ஐமாக்ஸ் பெரிய திரையில்
கிராண்ட் கான்யான் பிறந்த கதையைச் சொல்லுவார்கள் என்று ஆசையுடன் போன எனக்கு அதன் நிகழ்கால
ஏதோ அட்வெஞ்சர் படம் பார்த்த நினைவு வந்தது.
இருந்தாலும் வரலாறு தானே.
ரசிக்கும்படியாகவும் இருந்தது.
கொஞ்சம் ரீல் கொஞ்சம் ரியல் என்று 30 நிமிடப் படம்.
அதிரடியாக ஓடும் கொலராடோ நதி இத்தனை ஆழத்தில் இருக்கிறதே என்று வருத்தமாக இருந்தது.
நேரே பார்க்க முடியாவிட்டால் ,
என்ன பலன்?
இந்தப் பள்ளத்தாக்கு,(?)
ஒரு மைல் ஆழம்.
விஸ்தீரணம் 277 மைல்கள் நீளமும்
கிட்டத்தட்ட 12 மைல்கள் அகலமும்
இடத்துக்கு இடம் வித்தியாசமாக இருக்கும் என்றார்கள்.
மலையைச் சுற்றி வர 7 நாட்கள்
கூட எடுக்கலாமாம்.
அங்கேயும் குடி இருப்பவர்கள்.
ஹோட்டல்கள்,
காபின் அமைப்பில் இருந்து கொண்டு நடப்பவர்கள்.
பூகோள ஆராய்ச்சி செய்பவர்கள்,
விடுமுறை கழிக்க வந்தவர்கள்,
என்று ஒரு சிறிய நகரமே இயங்குகிறது.
வயதானவர்கள் நல்ல உடல் நலத்தோடு
இரு கைகளிலும் வாக்கிங் ஸ்டிக் உதவியோடு கீழே இறங்கிக் கொண்டிருந்தார்கள்.
போக மூன்று, ஏறி வர ஐந்து மணிநேரம் என்று நல்ல ஆரோக்கியத்தில்
இருப்பவர்களுக்கே
அவ்வளவு நேரம் ஆகுமாம்.
நமக்குத் தான் இன்னோரு வீக்னஸ் உயரமாச்சே.
என்னுடைய உயரம் பத்தி சொல்லலை.
க்ராண்ட் உயரத்தைச் சொல்கிறேன்.
வியூ பாயிண்ட் என்று ஏகப்பட்ட இடங்கள்.
அதிலேருந்து பார்க்கும்போது ஏஞ்சல் கான்யான் தான் ரொம்பப் பிடித்தது.
மேலிருந்து பார்க்கும்போது அதுபாட்டுக்கு ஒரு குட்டிக் கான்யானாகப் போய்க் கொண்டே இருந்தது.
நல்ல பச்சை நிறத்தில் கீஈஈஈஈஈஈஈஈஈழேஏஏஏ
கொலராடொ நதி நெளிந்து கொண்டிருந்தது.
அதில் வெள்ளைநிற ராபிட்ஸ் (rapids) நுரைத்துக் கொண்டுபோவதும் தென்பட்டது.
river rafting நடக்கிறது.
மியுல்ஸ் எனப்படும் கோவேறு கழுதைகள் கட்டிவைக்கப் பட்டுக் காத்திருக்கின்றன.
நானென்ன வைஜயந்திமாலாவா.
பாட்டுப்பாடவா கேட்டுக்கொண்டே
அதுமேல் போக.
கண்ணால் எல்லவாற்றையும் ஆசீர்வாதம்தான் பண்ணமுடியும்:-)
எதற்கு என்கிறீர்களா.
அங்கே வந்த இரட்டை நாடி தேகங்களைச்
சுமந்து கொண்டு நடக்கணும்.
கால் வழுக்காமக் கொண்டுபோய்ச் சேர்க்கணூம்.
இதுக்கெலாம்தான். அதுகள் பாவம்தானே.
எனக்கென்னவோ சு. என் சுந்தரி கதையில் நாகேஷ் விரட்டப் பின்னாலேயே போகும் குதிரை
தான் ஞாபகம் வந்தது.;-0)
எனக்கு அதுமாதிரி ஏறிப் பயணம்
செய்ய முடியாதேங்கிற பொறாமையாக் கூட
இருக்கலாம்:-)
இப்படியாகத்தானே சுற்று முற்றும் பார்க்கும்போடு,
கிடைத்த கூழாங்கற்கள்,
மரத்துண்டுகள் எல்லாவற்றையும் பொறுக்கிக்
கொண்டோம் நானும் என் பேரனும்.
அவ்வப்ப்போது
மலை முனையில் காலைத் தொங்கப்போட்டுக்
கொண்டுப் போஸ் கொடுக்கும் ஜோடிகள், காளைகள்
கன்னிகள் எல்லோரையும் வேடிக்கை பார்த்தேன்.
வியர்டூனு சொல்ல முடியாது.
அதற்கு மேலோர்கள் அவர்கள்.
கரணம் தப்பினால் மரணம்
என்ற நிலையில் ,
புகைத்தபடி,
இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதானு பாட வேண்டுமா:-)
ஓ.இவர்கள் அனைவரும் 'ஹார்லீ டேவிட்சன்
பைக்கர்ஸ்.'
இவங்க தனி உலகத்தைச் சேர்ந்தவர்கள்.
அதற்குப் பிறகு வருண ராஜா வந்துவிட்டார்.
அதனால் படங்களை அடுத்த பதிவில் போடுகிறேன்.
13 comments:
சிசுவேஷன் ஸாங்க்ஸ்) காட்சிக்குப் பொருத்தமான சினிமாப் பாட்டெல்லாம்
சரியா இருக்கறதைப் பார்த்தாத்தான் இன்னும் ஆச்சரியமா இருக்கு!!!!!
அட்வெஞ்சர் படம் ஐமேக்ஸ்லே பார்த்தால் சிலசமயம் தலை சுத்தல் வாந்தி
நிச்சயம்(-:
உலகமெங்கும் ஹார்லிடேவிட்சன் பைக்கீங்களுக்கே தனி ட்ரெஸ் கோட் இருக்கு.
( வாசனை நினைச்சுப் பயந்துக்கிட்டே இந்த பின்னூட்டம் போடறேன். எல்லாத்தையும்
தமிழ்ப் படுத்தும் அளவுக்குத் தமிழ் தெரியலைன்னு சொல்றதும் ஒரு காரணம்)
potahte nalla irukku. varatum, mathathum, nalla anupavaichu ezuthi irukinga. asaiya than irukku Thahsil panna? athirshtam ennamo vere mathiri irukke? :D
இதோ இரண்டாம் பகுதியையும் படிச்சாச்சு!
பயண கட்டுரைகள் எல்லாம் பின்னி எடுக்கறீங்க.
படிக்கும் போது எழுத்தாளர் சுஜாதாவின் நடை தெரிகிறதே. உங்க கிட்ட தான் அவர் டிரெயினிங்கா? :))
//நானென்ன வைஜயந்திமாலாவா.
பாட்டுப்பாடவா கேட்டுக்கொண்டே
அதுமேல் போக.//
ஹைய் ஆசைய பாரு! ஒரு வேளை உங்க சிங்கம் ஜெமினி மாதிரி கூட வர ஒத்துகிட்டு இருந்தா போயிருகலாமோ என்னவோ? :p
முந்தைய பதிவு, இது ஆகிய இரண்டையும் இன்றுதான் படித்தேன் வல்லியம்மா...எழுத்து, படங்கள் இரண்டும் அருமை. நண்பர்களுடன் எனது கிராண்ட் கான்யான் ட்ரிப் மனதில் நிழலாடியது.
உங்க டெம்பிளேட்டில் ஏதோ குறை,உங்கள் பதிவின் அகலம் குறைவாக இருக்கிறது.அதனால் படங்களும் சின்னதாக உள்ளது.வலது பக்கம் வெறுமையாக உள்ளது.கொஞ்சம் பாருங்க.
துளசி ஆச்சரியமா இருக்கா.:-)
பெரியவனைக் கேட்டா சொல்லுவான்.
சும்மா ஏதாவது பாடினாக் கூட, இப்போ என்ன நடந்ததுனு இந்தப் பாட்டைப் பாடறேனு:-)
ஐமாக்ஸ் நிஜமாவே கொஞ்சம் ஓவர்தான்.
அதுவும் திரைக்குப் பக்கத்திலேயெ சீட்.
கொஞ்சம் ஆடித்தான் போயிட்டேன்.
பாப்பா வந்தாச்சானு தெரியலியே.
கொஞ்ச நாள் கழிச்சு நீங்களும் போகலாமே.
செலவுதான்.
இருந்தாலும் இவ்வளவு தூரம் வந்தாச்சு.
ஒரு இடமாவது பார்க்கணும்னுதான்
போய்விட்டு வந்தோம்.
அம்பி,சிங்கம் வந்தாலும் (கோவேறு)
கழுதைமேல ஏறரதா இல்லை.
பள்ளத்தைப் பார்த்தாலே கண் இருட்டும்.
நம்மளாலே மத்தவங்களுக்குச் சிரமம்.
பெரிய கௌரவம் கொடுத்திட்டிங்களே. சுஜாதா சார் எழுத்தெல்லாம் படிச்சதாலே நடையும் (கானமயிலாடக் கண்டிருந்த) அதுமாதிரி வரதோ என்னமோ.
காப்பிகாட்.:-) செவன் மோர் டேஸ் டு கோ:-)
குமார்,டெம்ப்ளேட் மாற்றப் பார்க்கிறேன்.
இரண்டு மணிநேரமாவது செலவழிக்கணும்.:-(
காசு செலவே இல்லாம நானும் பத்தமாதிரி அழகாக விவரித்து உள்ளீர்கள்.எப்படியும் நான் பார்க்கமுடியாது.உங்களுக்கு நன்றி
ஆமாம், தி.ரா.ச.
முடிஞ்சதை எழுதினேன்.
ஆஸ்திரேலியால வேற என்னவோ இன்னோரு இயற்கை அதிசயம்னு சொன்னார்கள். க்ரேட் பார்ரியர் ரீஃப் என்றார்களே.
அதைப் பார்த்தீர்களா.
//செவன் மோர் டேஸ் டு கோ//
:))))
//எப்படியும் நான் பார்க்கமுடியாது.உங்களுக்கு நன்றி //
@TRC sir, அட என்ன TRC சார், இப்படி சொல்லிடீங்க, நான் கூட்டிட்டு போறேன் உங்களையும் உமா மாமியையும். போக, வர டிக்கட் செலவு மட்டும் உங்களதாம். :)
athane, ociyileye pazhakkam ana ambikku intha mathiri selavu seyya manasu varathunnu oththukitare Valli, unga kitteyavathu! ambi, :P for you especially.
Post a Comment