சீதா அம்மாவைப் பற்றி சொல்லாமல் ராமாயணம் ஏது?
நேபாலில் இருக்கும் ஜனகபுரியில் இருக்கிறது ராமனுக்கு வாய்த்த சீதனம் ஆன சீதையின் பிறப்பிடம்.
பொறுமைக்கு பூமாதேவி. அவளுக்கு சீதை மகள்.
சில சமயங்களில் குழந்தைகள் கேட்கும் சீதை ஏன் பொறுமையாக இருந்தாள்? எத்தனையொ கேட்டிருக்கலாமே ராமனிடம் ஏன் இப்படி எனக்கு மத்திரம் தீராத சோதனை? ஏன் ஒரு சக்கிரவர்த்தியின் மகள்,இன்னொருவரின் மருமகள்,உன் மனைவி எனக்கே இவ்வளவு சோதனை என்றால் , சாதாரணப் பெண்களின்
கதி என்ன என்று யோசிப்பதாக வால்மீகி ராமாயணத்தில் காட்சி வரும்.அதற்கு என்ன விடை கிடைத்தது என்பதைப் பற்றி இப்போது ஆலோசனை இல்லை.
ஏனென்றால் இது இப்போதும் தொடரும் கேள்வி.மனைவியோ கணவனோ அமைவது இறைவன் கொடுத்த வரம் தான்.
ஒரு மண்டோதரியோ,சீதையோ இருக்கும்போது ஒரு இராவணனும் ஒரு இராமனும் இருக்கிறார்கள். ஒரு சூர்ப்பனகை இருக்கிறாள்.தாரையும் உண்டு. கௌசல்யா,கைகேயி,சுமித்திரையும் உண்டு. எல்லாமே கதை என்று ஒதுக்கி விட முடியாது.
புராணமோ ,நடந்ததோ எதுவாக இருந்தாலும்,
நீதி வழுவாத அரசு வாழும். நேர்மையாகச் சிந்திக்கத் தெரிந்தவர்கள் சுகம் அடைவார்கள். சுகம் என்பது என்ன என்பதற்குத் தனிப் பதிவு தான் போட வேண்டும்.
சீதை வந்தாள்,சிரமப்பட்டாள் என்று பூர்த்தி செய்ய மனமில்லை.அவள் தான் அம்மாவின் வீட்டிற்குப் போகிறாளே. இனி அடுத்த அவதாரத்திலே சத்யபாமாவாக வந்து வீர தீரமாகப் பரிமளிப்பாள். கிருஷ்ணனின் செல்ல மனைவியாக.
13 comments:
ஆஹா.... ஜனகாபுரி மாளிகையா?
அரண்மனையேதானா?
அட்டகாசம்.
'சீதம்மா மாயம்மா'
அருமை.
ஆமாம் துளசி அப்படித்தான் சொல்கிறார்கள்.ஜபல்பூர் சர்மா என்பவர் எழுதின கட்டுரையில் படித்தேன்.
எந்த ராஜா கட்டினாரோ.கண்டிப்பாக திரேதாயுகத்திலிருந்து வந்து இருக்க முடியாது.மறக்காமல் வருவதற்கு ரொம்ப நன்றி.:-)
நன்றி, ரவி.சுரதா ஐயா பற்றிய பதிவு நெகிழவைத்தது.
வல்லி அம்மா "சீதாயாச்சரிதம் மகது."சீதையின் பெருமைக்கு ராமன் பெருமை நிகராகது. ஏனென்றால் தன்னுடைய பெருமையும் ராமனுக்கே அர்பணித்துவிட்டாள் லக்ஷ்மண்னின் பிரிவு தாங்காமல "தேசே தேசே களத்திரானி" என்று சொன்னவர்தனே இரமார்.திரு. ச்ரிநிவாசாச்சாரியார் ராமாயண உபன்யாசம் (1940)செய்தபோது சுந்தரகாண்டத்தில் சீதையுடைய கஷ்டத்தைப்பற்றி விவரிக்குபோது அவரால் பேசமுடியாமல் அழுது கொண்டே பாதியில் நிறுத்திவிட்டு சென்றுவிட்டர். இத்தனைக்கும் அவர் ஆங்கிலத்தில் சண்ட மாருத ஆங்கிலேயர்களே வியக்கும்வண்ணம் பேசும் வல்லமையுள்ளவர்.இராவனுனுக்கே கருணைகாட்டி நல்லவனாகமாறு என்று உபதேசம் செய்தவர்.பெருமையென்றால் என் ஓட்டு சீதைக்குதான். அன்பன் தி ரா ச
தி.ரா.ச,எல்லா மனைவிகளும் சீதயாக முடியாது. எல்லா கணவரும் ராமன் ஆக முடியாது.சீதாஅம்மாவே முதல்தான்.அதில் சந்தேகமே வெண்டாம்.அவளுக்கு ராமனை விட்டால் வேறு உலகம் தெரியாமல் வளர்த்துவிட்டார்கள்.அவனுடைய திருமார்பை விட்டு அகன்றதலிருந்து அவனைத் திரும்பவும் அடைய வேண்டித் தவம் இருந்தாள்.பூமாதாவின் புதல்விப் பொறுமையாகவே இருந்தாள். இவருக்கு அவளும் one more citizen.அவருடைய பரந்த சாம்ரஜ்ஜியத்தையும் பாதுகாக்கும் கடமை,தந்தை சொல்,சகோதரபாசம் இவைகளையும் மீறித் தான் சீதையை அவர் கணவனாக அன்பின் அருமையைக் காண, காண்பிக்க வேண்டி வந்தது.அதுதான் ராமாயணம்.எனக்கு இருவருமே வேண்டும்.இன்னோரு போஸ்ட்.
valli amma
I worship seetha. I worship RAMA namam. now u will understand Whose follower I am. trc.
வள்ளி,, இன்னிக்கு தற்செயலாக வால்மீகி ராமாயணத்திலே சீதை காட்டுக்குப் போன உத்திர காண்டத்தைப் பற்றிப் படித்துக் கொண்டிருந்தேன், ஒரு சந்தேக நிவர்த்திக்காக. உங்க வலைப்பூவிற்கு வந்தால் சீதையே காட்சி கொடுக்கிறாள். நான் அன்று வந்தபோது மஹாலக்ஷ்மி, இன்று அவளின் இன்னொரு பரிணாமம். அவளின் கஷ்டத்திற்குக் காரணம் படித்தேன். ஒரு இரண்டு மூன்று பதிவு போடலாம். அவ்வளவு விஷயம் இருக்கிறது. எதை எழுத, எதை விட?
அப்புறம் ஒரு விஷயம், என்னோட ஒரிஜினல் பேரே சீதாலக்ஷ்மிதான். எங்க வீட்டிலே தடுக்கி விழுந்தா சீதாலக்ஷ்மிதான்.
And I understand. we all cannot pray to one and leave the other. kadaisiyil ellaam oNNUthane.
கீதா. சீதை பட்ட துன்பம் யாரால் பட முடியும்.உத்தர காண்டம் படிக்க மனசு வருவதே ஒரு ப்லெஸ்ஸீங்க் தான். என்னுடைய இன்னோரு ப்லோகில் (பொருனை) ஜயராமன் என்பவர் எழுதி இருக்கிறார். இத்தனை படித்தவர்கள் மத்தியில் எழுத யோசிக்கத்தான் வேண்டும்.
எல்லாம் சரிதான், ஆனால் கிருஷ்ணாவதாரத்தில் வருவது சத்யபாமாவாக அல்ல, ருக்மிணியாக. ருக்மிணி ஸ்ரீதேவி, சத்யபாமா பூதேவி.
இன்னும் உங்களுக்கு ஸ்ரீ எழுத்து பிடிபடவில்லை என நினைக்கிறேன். நான் கொடுத்துள்ள ஸ்ரீ யை நகலெடுத்து ஒட்டவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வணக்கம் சார்.பூதேவியின் மகளாக
சீதை அவதாரம் என்றும்,மஹாலக்ஷ்மி விஷ்ணுவைப் பிரிந்து பூமிக்கு வந்தாள் என்றும் இரு வேறு எண்ணங்களைக் கொண்டதால் வந்த சிந்தனை இது.னரகாசுரன் பூதேவியின் மகன் அவனை மறுபடி நல் வழிப்படுத்த சத்யபாமவாகத் தேரோட்டி க்ரிஷ்ணனுடன் அவனை வென்றாள்,என்றூ படித்த பாதிப்பு.தப்புதான் நான் எழுதியது. ச்ரி எழுதிப் பழகுகிறேன்.நன்றி டோண்டு சார்.
geetha,சீதாலக்ஷ்மியா?
என்னுடன் திண்டுக்கல்லில் ஒரு சீதாலக்ஷ்மி படித்தாள்.அவள் நினைவுதான் வருகிரது. ரொம்ப நன்றிம்மா.
எங்கள் வீட்டில் தடுக்கினால் விஜயலக்ஷ்மி கிடைப்பாள்.:-))
Post a Comment