இது நான் முன்னால் படித்தது.
இப்போது பீனிக்ஸ் அப்படித் தெரியவில்லை.
புதிய வெகு நாகரீகமான நகரமாக மினுமினுப்புடன் இருக்கிறது.
ஒரு நாள் அங்குத் தங்கிவிட்டு வாடகைக்கு
எடுத்த காரில் செடோனா நோக்கிப் புறப்பட்டோம்.
வழிநெடுக இந்த நாட்டின் பிரம்மாண்டத்தை
அதிசயத்தபடி பயணம்.
உலகத்தின் அத்தனை மூலை முடுக்கிலிருந்து வந்தவர்கள் இந்த நாட்டை மேம்படுத்தி
இருக்கிறார்கள். இன்னும் செய்து கொண்டு
இருக்கிறார்கள்.
அதில் விளைவது சப்பாத்திக் கள்ளீகள்தான்.
ஆனால் அவைகளின் வகைகளும், பூக்களும் ஆயிரக் கணக்கில்.
எனக்கு கத்தாழை,கள்ளிச் செடிகள் வீட்டுக்கு
ஆகிவராதவை என்ற நினைப்பு.
சென்னை வீட்டில்(சிங்கம்) நிறைய வளர்த்தாலும்
பக்கம் போயிப் பேசி எல்லாம் செய்ய மாட்டேன்.
இங்கே அரிசோனா , ப்ஃஈனிக்ஸில் ,ஆராய்ச்சிப் பண்ணை ஒன்றில் 300 வருடங்கள் வயதான காக்டஸ் வகைகளைப் பிரமாண்டமான அளவில் பார்க்கும்போது,
அதிசயத்திலும் அதிசயமாக இருந்தது.
ஒரு கள்ளிப் பூவில் குளிர்ப்பானம் கூட செய்து சாப்பிடுவார்களாம்.
ஏர்போர்ட்டில் பார்த்த ஒரு பெண் (நியூயார்க்)
சொன்னாங்க,.
அவங்க ஹண்ட்க்ளைடரில்
போவதற்காக அங்கே இருந்து வந்து இருக்காங்களாம்.
யூ ஷுட் ட்ரை தட்
என்று புன்னகைத்துவிட்டுப் போச்சு அந்தப் பொண்ணு,.
ஒரு பக்கம் சிரிப்பு.
ஒரு பக்கம் ஆசை.
அப்படியே மனசார பறந்துவிட்டு மறுபடி பயணத்துக்கு
வண்டிக்குள் வந்துவிட்டேன்.
'எர்த் கால்லிங் அம்மா.
எர்த் கால்லிங் அம்மா''
இது என் பெண்.
ஏம்மா அப்பாப்போ எங்கெயோ போயிடரியே.
இதோ செடோனா வந்தாச்சு.
உன்னுடைய மிஸ்டீக் பவர்ஸ் எல்லாம் வொர்க் ஆவரதா பாரு''
என்று சிரித்த வண்ணம் இறங்கினார்கள்.
பவர்ஸ் இருக்கட்டும். முதல்ல ஒரு பில்டர் காப்பி கிடைக்குமா கேளுனு சொன்னபடி
காணாமப் போன கைகால்களைக் காண்டுபிடிச்சு இறங்கினேன்.
மரத்துப் போச்சு எல்லாம். தப்பா நினைக்காதீங்க.
கண்ணைப் பறிக்கும் அழகு.
சிவப்ப்பில் தோய்ந்த மண் குன்றுகள்.
அருமையான மணம் சூழ்ந்த வீதிகள்.
கலப்படமான மனிதர்களின் கூட்டம்.
பழைய கால வெஸ்டர்ன் படங்களின் போஸ்டர்கள்.
நேடிவ் அமெரிகன்ஸ் நிறையப் புழங்கும் இடம் என்பது கச்சிதமாகத் தெரிந்தது.
அங்கங்கே மயங்கிய நிலையில் சில
நபர்கள் சிரித்துக் களித்துக் கொண்டிருந்தார்கள்.
யயருக்கும் அவர்களால் தொந்தரவு இல்லை.
கடைகள்.
முத்து,மாணிக்கம்,பச்சை,அமேதிஸ்ட்,ஓபல்
இன்னும் விதம் விதமான ரத்தின வகைகள்.
சிலது போலி.
சிலது நிஜம்.
நம்ம ஊரிலேயெ பாண்டி பசாரில் பார்க்காததா:-)
இந்த ஊருக்குச் சொந்தக்காரங்க அதான் நேடிவ் இந்தியர்கள்
அன்போடு கலகலப்பாக இருக்கிறார்கள்.
என்னுடைய புத்தக அறிவை வைத்துக்கொண்டு
நீ செயினீ க்ருப்பா
நீ அபாச்சியா
நீங்க peacepipe பிடிக்கிற வழக்கமெல்லாம் விட்டாச்சா/
என்றேல்லாம் கேட்க ஆசை.
நல்லா இருக்காதேனு விட்டு விட்டேன்.
சிங்கம் எப்பவுமே ஆன் கார்ட்:-)
எதையாவது செய்து பேசி விடுவேனோ என்று.
அப்படியும் ஒரு சூவினீயர் கடையில் ஒரு நேடிவ்
இந்தியப் பெண்மணி என்னிடம் அவளுடைய வாழ்க்கை கதையயே சொல்லி விட்டாள்.
அவளுக்கும் என்னை மாதிரி பேரன் பேத்தி வேணுமாம்.
ஆனால் பெண்ணை வற்புறுத்த மாட்டாளாம்.
நாந்தான் படிக்கலை.
அவளாவது படிக்கட்டும் என்று விச்தாரமாக்ப் பேசிக் கொண்டிருந்தாள்.
உலகம் முச்சூடும் இதுதான்
பெண்கள் நிலை!!
அங்கிருக்கும் சிவப்பு மண்ணுக்கு பெண்சக்தி என்று பெயராம்.
இங்கு கொஞ்ச நாட்கள் இருந்தால் இழந்த
உடல் நலத்தைத் திருப்பி பெறலாம்
என்று நம்புகிறார்கள்.
மாற்று நலச் சிகித்சை இங்கே வெகுவாகப்
பயன்படுத்தப் படுகிறது.
மிக அமைதியான இடம்.
எனக்கென்னவோ திருப்பதிக்குப் போகும்போது அந்த மலைச் சிகரங்கள் காவல் தெய்வம் போலவும்,
அங்கே இருப்பவர்களுக்கு நிம்மதி கூடுவது போலவும் தோன்றும்.
அதே மாதிரி ஒரு நல்ல வைப்ரேஷன் இந்த இடத்திலும் இருக்கிறது.
அங்கே தங்க இடம் கிடைக்காத்தால் மீண்டும் மலைப் பாதையில் பயணித்து
fளாக்ஸ் டாஃப் என்ற ஊருக்கு வந்தோம்.
அங்கிருந்து க்ராண்ட் கான்யான் 2 மணி நேர
பயணம்.
போகும் வழி எல்லாம் ஆத்தங்கரையும்,
பள்ளத்தாக்கும்,
மலைக்காடுகளும் தான் துணை.
நடுவில் குவிஸ்னோசில்
ஒரு மண்டகப்படி.
சூடான சாண்ட்விச்சை ரசித்தபடி மேலே பயணித்து வந்து சேர்ந்தோம்.
மணி இரவு எட்டு.
இயற்கை அதிசயத்தைப் பார்க்க.நேரம் சரியில்லை
இருட்டில் என்ன செய்ய/
இருக்கவே இருக்கு ஐமாக்ஸ்.
நாளைக்குப் பார்க்கலாமா?
17 comments:
வரவர விவரணை எல்லாம் அட்டகாசமா எழுதுறீங்க. இத்தனைநாள் இந்தத் திறமை
எங்கே இருந்துச்சு? ஒருவேளை 'இடம்' பார்த்து வருமோ? :-)))))
எனக்கும் இந்த காக்டெஸ்ன்னா ரொம்ப ஆசை. வீட்டுலே விதம்விதமா வச்சுருக்கேன்.
தண்ணி எப்பாவாவது தோணும்போது கொஞ்சமா விட்டாப்போதுமே! அதான்.......
பெண்கள் மட்டுமில்லை, உலகம் புரா மனுஷர்கள் ஒண்ணுதான்ப்பா.
மனசு அப்படி இருக்கு. எல்லாருக்கும்.
அதான் அப்பவே சொன்னேன்.
வீட்டுக்கு வந்துட்டுப் போங்கனு.
விதவிதமா இருக்கு.
கதையெல்லாம் கூட சொல்லும் :-)
உண்மைதான்.
மனசு எங்கேயும் ஒண்ணுதான்.
நாம பெண்களை நினைக்கிறதனாலேவார்த்தை அப்படி வந்துவிடுகிறது.
ஏம்பா.வம்பாப் போச்சே. உங்க எழுத்தெல்லாம் படிச்சாட்டு இப்படுக்கூட எழுதலைன்னால் எப்படி:-)
வல்லியம்மா
பயணக் கட்டுரை எல்லாம் பின்னி எடுக்கறீங்க!
அந்த பெரிய காக்டஸ் செடி (மரம்???) - யம்மாடியோவ்...
படத்தில் பாக்கும் போதே, ஆச்சர்யமாய் இருக்கு!
If this is a duplicate reply, pl delete the first reply & edit this one... thank you
வணக்கம்.
செடோனா: 82 லிருந்து 99 வரைக்கும் நான் பல நூறு தடவைகள் போய் வந்த ஊர். 87 வரைக்கும் ஊர், மக்கள் பெருகாமல் அழகாக இருந்தது. காசு பைத்தியம் பிடிச்சு நிறைய கட்டடங்களை கட்டிவிட்டார்கள். Flagstaff போகும் வழியில் இருக்கும் வளைவு பாதையில் சிலவருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட இயற்கை தீயில் பல மரங்கள் கருகிவிட்டன. செடோனாவிலிருக்கும் பல 'அமேரிக்க இந்திய' கைவினைப் பொருட்கள், நகைகள் விற்கும் கடைகளுக்கு மொத்த விற்பனை செய்தவன் அடியேன்! ( மன்னிக்கவும் பீற்றலாய் தோன்றினால்).
செடோனா பற்றி எழுதியதற்கு நன்றி.
திருமதி துளசி: ஒரு கருத்து, தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
கேக்டஸ், காக்ட்ஸுன்னு எழுதாமல், ஒரு நிமிடம் யோசித்து கற்றாழை என்று எழுதலாம் நீங்கள்.. நன்றி.
வரணும் ரவி.
இந்த உயரம் வர 200 வருஷம் ஆகிறதாம்.
அதனால செடியா மரமானு நாமதான் யோசிக்கணும்.
அரிசோனா ஆராய்ச்சிக் கழகத்துக்கு வெளில இருக்கிற கற்றாழைத் தோட்டத்தில் இந்தப் படத்தை எடுத்தேன்.
வாங்க வாசன்,எனக்கு அதிகப்படியான விவரம் தெரியாது.
எல்லா இடங்களும் மாசு படிந்துதான் போகிறது.
பணம் நுழைந்தால் அழகு போய்விடும் என்று தெரிந்ததுதானே.
நம்ம ஊரிலும் எத்தனையோ அழகான இடங்கள்,கோவில்கள்
பணம் தேடுபவர்களின் கைகளில் மாட்டி உண்மையான தோற்றத்தை இழந்து விடுகின்றன.
தகவலுக்கு நன்றி.
வாசன்,
எனெக்கென்னங்க கோபம்? கத்தாழைன்னு எழுதுனா நம்மூர் கத்தாழைப்புதர்
ஞாபகம் வருது. ச்சின்னச் சின்ன (கத்தாழைக்கு) துக்கு காக்டஸ் னு சொன்னால்
சரியான உருவம் மனசுலே வந்துருதுங்க. இப்ப நான் என்ன செய்யணும்? (-:
துளசி, எனக்கும் கத்தாழைனா ரயில் ஓடும்போது கூஉடவே வருமே அதூதான் ஞாபகம் வரும்.
பழக்க்கம் தான் மனசில் வார்த்தைகளுக்கு உருவம் கொடுக்குது.
முடிந்தவரைக்கும் தமிழில் எழுத வேண்டும் என்கிற விழிப்புணர்வு நம் அனைவருக்கும் இருக்க வேண்டும், இதைத்தான் நான் சொல்ல நினைத்தேன் துளசி. வல்லிசிம்ஹன் செடோனா வுக்கு போனது பற்றிய பதிவில் இடம் பெற்ற
கற்றாழை பற்றி இங்கு காணலாம் http://en.wikipedia.org/wiki/Saguaro_cactus
ஆங்கிலச் சொற்களை கலந்து பண்ணித்தமிழில் எழுதுகிறோமே என்றொரு நினைவில்லாமல் எழுதுவது மிகவும் வருத்தமானது. நன்றி,
என்னுடைய பின்னூட்டதிற்கான உங்கள் பதிலுக்கு.
maruthuva gunam nirambiya intha katrazhai azagu sathana porutkal thayar seyvathilum upayogam akirathu. nalla pathivu. nalla ezuthi irukinga. mmmmmmm, innum niraiya ninga pona, vantha, partha vishayam pathi ezhuthi kalakunga, vazhthukal.
வல்லி
நல்லதொரு கட்டுரை.
வாசன்: பிரமிப்பாய் இருக்கிறது.
Hi Geetha,
think you are talking abt aloe vera and other products.
Have read that the travellers to the west used these cactus to quench their thirst too.
nalla vivaramaap padikkaNum.
thank you pa.
வாங்க பத்மா.
நிறைய எழுத வேண்டும்.
தப்பா எழுதிடக் கூடாது. அதான் சுருக்கமாச் சொல்லணுமென்று நினைக்கிறேன்.
நன்றி.
போன பதிவுல புயல் வந்து நீங்க ஏர்போர்ட் பாத்ரூம்ல ஒளிஞ்சிருந்த கதையெல்லாம் படிச்சிட்டு ரசிச்சு சிரிச்சிட்டு போனேன். க்ரான்ட் கேன்யன் பத்தி எழுத மாட்டீங்களான்னு ஒரு பெரு மூச்சு விட்டேன் - ஆசையா ;)
இந்த பதிவு சேத்து வச்சு கலக்கலோ கலக்கல் ... ஸெடோனா பத்தி எனக்கு தெரியவே தெரியாது! அருமையா எழுதிருக்கீங்க வல்லிம்மா ... க்ராண்ட் கேன்யன் கதைக்கு காத்திருக்கிறேன் ... எனக்கு நீங்கள் உங்களையே சித்தரித்துக்கொள்ளும் முறையும் பேசும் விதமும் மிகவும் பிடித்திருக்கிறது.
போச்சு.ஏற்கனவே வாய் மூடாது.
இந்த மதுரா கிரீடம் வச்சாச்சுனு என் பெண் சொல்லபோறாள்.
நம்மளை நாமெ சொல்லிட்டா
சிரிச்சுட்டுப் போயிடலாம் இல்லையா.
எல்லாம் ஒரு முன்ஜாக்கிரதைதான்.:-)
செடோனா, முன்னாடி லிண்டா குட்மேன் புத்தகத்தில் படித்திருப்பேனோனு சந்தேகம் வருது.
இருபது வருடம் முன்னாலே ஒரே பரபரனு படிச்சு எல்லோருக்கும் ஜோஸியம் சொல்லிக்கொண்டிருந்தேன்:-)
நன்றி மதுரா.
ம்...நல்ல பதிவு...
:)
mmmmm, ithuvum kathazhai varietynu ninacha ninga aloe vera thani, ithu thaninu solringa. Botany marupadi padikkanum pol irukke? :D thirumbi padichalum enakku ennamo kokkuku onne mathingarapole than thonuthu, he he he :D marupadi parkiren.
Post a Comment