Blog Archive

Wednesday, June 07, 2023

4K | இந்த அரசு பேருந்து எங்கே செல்கிறது ? | TNSTC BUS | Nilgiris Ooty |

7 comments:

Thulasidharan V Thillaiakathu said...

காணொளியை மிகவும் ரசித்துப் பார்த்தேன். என்ன ஒரு இயற்கை அழகு!!! ஆனால் மக்கள் பாவம் இப்படி ஆற்றைக் கடந்து பல நீரோடைகளைக் கடந்து...வெள்ளம் வரும் போது தெங்குமரகத கிராமம் மற்றும் ஹல்லிமோயருக்கு எப்படிச் செல்ல முடியும் இல்லையா? இங்கெல்லாம் ஓட்டுக்கு மட்டும் போவார்களா? கட்சிகள் இருக்கறா மாதிரி இருக்கிறதே. பேனா ன்னு என்னென்னவோ பேசறாங்க அதுக்கு இந்த ஊருக்கு நீரின் குறுக்கே பாலங்கள் கட்டிக் கொடுத்தா எவ்வளவு நன்றாக இருக்கும்! இப்படி நிறைய கிராமங்கள் இருப்பதாகவும் தெரிகிறது.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

மூன்று பரிசல்களைக் கட்டிக் கொண்டு போவது!!!! ரசித்தேன் ஆனால் வெள்ளம் வரும் போது?

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அவர் கடைசியில் சொல்வது பிடித்திருந்தது நகரம், கிராமம் பத்தி...கிராமம் கூகுள் மேப்ல எந்த வித மாற்றமும் இல்லாமல் இருக்கும்னு...

இடம் என்ன அருமை...பின் புலம் மேற்குத் தொடர்ச்சி மலை...எனக்கு இந்த ஊர் ரொம்பப் பிடித்துவிட்டது. தெங்குமரஹாடா...பரிசலில் போய்ட்டு அப்புறம் உள்ளே நடந்து செல்ல வேண்டியிருந்தாலும்....சின்ன கிராமம் நல்ல குளுமையா இருக்கும் என்று நினைக்கிறேன்

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

காணொளியின் கடைசியில் வரும் வரிகள் மனதை என்னவோ செய்கின்றன....கிராமத்து மக்கள் புலம் பெயராமல் ஆனால் அரசு இப்போதிருக்கும் பாதையை நல்ல சாலையாக மாற்றி ஆற்றின் நடுவில் பாலம் அமைத்து சுற்றி உள்ள கிராமங்களுக்கும் நல்ல பாதை அமைத்துக் கொடுத்தால் கிராமங்கள் விவசாயம் அவர்களின் வாழ்வாதாரம் அவர்களைச் சார்ந்திருக்கும் நாம் எல்லோருமே மகிழ்ச்சியடையலாம். இல்லைனா கடைசியில் அதில் சொல்வது போல பல விவசாய கிராமங்கள் அழிந்து போகின்றன...

நிஜமாகவே ஓட்டுநர்கள் நடத்துனர்களைப் பாராட்ட வேண்டும் போற்ற வேண்டும்.

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாரங்கன் மா,
என்றும் நலமுடன் இருங்கள்.

இந்த மிச்சி சானல், நீலகிரியைச் சுற்றி நிறைய
வீடியோக்கள் போடுகிறது.
மிச்சி பாபு, போன வருடம் பொன்னியின் செல்வன் பாதையில் அத்தனை இடங்களையும் சென்று
காணொளிகள் போட்டிருந்தார். நல்ல உழைப்பாளி.

விவசாயம் பலனில்லாமல் போனதை
நல்ல படியாக எடுத்துச் சொல்வார்.
நிலம் இருந்தும் அரசு உதவி இல்லாமல்
போவதைக் காண வருத்தமாகத் தான் இருக்கிறது,
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

காட்டாற்றில் பரிசல் ஓட்டுவதும் ,கஷ்டங்களைப்
பொருட்படுத்தாமல் வாழ்வை ரசிப்பதும்
அருமைதான் கீதாமா.
வெள்ளம் வரும்போது ஓட்ட மாட்டர்களாய் இருக்கும்.
படுக இன மக்கள் எல்லாவித கடின வாழ்க்கைக்கும் பழகி இருப்பார்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்ப்ன் கீதாமா, முன்போரு முறை
பஸ் ட்ரைவர்களின் சிரமங்களைப்
பதிவிட்டிருந்தார். அச்சோ !! ரொம்பப் பாவம் மா.