Blog Archive

Friday, June 16, 2006

யா தேவி சர்வ பூதேஷு.......

Posted by Picasa எந்த ஒரு தேவி எல்லா ஆத்மாக்களிலும் நிறைந்து இருக்கிறாளோ,
அவளுக்கு என் வணக்கம்.
அவள் அம்மாவாக இருப்பதால் தான் ச்ரீ ஆதி சங்கரருக்கும் சௌந்தர்ய லஹரியாக ஆர்பவித்தாள்.
பூ மாதா,நீலா தேவி,மஹா லக்ஷ்மி, சக்தி,துர்கா, இன்னும் எத்தனையோ வடிவில் அவளை நாம் பார்த்தாலும்
ஒரு அம்மாவாகவே அவளை நினைப்பதில் ஆனந்தம் தான்.
"தாயாரை முதலில் சேவித்துவிட்டு பெருமாளைப் பார்க்கா போகலாம்" இதுதான் வழக்கமாக நமக்கு சொல்லப் படுவது.
ச்ரிமத் வேதாந்த தேசிகர் அருளித்தந்த ச்ரிஸ்துதி, கோதாஸ்துதி மற்றும் பூஸ்துதி எல்லவற்றிலும் தாயின் கருணையைத்தான் முன் வைக்கிறார்.

அதில் இந்த மாதிரி ஒரு சம்பவம் வரும். ஒரு பக்தன் தன் வருத்தம் போக்க பகவானைத் தேடி வருகிறான்.
அவனைப் பார்தத்தும் பெருமாளுக்கு அவன் போன நாட்களில் செய்த பாவங்கள் எல்லாம் நினைவுக்கு வந்து கோபம் வருமாம்.
அப்போது லக்ஷ்மி அம்மா அவனை நோக்கிக் கையமர்த்தி, பெருமாளிடம் இவனுக்காக சிபாரிசு செய்வாளாம். இனிமேல் இவன் தப்பு செய்ய மாட்டான், இப்போது அவன் கஷ்ட நிலையில் இருப்பதால் நீங்கள் கண்டிப்பாக அவனுக்கு அனுக்கிரஹம் பண்ணனும் என்று நிர்ப்பந்தம் செய்வாளாம்.
அதுக்கு மாறாக மாலவன் முகத்தை இடது பக்கம் திருப்பிக்கொண்டால் அங்கிருந்து கோதை அவன் முகத்தைப் பிடித்துக் கொண்டு தன் புருவம் நெரியக் கோபிப்பது போல் பாவனை காட்டுவாளாம்.
வேறு வழியில்லாமல் பெருமாள் பிழைத்துப்போ
உன் பிரச்சினை தீர்ந்தது இன்றோடு., என்று அபயம் கொடுப்பாராம்.
கோபிக்கக் கூட வழி கிடையாது அவனுக்கு, இவர்கள் பக்கம் இருந்தால் !!
இதே போல் ச்ரி ஆளவந்தார் தன் சதுஸ்லோகியில்
காந்தஸ்தே புருஷோத்தமஹ
ஃபணிபதி சய்யாசனம் வாஹனம்
வேதாத்மா விககேச்வரோ யவனிகா
மாயா ஜகன்மோஹினி
பிரும்மேசாதி சுரவ்ரஜஹ சதயிதக
த்வத் தாஸ தாசீ கணஹ.,
ச்ரிரித்யேவச நாமதே பகவதீ ப்ருஹ்மஹ கதம் த்வாம்
வயம்??
என்று கேள்வி கேட்கிறார்/
அம்மா, யௌவனமும் அழகும் பொருந்திய உனக்கு
கணவனோ புருஷர்களில் உத்தமன்
அனந்தசயனமாகப் பள்ளி கொள்ள ஆதிசேஷன்
வாஹனமாக மாபெரும் கருடன்
பிரம்மனின் மனைவி சரஸ்வதியும்,
ஈசனின் மனைவி பார்வதியும் உனக்குத் தோழிகள்
மற்ற எல்லா தேவ தேவியர் உனக்குப் பணிவிடை செய்ய
காத்து இருக்கின்றனர்.
உனக்கு என்ன குறை இருக்க முடியும் என்று மகிழ்ச்சியாகக் கேட்கிறார்.

கல்யாணானாம் அவிகலனிதிஹி
காபி காருண்ய சீமா.
நித்யாமோதா நிகமவசஸா
மௌளி மந்தார மாலா. //
இவ்வளவு கல்யாண குணங்கள்
உனக்கு அணிகலன் களாக இருக்கின்றன.
நித்யமாக திருமால் மார்பினில் வாசம் செய்கிறாய்.
அவனுக்குத்தான் என்ன அழகு (அளவில்லாத) உன்னால்!!
உங்களை அடைந்தால் அப்புறம் எங்களுக்கு ஏது
சோகம்/? என்று முடிக்கிறார்.
மஹாலக்ஷ்மியும், கோதையும் மாலுடன் மகிழ்ந்து இருந்து
நம்மையும் காப்பார்கள். காக்க வேண்டும்.

9 comments:

துளசி கோபால் said...

அருமை. பதிவும் படமும்.

ஆமாம். இந்த அருமையான படம் எங்கே இருந்து? ஹம்மா......

தி. ரா. ச.(T.R.C.) said...

எவள் வாக்கிற்கும், மனதுக்கும், அறியப்படமல் இருக்கிறாளோ அவள்தான் லக்ஷிமிதேவி.பலபதிவுகளிலும் அவளை பூரணமாக எழுதமுடியது.இருந்தாலும் சுருக்கமகா தாயாரைப்பற்றி சிறப்பாக பதிந்துள்ளீர்கள். நீங்கள் சொன்னது சரிதான் என் தாயரின் பெயரும் நாகலக்ஷிமி தான். தி ரா ச

Geetha Sambasivam said...

ரொம்ப நல்லா எழுதறீங்க மனு, ரொம்ப அனுபவிச்சு எழுதறீங்க.

வல்லிசிம்ஹன் said...

துளசி,எனக்கு இந்தப் படம் ஒரு கண்காட்சியில் பார்க்கக் கிடைத்தது. ரவிவர்மா பெயிண்டிங்ஸின் மறு பதிவாம்.
இந்தப் பெண் முகத்தில் எவ்வளவு இனிமையான அறியாமை பார்த்தீங்களா?அம்மா ஆகப்போகும் குழந்தை!

வல்லிசிம்ஹன் said...

தி.ரா.ச,
எவ்வளவு பேரு முயற்சி செய்தும் இவர்களைப் புகழ்ந்து ஆரங்கள் சூட்டின போதும், அவர்கள் ஆரம்பிப்பது என்னவோஇந்த பெரிய சமுத்திரத்தின் கரையில் நிற்கும் என்னை,காப்பத்து என்பதுதான்.
நான் , சும்மா, படித்ததில் ஒரு துளி எழுதுவதற்கு முன்னால் ,தவறாக ஏதுன் எழுதக்கூடாதுனு பயம் வரும்.உடனே நிறுத்திவிடுவேன். தி.ரா.ச நன்றி.

வல்லிசிம்ஹன் said...

உணர்ச்சியான பின்னூட்டத்துக்கு நன்றி
கீதா.தி.ரா.ச. சொன்னது போல் இவர்கள் எல்லாம் வார்த்தைகளில்
அடக்கக் கூடிய சப்ஜெச்ட் இல்லயே.

துளசி கோபால் said...

ரவிவர்மா படங்களோட ரிப்ளிகா சிலதை ஒரு சமயம் அண்ணாசாலை ஹிக்கின்ஸ்பாதமில் பார்த்தேன். அப்ப்புறம் வரலாம் என்று இருந்துவிட்டு அந்த முறை வாங்ஹ்க முடியாமல் போச்சு. இந்த முறையும் சந்தர்ப்பம் வரவில்லை.
இருக்கவே இருக்கு அடுத்த முறை.
நம்பிக்கைதானே வாழ்க்கை:-)))

ambi said...

அருமையான பதிவு. தாயாரை பற்றி சிறந்த விளக்கம். நான் வந்து ரொம்ப நாள் ஆச்சு, இல்லையா?
அந்த தாயார் தான் என்னை மறுபடி வர வைத்தாளோ என்னவோ?

வல்லிசிம்ஹன் said...

அம்பி, உங்க பாட்டுப் போட்டி படிச்சேன்.
என்ன பாட்டு பாடினீஙகளோ.
இண்டரஸ்ட் எடுத்து படிச்சதுக்கு தான்க்ஸ்.//அனந்தராம தீக்ஷிதர் ஒரு உபன்யாசத்தில் சொல்வார்.ஆயிரம் நாவு கொண்ட ஆதிசெஷனாலேயே உன்னைப் பாட முடியாது, நான் எம்மாத்திரம் // என்று.
நமக்கு இருக்கிற இரு நாக்கு,துள்யூண்டு அறிவு வைத்துக்கொண்டு ஒரு பக்கத்தில் எழுதுகிரேன்.