Blog Archive

Monday, May 28, 2007

அஞ்சலி அம்மாவுக்கு




மென்மைக்கு மறுபெயர் அம்மா.
அன்புள்ள அம்மா,
உனக்குக் கடிதம் எழுதி ரொம்ப நாளாகிவிட்ட்டது.
ஒரே ஊரில் குடி இருந்தால் கடிதம் எழுதக் கூடாது என்று எழுதப்படாத ரூல் இருக்கிறதே.
இப்போ நீ எழுதின பழைய சமையல் குறிப்புகளிலும், மருந்துகளுக்காக எனக்குத் தந்த கடைக்குறிப்புகளிலும் உன்னைத் தேடுகிறேன்.
முடிந்தபோது வாங்கித்தருகிறாயானு நீ கேட்கும்போது,
.அதுக்கென்னமா இதோ கொண்டு வந்து தருகிறேன்னு நான் சொல்லவில்லை.
ராகவேந்திரர் கோவிலுக்கு வருகிறேன் அப்படியே அங்கேயும் வரேன்
இதுதான் என் பதில்.
ஆனால் பாட்டு மட்டும் .அம்மா என்றால் அன்பு...
இதுவே நான் பெற்ற குழந்தைகள் எனக்கு சொல்ல எத்தனை நேரம் ஆகும்...
இப்படி மென்மையாக ஒரு ரோஜாவின் பனித்துளியாக நீ இருந்துவிட்டுச் சத்தமில்லாமலேயே போய் விட்டாய்.
எனக்கு இன்னோரு தரம் வாய்ப்பு கொடும்மா.
மீண்டும் பிறந்துவா.

21 comments:

வல்லிசிம்ஹன் said...

பாட்டிக்கும் பெண்ணுக்கும் எழுதியாகி விட்டது.
அம்மாவை விட்டுவிடக் கூடாது இல்லையா. அதுவும்
நினைவுநாள் என்ற ஒன்று வரும்போதாவது நினைக்க வேண்டாமா..

வல்லிசிம்ஹன் said...

அன்பு டெல்ஃபின்,

அம்மாவை மறந்தால் நாம் மனிதர்களே இல்லை.
we are all souls ,seeking and always seeking.
sometimes we do forget our elders needing assurance from us of our loving support. I thought my mother will last forever.
Oh she does.now.always present in my thoughts.
thank you.

தி. ரா. ச.(T.R.C.) said...

வல்லியம்மா இறந்தவர்களுடன் ஒரு மணி நேரம் வாழ இறைவன் வரம் கொடுத்தால் தயங்காமல் சொல்லுவேன் 60 மணித்துளிகளும் தாயிடம் மாத்திரம்தான்.ஒரு பொருள் நம்மிடம் இருக்கும் போதே அதன் அருமையை புரிந்து கொள்ளும் தன்மையை எனக்கு சொல்லித்தருவீர்களா?

வல்லிசிம்ஹன் said...

தி.ரா.ச,
இது ஒன்றுதான் எனக்குப் புரியாத புதிர்.

இருக்கும் பொருளின் அருமை ,புரிந்துகொள்ள மனம் வராது.
இழந்த ஒன்றின் பெருமை ,பிறகுதான் உணர முடிகிறது.அம்மாவை,அம்மாவாக மட்டும் உணர்ந்து கொண்டவர்கள் இருக்கிறார்களா தெரியவில்லை.அந்த வழியில் சென்ற தலைமுறையினர் நம்மைவிடக் கொடுத்துவைத்தவர்கள்.தங்கள் பெற்றோரை எந்தக் கணத்திலும் விட்டுக் கொடுக்காமல் இருந்தார்கள்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஒரே ஊரில் குடி இருந்தால் கடிதம் எழுதக் கூடாது என்று எழுதப்படாத ரூல் இருக்கிறதே//

ஆகா...இது என்ன ரூல்?
நாங்க எல்லாம் ஒரே வீட்டிலேயே கடிதம் கொடுத்துப்போம்!
சமையல் சரியில்லை என்று ஸ்டாம்ப் ஒட்டி லெட்டர் போட்ட சம்பவங்களை நினைச்சா....

வல்லியம்மா...
உங்கள் அஞ்சலியில் அடியேனும் பங்கு கொள்கிறேன்! நினைவே ஒரு சுகந்தம்!

Geetha Sambasivam said...

உங்கள் அஞ்சலியில் நானும் பகிர்ந்து கொள்கிறேன். ஆனால் கண்ணன் சொன்னாப்பல நான் (உள்ளூரில் இல்லை) ஒரே வீட்டிலே இருக்கும்போதே கதவில் எல்லாம் எழுதி வைத்து அம்மாவைச் சீண்டியது உண்டு. இப்போ அதை எல்லாம் நினைக்கும்போது பெருமூச்சுத் தான் வரும். !

துளசி கோபால் said...

அம்மாவைப் பத்தி எனக்கு ஒரு mixed feelingsதான் இருக்கு.
ரொம்பச் சின்னவயசுலே அவுங்களை இழந்துட்டதால் அம்மாவுக்கும் மகளுக்கும் உள்ள ஒரு
அன்னியோன்னிய பிணைப்பு எல்லாம் படிக்கும்போது ரொம்ப ஏக்கமா இருக்குப்பா.

அதையெல்லாம் நம்ம பெண்களிடம் உறவாடித் தீர்த்துக்கலாமுன்னா, அவுங்க
வாழ்க்கை வேறவிதமா இருக்கு. ஒரு வேளை என் மகளும் உங்க வயசுலே
என்னைப் பத்தி இப்படியெல்லாம் நினைக்கலாமோ!!!!

வல்லிசிம்ஹன் said...

ரவி,
கடிதம் ,நோட் எழுதி வைக்கிறது பசங்களோட லன்ச் பாக்ஸ்ல தான்:-))
வீட்டு சிங்கத்துக்கு பாத்ரூம் கண்ணாடி.
இப்போ இமயில் பறக்கிறது.போன் பில் உயர உயரப் பேசியாகிறது.
முதலில் பெற்றோர் பேச நாம் கேட்கிறோம்.பிறகு நாம் சொல்ல அவர்கள் கேட்கிறார்கள்.
இது மாறும் என்று எனக்குத் தோன்றவில்லை..

அபி அப்பா said...

ஹும்....29 பக்க லெட்டர் ஸ்டாம்ப் ஒட்டாம போட்டேன் அம்மாவுக்கு ஒரே வீட்டில் இருந்துகிட்டு, இப்பவும் சொல்லி சிரிப்பாங்க! உங்க மனசு பாரத்தை இறக்கி வச்சுட்டீங்க வல்லிம்மா!

வல்லிசிம்ஹன் said...

துளசி,மகள் நினைக்காம இருப்பாளா என்ன.

உங்களுக்கு அப்போ விட்டுப்போன பாசம் எல்லாம் இப்போ இத்தனை பேருக்குப் போய்கிட்டே இருக்கு.
அவங்களும் மீண்டுமெழுத்துமூலமாவது

திருப்பாமல் இருப்பாங்களா.
மைலாப்பூரில பிறந்தவீடு இருக்குனு நினைச்சுக்கோங்க.:-)
திருப்புன்னதும் காமேஸ்வரன் ஞாபகம் வந்தது.மைக்கேல் ம.கா.ராஜன் பார்த்தேன்.

வல்லிசிம்ஹன் said...

கீதா,

கிட்டத்தட்ட ஒரே வயது குருப்பில நான்,நீங்க, துளசி எல்லாம் இருக்கோம்.
எல்லோருக்கும் விதவிதமா அனுபவம்.

துளசிக்கு ஏக்கம்,எனக்கு வருத்தம்,
உங்களுக்கு ரவி சொல்றது மாதிரி
நல்ல நினைவு.
இது எவ்வளவோ தேவலை.
உப்புத் தின்னுவானேன் தண்ணி குடிப்பானேன்.

வல்லிசிம்ஹன் said...

அபி அப்பா,
29 பக்கமா......
சாமி அப்படியென்ன கம்ப்ளைண்ட்.

இல்ல பாராட்டி இருந்தீங்களோ.

அம்மா சிரிக்கிறாங்கன்னா நிச்சயம் நிச்சயம் புகார்க்கடிதம்தான்.
அதுக்கென்ன இப்பக் கூட இந்தப் பதிவெல்லாம் அம்மா பார்த்தாங்கன்னா முகமெல்லாம் சுளுக்கவரை சிரிப்பாங்க.

நீங்க சொன்னது சரிதான்.
பாரத்தை இறக்க முயற்சி இது.யார்மேலேயும் ஏத்திடக் கூடாது.
கதைனு படிச்சுட்டு விட்டுடுங்க.

அபி அப்பா said...

வல்லிம்மா! வேற என்ன நேத்து ஒரு பதிவு போட்டிருந்தேனே அந்த நிகழ்ச்சிக்கு தான் அந்த 29 பக்க கடிதம்:-)) இப்பவும் வச்சிருக்காங்க அதை!!

மெளலி (மதுரையம்பதி) said...

அன்பு என்பதற்கு ஆதாரமான உறவல்லவா அம்மா...ஒரு ந்ல்ல பதிவரை எங்களுக்கு தந்தமைக்காக நானும் உங்களது தாயாருக்கு அஞசலி செலுத்துகிறேன்.

ஆமாம், ஆண்களுக்காவது தாய்க்குப் பின் தாரம் என்கிறார்கள், பெண்களூக்கு? என்று ஒரு பழமொழி கூட இல்லையே?...ஏன் அப்படி?.

வல்லிசிம்ஹன் said...

ஓஹோ.குரங்கு ராதா.
இப்பதான் பார்த்தேன்.
இப்படியெல்லாம் பண்ணிட்டுக் கடிதம் வேற போடுவீங்களா.

ஜாக்கிரதையா இருங்கப்பா.அபி படிச்சுட்டு அப்பா மாதிரியே ஆரம்பிச்சுரப்போறா...குறும்பை..
:-)))))
சும்மா சொன்னேன். அபிபாப்பா நல்ல பொண்ணா, தம்பிக்கு நல்ல அக்காவா இருப்பா

அபி அப்பா said...

அப்படியென்ன 29 பக்கத்துக்கு சேதியா? சொன்னா சிரிப்பீங்க!
1. எனக்கு மட்டும் நான் குழந்தையா இருந்த போது போட்டோ கிடையாது, அக்கா 2 பேருக்கும், தம்பிக்கும் உண்டு.......
2.நான் 10 வது படிக்கும் போது எனக்கு டியூஷன் வைக்காமல் ஆனால் தம்பி 10 வது படிக்கும் போது மட்டும் அவனுக்கு வச்சாங்க.
3. நான் +1 போன பின் தான் பேண்ட் போடனும்ன்னு சொன்ன அம்மா என் தம்பிக்கு மட்டும் 8வது படிக்கும் போதே பர்மிஷன் கொடுத்தாங்க.
.....இதை படிச்சுட்டு சிரிக்க கூடாது....

பெரிய அக்காவுக்கு மட்டும் 19 வயசுல கல்யாணம்...எனக்கு மட்டும் இன்னும் பண்ணி வைக்கலை:-)))

இப்படியாக அம்மா எனக்கு செஞ்ச துரோகத்தை!!! புட்டு புட்டு வச்சேன்...இப்போ படிக்கும் போது எனக்கே சிரிப்பை அடக்க முடியாது. அதை பதிவாக கூட போடலாம்.

வல்லிசிம்ஹன் said...

இதையேப் பதிவாப் போடாமல் இத்தனை நாட்கள் இருந்ததற்கு உங்களை என்ன செய்யலாம்:-))

29பக்கமும் பதிவுகளாக வரவேண்டும் சொல்லிவிட்டேன்.
எங்க வீட்டில பொண்ணு,ஏன் உன் கல்யாணத்தில நான் இல்லைனு
கத்தும் .
என்னை விட்டுட்டுப் போனியானு கேக்கும். இரண்டு வயசில.
நன்றி அபிஅப்பா, மனசு லேசாகிவிட்டது.

வல்லிசிம்ஹன் said...

மௌலி, அதுதான் அங்க பாயிண்டே.

புருஷன் வீட்டுக்குப் போனாட்டு, அங்க பெரியவர்கள் சொன்னாதான் பிறந்த வீடு.

இப்போது எவ்வளாவோ மாறியாச்சு. ஆனால் எங்களுக்கெல்லாம் பிஞ்சிலேயே இந்தப் பாடம் பதிந்து விட்டதால் பெரியவங்கனு யாரும் வீட்டில இல்லாட்டாலும் அவங்க போட்டக் கோட்டைத் தாண்ட, கால் அவ்வளவு சீக்கிரம் எழும்பாது.
இதுக்குப் பேருதான் மெண்டல் ப்ளாக்னு நினைக்கிறேன்.

அதனால் பெண்களுக்கு தலைவனுக்குப் பிறகுதான் தாய்னு ஏதாவது பழமொழி இருந்ததோ என்னவோ.

நாகை சிவா said...

என் அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறேன்...

உண்மை தான், இருக்கும் வரை அதன் அருமை அறிவதில்லை, பெருமை புரிவதில்லை....

நாகை சிவா said...

என் அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறேன்...

உண்மை தான், இருக்கும் வரை அதன் அருமை அறிவதில்லை, பெருமை புரிவதில்லை....

வல்லிசிம்ஹன் said...

நன்றி சிவா.

இதெல்லாம் பார்க்கும்போது ஒரு பிரிண்ட் அவுட் எடுத்துக் காண்பிக்க ஆசை.

வாயெல்லாம் சிரிப்பாகி ஆச்சரியப்பட்டுப் போயிருப்பார்.