ஏப்ரில் மாதம் 2024இல் ஒரு கதையைப் பாதியிலேயே நிறுத்தி இருந்தேன்.
புது வருடமும் பிறந்து விட்டது.
எழுதுவதற்கு எத்தனையோ இருந்தும்
கணினியைத் திறந்து எழுத முடியாத குழப்ப மன நிலை.
இன்றாவது தொடர மனம் வந்தது மகிழ்வே,.
மூளைக்கும் வேலை கிடைத்தது.
விரல்களுக்கும் விடுதலை கிடைக்கிறது.
வேலை செய்தால்தான் முதுமை நோய்
அண்டாமல் இருக்கும் என்பது தற்போதைய
தாரக மந்திரம்.
# கதை நின்ற இடம் தஞ்சாவூரிலிருந்து மதராஸ் திரும்பும் சோழன் எக்ஸ்ப்ரஸ்
என்று இப்போது அழைக்கப் படும்( பழைய போட்மெயில்) ரயில்..
பதின்ம வயது நீலாவும் ஜானகிராமனும் தற்காலிகமாகப் பிரிகிறார்கள்.
மீண்டும் சந்திக்கும் போது இருவருக்கும் 60 வயதை நெருங்கிய
இள !!!!!!!!!முதுமைக் காலம். ....தொடரலாமா?
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
கதை ரயிலில் நின்ற இடம் திருச்சி ஜங்க்ஷன். கதையின் ஹீரோ
செயிண்ட் ஜோசஃப் கல்லூரியில் படிப்பவன். 18வயது.
நாயகி நீலா 16. திண்டுக்கல்லில் பள்ளிப் படிப்பில் .தஞ்சாவூர் திருமணம் ஒன்றில்
சிறுவயது முதல் பழகிய பாசத்திற்குப்
புது உணர்வு காண்கிறார்கள் .
ஜன்னலோரம் அமர்ந்திருந்த நீலாவின் கண்களில்
நீர்.
ஜானகிராமனை மீண்டும் பார்ப்போமா என்ற கவலை.
அவனும் மனம் கலங்கினாலும்
வெளியே காட்டிக்கொள்ளவில்லை.
எல்லோரிடமும் விடை பெற்றுக்கொண்டு நீலாவிடம் கண்களாலயே
விடை பெற்று இறங்கி நடந்து சென்று விட்டான்.
இவர்கள் மீண்டும் சந்திப்பது 2024இல் .
அவனது 60 வயதில், அவளது 58 வயதில்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பிரிந்தது 1985இல் மீண்டும் சந்தித்தது 2024இல்
நடுவில் நடந்தது என்ன என்பதுதான் இனி நான்
சொல்ல வேண்டும்.
+++++++++++++++++++++++++++++++++
நீலா பழைய நினைவுகளிலிருந்து மீண்ட போது
அவர்கள் குழு ஏற்பாடு செய்த லக்சரி கோச்சில்
ஏறிக்கொண்டிருந்தது.
நீலாவும் அவள் தோழியும் முன்பிருந்த இருக்கைகளில் அமர
ஜானகிராமனும் அவர் தோழனும் மறுபக்கம் அமர
அவர்கள் பஸ் பாரீஸ் கார்னருக்கு விரைந்தது.
முழுமை பெற்ற காதல் தொடரும்.
15 comments:
எழுதுவதற்கு எத்தனையோ இருந்தும்
கணினியைத் திறந்து எழுத முடியாத குழப்ப மன நிலை.//
ஹைஃபைவ்!!! ஹாஹாஹா என்னையும் சேர்த்துக்கோங்க அம்மா!
கீதா
அம்மா ஆஆஆ குட்டிய ஆர்வத்தைக் கிளப்பி விட்டுட்டீங்க.....முன்பு எழுதிய கதை எடுத்துவிடுகிறேன்....வாசிக்க.
கீதா
ஆஹா... வந்துட்டாங்கையா வந்துட்டாங்க. புத்தாண்டில் வீறுகொண்டு வந்துட்டாங்க. இனி தொடர்ந்து பதிவுகள் எதிர்பார்க்கலாமா?
பழைய லிங்கையும் எடுத்துவிட்டேன், அம்மா வாசித்தேன் செம சுவாரசியமா சொல்லறீங்க! உங்க சித்தப்பா பெண் கதாநாயகி! அதைத் தொடர்ந்து வாசித்துவிடுவேன். நிறுத்தியது வரை!
ரொம்ப அழகாகக் கதை எழுத வருகிறது அம்மா உங்களுக்கு. நிஜமா....
கீதா
இதென்னம்மா இவ்வளவு சுருக்கமாக....
சரி... தொடருங்கள்.
அவ்வப்போது தொடர்ந்து இணையம் பக்கம் வந்தால்தான் உங்கள் மனமும் உற்சாகமாக இருக்கும். நீங்கள் சொல்லி இருப்பது போல ஏதோ ஒரு வேலையில் என்கேஜ் ஆகி இருப்பீர்கள்.
பன்னீர் புஷ்பங்கள் நான் அப்போது ரசித்துப் பார்த்த படம். இந்தப் பாடலும் இனிமையாக இருக்கும். பூந்தளிராடை என்னும் பாடலும் அருமையாக இருக்கும். இதில் முதலில் பிரதாப் ரோலில் கமல் நடிப்பதாக இருந்ததாம்.
ஆஹா.... மீண்டும் உங்கள் பதிவுகள்.... படிக்க ஆவலுடன் நானும். தொடரட்டும் பதிவுகள் மா...
பன்னீர் புஷ்பங்கள் படத்தை என்னால் மறக்க முடியாது. காலேஜ் ஹாஸ்டல் முதல் வருடம். ஜங்ஷன் பூர்ணகலாவில் மாலை 6 1/2 மணிக்கு அலைகள் ஓய்வதில்லை படம் பார்த்துவிட்டு, 9 மணிக்கு (பார்வதி தியேட்டர் என்று நினைவு) பன்னீர் புஷ்பங்கள் படம் பார்த்துவிட்டு நள்ளிரவில், ஹாஸ்டல் நண்பர்களோடு ஹாஸ்டலுக்கு வந்து, வாட்ச்மேனுக்குத் தெரியாமல் கதவைத் தாண்டிக் குதித்து உள்ளே வந்து சேர்ந்தோம். எப்போதும் போல, நான் நல்ல பிள்ளை என்று நம்பப்பட்டதால், மற்றவர்கள் மாட்டிக்கொண்டார்கள்.
வணக்கம் சகோதரி
நலமா? எப்படியிருக்கிறீர்கள்.? உங்களுக்கும் மற்றும் உங்கள் வீட்டில் அனைவருக்கும் எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் சகோதரி. தங்கள் வருகை மகிழ்வை தருகிறது சகோதரி.
இந்தக் கதை நினைவில் உள்ளது. இப்போது தொடர்வதற்கு மகிழ்ச்சி. தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் எழுத்தில் படிக்க ஆவலாக உள்ளேன். நடுவில் எழுத முடியாமல் போனது போகட்டும். இந்த வருடத்திலிருந்து தொடர்ந்து உங்களின் அனுபவப்பூர்வமான அருமையான எழுத்தைத் தாருங்கள். படிக்க காத்திருக்கிறோம். தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பின் கீதா ரங்கன்,
நலமுடன் இருங்கள். ஸ்டார்ட்டிங்க் டிரப்ள் தெரியாதா. நினைத்ததை
வடிக்கப் புது ஆப் வந்தால் நன்றாக இருக்கும் அம்மா. ..நன்றி ராஜா.
ஹை பைவ் கொடுத்தாச்சு.:) இப்பத்தான் முதல் கோச் எஞ்சினோடு சேர்ந்திருக்கு..
ரயில் வேகம் எடுக்கட்டும்:)
:)அன்பு முரளிமா வளமுடன் இருங்கள்.
வீறு கொண்டு எழுந்திருக்க வைத்தது என் மகள்.
ஏம்மா எழுத மாட்டேங்க்கறேன்னு ஒரே நச்சு:)
பல மன நிலைகளில் இருந்து வெளி வரவேண்டும். பார்க்கலாம்.மிக நன்றி மா.
Chiththappaa penn? Please give me link maa:) thank you Geetha maa
அன்பின் ஸ்ரீராம்,
ரொம்ப நன்றி ராஜா. எழுத ஆசை இல்லாமல் இல்லை.
விடாது கறுப்புன்னு தலைவலி விடுவதில்லை.
நிறைய பாடல்கள் தான் கேட்கிறேன். 2023ல சென்னை வந்தது. அந்த ஏக்கம் வேற குழப்புகிறது. என் மன வலையிலிருந்து இந்த
வலைக்குள் வர பிரயத்தனப் பட வேண்டி இருக்கு.
ஸாரி. இனிமேல் எழுத முயற்சிக்கிறேன்.
சுருக்கமே எனக்குப் பிரம்மாண்ட எஃப்ஃபர்ட் ஆகி விட்டது மா.
அன்பின் வெங்கட் நலமாப்பா.
நான் எழுதாதது தவிர யாரையும் படிக்கக் கூட இல்லை. நிறைய நல்ல விஷயங்களையும் மிஸ் செய்திருக்கிறேன்.
இனி வெய்யில் வர வர என் உடலும் மனமும் சுறு சுறுப்பாகும் என்று நம்புகிறேன் ராஜா.
நலமுடன் இருங்கள்.
Post a Comment