ஸ்விட்சர்லாண்ட் ஆசீர்வதிக்கப்பட்ட நாடு.
ஏற்கனவே படைக்கப்பட்ட காலத்திலிருந்தே செழுமை.
அதைத் தொடர்ந்து அவர்கள் செழிப்பாக இருக்க எடுத்துக் கொண்ட முயற்சிகளும்,
இன்னும் தங்கள் ஒருமைப்பாட்டைக் காப்பாற்றிக்கொள்ள எந்த
வித இழப்பையும் தாங்கிக் கொண்ட விதம்.
அவர்கள் இந்த நிலையில் இருக்க அவர்கள் நடுனிலை அரசியலும் ஒரு காரணம்.
உலகம் முழுவதும் வலது,இடது என்று இரு பாகமாகப் பிரிந்தாலும்
தங்கள் நாடு பிரியாமல்
ஒற்றுமை காத்து இருக்கின்றனர்.
இத்தனைக்கும் வேறு வேறு மொழிகள் பேசுபவர்கள்.
ஜெர்மானியர், பிரெஞ்சு,இத்தாலியர்கள்
என்று பல மொழி பேசுபவர்களும்
ஜெர்மன் மொழியைப் பிரதானமாக எடுத்துக் கொண்டு
முன்னேற்றம் கண்டு வருகின்றனர்.
உடல் அமைப்பைக் கொண்டு ஒரொரு இனத்தவரையும் அடையாளம் கண்டு கொள்ளலாம்.
சர்வ சுதந்திரமாக அனைவரும் இயங்குகின்றனர்.
நல்ல சுகாதாரம்,படிப்பு,பணப் புழக்கம் இத்தனையும் சேர்ந்து உழைப்பும் உண்டு.
சரித்திரத்தை மறக்காமல் ஒரு சின்னத் தெருவைக்கூடக்
கட்டிக் காப்பாற்றிப் பிற்காலச் சந்ததியினருக்கு
தங்கள் பெருமை புரியும் வண்ணம் ஏற்பாடு செய்து இருக்கிறார்கள்.
நம் நாட்டு இளைஞர்களின் உழைப்பும் இப்போது இங்கே
பயன்பட்டு வருகிறது.
அநேகமாக எல்லாக் கணினி சம்பந்தப்பட்டத் தனியார் நிறுவனங்களும் இங்கே தங்கள்
பிரிவு அலுவலகங்களை நிறுவி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள்.
மீண்டும் பார்க்கலாம்.
15 comments:
இந்தப் பதிவில் இருக்கும் படங்கள் எல்லாம் நானே எடுத்தது.
மன்றத்தில் யாரும் கொடுத்து,
நான் சுட்டுப் போடவில்லை.~~¢(((***
சாக்லேட் பத்திக் கேட்டா வாயே திறக்க மாட்டேங்கறீங்களே! அவ்வளவு சாக்லேட்டா வாயிலே? :P எனக்கு ஒரு ஸ்விஸ் அக்கவுன்ட் திறக்கலாமான்னு பார்க்கிறேன், கேட்டுச் சொல்லுங்க. பணம் நீங்க வரப்போ போட்டுட்டு வாங்க. இ.கொ.வுக்கு மாடே அனுப்பி இருக்கப்போ எனக்குப் பணமாப் போடறது இன்னும் சுலபம். :D
நீங்க வேற கீதா.
சும்மா வாயக் கிண்டாதீங்க.
என்னால சாக்கலேட் சாப்பிட முடியாதுப்பா.
அய்யாஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்ன்
உங்களுக்கு என்ன ஏற்பாடு பண்ணலாம்னு யோசிக்கிறேன்.
கட்டாயம் ஒரு வழி செய்திடலாம்.
படங்கள் கண்ணுக்கு குளுமையாக இருக்கின்றன..அது சரி..இந்த பதிவுக்கு ஏன் இந்த தலைப்பு..அல்லது இது தொடர் பதிவா ?
Super photos. athuvum sonthamnu
solrappa perumaiyaa irukku:-))))
அழகான நாட்டை யாரு படமெடுத்தாலும் நல்லா வரும்தானே. இதையே என்னை அழகா ஒரு படமெடுத்துப் போட்டு இருந்தா அது திறமை....
வரும் வழியில் மாடுகளை டெண்டிஸ்டிடம் அழைத்துப் போகச் சொல்லி இருக்கிறேன். :))
நான்காவது படம் நன்றாக உள்ளது.
ஆமாம் சுவிஸ்ஸில் புது வீடே கட்டமாட்டார்களா?
கட்டுமானத்துறை என்று ஒன்று உள்ளதா?குளிர்காலத்தில் இவர்கள் என்ன பண்ணுவார்கள்?
வரணும் துளசி,
பிரிஸ்பேன் வந்திருப்பீங்க.
நம்ம மனசில படம் பிடிச்சாலே ஊதித் தள்ளிடுவோம்.
கையில தனியா வேற கொடுத்திட்டாங்க கேக்கணுமா.
தானம் கொடுத்த மாட்டைப் பல்லு பிடித்துப் பார்க்கிறீங்களா.
கலியுகம் சாமி~~}}¦¦
இந்தத் தடவை பசுமாட்டுக் கழுத்து மணீ அனுப்பறேன்.
நீங்களே பணம் கட்டி எடுத்துக்குங்க.
சங்கர், வரணும்.
நான் பார்த்த வரைக்கும் 40 வருஷங்கள் பழசான வீடுகள்தான் பார்த்தேன்.
அபார்ட்மெண்ட் எல்லாம் ஒரு 20 வருஷம் முன்னாலே கட்டினது.
எல்லாத்திலேயும் கீழே பேஸ்மெண்டில் ஜெனரெடர் இருக்கு. சுவற்றுக்குள் பொருத்திய குழாய்கள் மூலம் உஷ்ணம் வருது.
இவங்க சாப்பாடு,தண்ணீர் இரண்டுக்கும் கஷ்டப்படவில்லை.
நம்ம ஊரை நினைச்சுக் கொண்டேன் சங்கர் .இந்தத் தலைப்பு வந்து விட்டது.
தொடரா எழுதலாம்னுதான் நினைக்கிறேன்.
வணக்கம்
http://ssankar.blogspot.com/2007/05/1.html-ல் பின்னூட்டம் பாருங்களேன்.அதற்கப்புரம் மதுரை சுத்துப்பட்டு கோவில்கள் படம் காட்டியிருக்கேன் ..திருவில்லிபுத்தூர் திருவண்ணாமலையும் சேர்த்து..உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்
it is ok Delphine Thanks for visiting.
படங்கள் அருமை! சொன்னாற்போல்
அழகை எப்படி எடுத்த்தாலும் அழகாகத்தான் வரும். இருந்தாலும்
ஆங்கிள் என்று ஒன்று இருக்கிற்தில்லையா? பதிவைப்படித்ததும், நம் நாடு சபிக்கப்பட்டதோ என்று தோன்றுகிறது.
நானானி,
நம்நாடு சபிக்கப் படவில்லை.
கெடுக்கப் படுகிறது.
அதுவும் இவ்வளவு சின்ன நாட்டில் எத்தனையொ சாதிக்கிறார்கள். நமக்கு இருக்கும் இயற்கை சக்தியை எப்படியெல்லாம் நாசமாக்கிக் கொண்டு வருகிறோம்.
நமக்குப் பின்னால் வரும் சந்ததிகள்...அவர்கள் அங்கே இருந்தால் சிரமப்படாமல் இருக்கணும்.
Post a Comment