Saturday, December 26, 2009

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி...

மார்கழித் திங்கள் பிறந்து நாட்களும் ஓடி விட்டன . இதோ இன்று வைகுண்ட பெருமாளின் ஏகாதசியும் சேர்ந்தது.

ஆண்டாள் இரண்டாவது பாசுரத்திலே கூறி விட்டாள் .நெய்,பால் சாப்பிட மாட்டோம் என்று. அதிர்ஷ்டவசமாக குடும்ப வைத்தியரும் உப்பைக் குறைக்கக் சொல்லிவிட்டார். :))
அதனால் நெய்யில்லாமல், உப்புக் குறைவா போட்டு மிளகு சீரகம்,இஞ்சி மட்டும் சானோலால வறுத்துப் போட்டு ,
தினம் அவருக்குக் கை காண்பித்துக் கொண்டிருக்கிறேன்.
பெரிய சிங்கம் சாப்பிட மறுக்கவில்லை.
ஆனால் எங்க வீட்டுக்கு உரிய சிங்கம் இதெல்லாம் பொங்கலா... என்று விச்வாமித்திரர் போலக் கை காண்பித்துவிட்டார் .:(( முந்திரிப்பருப்பு வேற இல்லையே :)
ஸ்ரீ ஆண்டாள்


ஸ்ரீ தாயார்

சரி,மையிட்டு எழுதோம்னு சொன்னாளேன்னு அதையும் செய்யறதில்ல. எப்பவுமே:)
செய்யாதன செய்யோம் ,தீக்குறளைச் சென்றோதோம்னும் சொன்னாங்க.
அவங்களுக்கு அது ஒண்ணும் சிரமமில்லை. எல்லோரும் ஊர் முச்சூடும் தோழிகள். நமக்கு அப்படியா.

இருந்தாலும் புறம் கூறாமல் இந்தப் பதிவை முடித்து விடுகிறேன்.
இன்று பொதிகையிலும் ,ராஜ் டிவியிலும்,ஜயா டிவியிலும் பரமபத வாசல் திறப்பதைக் கண்டு
நல்ல தரிசனமும் செய்தாச்சு.
அதிசயமாகத் தூக்கம் கண் விழித்தேனே என்று என்னையெ மெச்சிக் கொள்கிறேன்.
ஏதோ பெருமாளா திரு
உள்ளம்
வைத்து வானொலி அலார்ம் அடித்தது. அது என்னிக்கோ வைத்த அலார்ம்.
இன்னிக்குத் திருப்பாவை சொல்லி எழுப்பிய ஆண்டாளாக
செயல் பட்ட என் பழைய ரேடியோவுக்கு வணக்கங்கள்.
காலையிலெ எழுந்து பார்க்க முடியாதவர்கள் நாள் பூராவும் ஓடும் செய்திச் சானல்களில் வைகுண்ட ஏகாதசியைக் கொண்டாடலாம்.
இன்று முழுவதுமாவது
கண்ணன் தியானம் மனதில் இருக்க அவனையே பிரார்த்தித்துக் கொள்ளுகிறேன்.

எல்லொருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். நலமாக வளமாக வாழ்வோம்.

பலராம ஸ்ரீ கிருஷ்ணன்


ஸ்ரீ முரளிதரன் .

பின் குறிப்பு.
இன்று நம் தோழி,சகவலைப் பதிவர்
திருமதி ராமலக்ஷ்மிக்குப் பிறந்த நாள். அவர்கள் சுற்றத்தோடும்,நட்போடும் சீரும் சிறப்புமாக வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
ஹாப்பி பர்த்டே ராமலக்ஷ்மி !


எல்லோரும் வாழ வேண்டும்.

21 comments:

துளசி கோபால் said...

நல்லவேளை ஆண்டாள் காலத்துலே இந்த காப்பி இல்லை:-)

இருந்துருந்தா நம்ம பாடு அம்பேல்.
எஞ்சின் ஆயில் இல்லைன்னா எப்படி?

அதிசயமா வைகுண்ட ஏகாதசிக்கு ஊரில் இருக்கேனேன்னு கோவிலுக்குப் போக முடியலைன்னாலும் சொர்க்கவாசலை டிவியில் பார்க்கலாமுன்னா.....

அதிகாலை 3 மணிக்குப் பட்ட பாட்டுக்கு, 'நேரிலேயே போய்' சேவிச்சால் ஆச்சுன்னு இருந்தது:-))

Geetha Sambasivam said...

இந்தக் காலம்பர எழுந்திருக்கிற கவலை எனக்கு இல்லை! எங்க வீட்டிலே காலங்கார்த்தாலே எழுந்து என்ன செய்யப் போறேனு தான் கோவிச்சுப்பாங்க. தினமும் காலம்பர எழுந்து நாலு மணிக்கு சந்ஸ்கார் சானலில் விஷ்ணு சஹஸ்ரநாமம், 5 மணிக்குப் பொதிகை 5-30க்கு ஜெயா தொலைக்காட்சினு போகும், இன்னிக்குத் திருவல்லிக்கேணிப் பெருமாளின் சொர்க்கவாசல் திறப்பு பொதிகை தயவிலே! அப்புறமா ஜெயாவில் சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் போடும் விஷ்ணு சஹஸ்ரநாமம், எம்.எஸ். அம்மாவின் குரலில். ராமலக்ஷ்மிக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்களை இங்கேயும், அங்கேயும் சொல்லிடறேன்.

பிறந்த நாள் வாழத்துகள் ராமலக்ஷ்மி!

Geetha Sambasivam said...

தொடர! :D

Unknown said...

வைகுண்ட ஏகாதசி அப்ப ரொம்ப பிசியா இருப்பரேன்னு நான் போன வாரமே ரங்கனை பாத்து ஹலோ சொல்லிட்டு வந்திட்டேன். :))

வெண்பொங்கல் சூப்பர். கொஞ்சம் எடுத்துகிட்டேன்

Unknown said...

ராமலக்‌ஷ்மிக்கு இங்கேயும் வாழ்த்தை சொல்லிக்கறேன்

S.Muruganandam said...

தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நாச்சியாரம்மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாப்பா துளசி.இப்பவும் காலைக் காப்பியை உள்ள தள்ளினாட்டுதான் உடம்புல சுறுசுறுப்பு வருகிறது.
நமக்குத்தான் இரண்டு ஸ்பூன் பால் போதுமே. அதையும் கிருshணார்ப்பணம் சொல்லிட்டுத்தான் சாப்பிடணும்;)

வல்லிசிம்ஹன் said...

ஆமாப்பா துளசி.இப்பவும் காலைக் காப்பியை உள்ள தள்ளினாட்டுதான் உடம்புல சுறுசுறுப்பு வருகிறது.
நமக்குத்தான் இரண்டு ஸ்பூன் பால் போதுமே. அதையும் கிருஷ்ணார்ப்பணம் சொல்லிட்டுத்தான் சாப்பிடணும்;)

கழுத்துவலி போயிருக்கும்னு நினைக்கிறேன்.அப்படியெல்லாம் பெருமாள் கிட்டப் போக நாங்க விடுவோமா.
ஆயிரம் கதையையும் எழுதி முடிங்க முதல்ல. அப்புறம் இன்னோரு ஆயிரம் எழுதலாம்.

வல்லிசிம்ஹன் said...

கீதாம்மா, எழுந்து உட்கார்ந்தாதானே தொலைக்காட்சியைப் பார்க்க முடியும்:)
எழுந்தா காப்பி வேணும். ஆகக் கூடி மார்கழி ஆராதனை அப்பவே ஆரம்பித்து விடுகிறது.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா தென்றல். ஹைதை குதிப்பு எல்லாம் எப்படி இருக்கோ!!
கொடுத்துவைத்தவர்கள் தான் கோவிலுக்குப் போவார்கள்.
வெண்பொங்கல் சுவையா இருந்திருக்கும்னு நினைக்கிறேன்.
எத்தனை அலங்காரம் பார்த்தீங்களா:))
புத்தாண்டு வாழ்த்துகள் மா.

வல்லிசிம்ஹன் said...

வாங்கோ கைலாஷி. நமஸ்காரம்.
உங்க பதிவையும் தினம் ஒரு விசிட் செய்கிறேன்.
கருட சேர்வை பார்க்கத்தான்!!
புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

Geetha Sambasivam said...

அதிகாலை 3 மணிக்குப் பட்ட பாட்டுக்கு, 'நேரிலேயே போய்' சேவிச்சால் ஆச்சுன்னு இருந்தது:-))//

?????????????????????

வல்லிசிம்ஹன் said...

துளசி 3 மணிக்கே எழுந்து டி வி பார்க்க ஆயத்தமாயிடுத்தும்மா கீதா.
ஒளிபரப்பு அப்புறமாத்தான் ஆரம்பிச்சிருக்கு.
ஒரு மாதிரி கழுத்தைச் சாய்த்துக் கொண்டு பார்த்ததில் கழுத்து,தோள்பட்டை எல்லாம் வலிக்க ஆரம்பிச்சுடுத்தாம் பாவம்.
வைகுண்ட வாசல் திறக்க நேரம் தூங்கிவிட்டதாம். பாவம். ரொம்ப வலிச்சிருக்கு. அதனால்தான் அந்த வார்த்தை.

துளசி கோபால் said...

கீதா,

மூணு மணிக்கு ஜெயாவில் வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல்னு விவரம் கிடைச்சது. அந்நேரம் கோவிலுக்குப் போகமுடியலையே....பேசாம வீட்டுலேயே பார்க்கனுமுன்னு இருந்தேன்.

கோபால் மூணு மணி ஆகப்போகுதுன்னு வந்து எழுப்பினார். அவருக்கு இருமல். சரியான தூக்கமில்லை. நானும் எழுந்து ஸ்வாமி உள்ளில் விளக்கு ஸ்விட்சைப் போட்டுட்டு நமஸ்காரம் பண்னிட்டுக் கண்ணை மறுபடி மூடிக்கிட்டே டிவி இருக்குமிடம் வந்தேன். கண்ணைத் திறந்தவுடன் வைகுந்தனைப் பார்த்துடணும். நம்ம நேரம் பாருங்க சிம்புவும் ஜோதிகாவும் ஆடிக்கிட்டு இருக்காங்க. இன்னும் நேரடி ஒளிபரப்பு ஆரம்பிக்கலையாம். அடுத்து சிம்ரனும் பிரசாந்தும்......தாயாரும் பெருமாளுமா.
தூனிலும் துரும்பிலும் இருப்பவனை இவர்களில் பார்த்தேன்.

ரொம்ப நேரம் கழிச்சு ஸ்ரீரங்க கோபுரம் காமிச்சு, நம்மாழ்வார் காமிக்கறச்சே....... கண்ணைச் சுழற்றிவந்து நான் போயாச்சு சொப்னலோகத்துக்கு.

திடுக்குன்னு முழிச்சா....உக்காந்து தூங்குனதுலே ஒரே கழுத்து வலி. மசமசன்னு கண்பார்வையில் டிவியில் தங்கக்குடையுடன் பெருமாள்.

தாங்கலை. பேசாம எழுந்துவந்து படுக்கையில் விழுந்தாச்சு.

அதுக்குத்தான் சொன்னேன் நேரில் பார்க்கப்போறதை இங்கே பார்க்கலைன்னு

சாந்தி மாரியப்பன் said...

வைகுண்ட ஏகாதசி தரிசனம் உங்க பதிவில் நல்லபடியா செஞ்சாச்சு.பிரசாதமும் கொஞ்சம் கிள்ளிக்கிட்டேன். உங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள் வல்லிம்மா.

@ துளசியக்கா,
சுவரிருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்.

Unknown said...

இன்னைக்கு வரை இயல்பா இருக்கு ஹைதை. 3ஆம் தேதிக்கு மேலே தான் உண்மை நிலவரம் தெரியும்.

பண்டிகை கால சிறப்புத் தள்ளுபடியா ஆர்பாட்டங்களை தள்ளிவெச்சிருக்காங்க

கவிநயா said...

படங்களெல்லாம் ரொம்ப அழகு அம்மா. ராமலக்ஷ்மிக்கும் (தாமதமான) மனமார்ந்த வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி said...

தனிமடலில் வாழ்த்து சொல்லி விட்டிருந்தாலும் இங்கும் நீங்கள் வாழ்த்தியிருப்பதை தோழி கவிநயா சொல்லித் தெரிய ஓடோடி வந்தேன் ஆசிகளைப் பெற்றுக் கொள்ள. மிக்க நன்றி வல்லிம்மா.

இங்கும் வாழ்த்தியிருக்கும் கீதா மேடத்துக்கும் தென்றலுக்கும் நன்றிகள்.

படங்கள் எல்லாமே அருமை, வெண்பொங்கலும். நானும் எடுத்துக் கொண்டேன்:)!

வல்லிசிம்ஹன் said...

பத்திரமாக இருங்கள் தென்றல். புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா அமைதிச் சாரல். புத்தாண்டு நல்வாத்துகள்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கவி நயா,
வாங்கப்பா ராமலக்ஷ்மி உங்கள் இருவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். அமைதியும் ஆனந்தமும் நிறையட்டும்.