Blog Archive

Friday, December 25, 2009

சென்னை -நான்கு லஸ் சாலையில் பூமியின் நேரம்

டிசம்பர் இருபத்தி மூன்றாம் தேதி வழக்கம்போலத்தான் சென்றது. சாயந்திரம் நான்கு மணிவரை. வந்திருந்த உறவினர்களும் கிளம்பினார்கள், அந்தக் சத்தம் பெரிதாகக் கேட்டது.
உடனே ஒரு தீய்ந்த வாசனை. மின்சக்தியும் போய்விட்டது.


அதான் இநவரட்டார் இருக்கு. மின்சாரம் வந்துவிடும் என்று அதன் பட்டனைத் தட்டினால் ஒ ''என்று காத்த ஆரம்பித்துவிட்டது. இதென்னடா இன்னிக்கு வந்த வேதனை என்று சலித்தபடி,சரி, போ . தானே சரியாகிவிடும் என்று ,ஒரு பொன்மாலைப் பொழுது என்று பாடிக் கொண்டே வாசலில் செடிகள் பக்கத்தில் நாற்காலியைப் போட்டுக் கொண்டு ,

என்ன இருந்தாலும் இந்தக் காற்றை உள்ளே அனுபவிக்க முடியுமா என்று நினைத்தபடி தி.ஜானகிராமனின் 'அன்பே ஆரமுதே' நாவலை விட்ட இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்தேன்.
குளிர் காலமாச்சே :) இருட்ட ஆரம்பித்துவிட்டது. கொசுக்கள் படையெடுப்பும் ஆரம்பிக்க, உடல் பயிற்சிக்குப் போயிருந்த சிங்கமும் வந்தார். ஏன் இருட்டில உட்கார்ந்திருக்க ? என்று கேட்டபடி உள்ள போய் விளக்கு ஸ்விட்ச் ஒவ்வொன்றாகப் போட்டுப் பார்த்துவிட்டு,, ஒ!பவர் இல்லையா. வந்துடும் அப்படினுட்டுப் பக்கத்து வீடுகளைப் பார்த்தார்.
ஒரே ஜகஜ்ஜோதியாக விளக்குகள் சுற்றிலும்.

அட, நம்ம வீட்ல தாம்மா இல்ல.''ஈ.பி '' கூப்பிடு என்று விட்டுக் குளிக்கச் சென்றார்.
அங்கயும் வெளிச்சம் இல்லாததால் ,
தேடும் படலம் ஆரம்பித்தோம்.
மெழுவர்த்தி எங்கே, டார்ச் எங்கே.
சாமான் வச்ச இடத்தில இருந்தா இந்தப் பிரச்சினை கிடையாது . தீப்பெட்டில இருந்து ,தேட வேண்டியதா இருக்கே என்ற முனுமுனுப்பு காதில் விழுந்தாலும் நான் நகருவதாக இல்லை.

இருட்டில மோதிக்க வேணாம் என்கிற நல்ல எண்ணம்தான்.!
197 அழைத்து, மாறின லஸ் (கம்ப்ளைன்ட்)நம்பரை அழைத்தால் அவர்கள் இதோ வருகிறேன்னு சொல்லி ஒரு மணி கழித்து வந்தார்கள்.
அப்போதான் புரிந்தது இந்த மின்வெட்டு மாயம். எங்க வீட்டிலிருந்து மூன்றாவது வீட்டை இடித்துவிட்டுப் புதிதாகக் கட்டும்போது, எங்கள் லைனிலிருந்து பிரித்துக் கேபிள் கொடுத்திருக்கிறார்கள். அது நம் மின்சாரத்தைத் துண்டித்து இருக்கிறது
இந்த நேரத்தில் யாரோட சண்டை போடுகிறது என்று நொந்தபடி ,

வந்த லைன்மேன் சொன்னபடி , இவர் பைக்கை எடுத்துப் போய் எக்ஸ்ட்ரா கேபிள் லைன் வாங்கி வந்தார். மணி ஒன்பதரை.
அதற்கு மேல் அவர்கள் வேலை ஆரம்பித்து நடுவில் காப்பி ,குடிக்கப் போய், மின்சக்தி வந்த பொழுது ,மணி பத்தரை.

அதற்குத்தான் இந்தத் தலைப்பு வைத்தேன். நாமளும் ஒரு ஆறு மணி நேரம் இருட்டில இருந்து பூமி நேரம் கொண்டாடி பூமியின் வெப்பத்தைத் தணித்து விட்டோம் என்று:)



எல்லோரும் வாழ வேண்டும்.

28 comments:

Geetha Sambasivam said...

//தி.ஜானகிராமனின் 'அன்பே ஆரமுதே' நாவலை விட்ட இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்தேன்.//

அருமையான கதையாச்சே?? என்னைப் பொறுத்தவரையிலும் தி.ஜானகிராமனின் மாஸ்டர் பீஸ் இந்த நாவல் தான். மத்ததெல்லாம் இதுக்கு முன்னாலே ஒண்ணுமே இல்லைனு தோணும், எத்தனை முறை படிச்சிருக்கேன்??? கணக்கே இல்லை! ஒவ்வொரு முறையும் ஒவ்வொண்ணு புதுசாத் தெரியுமே.

//குளிர் காலமாச்சே :) இருட்ட ஆரம்பித்துவிட்டது//

நல்லாத் தான் இருக்கு, சீக்கிரமா இருட்டற அழகும், அது சரி, உங்க பக்கமெல்லாம் மின் தடையே இல்லையா?? எங்களுக்கு அநேகமாய்த் தினமும் இரண்டு மணி நேரமாவது இருக்கும், ம்ம்ம்ம்ம் இப்போ ஒருவாரமா இல்லை போலிருக்கே?? ஹிஹிஹி நானே கண்பட்டுடப் போறேன். :P

துளசி கோபால் said...

எப்படியெல்லாம் யோசித்துப் பூமி நேரம் கொண்டாடுறாங்கப்பா!!!!!!!!!

ஆயில்யன் said...

நல்ல வேளை பூமி நேரம் கொண்டாடுங்க! காலையில வர்றோம்ன்னு ஈபி காரங்க சொல்லாம போனாங்களே :)

துளசி கோபால் said...

கீதா,

அவுங்க விஐபி ஏரியா!!!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\அதற்குத்தான் இந்தத் தலைப்பு வைத்தேன். நாமளும் ஒரு ஆறு மணி நேரம் இருட்டில இருந்து பூமி நேரம் கொண்டாடி பூமியின் வெப்பத்தைத் தணித்து விட்டோம் என்று:)//

இதைத்தான் உக்காந்து( இருட்டில்) யோசிக்கறதுங்கறாங்களா ? :))

திவாண்ணா said...

ஒரு மணி நேரத்தில அதுவும் ராத்திரி வராங்கன்னா ஆச்சரியமா இருக்கு!
மெழுகுவத்தி படம் வெகு அழகு!

வல்லிசிம்ஹன் said...

இங்க அநேகமா கரண்ட் போவது அதிசயம்தான் கீதா.
இப்பதான் கொஞ்ச நாளா இந்த மாதிரி ஆகிறது. இன்வர்டர் வேலை செய்யும். அதனால ஒரு லைட்,ஒரு மின்விசிறின்னு ஓடிடும்.
இந்தத் தடவை செட் டாப் பாக்ஸ் அடாப்டர் கருகிப் போயிடுத்து.
இங்க மின் வாரியத்தில இருக்கிறவங்க நல்ல உதவி செய்கிறவங்கதான். கொஞ்சம் பணம் செலவாகும்.;(
அன்பே ஆரமுதே மூன்றாம் தடவையாகப் படிக்கிறேன். ஒரே உணர்ச்சிகள் மயம்.

வல்லிசிம்ஹன் said...

துளசி, ஒண்ணும் செய்ய முடியாத நிலைமையில், யோசிக்கத்தானே வேணும். ;0)

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ஆயில்யன். அதுவும் அந்தத் திருப்பூர்க் காரர் மின்வெட்டு அலுவலகத்துக்கு
ஒரு வாரம் அலைந்ததை(அந்தப் பதிவின் பெயர் மறந்துவிட்டது) நினைத்து மிகவும் வருத்தமாகிவிட்டது.
அதை நினைத்தே நான் அமைதியாக இருந்து விட்டேன்.
ஒன்றுமே காரணமில்லாமல் வெறும் மின்வெட்டுக்குக் கவலைப் பட வேண்டாம் என்று கூடத் தோன்றிவிட்டது.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் முத்து.
பாசிடிவ் தின்கிங் இது தானே;)
மிஞ்சி மிஞ்சிப் போனால் பக்கத்து ஹோட்டல் ஒன்றில் ரூம் எடுக்கலாம். அதெல்லாம்
சிங்கத்துக்கு அவ்வளவாகப் பிடிக்காது. பொறுமையா இருக்கத்தான் வேண்டும்!

வல்லிசிம்ஹன் said...

மைலாப்பூர் எலெக்ட்ரிசிடி போர்ட் நல்ல வேலை செய்றவங்க
தம்பி திவாஜி.
மரியாதையானவங்க கூட.
நல்லதைச் சொல்லணும் இல்லையா.

dondu(#11168674346665545885) said...

சமீபத்தில் 1961 வாக்கில் இது கல்கியில் தொடர்கதையாக வந்தபோது படித்திருக்கிறேன்.

அனந்தசாமி (?), ருக்கு, டொக்கி ஆகியோர் இன்னும் நினைவில் இருக்கிறார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

திவாண்ணா said...

//மைலாப்பூர் எலெக்ட்ரிசிடி போர்ட் நல்ல வேலை செய்றவங்க
தம்பி திவாஜி.
மரியாதையானவங்க கூட.
நல்லதைச் சொல்லணும் இல்லையா.//

ஆமாம் அக்கா!அந்த குணம் நிறைய பேருக்கு கிடையாது. உங்களுக்கு இருக்கறதிலே ஆச்சரியம் இல்லை!
பதிவை படிச்சா அடுத்த காலுக்கு சீக்கிறமே வந்துடுவாங்க பாருங்க!

பி.கு இன்வெர்டரை சரி பண்ணியாச்சா இல்லையா?

வல்லிசிம்ஹன் said...

நமஸ்காரம் டோண்டு சார். ஆமாம் மனசை விட்டு அகலாத பாத்திரங்கள் ,ருக்குவும் ,டொக்கியும்.
அது என்னவொரு மாயமோ தி.ஜா வின் எழுத்தில்.
அருமையான வடிவம் கொண்ட, ஆழ்ந்து சிந்திக்கும் மனிதர்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தம்பி வாசுதேவன்,
இவர்கள் எல்லாம் நம்மால் என்ன செய்ய முடியும் சொல்லுங்கோ.

அதுவும் இரவுத் தூக்கம் கெட்டால் அடுத்த நாள் நம்மைச் சங்கடப்படுத்தும் உடம்பு. நிஜமாகவே அவர்களுக்கு நன்றி சொல்கிறேன்.

ப்ளாகெல்லாம் படிப்பார்களா தெரியாது. பார்க்கலாம்:)
இன்வெர்ட்டர் பழுது பார்ப்பவர் இன்னும் வரவில்லை.
வருவார்.

Geetha Sambasivam said...

//அனந்தசாமி (?), ருக்கு, டொக்கி ஆகியோர் இன்னும் நினைவில் இருக்கிறார்கள்.//

அனந்தசாமிதான், அப்புறம் ரங்கன்??? சந்திரா?? நாகலக்ஷ்மி??? இவங்களை விட்டுட்டீங்க, அந்தப்பணக்காரர் அவர் பேரு தான் மறந்து போச்சு. டொக்கி மேலே ஆசைப்படுவாரில்லை அவர்?? ஹிஹி, வல்லி, போறேன், அப்புறமாக் கதை விமரிசனமா ஆயிடும் உங்க பதிவு.

Geetha Sambasivam said...

//இன்வெர்ட்டர் பழுது பார்ப்பவர் இன்னும் வரவில்லை.
வருவார்//

பாட்டரி போயிருக்குமோ??? எங்க வீட்டிலேயும் இப்படித் தான் கத்தி அமர்க்களம்! அப்புறம் பார்த்தா பாட்டரி பழுதுன்னாங்க. உங்க இன்வெர்டர் பிரச்னை என்னவோ???

Muruganandan M.K. said...

தி.ஜானகிராமனின் 'அன்பே ஆரமுதே நாவலை ஞாபகபடுத்தியதற்கு நன்றி.
மின்சாரம் போன அனுபவம் சுவையாக இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

கீதா, பணக்கார சினிமா நடிகர் அருண்குமார், சந்திரா,ரங்கன்,நாகம்மா,
ருக்குவோட சித்தி,டிரைவர் குருசாமி, நடிகரோட குழந்தை, பாகவதர், சாமி முதலில் குடியிருந்த மங்களம் பாட்டி
யப்பாடா லிஸ்ட் இன்னும் நீளம். அந்தக் கண்ணாடிப் பையன், டொக்கியோட காது கேகாத அப்பா, அம்மா,தம்பி அந்த முட்டு சந்து

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் டாக்டர் சார்.
அமைதியாக இருக்க உகந்த நேரம் மின்வெட்டுக் காலம் தான், அதுவும் இருட்டில் ஒரு மெழுகுவர்த்தியும்
ஏற்றி வைத்தால் ஒரே நாளில் தியானம் கைவராவிட்டாலும் ,மனசைக் கொஞ்சம் நிதானப் படுத்துகிறது.
ஒளி வந்ததும் மனம் மீண்டும் ஓட ஆரம்பிக்கிறது.

துளசி கோபால் said...

வல்லி உண்மைக்கும் சொன்னால் ஒளிதான் சத்தமும் இரைச்சலும்(-:

எல் கே said...

மின்சாரம் தடை பெறுகின்ற தருணங்களை கொண்டாட தோணுகிறது.. ஏனென்று தெரியவில்லை

- LK

http://lksthoughts.blogspot.com/2009/12/blog-post_24.html

வல்லிசிம்ஹன் said...

ஒளிபிறந்தாட்டுதான் ஒலி வந்தது இல்லையா துளசி. இந்த பக்ஷிகளைக் கேட்டால் சொல்லும்.சூரியனைப் பார்த்தப் பிறகே
நாங்கள் கூவ ஆரம்பிக்கிறோம்னு;)

திவாண்ணா said...

அட! துளசி அக்கா பிலாஸபர்ன்னு இது வரை தெரியாதே!
போட்டொக்ராபில கூட நாய்ஸ் ன்னா இரைச்சல்ன்னுதான் சொல்லறாங்க. நாய்கள் ன்னு இல்லை!
:-))
ஆமா துளசி அக்கா இடது கைபழக்கம் உள்ளவரா?

திவாண்ணா said...

மார்கழி மாசம். ஒளி வரும் முன்னாலேயே ஒலி வந்துடுது லவுட் ஸ்பீக்கர் மூலமா! தாங்கலை!

imcoolbhashu said...

வல்லிம்மா...இன்வர்ட்டரில் டிஸ்டில்ட் தண்ணீர் குறைந்தாலும் மக்கர் செய்ய ஆரம்பிக்கும்.
ஆனாலும் மெழுகுவத்தி வெளிச்சத்தில் நாவல் படிப்பதென்பது சுகமான அனுபவம்.:-) நல்ல பாடல்கள் கேட்பதற்கும் அதைப்போல் உகந்த நேரம் இருக்குமா என்ன?
http://amaithicchaaral.blogspot.com

வல்லிசிம்ஹன் said...

தம்பி வாசுதேவன், துளசிக்கு இடது கைப்பழக்கம் இருக்கிற மாதிரி எனக்குத் தெரியவில்லை.;)

எங்க ஊர்ல,ஒரு சத்தமும் கேட்கறது இல்லை. ஒரு வேளை கோவிலுக்குள்ளயே வைத்துக் கொள்கிறார்களோ என்னவோ.
கடலூர்ல நிறையக் கோவில்கள். எல்லாரும் பாட்டு வைக்காமல் ஒருத்தர் மட்டும் வைத்தால் நன்றாக இருக்கும். நடக்குமா:))

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா. ஐம் கூல்!நல்வரவு. புதிதாகப் பதிவு ஆரம்பித்திருக்கிறீர்களா.
நீங்க சொல்வது போல டிஸ்டில் வாட்டர் பற்றிப் பார்க்கிறேன்.
ரொம்ப நன்றிம்மா.
ஆமாம், டி வி இல்லாத போதுதான் ரேடியோ நினைவு வருகிறது.
ரொம்ப கரெக்ட். நாவல் படிப்பதும் அதே நேரத்தில் பிடித்தப் பாடல்களைக் கேட்பதும் சுகமே.
I totally agree with you.:)