Blog Archive

Saturday, June 10, 2006

sri raamadhootha hanumaan

Posted by Picasaஅஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே  ஒன்று ஆறாக  ஆரியர்க்காக  ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக்கண்டு
அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்;
அவன் நம்மை அளித்துக் காப்பான்.

6 comments:

தி. ரா. ச.(T.R.C.) said...

ராமதூத கிருபாசிந்தோ மத்கார்யம் சாதயப்பிரபோ.கும்பகோணத்தில் இருந்தபோது தினமும் ராமஸ்வாமி,மங்களாம்பிகா கோவிலுக்கு அருகில் உள்ள ஆஞ்ஜநேயர் கோவிலுக்கு செல்வேன்.அந்த கோவிலில் இருக்கும் போதுதான் நான் சி.ஏ. தேர்வு தேறிவிட்டதாக தகவல் வந்தது. இது எந்த கோவில்?

வல்லிசிம்ஹன் said...

டி ஆர்சி சார், இவர் எங்க பெரிய மகன் பாங்களூரில் இருந்த போது பக்கத்திலே இருந்தவர்.
அவனுக்கு ஹனுமான் பக்தி நிரைய.
அப்போ எடுத்த படம்னு நினைக்கிறேன்.பதிவு ஆரம்பித்து எழுதுகிறேன்.நன்றி சார்.

துளசி கோபால் said...

ஜெய் ஹனுமான் (க்)ஞான குண சாகர்
ஜெய் கபிஸ்திஹூன் லோக் உஜாகர்

ஆமாம். வல்லி, இந்த ஆஞ்சநேயர்
ஏன் தலையைச் சாய்ச்சுப் பாக்கறார்?

தி. ரா. ச.(T.R.C.) said...

சஞ்சீவி மலையை எடுத்துவரும்போதும்,இலங்கைக்கு போக சமுதிரத்தை தாண்டும் போதும் இது அவருடைய போஸ். அப்படித்தனே வள்ளி அவர்கலே. தி.ரா.ச

வல்லிசிம்ஹன் said...

துளசி,, டிராஃபிக் சிக்னல்?
உண்மையில் சாய்ந்து பார்ப்பது ஏன் என்று தெரியவில்லை.அர்த்தம் இல்லாமல் இருக்காது.

வல்லிசிம்ஹன் said...

டி ஆர் சி,
நவ விதமாக ஆராய்ந்து செயல் படுபவர் இல்லையா? அதனால் இது அந்த மாதிரி யோசிக்கிரார் என்று நினைக்கிறேன். பெயர் வல்லி.