Blog Archive

Wednesday, May 09, 2007

சித்திர ராமன்.....18 யுத்தம் முடிந்தது, ஸ்ரீராமஜயம்











பதினெட்டு பதிவாக வந்துவிட்டச் சித்திரம்,
பதினெட்டு நாள் யுத்தம் முடியும் வரை வந்துவிட்டது.
கும்பகர்ணனின் வீரமூம் விஸ்வாசமும்,
இந்திரஜித்தின் நிகும்பலையும்,
மண்டோதரியின் அழியாத பதிபக்தியும் ராவணனைக் காக்கத் தவறின.
அனுமனின் சஞ்சீவி சாகசம்,
ராமனுக்குச்
சூரியக் கடவுளின் மந்திர உபதேசம்,
ராமனின் கருணா விலாசம்,
இலக்குவனின் பக்தி,




சகல வானரங்களின் உற்சாகம்
எல்லாவற்றிற்கும் மேல் நன்மையே ,
தர்மமே
வெல்லும் என்ற உறுதிப்பாடு
இவையே யுத்தகாண்டம் முழுக்கக் காண்கிறொம்.
வானர சேனைகள் சகிதம்ஸ்ரீராமன்
இலங்கையில் கால் வைத்த முகூர்த்தம்,ராவணனின்
நெஞ்சில் பாரம் ஏறியது..
உப்பரிகையில் நின்று ராம சைன்யத்தை
அளவிடுகிறான்.
ராவணன் நிற்பதை ராமனும் பார்க்கிறான்.
அப்போதும் அவனுக்கு தூது அனுப்பி,
ரத்தம் சிந்தாமல்
சீதையை மீட்கத்தான் தோன்றுகிறது.
அங்கதன் தூது செல்ல , தோல்வியுற்று வருகிறான்
ராவணனின் மனதில் மாற்றம் இல்லை.
யுத்தம் துவங்கி 18 நாட்கள் ,சமர் நடக்கிறது.
சகல அரக்கர்களையும் அழித்து,
யுத்தம் முடிகிறது.
ராவணனோடு மண்டோதரியும் உயிர் துறக்கிறாள்.
சீதாபிராட்டியின் அக்கினிப் பிரவேசம் முடிந்து,
ராவணனுக்கு உண்டான கிரியைகளை விபீஷணன் முடித்து,
அனைவரும்
பூரண மனமகிழ்ச்சியுடன்
அயோத்தி நோக்கிப் புறப்படுகிறார்கள்.
அவர்களுக்கு முன்னால் ஸ்ரீராம நாமம் பதித்த கணையாழியுடன்
அனுமன் சென்று,
, பரதனையும், குகனையும் காக்க.
ராமன் வரவுக்குமுன்னால் அவர்களுக்கு நல்ல செய்தியைக் கொடுத்து அவர்கள் உயிரையும் மீட்கிறான்.
அனுமா உன் நாமம் வாழி.
மரவுரி நீக்கி ராம,லக்குவ, சீதை
அயோத்திப் பிரவேசம் நடக்கிறது..
பிரிந்தவர்கள் கூடுகிறார்கள்.
வசிஷ்டர் ஸ்ரீராம பட்டாபிஷேகத்துக்கும் நாள் குறித்துவிடுகிறார்.
அந்தப் புண்ணியநாளும் வந்தது வசந்தமாக.


























ஸ்ரீராம பட்டாபிஷேகம்
வைதேகி சகிதம் சுரத்ரு மதலே
ஹைமே மகாமண்டபே//
மத்யே புஷ்பகமாசனே
மணிமயெ வீராசனே சூஸ்திதம்
அக்ரே வாசயதி ப்ரபஞ்சன சுதே
தத்வம் முனிப்யபரம்
வ்யாக்யாந்தம் பரதாதிபிஹி பரிவ்ருதம்
ராமம் பஜே ச்யாமளம்//
ஸ்ரீராம வள்ளலுக்கு, சுவாமிக்கு வசிஷ்டர்
உலகின் புனித நீரெல்லாம் நிரம்பிய குடத்தைக்
கையில் பிடித்து ராஜ்யாபிஷேகம் செய்கிறார்.
சுந்தரவதனன் என்றும் மாறாத புன்னகையோடு மணிமுடி ஏற்றுக்கொள்ளுகிறான்.
அருகில் வைதேஹி,
சீதாபிராட்டி ,நம் தாயார் இந்தப் பட்டாபிராமனைப் பார்த்துப் பூரிக்கிறாள்.
பரதன் குடை பிடிக்க,
இலக்குவனும் சத்ருக்கினனும் சாமரம் வீச,
அங்கதன்
அரியாசனத்தைத் தாங்கிப்பிடிக்க
அனுமன் கைகூப்பி என்றும்
பக்தனாய்ச் சிரஞீவியாய் நிற்க
சுற்றமெல்லாம் மங்கள கோஷம் எழுப்ப
ராம பட்டாபிஷேகம் இனிதே பூர்த்தியானது.
ஸ்ரீராம கதையைப் படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும்
பூரண ஆயுசும்
சகல சம்பத்தும், புத்திர பாக்கியமும்,
பித்ருக்களின் ஆசியும் பரிபூரணமாக இருக்கும்.
எப்போதெல்லாம் மனம் சஞ்சலப் படுகிறதோ அப்போதெல்லாம் ராமனையும்,
அவன் தூதனான அனுமனின்சுந்தர வைபவத்தையும்
நினைத்து ருசிப்பவர்கள்,
படிப்பவ்ர்கள்
என்னாளும் சோர்வடைந்தது இல்லை.
எல்லாம் நலமே.
ஸ்ரீராகவம் தசராத்மய அப்ரமேயம்
சீதபதிம் ரகுகுலான்வய ரத்ன தீபம்
ஆஜானு பாகும் அரவிந்த தளாயதாக்ஷம்
ராமம் நிசாசர வினாசகரம் நமாமி.
அன்புச் சக பதிவர் அனைவருக்கும் நன்றி.
ஆயிரம் பிழைகள் இருக்கும்,.
சொல், எழுத்து, வழ்ங்கிய விதம்
என்று
அனைத்துப் பிழைகளையும் பொறுத்து
படித்தவர்கள்,
உங்களுக்கு எப்போதும் நன்றி.
ஆனாலும் ராமன் இங்கே தன் நாமத்தைத் தந்து
எழுதவைத்தான்..
அதனாலேயே சித்திர ராமாயணம் பதிய முடிந்தது.
ஜெயஜெயராம் ஜானகிராம்.

15 comments:

Geetha Sambasivam said...

நல்லா எழுதி முடிச்சுட்டீங்க வல்லி, ராமாயணம் பூராவும் எழுதவோ படிக்கவோ அலுக்காத ஒரு விஷயம். நானும் இப்போ ஆர்ஷியா சத்தார் என்பவர் எழுதிய வால்மீகி ராமாயணத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தான் படிச்சுட்டு இருக்கேன் அவ்வப்போது, நேரம் கிடைக்கும்போது தான் படிக்க முடியுது என்றாலும் மிக அருமையான மொழி பெயர்ப்பு, அதை விட அவங்களோட உழைப்பு இரண்டும் மனதில் நிற்கிறது. அதிலே இப்போத் தான் ராவணன் சீதையைக் கடத்திக் கொண்டு போயிருக்கிறான். உத்தரகாண்டமும் சேர்ந்தது இது. நீங்களும் புத்தகம் கிடைச்சால் வாங்கிப் படிங்க.

வல்லிசிம்ஹன் said...

வாங்க கீதா. போன் செய்யணும்னு நினைச்சேன்.
இந்தப் புத்தகம் கிடைத்தால் கட்டாயம் படிக்கிறேன்.
நேரம் கிடைக்கிறது கடினம்தான்.
ஆனால் படிக்காமல் இருப்பது இன்னும் கடினம்:-)
நன்றி. மீண்டும் பார்க்கலாம்.

துளசி கோபால் said...

வழக்கம்போல அருமையான படங்களுடன், ராமாகாதையைச்
சொல்லி முடிச்சுட்டீங்க.
ரொம்பவும் ரசிச்சுப் படிச்சேன்.
கீதா சொன்னதுபோல எத்தனைமுறை படிச்சாலும் அலுக்காதவைதான் இந்த
இதிகாசங்கள்.

நான் இப்ப ராஜாஜி அவர்களின் ராமாயணத்தைப் படிக்கின்றேன். கதைபோல
இருக்கு! இது எத்தனையாவது முறைன்னு கணக்கே வச்சுக்கலை:-)
இன்னிக்குத்தான் ஆஞ்சநேயடு ச்சின்னக் குரங்கா மரத்துலே ஒளிஞ்சிருந்து சீதையையும்,
அவளைப் பார்க்க அதிகாலையில் வந்த ராவனனையும் பார்க்கறார்.

அப்புறம் ஒரே ஒரு விஷயம். உங்க பதிவுலே பச்சையில் நீல எழுத்துக்கள் சரியாத்
தெரியலை. கஷ்டப்பட்டு( செலக்ட் செய்து படிசுட்டேன்) படிக்கவேண்டி இருந்தது.

(ச்சும்மா இருக்காம துசுக்குச் சொல்றேனோ? )

வல்லிசிம்ஹன் said...

துளசியால துசுக்குச் சொல்ல முடியுமா.
முடியாது.
எனக்கு அலங்காரமா ராமனைக் கொண்டாடறோம்னு நினைப்பு.
என்னோட பதிவில சரியாத் தெரியரதே.
கலர் பார்த்துப் போட்டு இரூக்கணும்.:-)
ராமாருக்குப் பச்சை அலுத்துப் போச்சோ.??

மெளலி (மதுரையம்பதி) said...

ராமம் நிசாசர வினாசகரம் நமாமி!!!

மிக அருமையாக சித்திர ராமாயணத்தை தந்தீர்கள் வல்லியம்மா!...மிக்க நன்றி.

ராமகாதை படிக்கும் இடத்தில் துர் செயல், துர் சிந்தனை ஏதும் அண்டாதென்பார் என் பாட்டி.

பட்டாபிஷேக காட்சியை படிக்கையில் எனது தந்தைவழி பாட்டியின் நினைவு வந்தது, சுந்தரகாண்டத்தையும், பட்டாபிஷேகத்தையும் அவர் தனது 12 ஆம் வயதிலிருந்து, 83 வயது (மறைவதற்கு முதல்நாள்) வரை தினம் பாராயணம் செய்துவந்தவர்.

ambi said...

யுத்த காண்டத்தை அழகா டிரைலர் கணக்கா நீங்கள் எழுதிய(ஓட்டிய) விதம் அருமையோ அருமை. :)

நல்ல சகுனம், ராமர் பட்டபிஷேகம் படிச்சுட்டு ஊருக்கு கிளம்பறேன், எல்லாம் என்னோட சீதா தேவியை கை பிடிக்க தான்.
நல்ல வேளை, வில்லை உடை!னு அவங்க அப்பா கண்டிஷன் போடலை. :p

ambi said...

ராமர் பட்டாபிஷேகத்துக்கு வெள்ளை கொண்டகடலை சுண்டல் கிடையாதா? :)

//ராமாயணத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தான் படிச்சுட்டு இருக்கேன் //

@geetha madam, அட! இங்க பாருடா!
ஜாக்சன் துரை லாங்க்வேஜ்ல எல்லாம் ராமாயணம் படிக்கறாங்களாம். :p

@valli madam, கண்டுகாதீங்க, கீதா மாமியை வம்புக்கு இழுக்கலைனா நம்ம பதிவின் பின்னூட்டம் நிறைவடையாது. :p

வல்லிசிம்ஹன் said...

மௌலி,
எனக்கு உறுதுணையாக பின்னூட்டங்கள் நீங்கள்
எழுதியதால் தான் மேற்கொண்டு பதிய முடிந்தது.
ஃபீட்பேக் இல்லாத ஏதுவும் வளருவது சிரமம்தான்.
ஸ்ரீராமன் சரண் திண்சரணாக நம்மைக் காக்கட்டும்.
உங்கள் தாத்தா படித்தத சுந்தரகாண்டம் உங்களிடம் இருக்கிறது என்று நம்புகிறேன்.
அந்த மாதிரி பதிப்பெல்லாம் இப்போது கிடையாது.
உருக்கம் நிறைந்த வார்த்தைகளின் பொக்கிஷம் ராமனின் கதை.
நன்றி மௌலி.

வல்லிசிம்ஹன் said...

அம்பி நீங்களும் உங்கள் சீதையும் அழகு பொங்கும் குடித்தனம், செழிப்பான இல்லறம் நடத்தணும்.
நாங்களும் வந்து பார்க்கிறோம்.
வாழ்த்துக்கள். ஆசீர்வாதங்கள்.

Geetha Sambasivam said...

படிக்கும்போது தெரியலை, துளசி சொன்னதும் திரும்பிப் போய்ப் பார்த்தேன். எனக்கு நல்லாத் தான் தெரியுது. இருந்தாலும் கலர் காம்பினேஷன் உங்க சிநேகிதியின் புடவைகளில் வர மாதிரி கொஞ்சம் ரேர் காம்பினேஷன் தான். :D ஸ்விட்ஸர்லாந்து போனதும் மெயிலுங்க. உங்க மெயில் வந்தது.

வல்லிசிம்ஹன் said...

மெயிலறேன்.
கட்டாயமா.
அப்பாடி ரொம்ப மெமரிதான் உங்களுக்கு:-0)

VSK said...

"ஸ்ரீராமஜயம்"

அத்தனை பதிவுக்கும் அடியேனின் நன்றி!

வல்லிசிம்ஹன் said...

வாங்க விஎஸ்கே சார்.
நன்றி. மீண்டும் பார்க்கலாம்.

தி. ரா. ச.(T.R.C.) said...

தீக்ஷதரின் மாமவ பட்டபிராம ஜெய மாருதி சன்னுத தாம் என்ற மணிரங்கு கீர்த்தனயை கேட்டு இருக்கிறீர்களா? அப்படியே ராம பட்டாபிஷேகத்தை கண்முன் கொண்டுவந்து நிறுத்தும்.அதுபோல இருந்தது உங்கள் சித்திர ராமாயணம். ந்ன்றி

வல்லிசிம்ஹன் said...

Thank you.T.R.C.
Ambi.sweddingshd have taken place.
may heaven.s choicest Blessings be bestowed on them.