ரயிலில் போவது ஒரு சுகானுபவம்.
எங்க நாட்கள் புகை விடற வண்டிலேருந்து இந்த நாள் ஸ்விஸ் இண்டர்சிடி எக்ஸ்ப்ரஸ் வரை எல்லாமே சுவையானவை.
என்ன அப்போது தண்ணீர்,படுக்கை உணவு எல்லாம் கூட எடுத்துக் கொண்டுபோகணும்.
இப்போது டைனிங் கார் வண்டியோடயே வருகிறது.
இந்த ரயில்களில் நாம் உட்காரும் இருக்கைகளின் அருகிலேயே
சைட் டேபிள்.
அதில் எது வைத்தாலும் விழாத வாறு ஏற்பாடு.
அதிலேயே நாம் போய்க்கொண்டு இருக்கும் இடங்களுக்கான வரைபடம்.
அந்த அந்த ஸ்டேஷனுக்கான அறிவிப்பு.
ஒலி வடிவிலும், படிக்கும் வண்ணம் ரயிலின் கூரையிலும் கண்ணுக்கு எதிராப்போல போய்க் கொண்டு இருக்கும்.
நாங்கள் செர்மாட் என்னும் மலைச் சிகரத்துக்குப் போய்த் திரும்ப எடுத்துக் கொண்ட இரண்டு நாளில்
போட் க்ரூயிஸ்,பஸ்,ரயில்,கேபிள் கார் என்று எல்லாவிதமான
ஊர்திகள்,வாகனங்களில் ஏறி இறங்கினோம்.
களைப்பே இல்லை.
காட்சிகளின் குளிர்ச்சியா.இல்லை இந்த ஊர் வெப்பதட்ப நிலையா
தெரியாது.
ஆனால் பயணம் என்றால் இங்கேதான் சுகம்.
இங்கிருந்து லூசெர்ன் என்னும் இடத்திற்கு ஒரு முழுநாள் டிரிப் திட்டம் போட்டால் முன்னாலெயே வகையாக அங்குள்ள படகுகள் அதில் பயணிக்கும் நேரம் எல்லாம் கணித்து வைத்துக் கொண்டு கச்சிதமாக இரவு 10 மணிக்குள் திரும்பலாம்.
நமக்குனு வண்டி இல்லையேனெல்லாம் கவகை வேண்டாம்.
அத்தனை சௌகரியம்.
இங்கே இருக்கிற காரெல்லாம் சின்ன சின்ன வடிவம்தான்.
பழைய கால பக் ஃபியட் ,ஃபோக்ஸ்வாகன் மாதிரி வண்டிபோல நாலு
சின்ன சைஸ் நபர்கள் உள்ளே இருக்கலாம்.
உலா வருகிற மாதிரி
இவை ஓடும் அழகும் நன்றாகத்தான் இருக்கிறது.ஆனால் நம்ம் ஊரில் நம்ம நினைச்சா ரோடு க்ராஸ் செய்யற மாதிரி இங்கே ஓட முடியாது.
முதல்தரம் வந்த போது பராக்கு பார்த்துக்கொண்டெ நடைபாதையில் இருந்து காலைக் கீழே வைத்துவிட்டேன்.
சினிமாவில் வர மாதிரி க்றீச் சப்தத்தோடு வண்டி நின்னு விட்டது.
ஓட்டி வந்த கனவான் கனவான் தான்.ஒரு ஸ்ட்ராங் சைலண்ட் ஹீரொவா வந்து திட்டியிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்னு நான் யோசிப்பதற்குள்
அந்த வண்டி ஓடிவிட்டது.
பிறகென்ன, சாலை விதிகள் பற்றி தந்தையும்,மகனும்,மருமகளும்
(அப்போ பேத்தி பிறக்கவில்லை,இல்லாட்டா அவளும் முழங்கி இருப்பாள்)
பொறுமையாக விவரமாகச் சொல்லிக் கொண்டு வந்தார்கள்.
நான் சுவாரஸ்யமாக அந்த ஏரியில் போகும் அன்னங்களையும்,வாத்துக் கூட்டத்தையும் ரசித்தபடி தலையை மட்டும்
அசைத்தபடி வந்தேன். இந்த வாத்துக்கெல்லாம் டிராஃபிக் ரூல்ஸ் ஒண்ணும்
கிடையாது.
பார்க்கப்போனா அமெரிக்கா மாதிரி மான்கள் கடக்குமிடம்,
வாத்துகள் ஜாக்கிரதை போர்டும் கிடையாது.
ஏனெனில் அதுங்களுக்கும் அறிவு நிறைய.
கட்டுப்பாடு நிறைய.
மென்மையாத்தான் சத்தம் போடும்.
தண்ணீர் அலுங்காம சர்ரென்று போகும்.
என்ன, இந்த ஊர்க்குழந்தைகள் பெற்றோருக்குத் தெரியாம போடற
ரொட்டித்துண்டுகளுக்காக குட்டி வாத்துகள் மட்டும் சண்டைபோடும்.
அதே போல குழந்தைகள் கீழே விழுந்து அழுதால் கூட
பெற்றோர்கள் அவ்வளவாக் கண்டுகொள்வதில்லை.
நீ விழுந்தியா,நீயே தட்டி விட்டுக்கோ,
சமாதானம் ஆகிக்கொ.இதுதான் பெற்றோர்களின் தத்துவம்.
நம்மளை மாதிரி குழந்தையைத் தூக்கிக் கொஞ்சி,
தடுகின கல்லை "அச்சு,அச்சு " சொல்கிற வழக்கமும் கிடையாது.
அப்புறம் பார்க்கலாமா.:-)
23 comments:
ஜாலியோன்னு ஜாலியா இருக்கூகூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ:-))))
இங்கே வந்துட்டுப்போன கணேசன் மாமாகூட இதைத்தான் சொன்னார்.
ரோடுலே காலை வச்சவுடனே வண்டியை நிப்பாட்டிப்புடறான்னு!!!!
போதாக்குறைக்கு, உங்க ஊர்லே ப்ளாட்பாரத்துலே இலை போட்டுச் சாப்புடலாம்!!!!
இது எப்படி இருக்கு?:-))))
கொஞ்சநாள் எண்டாலும் குழந்தைகள் விடயத்தை கற் பூரம் மாதிரி புரிஞ்சுகொண்டீர்களே. மகிழ்வைத்தருகிறது.
வரணும் டெல்ஃபின்.
அதேதான்.டிஜிப்ளினோ டிஜிப்ளின்.
நல்லாதான் இருக்கு.
//அதே போல குழந்தைகள் கீழே விழுந்து அழுதால் கூட
பெற்றோர்கள் அவ்வளவாக் கண்டுகொள்வதில்லை.
நீ விழுந்தியா,நீயே தட்டி விட்டுக்கோ,
சமாதானம் ஆகிக்கொ.இதுதான் பெற்றோர்களின் தத்துவம்.
நம்மளை மாதிரி குழந்தையைத் தூக்கிக் கொஞ்சி,
தடுகின கல்லை "அச்சு,அச்சு " சொல்கிற வழக்கமும் கிடையாது.)//
கரெக்ட்.. சின்னப் புள்ளைலேர்ந்தே இதையெல்லாம் சொல்லி வளர்க்குறாங்க. இங்க நம்மூர்ல செல்லம் கொடுத்து, செல்லம் கொடுத்து 30 வயசுலகூட பொண்டாட்டியோ, அம்மாவோ கைல எடுத்துக் கொடுத்தாத்தான் வீட்டை விட்டே கிளம்புறாங்க.. என்னமோ போங்க.. போட்டால்லாம் பார்த்தா எத்தனை தடவைதான் சொல்றது மேடம்.. பொறாமையா இருக்கு.. அம்புட்டுத்தான்..
ஆமாம் இலையைப் போட்டதும் வந்திருவாங்க எல்லோரும் ...
காக்கயைச் சொல்றேன்.
இந்தக் காக்கா வினோதமா தொண்டைகட்டிகிட்ட மாதிரி கத்துது.
நிறைய தண்ணி சாப்பிட்டு
இருக்குமோ;-)))))))
ஆனால் துளசி போன தடவைக்கு இந்த தடவை ஏதோ ஒண்ணு மிஸ்ஸிங்.
வெளி மனுஷங்க ஜாஸ்தியாயிட்டங்க.
//காக்கயைச் சொல்றேன்.
இந்தக் காக்கா வினோதமா தொண்டைகட்டிகிட்ட மாதிரி கத்துது.
நிறைய தண்ணி சாப்பிட்டு
இருக்குமோ;-)))))))//
வல்லிம்மா! இல்லாட்டி இனிமையா கத்திருக்குமோ:-))))
நல்லாத்தேன் ஊர் சுத்தறீங்க. உங்க செர்மாட் பதிவுக்கு வெயிட்டிங்.
ஒரு தடவையாவது அங்கு போய் வரனும் என்ற ஆசை உள்ளது,பார்ப்போம்.
உண்மைத் தமிழன்,
எல்லோரும் நல்லா உழைக்கிறாங்க. தங்களோட ஊரைப் பத்தின பெருமை ரத்தத்திலேயே இருக்கு.
சாமியும் இயற்கை வளத்தைக் கண்ணுமூடிகிட்டுக் கொடுத்து இருக்கிறார்.
இங்கேயும் குறையில்லாம இல்லை.அதுக்கு ஒரு தனி பதிவு வேணும்.
அபி அப்பா,
நம்ம ஊரு காக்கா எவ்வளவோ நல்லாக் கத்துமே.
என்னோட மத்தியான தூக்கத்துக்கு பின்னணியே காக்கைகளோட மந்தமான ஒலிதான்.
சென்னையில் ஊர்ச்சுத்தத்துக்கு இவங்கதானே வரணும்.அப்புறம் தினம் 11 மணிக்கு ரெடியா வந்துடும்.கிணத்துமேடையில வச்ச சாதத்தைச் சாப்பிட.
நளாயினி வரணும்.
மூணுதடவை வந்தாச்சு.
என் மந்த மூளைக்கு இப்பதான் புரியுது:-)
நட்சத்திர சார், வாங்க.
Zermaat போன கதை தனிக் கதை. சொல்லாம யார் விட்டது. போட்டொக்கள கூகிள்ல சுடணும்.
ஆல்பம் சென்னைல இருக்கு.
அதனால என்ன ..நீங்க என்ன
படிக்கமாட்டேன்னு சொல்லப் போறீங்களா.:-0)))))))))
குமார், கட்டாயம் வருவீங்க.
உங்களூக்கு நேரம் ஒதுக்குகிறதுதானே பிரச்சினையாக இருக்கும்.மனசிருந்தால் மார்க்கம்.
ம்ம்ம்ம்ம், பெருமூச்சுத் தான் விடலாம். நம்ம ஊரெல்லாம் இந்த மாதிரி ஆகவே முடியாது, எந்த விதத்திலும். குழந்தை வளர்ப்பு உள்பட! :(
வல்லிம்மா!
ரொம்ப அனுபவித்து ரசித்திருங்கீங்க.. சுவையாகச் சொல்லுறீங்க. :))
வல்லிசிம்ஹன்!
நமது நாடுகளுடன் இவற்றை ஒப்பிடக் கூடாது. எனினும் இந்தப் பிள்ளை விடயம் உண்மை.
ஆனால் மிருகங்கள் மேல் இவர்கள் காட்டும் அதீத அக்கறை பார்த்து நான் நகைத்துள்ளேன்.
1) குழந்தையைக் கயிற்றில் கட்டி ஒரு கையிலும்; மறுகையில் நாயைத் தூக்கிச் செல்லல்.
2) ஒரு நாள் தெருவைக் கடக்க நாய்க்குட்டியுடன் நின்ற பெண் தவறுதலாக ;நாயின் காலை மிதித்து
விட்டார். நாய் "நொய்" என சிணுங்கியது. அதைத் தூக்கி அந்தப் பெண் ஒரு 20 தரமாவது என்னை
மன்னித்துக் கொள்...நான் தெரியாமல் மிதித்து விட்டேன் உனக்குத் தெரியாதா? காலுக்குக் கிட்ட நிற்கக் கூடாதென...முத்தங்கள் பல இட்ட வண்ணம் புலம்பியது. நான் மறையும் வரை என் காதில் விழுந்தது. நிச்சயம் பிள்ளைக்கு இது கிடைக்காது.
3) மனிதர் விழுந்து கிடந்தால் பார்த்துவிட்டுச் செல்லும் பலர் உண்டு. (நம் நாட்டில் வேடிக்கையாவது பார்பார்கள் அது வேறு விடயம்)மிருகத்துக்கு அதீத அக்கறை எடுப்பார்கள்.
வாங்க மலைநாடன்.
சுவையாய்ச் சொல்ல விஷயங்கள் நிறைய இருக்கு.
சொல்வளம்தான் போறாது.:-))))))
அத்தனையும் நானும் பார்த்தேன்.
ஸ்ட்ரோலரில் பாப்பா கத்தினாலும்
ஒரு ரப்பரை அது வாயில் திணித்துவிட்டு,
பூனையைக் கொஞ்சும் அம்மாக்கள் நிறைய.
பாட்டி தாத்தாக்களுக்கு பேரன்,பேத்திகளைவிட , வளர்ப்பு நாய் அடிபடாமல் பார்ப்பதுதான் முக்கியம்.
நம்ம ஊரு மாறவே வேண்டாம்.
இவங்களுக்கு உணர்ச்சிகள் ரொம்பக் குறைவோனு தோணும்.
சுத்தமா இருக்க இங்க கத்துக்கலாம்.
கீதா, நம்ம ஊரு நல்லபடியா இருந்தா இன்னும் எத்தனை வருமானம் கிடைக்கும்.
ஆனாலும் இத்தனை கோடி மக்கள் புழங்கும் இடம். கஷ்டம்தான்.யோகன் சொல்ற மாதிரி.
//பூனையைக் கொஞ்சும் அம்மாக்கள் நிறைய.//
என்னைப் பத்துன உ.கு. இல்லைதானே?
துளசி, அது எப்படி இங்கத்துப் பூனையையும் ஜிகே யையும் ஒண்ணாப்பார்க்க முடியுது உங்களால.?
ஏற்கனவே அவன் மதில் மேல இருக்கான்.
அப்புறம் இதெல்லாம் கேட்டா ஏதாவது மலைமேல் ஏறி உக்காந்துப்பான்.அப்புறம் நீங்கதான் கெஞ்சி அழைச்சுடு வரணூம்.
நான் ச்சும்மா ஆர்டினரி பூனையைச் சொன்னேன்பா.:-)))))))
Native swiss people are very friendly compared to rest of Europeans and americans... personally experienced myself.
ofcourse Mouli.
They mind their own and expect you to do the same. if you speak German they are extremely pleased.
and yes they are easy to mix with.
Post a Comment