Blog Archive

Monday, June 15, 2009

PIT CONTEST JUNE-MUDHUMAI



முதுமைக்காக எடுத்த படங்கள்.
எங்கள் வீட்டுத் தென்னை மரம் கிட்டத்தட்ட 50 வருடங்கள் வாழ்ந்து, திடீரென்று நோய் கண்டது.
 
அதை பூமியிலிருந்து எடுக்க வேண்டிய நிலைமை.
மனதில்லாமல் அந்த வேலையைச் செய்தோம். இன்னும் அதன் தண்டுப் பாகங்களும்,
வேரும் உயிரோடிருப்பதாகத் தோன்றும்.










எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.



Posted by Picasa

15 comments:

அபி அப்பா said...

சூப்பர் வல்லிம்மா! அருமையா இருதுச்சு படம். மரத்தை வெட்டினோம்ன்னு கூட சொல்லாமல நாசூக்கா பூமியில் இருந்து எடுக்க வேண்டியதா போச்சுன்னு சொன்ன உங்க மென்மையான மனசு ரொம்ப பிடிச்சுது. வெரி டச்சிங் வார்த்தைகள்!

சந்தனமுல்லை said...

வாழ்த்துகள்!

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம்ம்ம் நோய் கண்டாலும் வளர்த்த மரத்தை வெட்டறதுனா கஷ்டம் தான்!

ராமலக்ஷ்மி said...

கடமையை அது முடித்து விட்டது. தங்கள் கலக்கம் விலக மறுப்பது அதன் மேல் கொண்ட பாசத்தை உணர்த்துகிறது.

//அதன் தண்டுப் பாகங்களும்,
வேரும் உயிரோடிருப்பதாகத் தோன்றும்.//

படங்களை க்ளிக்கிட்டும் பார்க்கையில் எங்களுக்கும் அப்படியே..

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் வல்லிம்மா ;)

துளசி கோபால் said...

பாவம் அந்த மரம்(-:

வல்லிசிம்ஹன் said...

அபி அப்பா, மரமானாலும் மனிதரானாலும்,பிரிவு என்கிற வார்த்தை வேற வேற விதத்தில் பிரயோகம் செய்தால் கொஞ்சம் வீர்யம் குறைவது போலத் தோன்றும். அதக் கூட கவனிக்கிற ஆளு நீங்க:)

வல்லிசிம்ஹன் said...

நன்றிப்பா சந்தனமுல்லை.
பப்பு ஆர்ட் காலரி எப்ப ஆரம்பிக்கப் போறீங்க.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் கீதா.மரம் வெட்டும் போது நான் வெளியே போய் விட்டேன்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் கீதா.மரம் வெட்டும் போது நான் வெளியே போய் விட்டேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி, எத்தனையோ ஆயிரக்கணக்கில் காய் கொடுத்து இருக்கிறது. கடைசியில் இந்த போரர் என்கிற மரத்தை அரிக்கும் நோய் வந்தததால், உளுத்துப் போய் விட்டது.
பாவம்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி கோபிநாத். நன்றி திகழ்மிளிர்.

வல்லிசிம்ஹன் said...

நீங்க கூடப் பார்த்திருப்பிங்க துளசி. அப்ப வெட்டின மரம் தான். 4 மாசமாச்சு. இன்னும் ஈரம் இருக்கிறது.

சதங்கா (Sathanga) said...

வல்லிம்மா, நல்ல படங்கள். முதல் படம் வித்தியாசமான கோணம்.

அபி அப்பாவின் கருத்தை வழிமொழிகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சதங்கா,நல் வரவு.
நன்றிம்மா. தென்னையைக் கொண்டு
நமக்கு எத்தனை பாடங்கள்
சொல்லப் பட்டு இருக்கின்றன.
இன்னும் இந்த மரத்துக்கு நிறைய பயன்கள் இருக்கின்றன.