா:)
நன்றிப்பா.
அன்பு நானானி,
நல்ல மனிதர்கள். பொறுமையும் பக்குவமும் அதிகம். வெகு நாட்கள் கழித்துப் பார்த்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி கொடுத்தது.
சங்கடங்களால் மனதைத் தளர விடாத உறுதி.வாழத் தெரிந்தவர்கள்.
நன்றிம்மா.
அன்பு ராமலக்ஷ்மி,
வாழ்த்துகளுக்கும் வணக்கங்களுக்கும் நன்றியம்மா.
உண்மைதான் .அந்தக் குடும்பமே சூப்பர்.உழைத்து முன்னுக்கு வந்தவர்கள்.
நன்றிப்பா. தென்றல்.
நன்றி. மாதேவி.
நன்றி,கோமதி.
உண்மையாகவே வணக்கத்துக்குரியவர்கள் தான்.
என்னுடைய வணக்கங்களையும் சொல்லுங்க வல்லிம்மா.
எப்போதும் இதே அன்புடன் தொடர வேண்டும் வாழ்த்துக்கள்.
Beautiful! :)
அந்த சிரிப்பைப் பார்க்கும்போதே ஒரு புத்துணர்ச்சி வருகிறது.
வரணும் ஸ்ரீராம்.
இவங்களோட இன்னும் இரு சகோதரர்கள் உண்டு. அவர்களும் கிடைக்கும்போது சேர்த்துக் க்ளிக்கி' விடுகிறேன்:)நன்றிம்மா.
வாங்கப்பா சாரல்.
நல்லவர்களோடு பேசிப் பழகுவது,
அவர்கள் கூறும் நல்ல புத்திமதிகளை ஏற்றுக் கொள்வது எல்லாமே நமக்கு
நல்லதே செய்யும் இல்லையா.
இவர்கள் அந்த வகையைச் சேர்ந்தவர்கள்.
வாங்க சுமதி, உங்கள் அனைவரின் வாழ்த்துகளையும் அவர்களிடம் சொல்லிவிடுகிறேன்.:)
ஹெல்லொ மாதங்கி. நன்றிம்மா.
ராம லக்ஷ்மணர்களான இந்த சகோதரர்களுக்கு, அபிவாதயே சொல்லி, என் சாஷ்டாங்க நமஸ்காரங்கள்!
பாரதி மணி
வாருங்கள் பாரதிமணி சார்.
மிகவும் சந்தோஷம்.
என் நான்கு தாய் மாமாக்களில் இவர்கள்
நடு சகோதர்கள்.
இப்பொழுது தோன்றுகிறது. உங்கள் புத்தகத்தைப் பெரிய மாமாவுக்குப் பரிசாகக் கொடுத்தால் சந்தோஷப்படுவாரே என்று.செய்கிறேன்.
Post a Comment