Monday, June 01, 2026

நயாகரா 2008 ஆம் வருடம்

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.


கண்ணாமூச்சி ஆடும் நதி  சாலையோடு  வந்து கொண்டிருந்தது.




நம்ம் ஊரில் இப்படி ஒரு சாலை நினைவுக்கு வரூகிறது.
கரூர் சேலம் பாதைதான் அது.அகண்ட காவேரியில்லிருந்து பிரிந்து வரும் ஒரு அகண்ட வாய்க்கால் தண்ணீர் சலசலக்க பஸ்ஸோடூ கூடவரும்.
அந்தப்ப் பதினெட்டு வயதுக் கனவில் மூழ்கீய நாட்களில் ஒவ்வோருபயணமும் குட்டியோ ,,பெரிசோ
அலுப்பே தட்டாது. 




 மஹா  பெரிய
வாடகைக்காரில் பயணம் செய்து எம்பசி (ஹோட்டல்) ஸ்வீட்ஸில் 34ஆவது மாடிக்குப் போகையில் பேரனுக்கு இருந்த சந்தோஷம் சொல்லி முடியாது:))))))

அதுவும் அறைக் கதவைத் திறந்ததும் தெரிந்த காட்சி ....நயாகரா நயாகரா.
எல்லோரும்
ஓடிவிட்டோம் அந்த   ஜன்னல் பக்கம்.
அப்போதிருந்து எடுத்த படங்கள்
இன்னும் (வலையில் ஏற்றாதது) நிறைய இருக்கின்றன.முதல்
நாள்நாங்கள் போக விரும்பிய இடம் காசூ நிறைய புழங்குமே காசினோ...அங்க.
ஆளுக்கு பத்து கனடியன் டாலர் மாற்றிக் கொண்டோம்.
நான் கவனமாக கைக்கடிகாரத்தைக் கழட்டீவைத்தூவிட்டேன்.
எல்லாம் ஒர்
முன்னேற்பாடு தான். நம்மை மீறி தர்மபுத்திரர் வெறி வந்துவிட்டால்:)

மாப்பிள்ளை அழைத்துப் போனார். அப்ப நேரம் இரவு10 இருக்கும். பெண் அரை மணி
நேரத்தில் வரலை என்றால் கதவு திறக்கப் படாது என்று சிரித்தாள்.
பெரிய பேரனுக்கு ஒரே வருத்தம்.
இதெல்லாம் தப்பு தாத்தா. யூ ஷுட் நாட் டூ இட். வேணுமானால்
நான் ஹெல்புக்கு வரேன். என் கிட்ட 100 டாலர் இருக்கு என்றானே பார்க்கணும்:)
அவன் வயசுப் பையன்களை விட மாட்டார்கள்
என்று தெரிந்ததும் சப்பென்று போய் விட்டது:)

அத்தனாம் பெரிய இடத்தை நான் பார்த்ததே இல்லை.
வரிசை வரிசையாக ஸ்லாட் மெஷின்கள். இரவு பகல் என்று பாராமல் விளையாடும் மனிதர்கள் மனுஷிகள். பாட்டி தாத்தாக்கள்.
அவர்களுக்கு வேண்டும்(பான வகையறாக்கள்) என்பதை தர பணியாளர்கள். பூம் பூமென்று அலறும் இசை.
கர்மமே கண்ணாயினாராக ஏதோ ஒரு கணக்கோடு விளையாடும்
அவர்கள், ஒரு ஆயிரம் பேராவது இருக்கும்.

மாப்பிள்ளை எப்படி விளையாடவேண்டும் என்று காண்பித்தார்.
பத்தே நிமிடத்தில் எங்கள் பத்து டாலரை அந்த யந்திரம் முழுங்கிவிட்டது.
சரி நமக்குக் கட்டுப்படியாகாது என்று நினைத்தவாறு எழுந்துவிட்டோம்.

 பக்கத்திலிருந்த
பணக்காரப் பாட்டி, இன்னோரு நூறு டாலரை
மாற்றிக்கொண்டிருந்தாள்.:)
ஏற்கனவே ஜெயித்த பணத்தை அழகாகப் பையில் போட்டுக் கொண்டாள்.அவள் அநேகமாக அடுத்த நாள் காலை வரை இருப்பாள் என்று நினைத்தபடி ,காலாற அருவியைப் பார்க்க நடந்தோம்.




 Slot machines .Casino in Niagara.

11 comments:

வெங்கட் நாகராஜ் said...

அனுபவங்கள் சிறப்பு. பயணம் என்றாலே இனிமை தான். காசினோ அனுபவங்கள் ரசனை. Just for fun என்றால் ஓகே... அதிலே மூழ்கிவிட்டால் ஆபத்து.

தொடர்கிறேன் மா.

ஸ்ரீராம். said...

கடைசி காணொளியில் மட்டும் கொஞ்சூண்டு நயாகராவைக் காட்டி இருக்கிறீர்கள்.ஃ 

ஸ்ரீராம். said...

காசினோ சுவாரஸ்யம்தான்,  ஆனால் பெரும் போதை.    அந்த ஊர் காசினோக்களை நான் ஜேம்ஸ்பாண்ட் படங்களில் பார்த்திருக்கிறேன்!  சிரித்துக் கொண்டே எதிராளியின் ஃபிராடை வெளிப்படுத்தியவாறு இவர் ஜெயிப்பார்!

ஸ்ரீராம். said...

களவும் கற்று மற என்பது போல சூதும் ஆடி மற!!!

ஸ்ரீராம். said...

உள்ளே சென்ற உடன் உடனடியாக பணம் வைத்து ஆடாமல் மற்றவர்கள் எப்படி ஆடுகிறார்கள், மெஷினின் லாஜிக் ஏதாவது கண்டு பிடிக்க முடிகிறதா என்று கொஞ்ச நேரம் ஸ்டடி செய்துகொண்டு விளையாடி இருக்கலாம்!!!!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட், வீட்டை விட்டுக் கிளம்பி விட்டால் ,சுமைகள் சற்றே இறங்கியது போல உணர்வோம்.பயணங்கள் தொந்தரவில்லாமல் இருந்தால்தான் இனிமை.. அப்படி அமைவது சில நேரங்களில் மட்டுமே. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

மற்ற படங்களையும் பதிகிறேன் மா ஶ்ரீராம். தடங்கலுக்கு வருந்துகிறேன்:)

வல்லிசிம்ஹன் said...

இந்தக் கசீனோ என்னை மாதிரி புதியவர்களுக்கு. நான் ,பத்து டாலர் இழந்ததும் கிளம்பிட்டேன்.
பிரமாதமான சூதாட்டம் இல்லை. இந்த இடத்தில் இந்தப் படம் என்று தீர்மானித்துப் பட்டனைத் தட்ட வேண்டும் ஜெயித்தால் பணம். சின்னப்பசங்க விளையாடும் கரடி ரயில் வண்டி மாதிரி.

வல்லிசிம்ஹன் said...

லாஜிக் பதிதாக ஒன்றும் இல்லை மா. இரண்டு ஆட்டம் தோற்றால், சமாளிக்கும் சூக்‌ஷ்மம் தெரிந்துவிடும்:)

மாதேவி said...

நயகரா பயணம் அனுபவங்கள் நன்று.

காவேரியையும் நினைவு கூர்ந்துள்ளீர்கள்.

கசீனோவும் அளவுக்கு மீறினால் போதைதான்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் அன்பு மாதேவி. நாம் தான் ஜாக்ரதையாக இருக்க வேண்டும். நான் அங்கே பத்துடாலர் ஜெயித்தேன். அதை அபடியே தொலைத்தும் விட்டேன்:) அந்த வலையில் மாட்டினால். மீள முடியாது. நன்றி மா. எப்பழுதும் நலமாக இருங்கள்.

நயாகரா 2008 ஆம் வருடம்

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும். கண்ணாமூச்சி ஆடும் நதி  சாலையோடு  வந்து கொண்டிருந்தது. நம்ம் ஊரில் இப்படி ஒரு சாலை நினைவுக்கு வரூக...