வல்லிசிம்ஹன்
அவன்....ஜானி என்னும் நம் ஜானகிராமன் , ரயில்வே இலாகாவில் வேலை
பார்த்த அப்பாவிற்கு முதல் மகனாகப் பிறந்து
பொறுப்புகள் சுமந்து வளர்ந்தவன்.
ஒரு அக்கா ,இரண்டு தங்கைகள் என்று ஆனந்தமும் பாசமும்
நிறைந்த ஆனால் சிக்கனமான சூழ்னிலை.
மகள்களின் திருமணங்கள், மகனின் படிப்பு
எல்லாவற்றுக்கும் மிகத் தீவிரமாக யோசித்து
சமமாகப் பங்கிட்டு செலவு செய்பவருக்குத்
தூணாகத் துணை இருந்தவன் ஜானி.
திருச்சியில் ஆரம்பித்த அவனுடைய மேல்படிப்பு,
பங்களூரில் தொடர்ந்து மேற்படிப்புக்கு
அமெரிக்கா செல்லும் வாய்ப்பில் நின்றபோதுதான்
நீலாவின் திருமணம் நடந்தது.
25 வயது வரை அவன் மனதை ஆக்கிரமித்து
இருந்த நீலாவை,மறக்கவும் முடியாமல்
நினைக்கவும் முடியாமல் அமெரிக்காவுக்குப்
பயணப்பட்டான்.
எவ்வளவு முயற்சி எடுத்துக் கொண்டாலும்
மானசீகமாக நீலாவின் வாழ்க்கையைத் தொடர்ந்தான்.
தந்தையின் 70ஆம் வயது பூர்த்திக்கு
திருச்சி வந்த போது,ஹோட்டல் சங்கத்தில்
பாலச்சந்திரனும் அவனுடைய தோழர்களும்
அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு,நிலை தடுமாறியதால்
ஹோட்டல் நிர்வாகத்தினரால் (மரியாதையாக)
வெளியே அனுப்பப் பட்டதைக் கண்டு மனம் வெதும்பிப்
போனான்.
நீலாவும் அவள் குழந்தைகளும் என்ன பாடு படுகிறார்களோ
என்ற வருத்தம் அவனைத் தாக்கியது. பெற்றோர்
காட்டிய வழியில் திருமணம் செய்யவும்
மனம் இடம் கொடுக்கவில்லை.அப்போது அவன் வயது 42.
தன் பெற்றோரைத் தன்னுடன் பாஸ்டனுக்கு
அழைத்துச் சென்று விட்டான்.
வயதான பெற்றோர் காசிப் பயணம் மேற்கொள்ள
ஆசைப்பட்ட போது,
இந்தியாவுக்கு வந்த போது அவனுக்கு வயது 50.
பாலச்சந்திரன் இறைவனடி சேர்ந்த செய்தியும்
கிடைத்தது.மனம் மிக வருத்தம் அடைந்தாலும்
நீலாவைப் போய்ப் பார்க்க மனம் இடம் கொடுக்கவில்லை.
அவனுடைய பெற்றோருக்கும் அவன் மனம் புரிந்த நிலையில்
அவன் அமெரிக்காவுக்குத் திரும்புவதைத் தடுக்கவில்லை.
தங்கள் மகள்களுடனேயே தங்கி விட முடிவெடுத்தார்கள்.அடுத்த
இரண்டு வருடங்களில் ஜானி,
சென்னையில் மயிலை நாகேஸ்வர ராவ் பூங்காவை ஒட்டி
புதிதாக எழும்பியிருந்த மூன்று படுக்கை அறைகள்
கொண்ட அபார்ட்மெண்ட் ஒன்றை விலைக்கு வாங்கும்
ஏற்பாடு செய்த போது அடுத்து அடுத்து இருந்த
வீடுகளை அவன் சகோதரிகள் வாங்கிக் கொண்டு அங்கே குடியிருக்க வரவும்
அவனுக்குக் கொஞ்சம் நிம்மதி கிடைத்தது. வருடம் 2016. வயது 52.
அவனுக்குத் தெரியாதது நீலாவும் தன் பெற்றோருடன்
மயிலாப்பூருக்கு இடம் பெயர்ந்ததுதான். தொடருவோம்......
15 comments:
என்ன அருமையான பாடல் பகிர்வு... இந்தப் பாடலை விடவும் 'இச மோடு ஸே ஜாத்தே ஹை' பாடல் இன்னமும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது.
கதையைத் தொடர்கிறேன். ஜானி நீலாவை தூரத்திலிருந்தே தொடர்ந்து கொண்டிருக்கிறான். இப்போது அருகே வேறு வரப்போகிறாள்.
வாழ்க வளமுடன் அக்கா, நான் ஊரில் இல்லை நேற்று தான் வந்தேன். உங்கள் கதையை முன் பகுதிகளை படித்து விட்டு வருகிறேன்.
மீண்டும் பதிவு எழுதுவது மகிழ்ச்சி.
வணக்கம் சகோதரி
கதை நன்றாகப் போகிறது. ஜானி வேறு எந்த பெண்ணையும் திருமணமே செய்து கொள்ளாமல், நீலாவையே மனதில் நினைத்தவாறு, அதே சமயத்தில் அவளுக்கு மணமாகி அவள் இல்லறத்தில் இணைத்திருப்பதையும் தெரிந்தபடியும், இருப்பதும் மனதளவில் அவனுக்கு ஒரு துறவு வாழ்க்கைத்தானே..! அவள் வாழ்வில் ஏற்பட்ட துன்பங்களை அவன் இப்போது அறிந்த போது அவனும் துடித்திருப்பான். இனி அவர்கள் ஒரே ஊரில் சேர்ந்திருக்க போகும் நிலையும் வந்துள்ளது. இனி தொடரும் கதையை நானும் தொடர்கிறேன்.
நீங்கள் பகிர்ந்த பாடல் நன்றாக உள்ளது. வரிகளின் அர்த்தம் புரியவில்லையெனினும் ரசித்தேன். நேற்று கொஞ்சம் வெளியில் சென்று விட்டமையால் பதிவுக்கு வர இயலவில்லை. மன்னிக்கவும் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பின் ஸ்ரீராம் போகி நன்னாள் வாழ்த்துகள். சுஜா, மகன்கள்.மருமகள் அனைவர்க்கும் ஆசிகள்.
இஸ் மோடு பே ஜாதே ஹைன் அவர்கள் காதலர்களாக
இருக்கும் போது பாடுவார்கள்.
இந்தப் பாடல் வாழ்வில் துன்பம் அனுபவித்த பின் சந்திக்கும் வேளை
சரியாக இருக்கும் என்று நினைத்தேன் மா.
ஆமாம் ஸ்ரீராம். அவர்களது அன்பில் ஸ்திரமாக
நம்பிக்கை வைத்தவன் ஜானி. அதற்காகக் கெடுதல் எதுவும் நினைக்கவும் இல்லை.
வாழ்வில் அலுத்து சலிக்கும் தருணம்
இருவரும் ஒரே இடத்தில் வசிக்கும் சந்தர்ப்பம். என்ன ஆகிறது என்று பிறகு
தெரியும்.:)
அன்பின் தங்கச்சி கோமதி,
இனிய போகித் திருனாள் நல் வாழ்த்துகள்.
ஆமாம் இந்தக் கதை ஏப்ரிலில் ஆரம்பித்துச் சிலபல காரணங்களால்
தொடராமல் விட்டு வைத்தேன்.
திடீரென்று இப்படியே விட்டு வைக்க வேண்டாம்
என்று தோன்றியதுமா.
ஊருக்குப் போய் வந்தவுடன் நீங்கள் இதைப் படித்ததே
மிக மகிழ்ச்சிமா. நமக்குள் இருக்கும் அன்பு போதும்.
வாழ்க வளமுடன்.
அன்பின் சகோதரி கமலா ஹரிஹரன்,
என்றும் நலமுடன் வாழப் பிரார்த்தனைகள்.
இனிய போகித் திருனாள் நல்வாழ்த்துகள். நீங்களும் குடும்பத்தாரும்
பழைமை நீங்கிப் புதுப் பொலிவுடன் தைமகள்
வளர நல்வாழ்த்துகள்.
என்னம்மா நீங்கள்!! வருத்தப்பட என்ன இருக்கிறது.
இந்தக் கதையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றுதான்
ஆரம்பித்தேன்.இரண்டு நாட்களுக்கு ஒரு பதிவு தான் முடிகிறது.
நீங்கள் அருமையாகப் படித்துவிட்டுப் பின்னூட்டமும் இட்டிருக்கிறீர்கள்.
மனதுக்கு எவ்வளவு மகிழ்ச்சி தருகிறது தெரியுமா.
மனம் நிறை நன்றி. ஜானகிராமன் மனம் நிறைய காதலுடன்
பொன்போல நினைத்துக் காத்தான்.
இப்பொழுது இருவருக்கும் சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்கலாம்,
அடுத்த பதிவில் எழுதி விடுகிறேன்.
அவன் இன்னும் அமெரிக்காவில் இருக்கிறான் அம்மா:)
நீங்கள் பகிர்ந்த பாடல் நன்றாக உள்ளது. வரிகளின் அர்த்தம் புரியவில்லையெனினும் ரசித்தேன். ''அருமையான அர்த்தம் கொண்ட பாடல்மா.
என் வாழ்க்கையில் நீ இல்லாததுதான் ஒரு பெரிய குறை. வேறு ஒரு குறையும் இல்லை
என்று பொருள் வரும் கமலா மா.
ஜானி பாவம். உண்மையான அன்பு. ஆனால் பாருங்க நீலாவைப் பற்றி அவ்வப்போது எல்லாம் தெரிந்து கொண்டேதான் இருந்திருக்கிறார்.
பாடல்கள் எல்லாமே பொருத்தம் சூப்பர். எப்படி டக்குனு பொருத்தமா எடுத்துப் போடறீங்க அம்மா!!!
கீதா
வயசானா என்ன? நீலாவின் கணவனும் இல்லை. இப்பவானும் இருவரும் ஒருவருக்கொருவர் துணையாகச் சேர்ந்து வாழலாமே. உலகம் என்ன வேணா சொல்லிக்கட்டும். சேரணும் என்று மனம் விரும்புகிறது
கீதா
ஓ அதான் முழுமை பெற்ற காதல்னு சொல்லியிருக்கீங்களோ!!!
கீதா
உண்மைதான் அன்பு கீதாமா,
கண்ட நாள் முதலாய் என்று பழைய பாடல் ஒன்று வரும்.
அந்த வரிகளைப் போல் அவன் தன் அன்பை
மறக்கவில்லை. இந்த நாட்களில்
இது போன்ற மனிதர்களைப் பார்ப்பது மிக மிக அபூர்வம்.
மிக நன்றி கீதா. என்றும் வளமுடன் இருக்கவும்
அன்பின் கீதாரங்கன் மா,
நீங்கள் சொல்வது உண்மைதான்.
ஆனால் ஒரு கட்டுப்பாடான பரம்பரையில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு
விதி முறைகளை மீறுவது சிரமமே.
என்ன நடந்தது என்பதைப் பார்த்து விடலாம்:)
நன்றி மா.
அதே கீதாமா,
அன்பு உண்மையாயிருந்தால் உன்னை
அழைக்கும் என்பது பழைய பாடல்
அது போல் இவர்களும் ஒன்று சேருவது
இனிமையாகத் தான் இருக்கும்.
Post a Comment