வல்லிசிம்ஹன்
எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.
திருச்சி ஜங்க்ஷனில் பார்த்துதான் கடைசி, நீலாவும் ஜானகிராமனும்
வாழ்வின் விறு விறுப்பான நிகழ்வுகளில்
அடித்துச் செல்லப்பட்டனர்.
நீலா சென்னையில் பாட்டி வீட்டில் தங்கி படித்தாள் அப்பொழுது ஏற்பட்ட
தோழமை(கலா) இது வரை தொடர்ந்திருக்கிறது!
ஜானி பங்களூர் இந்தியன் சயின்ஸ் கல்லூரியில்
ஸ்காலர்ஷிப் கிடைத்துப் படிக்கச் சென்றான்.
இருவரும் ஒருவரை ஒருவர் மறக்கவில்லை.
ஜானி காட்டிய மும்முரம் , ரிசர்ச் பக்கம் அவனை இழுத்தது.
நீலா எம் ஏ ஆங்கிலம் முடித்ததும்
அவள் தந்தைக்குத் திடீரென்று உடல் நலம் குன்றியது.
மனதால் பலவீனம் அடைந்துவிட்டார்.
இரண்டு பெண்களையும் மணம் முடிக்க வேண்டும் என்ற அவசரம் அவருக்கு வந்தது.
நீலாவின் மனதை ஓரளவு அறிந்திருந்த அவள் அம்மா
ஜானியை நீலாவுக்கு மணம் முடிக்க நினைத்தாலும்,
அப்பாவுக்கு அவர்களது நிதி நிலைமை திருப்தி அளிக்கவில்லை.
இன்னும் சிறப்பான செல்வம் நிறை வரன் வந்ததும்
மகளின் மனம் தெரிந்திருந்ததும் திருச்சியில் இருந்த செல்வந்தர் வீட்டில்
அவளை மணம் முடித்தார்.
23 வயதில் அப்பாவை எதிர்க்கும் மன நிலையில் நீலா இல்லை.
மணம் முடித்த பாலச் சந்திரனிடம் பெரிய ஈர்ப்பும் இல்லை.
அவனும் அவளிடம் பெரிதாக எதையும் எதிர்பார்க்கவில்லை.
அவனுக்குத் தெரிந்தது பிடித்தது அவர்களது சர்க்கரை ஆலையை
மேலும் மேலும் முன்னேற்றுவதில்தான் அவன் கவனம்.
முன்னேற்றுவதில்தான் அவன் கவனம்.
மனம் என்பது சில பேருக்குத் தான் தன் கதவைத் திறக்கும்
என்பதை தி ஜானகிராமன் நாவல்களைப்
படிக்கும்போதே உணர்ந்திருந்தவள் நீலா.
அதையும் மீறி நீலா பாலச்சந்திரன் தம்பதிகளுக்கு
ஒரு ஆணும் பெண்ணுமாக இரண்டு குழந்தைகள் பிறந்தன.
முதலில் பிறந்த பெண்ணுக்கு ஜானவி என்று பெயர் வைத்தாள் நீலா.
மகனுக்குச் சந்திரகாந்த் என்று கணவன் பாலு பெயர் சூட்டினான்.
இதற்கு நடுவில் திண்டுக்கல்லுக்கு வந்த ஜானி,
நீலாவின் திருமண செய்தி அறிந்ததும்,
தன் பெற்றோரை வற்புறுத்தித் தன்னுடனே பங்களூரில்
வசிக்க அழைத்துச் சென்றான்,
திருமணம் முடிந்த 25 ஆம் வருடம் ,மகள் திருமணம்
விசேஷமாக நடத்தி முடிந்த நிலையில்
கணவனைத் தன் 48 வயதில் இழந்தாள் நீலா.
வெளி நாட்டுப் பயணங்கள், அளவில்லாத சாப்பாடு,
கடினமான உழைப்பு பாலச் சந்திரனைப்
பாதித்து அவளது மண வாழ்க்கையை முடித்தது.
அதிக நாள் வருத்தப் படக் கூட அவளுக்கு நேரம் இல்லை.
தொழிற்சாலையை ஏற்று நடத்த வேண்டிய சூழலுக்கு வந்தாள்.
மீண்டும் பார்க்கலாம்.
4 comments:
தொடர்கிறேன். உங்கள் எழுத்து ஆழ்மன உணர்வுகளை அழகாக சொல்லி வசீகரிக்கிறது.
நீலாவின் நிலை வருத்தப்பட வைக்கிறது. விரும்பிய வாழ்க்கை எல்லோருக்கும் அமைவதில்லை. இவர்கள் சந்தித்துக் கொள்ளும் நாளில் நீலாவின் கணவன் இந்த உலகில் இல்லை என்பது கூடுதல் தகவல்! காத்திருக்கிறேன்.
இந்தப் பாடல் எனக்கு கேட்ட நினைவில்லை.
பல சமயங்களில் முடிவுகள் ஒவ்வொருவர் மீதும் திணிக்கப்படுகின்றன என்பதை இந்தக் கதையும் உணர்த்துகிறது.
தொடர்கிறேன்.
Post a Comment