Wednesday, June 16, 2010

வானமீதில் நீந்தியோடும் வெண்ணிலாவே...ஒரு புகைப்படப் பதிவு

எல்லோரும் வாழ வேண்டும்.

வானமீதில்  நீந்தியோடும் வெண்ணிலாவே
நீதான்  வந்ததேனோ  ஜன்னலுக்குள்  வெண்ணிலாவே....
நானும் உன்னைப் பார்த்துவிட்டால்  வெண்ணிலாவே
முகம் நாணியே மறைவதேனோ வெண்ணிலாவே.......

பட்டப் பகலில்    ஜோதி     வீசும்  வெண்ணிலாவே
உன்னைப் பார்ப்பதும்  ஓர்  விந்தையன்றோ  வெண்ணிலாவே

வட்டமான   உன் முகத்தில் வெண்ணிலாவே
ரெண்டு வண்டுகள் சுழல்வதேனோ  வெண்ணிலாவே!!
வானமீதில்   நீந்தியோடும்  வெண்ணிலாவே.............

கோமதியின் காதலன்  படம்
பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன்.
வானொலியில் கேட்டேன்.  இங்கே  பதிந்திருக்கிறேன்.:)

கூல்டோடில்   கேட்கலாம்.
குரலும்,பாட்டும்,நிலவும் சேர்ந்து  ஒரு காவியத்தையே
 படைத்தது  அந்தக் காலம்.
ஒரு ஜன்னல், அதில் ஒர் அழகான  பெண்,அதிர்ஷ்டவசமாகப் பார்த்த ,கவிதையுள்ளம் கொண்ட ஒரு நாயகன்....இதெல்லாம்  அப்பொழுதுதான் சாத்தியம்.

இந்தப் பாடலைப்  பாடினாலே  ஏதோவிஷயம் இருக்கிறது என்று பெற்றோர்கள் சந்தேகப் பட்டதும்  உண்டு.
எதுவில்லாமல்  இந்தப் பாட்டைப்  பாடி
அம்மா   என்னை  ஜன்னல் பக்கம் நிற்காதே
என்று சொன்ன நாட்களும்  உண்டு.அப்போது  வயது  பத்திருக்கும்  எனக்கு:)
Posted by Picasa

12 comments:

துளசி கோபால் said...

என்ன வயசு (வெறும்) பத்தா?

அதுக்கே இந்தப் போடுன்னா.....

ஆஹா.....

வல்லிசிம்ஹன் said...

பின்ன???? துளசி:)

அப்போதெல்லாம் திருமங்கலத்தில் இருந்தோம்.

பாட்டுப் பைத்தியமான பெண்ணை அடக்க அம்மாவுக்கு வேற வழி தெரிந்திருக்கிறாது:)
சரோஜா சவுண்ட் சர்வீஸ், யார்வீட்டு விசேஷத்துக்கோ வந்தால் சீர்காழியின்'' சிரிப்புத்தான் வருகுதையா''விலிருந்து ,பட்டணந்தான் போகலாமடி வரை எல்லாப் பாடல்களையும் போடுவாங்க.

கிராமமும் இல்லாம டவுனும் இல்லாத ஒரு ஊர் அது. அம்மா முன் ஜாக்கிரதையா 144 போட்டுடுவாங்க:)

துளசி கோபால் said...

திருமங்கலத்தில் நாங்களும் இருந்துருக்கோம்!


பொண் குழந்தைகளைக் கண்ணுக்குள் வச்சுக் காப்பாத்திய காலம் அது.

அபி அப்பா said...

\\பொண் குழந்தைகளைக் கண்ணுக்குள் வச்சுக் காப்பாத்திய காலம் அது.\\

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ன்னு மட்டும் தான் சொல்ல முடியுது!ஒரு பெரு மூச்சோட!

நன்றி வல்லிம்மா பாட்டுக்கும் படத்துக்கும்! ரெண்டுமே அருமை!

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துளசி,
யாரு கண்டா, உங்க அம்மா கையால நான் மருந்து சாப்பிட்டு இருப்பேன்.அதுதான் இப்ப பதிவுலகில சேர்ந்திருக்கோமோ என்னவோ.

பெண்ணைப் போற்றித்தான் வளர்த்தாங்க.
ஒரு பேரு வந்துடக் கூடாதுன்னு பயம்.:(

வல்லிசிம்ஹன் said...

அபி அப்பா, நாளைக்குத் தந்தையர்தினம்.
நட்டுவுக்குப் பிறந்த நாள் இல்லையா.
எல்லோருக்கும் முன்னதாகவே நான் உங்களுக்கும் புதல்வனுக்கும் வாழ்த்துகள் சொல்கிறேன்.

அபி நல்ல குழந்தை. சிறப்பா வளர்ந்து உங்களைச் சந்தோஷப்படுத்துவாள்.

அபி அப்பா said...

மிக்க நன்றி வல்லிம்மா! நட்ராஜ் இப்பவே கொண்டாட ஆரம்பிச்சுட்டார். நாளை ஸ்கூலுக்கு அன்யூனிபார்ம் அப்படின்னு. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி வல்லிம்மா!

நானானி said...

சீர்காழியின் கணீர் குரல்!!இப்பொது அப்படியெல்லாம் கேக்க முடியாது.

பாட்டுப்பைத்தியத்தில் நாமிருவரும் ஸேம் ப்ளட்னு நினைக்கிறேன்.

கிராமபோனில் கீ கொடுத்து கேட்டதெல்லாம் நினைவுக்கு வருகிறது.

Sumathi said...

பழைய பாடல்கள் என் அம்மாவுடன் சேர்ந்து கேட்பேன் அவர் நல்ல பாடல்களாக தொகுத்து வைத்திருப்பார்கள். அந்த நினைவு வந்து விட்டது நீங்கள் சொல்லும்போது.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் நானானி, சேம் ப்ளட் தான்!!
அதுவும் சீர்காழின்னால் தனியா ஒரு பாசம். பகவான் சீக்கிரமா கூப்பிட்டுவிட்டாரே அவரை.

அபிராமி அந்தாதி அவர் சொல்லிக் கேட்டால் தனி அநுபவம். நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் சுமதிமா.உங்க அம்மா,இன்னும் எங்க காலத்து மனுஷங்களுக்கு நல்ல தமிழும்,நல்ல இசையும் கிடைத்தது.
இப்பவும் இசை இருக்கு வேற ரூபத்தில நல்லாத்தான் இருக்கு இதுவும்.

துளசி கோபால் said...

நமக்கும் 'சீர்காழி'ன்னா அப்படி ஒரு பிரியம்.

கணபதியே வருவாய்...... கணீர்னு ஆரம்பிக்கும்போதே...... மனசு கூத்தாடும். என்ன ஒரு அழுத்தம் திருத்தமான உச்சரிப்பு!!!!

அதுவும் கோபாலுக்கு ரொம்பவே பிடிக்கும்.

எனெக்கென்னவோ அவர் பாடுன சினிமாப் பாட்டுக்களைவிட, தனிப்பாட்டுகள்தான் பிடிச்சிருக்கு.