Monday, November 23, 2009

எங்கள் மீனாள்

வளையவந்தவளுக்கு என்ன
ஆயிற்று என்று புரியவில்லை.
சதா மேலிருக்கும் பெட்டி மூடிய முட்டிய வண்ணமே இருந்தாள்.

மருந்தும் வாங்கிப் போட்டது.
ஒரு தியானம் செய்யும் யோகியாக
இருந்தவள் இன்று ..அவளுடைய முன்னோர்களைப் பார்க்கக் கிளம்பிவிட்டாள்.

நானும் அந்த வெற்றுப் பெட்டியையும் அவள் விட்டுக் சென்ற மீன்களையும் வெறித்த வண்ணம் இருக்கிறேன்.
மீனாட்சியிடம் அன்பு செலுத்தியவர்களுக்கு நன்றி.

எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

20 comments:

சுந்தரா said...

வருத்தமாயிருக்கிறது வல்லிம்மா...

ஒன்பது வருடங்கள் உங்களோடு உடனிருந்திருக்கிறாள்...ஆச்சர்யம்தான்

மீனாட்சியின் அடுத்தபிறவி,அமேசான் காடுகளில் குடும்பம் குழந்தைகளோடு குதூகலமாக அமையட்டும்.

ராமலக்ஷ்மி said...

ஒன்பது ஆண்டுகள் உடனிருந்தவள்!

அன்பு வைத்தவர்களின் பிரிவு எத்தனை வலி:(?

மீண்டு வர என் பிரார்த்தனைகள்!

துளசி கோபால் said...

வருந்துகின்றோம்(-:

நம்மோடு இருக்கவேண்டிய 'காலம் 'எக்ஸ்பயர்டு(-:

சந்தனமுல்லை said...

:(((

ஹெட்டர் சூப்பர் என்று மகிழ்ச்சியில் கத்த வந்தேன்...செய்தி கேட்டு வருத்தமாக இருக்கிறது!

வல்லிசிம்ஹன் said...

சுந்தரா, ராமலக்ஷ்மி,துளசி, முல்லை எல்லாருக்கும் நன்றிப்பா. அந்தப் பொட்டியைப் பர்க்கவே சங்கடமா இருந்ததால கணீனியை விட்டு நகராம இருக்கேன்.

கீதா சாம்பசிவம் said...

ada????? konja nalave rombave kopama irunthapala irunthathu. onnume sollamal poyitala??? :(((((((((

Jayashree said...

அடடா புஜ்ஜு குட்டி போயிடுத்தா. இன்னிக்கா? 3 உயிர் சாமிகிட்ட இன்னிக்கு. ஃப்ரெண்ட் பீச் ல 4 நாள் முன்ன கண்டெடுத்த பப்பியும் இன்னிக்குத்தான். என் செர்ரி பார்பும் இன்னிக்குதான் . ஒரு புல்லி ஃபிஷ் தின்னுடுத்து. கஷ்டமாதான் இருக்கு. என்ன பண்ண. போனாபோறது. Usual ஆ மீன் போச்சுன்னா நம்ப கஷ்டத்தில் எதோ ஒண்ணை வாங்கிண்டு போனதா என் தாய்வானீஸ் ஃப்ரெண்ட் சொல்லுவா.

Anonymous said...

Even me, a blog side wanderer, got a spontaneous deep breathe reading the news... Life is a mystery indeed.

திவா said...

இப்பதானே கொஞ்ச நாள் முன்னாலே பாத்து ஹலோ சொன்னேன்! ம்ம்ம். பாசம் கொடியது! அடுத்த பிறவி பொத்தாமரை குளத்திலே?

வல்லிசிம்ஹன் said...

நன்றி கீதா. ஆமாம். ஆனால் கோபமில்லை. ஏதோ உடம்பு படுத்தி இருக்கு.
என்னைக் கொண்டு பொய்க் காட்டில் வைத்தால் ,தனிமையில் எப்படி இருந்திருப்பேனோ. பாவம். ரொம்பப் பாவம்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஜயஷ்ரீ நீங்க சொல்கிறது சரிதான்.
வாஸ்து பிரகாரம் அப்படித்தான் சொல்கிறார்கள். ஆனால் எனக்கு அந்தப் பழியை வாங்கிக் கொள்ள பயமாக இருக்கிறது..

வல்லிசிம்ஹன் said...

பொற்றாமரைக் குளத்தில மீன் இருக்கா இப்போ.
இருந்தால் மீனாட்சி கிருபையில் அவள் பாத்காப்புக்குப் போய்விடுவாள் என்றுதான் நினைக்கிறேன். தம்பி வாசுதேவனுக்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

Ofcourse Madura. life's mysteries abound around us everyday. still we feel everything is permanent. thank you for the visit.

கோபிநாத் said...

;((

கீதா சாம்பசிவம் said...

பொற்றாமரையில் மீனே வளராதுனு நாரைக்கு முக்தி கொடுத்தப்போவோ சுந்தரேசர் சொல்லிட்டாரே வல்லி??? திருவிளையாடல் புராணத்திலே வரும், ஒரு பதிவாய்ப் போடணுமோ??? :))))))))))))))))))))

கவிநயா said...

ஸாரி அம்மா :(

வல்லிசிம்ஹன் said...

வாயில்லாத ஜீவன் இல்லையா கவிநயா.
மத்த நிலத்தில உலாவற வளர்ப்புபிராணிகளை மருத்துவரிடம் எடுத்துச் செல்லலாம்.
இதற்குக் கடைக்காரன் சொல்கிறதுதான் மருந்து. கவனமினமியால் அது போய்விட்டதோ என்கிற குற்ற மனப்பாமை வருத்துகிறது.
நேற்றுப் பேசியவர் ---அவரும் மீன்கள் பண்ணை வைத்திருப்பவர், சொன்னது கொஞ்சம் ஆறுதல். இந்த மீன்கள் காட்டுவாசிகள். அதை வீட்டில் வைத்தால் அவைகளின் ஆயுள் குறைவாகத்தான் இருக்குமாம்.
நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

கீதா, அதனால்தான் குளத்தில் மீன் இருக்கான்னு கேட்டேன்.
அதுக்கு மறுபிறவியும் வேணாம்னு இப்பத் தோன்றுகிறது.

வல்லிசிம்ஹன் said...

நன்றி கோபிநாத்.

கோமதி அரசு said...

கன்னியா குமரியாக மாறிய மீனாட்சியின்
பிரிவு மனதை சங்கடப்படுத்தியது.

என் மகன் மீன் தொட்டியில் நிறைய வண்ணமீன்கள் வளர்த்தான் இப்படித்தான்
ஒன்று ஒன்றாய் இறந்து விடும்,
மனகஷ்டம் தாங்காமல் என் மகன்
செய்த சாக்பீஸ் கோவிலை அதற்குள் வைத்து ஷோகேஷ் ஆக்கிவிட்டேன்.