Blog Archive

Thursday, March 30, 2023

திருவாளர் அப்துல் ஹமீத். இலங்கை வானொலி

வல்லிசிம்ஹன்



13-2-2023-உலக வானொலி தினம் சிறப்பு பதிவு 
-
அதுவொரு அழகிய வானொலி காலம் - 5: பி.எச். அப்துல் ஹமீதை துரத்திய கேள்வி!
நம் தமிழக வானொலிகளில் ரோபோ மாதிரி ஓர் அறிவிப்பாளர் பேசுவார். அடுத்தவர் வருவார். யார் போனவர், யார் வந்தவர் என்று நமக்குத் தெரியாது. காரணம் அவர்களது பெயர்கள் அன்று அறிவிக்கப்பட்டதில்லை. அந்த அளவுக்கு எந்திரத்தனமாக வைத்திருந்தார்கள்.
இலங்கை வானொலியில் பணியாற்றுவோரின் ஒவ்வொருவர் பெயரும் தெரிவதால் அவர்களுடன் நாமும் பயணித்துக் கொண்டே இருப்பதாகத் தோன்றும். அவர்கள் பணியை உணரவைக்கும்.
பி.எச்.அப்துல் ஹமீது பணியாற்றிய போது விசாலாட்சி ஹமீது என்ற அறிவிப்பாளரும் இருந்தார். பெரும் பாலானவர்கள் இருவரையும் கணவன் மனைவி என்றுதான் நினைப்பார்கள். அந்தக் குழப்பம் வரக் கூடாது என்பதற்காக அந்த இருவரும் பங்குபெற்ற நிகழ்ச்சிகளில் பி.எச் அப்துல் ஹமீத் விடைபெறும் போது உங்களிடமிருந்து விடை பெறுபவர் சகோதரி விசாலாட்சியுடன் உங்கள் அன்பு அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் என்பார். அப்போது "சகோதரி" என்பதை அழுத்திச் சொல்வார். இருந்தாலும் அவரைப் பார்க்கிறவர்கள் எல்லாம் விசாலாட்சி உங்கள் மனைவியா என்று கேட்பார்களாம். அந்தத் தர்மசங்கடக் கேள்வி கடைசி வரை அவரைத் தொடர்ந்து கொண்டிருக்கிறதாம் நேரில் பார்த்தபோது வருத்தத்துடன் சொன்னார்.
அப்போது இலங்கை வானொலியும் தமிழ்த் திரையுலகமும் பின்னிப்பி ணைந்து கிடந்தன. இந்திய இலங்கை கூட்டுத் தயாரிப்பில் படங்கள் எல்லாம் எடுத்தார்கள். அப்போது இலங்கை நடிகைகள் தமிழ்ப் படங்களில் நடித்தார்கள். 'பைலட் பிரேம்நாத்' படத்தில் சிவாஜி கணேசனுடன் பிரபல சிங்கள நடிகை மாலினி பொன்சேகா இணைந்து நடித்திருந்தார். அது சார்ந்த பாடல்கள் கூட ஞாபகத்தில் இருக்கின்றன.
'இலங்கையின் இளம் குயில் என்னோடு இசை பாடுதோ?' என்றொரு பாடல் உண்டு.
'அழகி ஒருத்தி இளநி விக்கிறா கொழும்பு வீதியிலே; அருகில் ஒருத்தன் உருகி நிக்கிறான் குமரி அழகிலே' என்றும் ஒரு பாடல் உண்டு. 'தென்னிலங்கை மங்கை வெண்ணிலவின் தங்கை' என்றொரு பாடல் வரும். அந்தப் பாடல்கள் எல்லாம் இன்றும் நினைவுக்கு வருகின்றன. அது மட்டுமல்ல இலங்கை மண் சார்ந்தவையாக சில பாடல்கள் ஒலிக்கும். அதில் மறக்க முடியாத பாடல் அங்கேயே தயாரித்த 'மாமியார் வீடு' என்ற படத்தில் ஜோசப் ராஜேந்திரன் பாடியது.
'இந்த ஊருக்கு ஒரு நாள் திரும்பி வருவேன் அது தான் எனக்குத் திருநாள்; என் கனவுகள் பலித்திடும் பெருநாள் .'என்ற பாடல் அடிக்கடி ஒலிக்கும். அது மட்டுமல்ல 'சின்ன மாமியே உன் சின்ன மகள் எங்கே? பள்ளிக்குப் போனாளோ; படிக்கப் போனாளோ?' என்ற அந்த நையாண்டிப் பாடலும், 'கள்ளுக்கடை பக்கம் போகாதே; காலைப் பிடித்து கெஞ்சுகிறேன்' என்ற மதுவிலக்கு அறிவுரைப் பாடலும் அடிக்கடி ஒலிக்கும்.
தமிழ்த் திரைப்படப் பாடல்கள் தரவரிசை நேயர்களால் வாக்களிக்கப்பட்டு வாராவாரம் தேர்வாகும். அதில் ’மாம்பூவே சிறு மைனாவே’ என்ற சந்திரபோஸ் இசையமைத்த ’மச்சானை பார்த்தீங்களா’ படப்பாடல் ஓராண்டு தாண்டியும் பல வாரங்கள் முதலிடத்திலேயே இருந்தது ஞாபகத்தில் இருக்கிறது.
இலங்கை வானொலியில் ஒலித்த தமிழ்த் திரைப்படங்களின் விளம்பரங்கள் கூட நினைவில் பதிந்துள்ளன. உழைக்கும் கரங்கள், சங்கிலி, திசை மாறிய பறவைகள், நினைத்தாலே இனிக்கும் போன்ற பட விளம்பரங்களில் அது சார்ந்த பாடல், வசனம் என்று சில வரிகளைப் போட்டு ஒலிபரப்புவார்கள். புதுமையாக இருக்கும்.
அறிவிப்பாளர்களே தங்கள் விருப்பப் பாடல்களைத் தொகுத்து வழங்கும் 'என் விருப்பம்' என்ற நிகழ்ச்சி வரும். அதில் அறிவிப்பாளர்களுக்குப் பிடித்த பாடல்கள் வரும். ஏன் பிடித்தது என்பதையெல்லாம் சொல்வார்கள். அதிலிருந்து ரசனைப் புரிதலால் ஒவ்வொருவரையும் நமக்கு நெருக்கமாக உணர்வோம்.
'இசையமைப்பாளர்' என்றொரு பகுதி குறிப்பிட்ட இசையமைப்பாளர்களின் பாடல்களை அதில் தொகுத்து வழங்குவார்கள். இப்படி நிறைய நிகழ்ச்சிகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். சில நேரம் ’மரண அறிவித்தல்’ வரும். அப்போது மட்டும் மனதுக்கு ’திக்’கென்று இருக்கும்.
அப்போதெல்லாம் எங்கள் ஊர்ப்பகுதியில் எங்கே எந்த விவசாய வேலை நடந்து கொண்டிருந்தாலும் அங்கே ஒரு வானொலிப் பெட்டி கம்பீரமாக அமர்ந்திருக்கும். அந்த உழைக்கும் மக்களின் சுவாசமாகவும் ஆசுவாசமாகவும் இலங்கை வானொலி இருந்தது. மின்சார வசதி கூட இல்லாத காலம் அது. எங்கள் பகுதியில் மிக மிக அவசியமான பொருட்களாக வெல்லம், டீத்தூள் இருக்கும். தேநீர் போட பால் கூட அடுத்தபட்சம்தான்.ஆனால் அச்சு வெல்லம் , டீத்தூள் கண்டிப்பாக வாங்குவார்கள். இந்த அத்தியாவசியப் பட்டியலில் அடுத்தபடியாக வானொலிக்கு பேட்டரி வாங்குவது என்று பட்ஜெட்டில் வைத்திருப்பார்கள். அது இலங்கை வானொலிக்காகத்தான்.
தங்களை எப்போதும் உயிர்ப்போடு வைத்திருப்பது இலங்கை வானொலி நிகழ்ச்சிகள்தான் என நினைப்பார்கள்.
புகையிலை சாகுபடி இருக்கும்போது கொல்லை நடுவில் வானொலி இருக்கும். கொல்லை முழுதும் கேட்கும். நாலு பக்கமும் புகையிலைச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவார்கள். வானொலி ஒலித்துக் கொண்டே இருக்கும் .
உற்ற தோழனாக உற்சாகம் தரும் ஊக்க மருந்தாக சிலநேரம் கிரியா ஊக்கியாகவும் அந்த வானொலி தோன்றும். வயல்களில் நீர் நிறைந்து நெல் சாகுபடிக் காலம் என்றாலும் வயல் வரப்புகளில் வானொலிப் பெட்டி உட்கார்ந்து இருக்கும். அல்லது மரத்தில் கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். சிலர் தோளில் தொங்கவிட்டுக் கொண்டு திரிவார்கள். சிலர் சைக்கிளில் பொருத்தி வைத்துக் கொண்டிருப்பார்கள்.
கருவேலங்காட்டில் சருகு குவிக்கப்போனாலும் முள் மரங்கள் நடுவே கூட அங்கே வானொலி ஒலித்துக் கொண்டிருக்கும்.
உழைப்பின் எல்லா வலிகளையும் போக்கும் அருமருந்தாக வானொலி காதுகள் வழியே மனதிற்குள் களிம்பு பூசிக் கொண்டிருக்கும். அதற்குக் காரணம் அவ்வளவு நிகழ்ச்சிகள் வரும். காலை நிகழ்ச்சிகள் 10 மணிக்கு முடிந்தாலும் அடுத்து நண்பகல் 12 மணியிலிருந்து இரவு 11 மணிவரை தொடர்ச்சியாக ஒலிபரப்பாகும். நம் ஆல் இண்டியா ரேடியோவை அதற்குள் இரண்டு முறை மூடித் திறந்து விடுவார்கள்.
காலை 10 மணி முதல் பகல் 12 வரை மணி வரை தான் இடைவெளி. அப்போது நிலையம் மாற்றினால் ஒருவர் வயலின் வாசித்துக் கொண்டிருப்பார் அல்லது இன்னொருவர் மிருதங்கம் வாசிப்பார் அல்லது 'மாயா மாளவ கௌள' பாடிக்கொண்டிருப்பார். யாரோ ஒருவர் லயவின்யாசம் செய்வார். யாராவது தலைவர்கள் இறந்து விட்டால் , ஒரு வாரம் சோக இசை போட்டே இழுப்பார்கள். அப்போதெல்லாம் இலங்கை வானொலிதான் எங்களைக் காப்பாற்றும்.
இலங்கை வானொலியில் அடிக்கடி நேரம் சொல்வார்கள். ஒரு பாடல் ஒலித்து முடிந்த பிறகும் அடுத்த பாடல் ஒலிக்கப் போகும் முன்பும் நேரம் சொல்வார்கள். இதனால் அப்போதெல்லாம் உழைக்கும் மக்கள் கைக்கடிகாரம் கட்டிக் கொண்டு இருக்கத் தேவையில்லை. சாலையிலே நடந்தாலும் சோலையிலே இருந்தாலும் யார் வீட்டு வானொலியில் இருந்தோ நேரம் ஒலிக்கும். காற்றலையிலேயே கடிகாரம் பார்த்துக்கொள்வார்கள். கடிகாரம் உள்ளவர்கள் நேரத்தைச் சரிபார்க்கவும் இலங்கை வானொலியை நம்பியிருந்தார்கள்.
லைட்ஸ் ஆன், டயலாக் , விஷ்வல் பேஸ்ட், புக் ஷெல்ப், பயோடேட்டா, ரீடர்ஸ் ஒபீனியன், ஆட்டோகிராப், ரேஷன் கார்டு, டவுன்லோடு மனசு, ப்ளாஷ்பேக், இன்பாக்ஸ், ப்ளாக் அண்ட் ஒயிட், டாப் ஆங்கிள், கமெண்ட்டூன், ரிலாக்ஸ் ப்ளீஸ், டாப்டென் மூவீஸ், சூப்பர் சிங்கர், டிரைலர் டைம், சாங் ஃபார் யூ, க்ரைம் டைம், க்ரைம் ஸ்டோரி, ப்ரைம் டைம், பயோகிராபி, ஹலோ டாக்டர், கிச்சன் டைம் ,பிக் பாஸ், கனெக்‌ஷன்ஸ், ஜீன்ஸ், மியூசிக் ட்ராக்ஸ், மேக்ஸ் மசாலா, மிட்நைட் மசாலா, கிராமபோன், செம காமெடி, கோலிவுட் ஹிட்ஸ், என்றும் சூப்பர், சினி டைம் .
இவை எல்லாம் என்ன தெரியுமா? இன்றைய பிரபல அச்சு, காட்சி ஊடகங்களில் வரும் பிரபலமான தலைப்புகள். இவற்றில் எங்காவது தமிழ் இருக்கிறதா? இலங்கை வானொலியில் அனைத்து அறிவிப்பாளர்களும் அழகான தமிழில் பேசுவார்கள் .ஆங்கிலக் கலப்பின்றி அவர்கள் இயல்பாகவும் விரைவாகவும் தமிழ் பேசுவார்கள் .
'மைக்' என்று சொல்ல மாட்டார்கள் ’ஒலிவாங்கி’ என்றுதான் சொல்வார்கள் . ’வால்யூமைக் குறைத்துப் பேசுங்கள்’ என்று சொல்லமாட்டார்கள் .’ஒலி அளவைக் குறையுங்கள்’ என்பார்கள்..’பெல் அடித்தது’ என்பதற்கு ’மணி ஒலித்தது’ என்பார்கள். ‘பட்டனைத் தட்டுங்கள்’ என்பதற்குப் ’பொத்தானை அழுத்துங்கள்’ என்பார்கள்.’டைம் அப்’ என்பதற்குப் பதிலாக ’உங்களுக்கான நேரம் முடிந்துவிட்டது’ என்றுதான் சொல்வார்கள்.
அந்தத் தமிழ் இன்று எங்கே போனது? தங்கள் நிகழ்ச்சிகளின் மூலம் அவர்கள் ரசனையை மட்டுமல்ல தமிழையும் வளர்த்தார்கள். அதுமட்டுமல்ல அந்த மண்ணில் புழங்கும் வார்த்தைகளான காலக்கிரமத்தில், மணித்தியாலம், வழமைபோல், கமக்காரர்கள் போன்ற சொற்களைக் கேட்கும்போது புதிதாக இருக்கும்.
இலங்கை வானொலியின் மூலமாக காதுகளுக்குள் கவரி வீசி மனதிற்குள் மகரந்தம் தூவிய அறிவிப்பாளர்கள் அனைவரையும் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கும். சைக்கிளில் சென்றால் கூட இரண்டு மணி நேரத்தில் சென்று விடக் கூடிய தூரம் தான். ஆனால், இடையில் இந்தியப் பெருங்கடல் இருக்கிறது. அது வேறு நாடாகவும் இருக்கிறதே என்ற ஏக்கம் எங்களுக்கு இருக்கும். ஒவ்வொருவரையும் சென்று பார்க்கவேண்டும் பேசவேண்டும் பழகவேண்டும் என்கிற அவா அடி மனதில் உறங்கிக்கொண்டிருக்கும். ஆனால் எதுவுமே வாய்க்கவில்லை. நான் சந்தித்த ஒரே ஒரு அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் மட்டும் தான். நான் அவரை இரண்டு மூன்று முறை சந்தித்திருக்கிறேன்.
அவர் தொலைக் காட்சியில் இன்றும் உயிர்ப்போடு நிகழ்ச்சிகளை வழங்கிக் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
திரைப்படப் பாடல்கள் சார்ந்த அவரது அனுபவமும் அறிவும் அபரிமிதமான நினைவாற்றலும் ஆச்சரியப்பட வைத்தது மட்டுமல்ல மிரளவைக்கும். அவர் பழகுதற்கு இனிய பண்பாளர்.❣️
-

Thursday, March 09, 2023

மறு பக்கம்.

வல்லிசிம்ஹன்






 ஒரு புலிவால்

நான் சமூக வலைதளங்களில் அமெரிக்காவிற்கு படிக்க சென்ற பெண்/ பிள்ளைகள் திரும்பி வருவதில்லை . பெற்றோரின் கடைசி காலத்தில் அவர்களுடன் வந்து இருப்பதில்லை . அவர்கள் அந்த சௌகரியத்திற்கு பழகி விட்டார்கள் திரும்பி வர மனமில்லை என்று பலர் எழுதுவதை பார்த்திருக்கிறேன். அவர்கள் நினைப்பது அவர்கள் பணமும் வசதியுமே பெரியது என்று அங்கு போகிறார்கள் என்று. 

ஆனால் Ground reality வேறு. 

நாணயத்துக்கு 2 பக்கம் உண்டு. நான் அவர்கள் பக்கத்தையும் பார்க்க விரும்புகிறேன்.  அவர்களாகவே foreign college க்கு apply செய்து போவதில்லை. நாமதான் அனுப்பறோம். ஆனால் தான் விரும்பிய படிப்பை படிக்க வரும் குழந்தைகளின் student life எப்படிபட்டது தெரியுமா? Middle class அப்பாவால் fees boarding கொஞ்சம் கைச்செலவுக்கு மட்டும்தான் பணம் அனுப்பமுடியும். எல்லோருக்கும் scholarship கிடைப்பதில்லை .நிறைய குழந்தைகள் பணத்தேவைக்காக அந்த குளிரில் part time வேலை செய்யும். வீட்டில் சாப்பிட்ட தட்டை அலம்பாத பையன் அங்கே hotelல் தட்டை எடுத்து table clean பண்ணுவான். வீட்டில் துடைப்பத்தை எடுத்து பெருக்காத பெண் அங்கு canteenல் தரைக்கு mob போடுவாள். வீட்டு வேலை செய்ய ஆண் பெண் வித்தியாசம் இல்லை என்பதை அம்மா சொல்லி தர மாட்டாள். அமெரிக்கா சொல்லி தரும். 

Vacationல் அமெரிக்க குழந்தைகள் அவரவர்கள் வீட்டிற்கு போய்விடும். உறவினர்கள் யாராவது அமெரிக்காவில் இருந்து அவர்கள் மனது வைத்து நம் குழந்தைகளை ticket வாங்கி அழைத்துக்கொண்டால் உண்டு. இல்லையென்றால் homesickல் அம்மாவை நினைத்துக்கொண்டு அழுது கொண்டிருக்கும்.
படிப்பு மிகவும் கடினம். நல்ல grade வாங்கவில்லை என்றால் collegeல் திருப்பி அனுப்பி விடுவார்கள். Tension.
படிப்பு முடிந்தவுடன் ஒரு வருடத்திற்குள் வேலை கிடைக்கவில்லை என்றால் திரும்பி போக வேண்டும் . பணம் waste. அப்பா மூஞ்சியை திருப்புவார். Tension.
வேலை கிடைத்தவுடன் 3 வருடத்திற்குள் h1b work visa lotteryல் விழ வேண்டும்.இல்லாவிட்டால் திரும்பி போக
வேண்டும். Tension. 
 
இத்தனையையும் தாண்டி வந்தால் அடுத்தது கல்யாணம். இங்கே வேலை பார்க்க தகுதி உள்ள பெண்/பையன் அல்லது இங்கேயே வேலை பார்ப்பவர்களை பார்க்க வேண்டும். இந்தியாவாக இருந்தால் படிப்பு, வேலை, family background பார்த்தால் போதும்.
இங்கே location, career முக்யம்.
North carolina, south carolina - 
Low cost area. Bay area, California. அதே area வரன்தான் வேண்டும். cost of living அதிகம். வேறு state வரன் என்றால் வேலையை விட்டு விட்டு இங்கு வந்து வேலை தேட முடியாது.  Visa transfer ,amendment என்று ஏகப்பட்ட ப்ரச்னை. ஒருசம்பளத்தில் California வில் குடுத்தனம் பண்ண முடியாது.
Minasotta, Detroit, Chicago - snow area- 
Social drinking- NO
பாதி பேர் west coast california Bay areaல் இருப்பார்கள். அவர்கள் east coast வரன்களை திரும்பி கூட பார்க்க மாட்டார்கள். 
இந்தியாவிலிருந்து பெண்/பையன் கல்யாணம் பண்ணிக்கொண்டு இங்கு வந்தால் அவர்கள் இங்கு வேலை பார்க்க EAD permit உள்ள வரன் வேண்டும். வீட்டில் வருடக்கணக்கில் வேலைக்கு போகாமல் உட்கார்ந்து இருக்க முடியாது.அப்படியே வேலை பார்த்தாலும் dependent visa என்றால் ஒருத்தருக்கு வேலை போனால் அடுத்தவருக்கும் போய்விடும். இப்போதெல்லாம் இந்தியாவிலேயே எல்லா வசதியும் இருப்பதால் கல்யாணம் பண்ணிக்கொண்டு அமெரிக்கா வர யாரும் ஆர்வம் காட்டுவதும் இல்லை.
Citizen வரன்கள் born and brought up in USA வரன்தான் வேண்டும் என்பார்கள்.
அதற்குள் நிறைய குழந்தைகளுக்குஇந்த ஊர் climate ,தண்ணிக்கு முடி கொட்டிவிடும். இதெல்லாம் தெரியாமல் இந்தியாவில் அப்பா அம்மா நட்சத்திர பொருத்தம் ஜாதக பொருத்தம் பார்த்துக்கொண்டு வரும் வரனையெல்லாம் reject பண்ணிக்கொண்டிருப்பார்கள்.

2 வருடத்திற்கு ஒரு முறைதான் 3 weeks leave கிடைக்கும். இரண்டு குழந்தைகளுடன் ஒருமுறை இந்தியா போய் வந்தால் இரண்டு வருட savings காலி. 
பெற்றோர்கள் இங்கு வரும்போது அவர்களை Nayagara falls, New york, Sanfrancisco, Disneyland என்று சுற்றிக்காட்டிவிட்டு கைநிறைய சாமானும் வாங்கி கொடுத்து அனுப்புவார்கள். 

வயதான பெற்றோர்களை இங்கே அழைத்துக்கொண்டு வந்து வைத்துக்கொண்டால் life, health, பல்லுக்கு என்று தனித்தனியாக insurance எடுக்க வேண்டும். Insuranceல் cover ஆகாத வியாதி வந்தால் அவ்வளவுதான். சொத்தையே எழுதி வைக்க வேண்டும். 
Doctor appointment கிடைக்க நாட்கணக்கில் காத்திருக்க வேண்டும் அதற்குள் ஒண்ணு வந்த வியாதி அதுவாகவே  போய் விடும் அல்லது நாமளே போய்விடுவோம்.
Doctors உம் சனி, ஞாயிறு லீவு எடுப்பார்கள். சனி, ஞாயிறு உடம்புக்கு எதுவும் வரக்கூடாது என்று வேண்டிக் கொள்ள வேண்டும். 
Weekdaysல் நட்ட நடு பகல் நேரத்தில் doctor appointment குடுப்பார்கள். அப்போதுதான் இவர்களுக்கு office meeting இருக்கும். அதற்கு நடுவில் நமக்காக வருவார்கள். அதனால்தான் பணத்தை இந்தியாவுக்கு  அனுப்பி இங்கேயே ராஜ வைத்யம் பார்த்துக்கொள் என்கிறார்கள்.

நினைத்தபோது இந்தியா போக முடியுமா? முடியாது. சமீபத்தில் அப்பா மறைவுக்கு சொந்த ஊருக்கு போய் வந்த ஒரு பையனை companyல் ஆட்குறைப்பு நடவடிக்கையில் வேலையிலிருந்து தூக்கி விட்டார்கள்.
Survival முக்கியம். வேலை எப்போது போகுமோ என்ற பயத்திலேயே வாழ்க்கையை ஓட்ட வேண்டும். இப்போது இந்தியாவிலும் இப்படித்தான். Greencard கிடைக்க வருடங்கள் ஆகலாம். 

Coronaவா? ஊருக்கு போக முடியாது Stamping வாங்கலையா. இந்தியா போனால் stamping வாங்காமல் USA க்குள் திரும்ப முடியாது. Stamping வாங்க  Indian embassy slotக்கு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும். நடுவில் அப்பா போனாலோ அம்மா போனாலோ USA வை விட்டு கிளம்ப முடியாது. ஊரார் சாபத்தையும் வாங்கிக்கொள்ள வேண்டும். பெற்றோர்களுக்கு குழந்தைகள் நிலைமை புரிந்தாலும் சுற்றி உள்ளவர்கள் பேசும்போது என்ன செய்வது. Society pressure.

சரி. பரவாயில்லை ஊரோடு போய்விடுவோம் என்றால் இங்கேயே பிறந்து வளர்ந்த குழந்தைகள் மக்கர் பண்ணும்.

இந்தியாவுக்கு திரும்பி போவதென்று முடிவு எடுத்தால் வீட்டு கடன் கார் கடன் என எல்லா கடனையும் அடைத்து விட்டு 
எஞ்சிய சொற்ப பணத்தோடு ஊர்போனால் மாசா மாசம் லட்சலட்சமாய் சம்பாதித்தெல்லாம் என்ன செய்தாய் என்று பெற்றோரை அலட்சியம் செய்ததாக சொன்னவர்கள் கேட்பார்கள். 

இந்தியாவுக்கு திரும்பி போனவர்களும் இருக்கிறார்கள். அது அவரவர் குடும்ப சூழ்நிலயை பொறுத்தது.
Company மூலமாக onsightல் வந்து போகிறவர்களுக்கு இது பொருந்தாது. அவர்களுக்கு இந்தியா திரும்பி போனாலும் வேலை இருக்கும்.

இவ்வளவையும் தாண்டித்தான் இங்கு settle ஆனவர்கள் பெற்றோர்களை பார்க்க ஓடி வருகிறார்கள். இது அங்கிருப்பவர்களுக்கு புரிவதில்லை.

மொத்தத்தில் அமெரிக்கா புலி வால் பிடித்த கதைதான். விடவும் முடியாது. கூடவே ஓடவும் முடியாது.

அட இவ்வளவு கஷ்டம் இருந்தால் அப்படியாவது அமெரிக்கா போகாட்டா என்ன  என்கிறீர்களா.  மற்றவர்கள் நினைப்பது போல் பணம் வசதிக்காக மட்டும் யாரும் இங்கு வருவது இல்லை. இங்கு நிறைய கனவுகளோடு சாதிக்க வந்திருப்பவர்கள் அவரவர் துறையில் சாதித்தும்  இருக்கிறார்கள். இந்த மனித சமுதாயத்துக்கு நாம் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இங்கு படிப்பு/research வசதி வாய்ப்புகள் சற்று அதிகம். சொந்தமாக startup companyகள் ஆரம்பித்து அமெரிக்கர்களுக்கே வேலை கொடுக்கும் கண்ணுக்கு தெரியாத சுந்தர் பிச்சைகள் இங்கு ஏராளம். 

எனக்கு தெரிந்தவர் ஒருவரின் பையன் இங்கு ஆராய்ச்சி படிப்புக்கு வந்து ஒரு குறிப்பிட்ட cancerக்கு மருந்து கண்டு பிடித்து இங்குள்ளவர்களின் பாராட்டை பெற்றிருக்கிறார்.
வெறும் பணத்துக்காக என்று பொதுவாக முத்திரை குத்தாமல் “”அவர்களின்  கனவுகளையும் நாம் மதிப்போம்”””

Sunday, March 05, 2023

இன்னும் சில வார்த்தைகள்.......




அனைவரும் வளமுடன் வாழ வேண்டும்.

நட்புகள் அனைவரிடமும் என் அன்பு விசாரிப்புகளைச்
சொல்லிக் கொள்கிறேன்.

எழுதும் காலம் ஒன்றிருந்தது போல
ஓயும் காலமும் இருக்கிறது.

நடந்த நல் நிகழ்வுகள், மனத்தில் எழுதிக் கொண்ட சம்பவங்கள்

பல பதிவுகளுக்கு ஆதாரமாகி இருக்கும்.
போதும் என்ற எண்ணமே வலைப் பக்கம் வராமல் தடுக்கிறது.

என்றும் உற்சாகத்தோடு வலம் வந்து அனைவரையும் நேசித்த என் கணவருக்கு
83 வயது பூர்த்தியாகிறது.
என்னுடனேயே ஒன்றி இருப்பதால் 
வாழ்த்துகளைச் சொல்லி,
எங்கள் மக்களை அன்புடன் பாதுகாப்புடன் 
வழி நடத்திச் செல்ல அவரிடம் பிரார்த்திக்கிறேன்.


வல்லிசிம்ஹன்