வாழ்வின் பல விதமான கட்டங்களைக் கடந்து வருகிறோம். அலைகள் ஓயும். என்று மட்டும் நினைக்க
முடிவதில்லை.
இன்னிக்குக் கடந்ததா நாளை நல்ல நாள் என்றே நம்புகிறோம். எத்தனையொ. நற்செய்திகளைச் சொல்ல. இணையத்தில் பல பேச்சுகளைக் கேட்கிறோம்.
மனசுக்குத் தெளிவு தான் இல்லை.
அவரவர் அனுபவம் வேறு வேறு இல்லையா.
ஏதோ ஒரு திரைப்பட வசனம் நினைவில் வருகிறது. நாமெல்லாம் வேற வீட்டில பிறந்து இருக்க லாம்னு ஒரு குழந்த சொல்லும்.:))
பிரச்சனைகள் வரத்தான் செய்யும்.
தாண்டி வருவோம்.
6 comments:
இன்று இப்படி இருந்தால் நன்றாயிருக்கும் என்று நினைக்கிறோம். அப்படி அமைந்த பிறகுதான் அதில் உள்ள சாதக பாதகங்கள் தெரிய வருகிறது. இறைவனுக்குத் தெரியும் எதை, எப்போது நமக்கு கொடுக்க வேண்டுமென்று என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்!
நாமெல்லாம் வேற வீட்டில் பிறந்திருக்கலாம் என்று வரும் வசனம் அழகன் படத்தில் வரும். படத்தில் அதற்கு ஒரு நல்ல அழுத்தமான ட்விஸ்ட்டும் வைத்திருப்பார் கேபி.
இதுவும் கடந்து போகும் என்றுதான் ஒவ்வொரு தினமும்....இல்லையா அம்மா...
கீதா
அன்பின் ஸ்ரீராம்,
என்றும் நலமுடன் இருக்க பிரார்த்தனைகள்.
உண்மைதான் அவருக்குத் தெரியும் எப்பொழுது என்ன கொடுக்க
வேண்டும் என்று.
விட்டால் போதும் என்ற நிலைமை எனக்கு.
நன்றி மா.
நீங்கள் சொன்னதும் அழகன் படம் பார்த்தேன் மா ஸ்ரீராம்.
நல்ல படம் நல்ல பாடல்கள்.
அந்தக் குழந்தை சொல்வதும்,
அதற்கு நேர் எதிராகக் கதை அமைந்திருப்பதும் சுவை. வாழ்வில் எத்தனையோ
நிகழ்ச்சிகளைப்
புரிந்து கொள்ள முடிவதில்லை.
அலுப்பு தட்டும் சமயம் விடுதலை கொடு என்று வேண்டிக் கொள்ளும்படி தோன்றுகிறது.
நன்றி மா.
நல்லதே நடக்கட்டும்.
அன்பின் கீதாமா,
எப்பவும் நலமுடன் இருங்கள்.
உண்மைதான் மா.அலுத்துக் கொண்டு என்ன லாபம் என்று அடங்கி விடுகிறேன்.
நன்றி மா.
Post a Comment