Blog Archive

Wednesday, June 14, 2006

இலக்குமி லக்ஷ்மி லட்சுமி





"லக்ஷ்மீம் க்ஷீரசமுத்ர ராஜ தனயாம் ச்ரீரங்க தாமேச்வரீம்"

லோகைக தீபாங்குராம்"

//த்வாம் த்ரைலோக்ய குடும்பினீம்//

சரசிஜாம் வந்தே முகுந்தப் ப்ரியாம்//

கமலவாசினீம் விச்வமாதா

நமதாம் சரண்யே//

யாருடைய கண்களின் பார்வை அருளோடு

பாய்கிறதொ,

யார் மாலுடைய இதயத்தில் உரிமையோடு ஏறி அமர்ந்து கொண்டாளோ,

எந்தப் பார்வை உலகத்தைக் காத்து ரட்சிக்கிறதொ

அந்த கருணைக் கடைக்கண்ணாளை

வணங்குகிறேன்.

இரண்டுபக்கமும் வலிமை நிறைந்த யானைகள் பூ மழை பொழிய,

செந்தாமரையில் வந்து அமர்ந்தவளை,

தேவர்கூட்டங்கள் துதிக்க,

திருமாலை நோக்கிப் புன்னகை புரியும்

மஹாலக்ஷ்மியைத் தேடி அடைந்தேன்.

இனி எனக்கு என்ன குறை இருக்க முடியும்?

அங்கங்கே கிடைத்த அருள் வாக்கியங்களின் திரட்டு இந்தப் பதிவு.

11 comments:

குமரன் (Kumaran) said...

நல்ல பதிவு வல்லி அம்மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி குமரன். இன்னும் எழுதி இருக்க வேண்டும்.
உங்கள் கேட்டதில் பிடித்தது ப்ளாக்ஸ்பாட்டில் "பட்டணம் தான் போகலமடி" சீர்காழியின் பாட்டு, போட முடியுமா?
,"சிரிப்பு தான் வருகுதையா'' இன்னோரு நேயர் விருப்பப் பாடல்.

தி. ரா. ச.(T.R.C.) said...

நல்ல பதிவு.அழகான அர்த்தத்துடன் விளக்கியுள்ளீர்கள்.படமும் ஜோர்.இதோடு லக்ஷிமி காயத்திரியையும் போட்டு இருக்கலாம் வல்லி(சரியா) அவர்களே.
மஹாலக்ஷிமிச வித்மகே விஷ்னுபத்னீச தீமகி
தன்னோ லக்ஷிமிப் பிரஜோதயாத்.
அன்பன் தி ரா ச

வல்லிசிம்ஹன் said...

தி ர ச,
அவர்களே வேண்டாம்.வேனுமானால் அம்மா என்று சொல்லுங்களேன்.லக்ஷ்மியை பற்றீ இவ்வளவு சொன்னால் போதுமா.
இன்னோரு போஸ்ட் போட்டு விடலாம்.

Geetha Sambasivam said...

என்ன மனு, படம் எல்லாம் ரொம்ப நல்லாப் போடறீங்க, அப்புறம் தமிழ்மணம் கருவிப்பட்டை எப்படி நிறுவினீங்க? என்னால் முடியவே இல்லை. என்னோட மெயில் வந்ததா? ஏன் இன்னும் பதிலே போடலை? ஏதாவது கோபமா? வருத்தமா? தினமும் நீங்க என்னோட வலைப்பக்கத்திற்கு வருவீங்கனு எதிர்பார்ப்பேன். மறந்துட்டீங்க போல இருக்கு.

வல்லிசிம்ஹன் said...

கீதா,
கம்பூட்டருக்கு வேற ஆளு வந்துட்டாங்க. ஒரு பதிவுக்கே நேரம் கிடைக்கலை.தமிழ்மணம் உத்வி/தகவல்ல போனால் சொல்லி இருக்கே.கருவிப்பட்டை எப்படி போடரதுனு.இந்த தடவையோட நாலு 4டைம்ஸ் முயற்சியில் அது முடிந்தது.

தி. ரா. ச.(T.R.C.) said...

சரி எனது பிளாக் குருவை பின்பற்றி நானும் அம்மா என்றே அழைக்கிறேன்.என் வாழ்க்கையில் சில வருடங்களே சொல்லிய சொல் அது.மற்றபடி அடிபட்டபோதும்.வலிதாங்கமுடியாத நேரங்களில் மட்டும் உச்சரித்த வார்த்தை.யாதேவி சர்வரூபேண மாத்துரு ரூபேண ஸம்ஸ்த்திதா நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நமா: நீங்கள் சொன்ன மாதிரியே தனிப்பதிவு போட்டுவிடுங்கள். தி.ரா.ச

தி. ரா. ச.(T.R.C.) said...

சரி எனது பிளாக் குருவை பின்பற்றி நானும் அம்மா என்றே அழைக்கிறேன்.என் வாழ்க்கையில் சில வருடங்களே சொல்லிய சொல் அது.மற்றபடி அடிபட்டபோதும்.வலிதாங்கமுடியாத நேரங்களில் மட்டும் உச்சரித்த வார்த்தை.யாதேவி சர்வரூபேண மாத்துரு ரூபேண ஸம்ஸ்த்திதா நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நமா: நீங்கள் சொன்ன மாதிரியே தனிப்பதிவு போட்டுவிடுங்கள். தி.ரா.ச

வல்லிசிம்ஹன் said...

டி.ஆர்.சி,
நன்றி.
உங்க அம்மா லக்ஷ்மி ரூபத்தில் தான் இருப்பார்.எனக்கு இந்த வினோலியா லக்ஷ்மி படத்தைப் பார்க்கும்போது எங்க அம்மாவின் பொறுமைதான் நினைவு வரும்.பொறுமையாக செய்கிறேன் லட்சுமி அம்மாவின் ப்லாகை.

துளசி கோபால் said...

வல்லி,

படமும் அருமை, பதிவும் அருமை.

ஒருவழியாப் 'பட்டை' போட்டாச்சா? :-)))

" மாதர் நமாமி கமலே கமலாயதாக்ஷி
ஸ்ரீ விஷ்ணு ஹ்ருத் கமலவாஸினி விஸ்வமாதாஹ
க்ஷீரோதயே கமலகோமள கர்ப்பகெளரீ
லக்ஷ்மி ப்ரஸீத ஸததம்நமதாம் ச்சரண்யே"

வல்லிசிம்ஹன் said...

ahaa துளசி, நமக்குப் பட்டை போடாமலே நம்ம மருந்துகள் எப்படியெல்லாமோ வேலை செய்கிறது.
இருந்தாலும் இது மிக நல்ல "பட்டை" அஷ்டோத்திரத்திலிருந்து சில அக்ஷரங்களை மட்டும் எடுத்ததால் நீங்கள் கொடுத்திருக்கும் கடைசி ஸ்லோகம் உங்கள் பின்னூட்டத்தில் வந்து விட்டது.ஆகக் கூடி லக்ஷ்மிஅம்மாக்குக் கொண்டாட்டம் தான்.