Saturday, June 05, 2010

மணநாள் வாழ்த்துகள் துளசிகோபால்.
miss.Thulasi weds mr. Venugopal today. June 5th .


எங்கள் அன்புதுளசி(என்கிற) ராஜராஜேஸ்வரிக்கும்

அன்பு அருமைத் தம்பி கோபால் என்கிற வேணுகோபாலுக்கும் கல்யாண நாள் இன்னிக்கு.
பதிவுலகத்தின் இனிய தம்பதியருக்கு அனைவரும் அழகான மாலைகளும் , பூங்கொத்துகளும் அனுப்பும்படி பெண்வீட்டைச் சேர்ந்த நாச்சியாரம்மா கேட்டுக்கிறாங்க:)
உங்கள் அன்பு வாழ்த்துகள் அவர்கள் வாழ்வை மேலும் சிறப்பிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
துளசிக்கு மிகவும் பிடித்த பத்மநாப ஸ்வாமி அவர்கள் இருவரையும் பொன் போல் காப்பாற்றுவார்.
வாழ்க தம்பதியர்
வளமோடும்
பெற்ற மகளோடும்
இனிய குணத்தோடும்,அன்போடும்,ஆரோக்கியத்தோடும் நன்றாக இருக்கணும்.
p.s.
ப்ளாக்ஹெட்டரில் இருக்கும் மிட்டாய் கேக் எல்லாம் வர குழந்தைகளுக்குச் சரி பாகமாகப் பகிர்ந்து கொடுக்கப்படும்.:)
@தக்குடு, நீ சின்னக் குழந்தை,அதனால் ரெண்டு ஹெல்பிங் எடுத்துக்கலாம்:)

எல்லோரும் வாழ வேண்டும்.
Posted by Picasa

29 comments:

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ஆஹா..

டீச்சரம்மா மங்களகரமான உங்களது மண வாழ்க்கையில் இன்றுபோல் என்றும் வாழ என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்..!

LK said...

இங்கயும் சொல்லிகிறேன் .. மணநாள் வாழ்த்துக்கள்

அமைதிச்சாரல் said...

மணநாள் வாழ்த்துக்கள் துளசியக்கா. மணப்பெண் தோழிக்கு நன்றிகள்.

ராமலக்ஷ்மி said...

இனிய மணநாள் வாழ்த்துக்கள்
துளசி மேடம் கோபால் சார்:)!!

ராம்ஜி_யாஹூ said...

my best wishes to them.

ஸ்ரீராம். said...

திருமண நாள் வாழ்த்துக்கள்...இருவரும் இணைந்து பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.

Anonymous said...

துளசி டீச்சருக்கும் கோபால் சாருக்கும் மணநாள் வாழ்த்துக்கள்!!!!!

ஆயில்யன் said...

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் டீச்சர் :)))

Vidhoosh(விதூஷ்) said...

துளசி அம்மாவுக்கும் கோபால் சாருக்கும் நமஸ்காரங்கள். :)

வல்லிசிம்ஹன் said...

Please take some refreshments provided in the blog:)

தக்குடுபாண்டி said...

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் துளசி டீச்சர் & கோபால் சார்! தாயார் ஸஹிதமா சேவை சாதிக்கும் கல்லிடை ஆதிவராஹப் பெருமாள் உங்களுக்கு எல்லா வளமும் ஆரோக்யமும் அளிப்பாராக!!

துளசி டீச்சர் வல்லியம்மா பதிவுல இருக்கும் எல்லா refreshments-டையும் தக்குடுவை, அவர்கள் சார்பாக ' நீ எடுத்துக்கோ கோந்தை!'னு சொல்லிவிட்டபடியால் முழுவதும் தக்குடுவுக்கு அனுப்பி வைக்கவும்...;)

அமைதிச்சாரல் said...

ஹை!! வல்லிம்மா,.. உண்மையை சொல்லுங்க. விருந்து எனக்கும் சேர்த்துத்தானே ஏற்பாடு பண்ணியிருக்கீங்க :-))))

சந்தனமுல்லை said...

துளசி&கோபால் இருவருக்கும் மணநாள் வாழ்த்துகள்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துகள்
துளசி,கோபால் சார்..

கோபிநாத் said...

டீச்சருக்கு இங்கையும் ஒரு வாழ்த்து ;)

திவா said...

அடடா! இவங்க உண்மை பெயரே இப்பதான் தெரியுது! வாழ்த்துக்கள்!

போனா போறதுன்னு என் பங்கையும் தக்குடுக்கே கொடுக்கறேன்!

திவா said...

அடடா! இவங்க உண்மை பெயரே இப்பதான் தெரியுது! வாழ்த்துக்கள்!

போனா போறதுன்னு என் பங்கையும் தக்குடுக்கே கொடுக்கறேன்!

ஹுஸைனம்மா said...

அட, என் பெற்றோருக்கும் இன்னிக்குத்தான் மணநாள்!!

துளசி டீச்சருக்கும் என் வாழ்த்துகள்!!

வல்லிசிம்ஹன் said...

வந்து வாழ்த்திய உண்மைத்தமிழன்,சின்ன அம்மிணி, கோபிநாத்,தம்பி வாசுதேவன்,
ஆயில்யன்,அமைதிச்சாரல், குழந்தை தக்குடு,,
முத்துலட்சுமி, ஸ்ரீராம், சந்தனமுல்லை,விதூஷ்,
ராம்ஜி-யாஹு,எல்.கே, ராமலக்ஷ்மி அனைவருக்கும் மணமக்கள்
சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.:)

உங்கள் மொய்ப்பணத்தை எல்லாம் என் பேரில் ஒரு
சேவிங்ஸ் ஏ/சி ல போட்டு வைத்திருக்கிறேன் :)
அவர்களுக்குத் தக்க வயது வந்தவுடன் அவர்களிடம் அனுப்புகிறேன்.
சரியா!!!!

ஆடுமாடு said...

வாழ்த்துக்கள் துளசி டீச்சர்.

கோமதி அரசு said...

துளசிஅவர்களுக்கும் கோபல்சாருக்கும்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்!

Sumathi said...

துளசி டீச்சருக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஆடுமாடு,தங்கச்சி கோமதி,,அன்பு சுமதிஎல்லோருக்கும் தம்பதிகள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

ஹுசைனம்மா உங்க பெற்றொருக்கும் எங்கள் மனம் நிறைந்த வாழ்த்துகள்..அடுத்த வருடப் பதிவில் அவர்கள் பெயரையும் சேர்த்துவிட வேண்டும். மிகவும் சந்தோஷம் அம்மா.

துளசி கோபால் said...

வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும், பதிவிலும் தன் மனத்திலும் எனக்கிடமளித்த வல்லிக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இந்த நட்புணர்வும் அன்பும் எப்பவும் நிறைஞ்சபாத்திரமாப் பெருகி வழியணுமுன்னு ஆண்டவனை வேண்டுகின்றேன்.

கீதா சாம்பசிவம் said...

இருவருக்கும் இனிய வாழ்த்துகள், தாமதமாய்ச் சொல்லிக்கிறேன்.

ஹுஸைனம்மா said...

வாழ்த்துகளுக்கு மிக நன்றி வல்லிம்மா.

புதுகைத் தென்றல் said...

my belated wishes

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா, தம்பதிகள் சார்பில் உங்களுக்கும் சாருக்கும் நன்றி சொல்கிறேன்.

@அன்பு தென்றல் தாமதமானால் என்னப்பா.
மனம் நிறைய வாழ்த்த நேரம் காலம் ஏது.நன்றிம்மா

நானானி said...

மிக மிகத் தாமதமான வாழ்த்துக்கள், அன்பு துள்சிக்கும் அருமை கோபாலுக்கும். என்றென்றும் எப்போதும் போல் மகிழ்ச்சி பொங்க வாழ வாழ்த்துகிறேன்.