Blog Archive

Thursday, November 26, 2009

அக்கா நலமா ?

அன்புள்ள அக்கா , நிறைய வருடங்கள் ஆகிவிட்டன . எப்படி இந்தப் பிரிவு வந்தது , இதைத்தான் யோசித்துக் கொண்டிருந்தேன் நேற்று. மீண்டும் மீண்டும் ஊட்டியில் மண்சரிவு என்று படிக்கும் போதுவருத்தமாகவும் கவலையாகவும் இருந்தது.



கோவையில் நம் நட்பு துளிர் விட்ட நேரம் வார விடுமுறைகள் உங்களுடனும் உங்கள் குழந்தைகள் கணவர் இவர்களிடமும் எங்கள் குடும்பம் களிப்பாகக் கழித்த நேரங்கள் இன்னும் பசுமையாக மனதில் இருக்கின்றன,.





நாங்களும் சென்னைக்கு வந்தோம். அடுத்த இரண்டு வருடங்களுக்குள் உங்கள் மகன் மகள் படிப்பு திருமணம் என்று சென்னைக்கு வரவேண்டிய அவசியம்

வந்தது.

நாம் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை. அதுவும் பக்கத்திலேயே வீடும் அமைந்தது. மிகவும் வசதியாகப் போயிற்று.

உங்கள் கணவரும் இவரும் மிகச்சிறந்த உயிர்க் சிநேகிதர்களா இருந்தது நமக்கு இன்னும் இன்பம் கூட்டியது.
அவரவர் ,வேலைகள் முடிந்ததும் ஒன்றாக கடைகளுக்குப் போவதும், குழந்தைகளையும் கணவர்களையும் ஒன்றாக விட்டு விட்டு விட்டு சினிமா பார்க்கப் போவதென்ன தீபாவளிக்கு நீங்கள் எங்களுக்கு பரிசுகளும் உடைகளும் கொடுப்பதும் ,

டிசம்பரில் கிறிஸ்துமஸ் வரும்போது விதம் விதமான பலகாரங்கள் எங்கள் வீட்டிலிருந்து, உங்கள் கணவருக்குப் பிடித்த கொழுக்கட்டை yஇலிருந்து வீட்டிற்கு நடக்கும் மகிழ்வு....

எட்டு வருடங்கள் ஓடுவது போல பறந்தன. உங்கள் மகன்,மகள் திருமணங்களும் முடிந்து குழந்தைகளும் பிறந்தார்கள்.

அப்போது வந்தது ஒரு இறுதி ஒலை உங்கள் கணவருக்கு. அந்த அன்பும் ஆதரவும் தந்த செழுங்கிளையைக் ,கனவானைக் கொண்டு போவதற்கு காலனுக்குத்தான் எத்தனை கொடூரம்..



உங்கள் இறைநம்பிக்கை இவைகளையும் மீறி . இந்தப் பயங்கர விபரீதம் நம்மையும் கலைக்கப் பார்த்தது. அதை மீறி நாம் நல்ல தோழியராகவே இருந்தோம். இதோ அப்போது நீங்கள் எழுதிய கடிதங்கள் இன்னும் மணி மணியான எழுத்துக்களோடு ,அனுசரணையோடு என்னைப் பார்க்கின்றன அந்தக் கடிதங்கள்.




அதற்குப்பிறகு இந்த வீட்டில் பிள்ளைகள் படிப்பு,வேலை, திருமணம் என்று நானும் கவனத்தைத் திருப்பினேன்.
நீங்களும் ஆன்மீகத்துறையில் ஆழமாக இறங்கி, நீங்கள் உண்டு, உங்கள் காப்பித் தோட்டம், உங்கள் பெற்றொர் பிரிவு,
அவர்களுக்காக நீங்கள் எடுத்துக் கொண்ட சிரமம்
எல்லாம் நம்மை மெதுவாகப் பிரித்தனவா.

எத்தனையோ மகிழ்ச்சிகளையும் துன்பங்களையும் பகிர்ந்து கொண்ட நல்ல தோழிகள் ஏன் மாறினோம்.
கடலில் ஒரு கப்பலின் விளக்குகள் , கொஞ்சம் தள்ளிச் செல்லும் இன்னோரு கப்பலின் விளக்குகளுக்கு ஒரு குட்டி ஹலோ சொல்லுவது போல ஆகிவிடக் கூடாது
அக்கா., நம் நட்பு.

இதை ஒரு மீட்புப் பணியாக நான் தொலைத்த தோழியைத் தேடப் போகிறேன்.



எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

12 comments:

துளசி கோபால் said...

//உங்கள் இறைநம்பிக்கை இவைகளையும் மீறி மற்ற பலகாரங்களையும் நடந்தது//

?????????

கூடவே இல்லாமல் இருந்தாலும் மனத்தளவில் நட்பாக இருக்கலாம். ஆனால் ரெண்டு கையும் தட்டினால்தான்......

போகட்டும். கொஞ்சநாள் விலகி இருப்பதால் இன்னும் நட்பு(ம்) நெருக்கமாகுமோ என்னவோ!

வல்லிசிம்ஹன் said...

காப்பி பேஸ்ட், தடுக்கி விட்டது துளசி. சுட்டிக்காட்டியதற்கு ரொம்ப நன்றிம்மா.
ரொம்பத் தப்பாகப் போயிருக்கும்.
உண்மைதான், பிரிந்திருப்பதும் நட்பை வளர்க்கும். வளர்க்கட்டும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உங்கள் தோழி கிடைக்க வாழ்த்துகிறேன்..

சந்தனமுல்லை said...

ஹெட்டர் நல்லாருக்கு..கடலம்மா சாரி வல்லியம்மா!! :-)
தங்கள் தோழியும் இதே ஃப்லீங்ஸோடு தேடிக்கொண்டிருப்பார் உங்களை!!

வல்லிசிம்ஹன் said...

நன்றி முத்துலட்சுமி.தோழி இருக்கும் இடம் தெரியும். வேற ஏதோ அந்த குடும்பத்தில் குழ்ப்பம். தீர்ந்ததும் தெளிவு கிடைக்கும்.!!

வல்லிசிம்ஹன் said...

எப்படியோ அவர் நன்றாக இருக்கணும்.
நல்லதொரு ஆத்மா. என்னைவிட 8 வயது மூத்தவர்.
அதனாலயே என்னை விடத் தெளிவாகச் சிந்திக்கும் திறனும் உண்டு.
''ஏன் தலை போனாலும் ஓடற கோழி மாதிரி ஓடறேன்னு கண்டிப்பார்:)
நன்றி முல்லை. இந்தப் பாதாள லோகப் பெண் கூட எதையோ தேடுகிறாள் போல எனக்குத் தோன்றியது.

Jayashree said...

A friend who is far away is sometimes much nearer than one who is at hand. Is not the mountain far more awe-inspiring and more clearly visible to one passing through the valley than to those who inhabit the mountain?
" Kahlil Gibran ":
True frienship never parts Mrs Simhan:)) Kattayam thirumba kidaikkanum>

வல்லிசிம்ஹன் said...

what a beautiful quote Jayashree!
absolutely true.
sometimes closeness may cause bitterness. misunderstanding and wrong words may cause calamity.
but except for the months I went abroad we were very close.
thank you a comforting thought.

Kavinaya said...

உண்மையான அன்பு உங்களை ஒன்று சேர்த்து விடும். கவலை வேண்டாம் அம்மா.

கோமதி அரசு said...

தொலைந்த தோழி கிடைக்க வாழ்த்துக்கள்.

பழைய மாதிரி உங்கள் நட்பு தொடர
வாழ்த்துக்கள்.

Geetha said...

அருமையான பதிவு..வாழ்த்துகள்

Geetha Sambasivam said...

தொலைந்த தோழி கிடைக்க வாழ்த்துகள். ஶ்ரீராமின் பின்னூட்டம் மெயிலில் எனக்கு வந்ததும் இந்தப் பதிவில் என்னுடைய பின்னூட்டமும் இருக்கும்னு நினைச்சு வந்தால் அந்த லிங்கில் பதிவே கிடைக்கலை.

இங்கே ஜி+ மூலம் வந்தேன். ஆனால் என்னோட பின்னூட்டம் இல்லை. :)))) வேடிக்கை தான். தோழி இன்னமும் கிடைக்கலையோ?