அங்கே போய் இறங்கினதும் சிகாகோவில் நடந்த கோளாறுகளெல்லாம் தெளிந்து
ஒரு மாதிரி செட்டில் ஆகி முடிந்த வரை உதவியாக இருந்துவிட்டு'_
இங்கே ஸ்விட்சர்லாந்துக்கும் வந்தாச்சு .
இங்கே அவ்வளவு களேபரம் செய்ய வசதி இல்லை.
நிலைமை அப்படி.
நம்ம சொல்லுக்கு மேல் யாரும் சொல்ல மாட்டாங்களா...
அதுவே ஒரு சோதனை.
ஏதாவது வாயாடாமல் தினம் அமைதியாகப் போனால் போரடிக்குமே..
ஊரை விட்டுக் கிளம்பும்போது மாமரமே,தென்னை மரமேனு உருகினது போய்
இப்ப அமெரிக்கா பேரன்கள் சாப்பிட்டார்களோ.
பள்ளிக்கூட ஹோம்வொர்க் முடிக்க நேரம் இருக்கோ
இப்படி இரண்டு நாளாகச் சிந்தனை.
பூனைக் கண்ணை மூடிக்கொண்ட கதைதான்..,..
மீண்டும் வம்பு கிடைக்கும் போது எழுதுகிறேன்.
-
20 comments:
மாமரத்தையும், தென்னை மரத்தையும் தினமும் நினைக்காத நாளில்லை. இப்போ மாங்காய் காய்த்திருக்கும், இப்போ பழுத்திருக்கும்னு தினம் அதான் பேச்சு! மல்லிகை கூடப் பூக்க ஆரம்பித்திருக்கும். எங்க வீட்டுத் தஞ்சாவூர் ராமர் தான் சாப்பாடு இல்லாமல் கஷ்டப் பட்டுட்டு இருப்பார். தினமும் காலைக் காஃபியில் இருந்து ராத்திரி வரை ஒண்ணு மாத்தி ஒண்ணு கிடைக்கும். இப்போ ஒண்ணுமே இருக்காது, பாவம் அவர்.
enakkum en manaivukkum kooda adhe sindhanai thaan. oru vidhiyasam,
engalukku thanjavur ramar illai.
engal vayadhana anna thaan.
//மீண்டும் வம்பு கிடைக்கும் போது //
ஆஹா..வம்புக்கா பஞ்சம்?
கண்ணைத் திறந்து சுத்துமுத்தும் பார்த்தால் போறாதோ? :-)))))))
//நம்ம சொல்லுக்கு மேல் யாரும் சொல்ல மாட்டாங்களா...
அதுவே ஒரு சோதனை.
//
ஆமா ஆமா சோதனை தான் வல்லியம்மா. :) அழகான சோதனை, இல்லையா?
புரியவில்லை இருந்தாலும் கேக்கிறன். நீங்கள் தற்போது சுவிற்சலாந்திலா இருக்கிறீர்கள்.? நானும் சுவிற்சலாந்தில் தான் வசிக்கிறேன்.
ஆமாம்,கீதா.
மாங்காய் எல்லாம் பிரித்துக் கொடுத்தாச்சு.
சாமிழைப் பத்தின கடமை விட்டுப் போகிறதேனு தான் கவலை.
வரணும் துளசி. அங்கேயும் குளிரா.
வம்புக்கென்ன கிடைக்கும் கிடைக்கும்...
ரொம்ப சிரமம் என்னன்னா
ஸ்மைலியே போட முடியலை.
அங்க இருந்து என்ன பார்ஸல் அனுப்ப போறீங்க? சாக்லேட், சுவிஸ் கடிகாரம், சுவிஸ் கத்தி.... :-D
நாகராஜன் அவரையும் யாராவது பார்த்துப்பார்கள் இல்லையா.
வாங்க இ.கொ.
பயணம் முடிஞ்சுதா.
சாக்கலேட்,அப்படி இப்படினு வேணாம்
நல்லதாக ஒரு ஆறு பசுமாடு அனுப்பிடறேனே.
நளாயினி, நாங்கள் இப்போதைக்கு இங்கே வந்து இருக்கிறோம்.
உங்கள் அறிமுகம் கிடைத்தது சந்தோஷம்.
காட்டாறு,
போருதாங்க.
வாழ்க்கைனா கொஞ்சம் அக்கப்போர் வேணுமில்ல.
]>}}
நான் ஒரு கோசாலை அமைக்கலாம்ன்னு இருக்கேன். எனக்கு 12 பசு மாடுகளும் அதன் பராமரிப்புக்காக 24K USDயும் (ஒருவருடத்திற்க்கான பராமரிப்பு செலவு) அனுப்பித்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஹிஹிஹி....
ஆமாம் வல்லியம்மா இந்தியா திரும்பற உத்தேசம் இப்போதைக்கு இல்ல போல?.....
உங்க மீன் இன்னமும் பெரிசா வளர்ந்துவிட்டது...பராமரிக்க முடியவில்லை என்று கேள்விப்பட்டேன்.
வாங்க மௌலி.
கோசாலையா......
அப்போ பக்கத்து பண்ணைல இருக்கிற யாக் அனுப்பமுடியாது.
குதிரையும் வேண்டாம். இருக்கிற பசுவை கொத்ஸுக்கு அனுப்பியாச்சு.
என்ன செய்ரது.
மீனாகஷி நல்லா இருக்கிறதா சொன்னாங்க. வளர்ந்துட்டதமா.கடவுளே.இதுக்கு எங்கே போய் மாப்பிள்ளை தேடுவேன்..--[]}}}}}}}
வந்துடுவோம்.வராம எங்கே போறது..
மேடம்..
அப்படியே அங்கன பேமஸான பேங்க்ஸ் நிறைய இருக்காம்ல.. உங்களுக்குத் தெரிஞ்சவங்க யாராச்சும் அந்த பேங்க்ல வேலை பார்க்குறவங்களா இருந்தா.. நம்ம நாட்டு அரசியல்வாதிக எவனாவது காசு போட்டு வைச்சிருக்கானான்னு கொஞ்சம் செக் பண்ணிச் சொன்னீங்கன்னா அடுத்து ஐஸ்வர்யாராய்க்கு குழந்தை பொறக்குறவரைக்கும் எங்களுக்குப் பொழுதாச்சும் போகும்..
வாங்க,தமிழன்.
அப்படியே செய்யறேன்.
இன்னோரு சித்ரா சுப்ரமணியமா..
@ நாகராஜன், அண்ணாவைச் சரியான பராமரிப்பில்லாமல் விட்டு வந்திருக்க மாட்டீர்கள் , இருந்தாலும் உங்கள் நேரடி கவனிப்பு இல்லையேன்னு நீங்க வருந்தறது ரொம்பவே சந்தோஷமா இருக்கு. நியாயமான கவலை. ரொம்பவே நன்றி, பகிர்தலுக்கு, நாகராஜன் அவர்களுக்கு.
உண்மைதான்,கீதா.
அவர் கவலை அவருக்கு.
மத்தவங்களைப்போல இல்லியே நம்ம நிலைமை.
எப்போதும் கவனிக்க வழியில்லை,
ஏதாவது ஒரு சமயம் விட்டுவிட்டுத்தான் வர வேண்டி இருக்கிறது.
வல்லிசிம்ஹன்!
அப்போ இப்ப நீங்க சுவிஸ், எப்போ பாரிஸ் வாரீங்க!
சுவிஸ் அழகான நாடு.....
வரணும் யோகன்,
செங்கன் வீசா நம்ம கிட்ட இல்லை.
இங்கே எடுக்க முடியாது.
பாரீசுக்குப் போக ஆசைதான்.
இதுவே டிக்கட் எடுத்தவகையில் இங்கே நிறுத்தம்.
வீடு வாவா என்கிறது.ஸ்மைலி போட்டுட்டுக்கோங்க.
Post a Comment