தலபெருமை
விநாயகரின் நெற்றி மட்டுமே இரண்டடி அகலம். துதிக்கை வலம் சுழிந்து காட்சி தருகிறார் பிள்ளையார். நான்கு திருக்கரங்கள்.
வலது முன் கரத்தில் தந்தமும் பின் கரத்தில் அங்குசமும்; இடது முன் கரத்தில் பலாப்பழமும் பின் கரத்தில் பாசக் கயிறும் கொண்டு காட்சி தருகிறார். தவிர, துதிக்கையில் மகாலட்சுமியின் அம்சமான அமிர்த கலசத்தைத் தாங்கியபடி, தாமரை பீடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் விநாயகக் கடவுள்.
அவரின் கிடத்திலும் தாமரை மேல்நோக்கி விரிந்திருப்பது போன்ற வேலைப்பாடு மிக அழகு வாசுகிப் பாம்பை, தன் வயிற்றில் கட்டிக் கொண்டிருப்பதால், நாக தோஷத்தை நீக்கி அருள்கிறார் கணபதி பெருமான்.
பிடியதன் உருவுமை கொளமிகு கரியது என்ற வாக்குக்கு இணங்க, அம்பாள் பார்வதியும் பரமேஸ்வரனும் யானை உருக்கொண்டு விநாயகப் பெருமானாகத் தோன்றியது போல் காட்சி அளிக்கிறார் கணபதி.
அதாவது, அவரின் வலது பகுதி, ஆண்களைப் போலவும் இடது பக்கம் பெண்களின் வடிவிலும் அமைந்து உள்ளதால் இவர் முன் நின்று தரிசிக்கும் போது ஓர் ஆண் யானையின் கம்பீரமான தோற்றம் பக்தர்களை பிரமிக்க வைக்கிறது.
கரஸ்த்த கதலிசூத பனஸேக்ஷக மோதகம்
பால சூர்ய பீரபாகாரம் வந்தே பால கணாதிபம்
என்கிறது சிவாகம சாஸ்திரம் அரசமரத்தடியில் கிழக்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிப்பதால் அருள் கடாக்ஷம் அதிகம்.
இடது திருவடியில் சித்த லட்சுமியின் அம்சமான பத்ம சக்கரத்தைக் கொண்டுள்ளதால் நாடிவரும் பக்தர்களுக்கு செல்வத்தை வாரி வழங்கி வருகிறார்.
முக்கிய திருவிழாக்கள்
சித்திரை முதல் நாள், தைமுதல் நாள், ஆடிவெள்ளி விநாயகர் சதுர்த்தி சுக்ல சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி ஆகிய தினங்களில் சிறப்பு அலங்காரத்துடன்அபிஷேக பூஜைகள் நடந்து வருகிறது.
அத்தினங்களில் அரிசிமாவு, திருமஞ்சனம், மஞ்சள், பஞ்சாமிர்தம், நெய், தேன், பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர் ஆகிய 11 திரவியங்களால் மகா அபிஷேகம் செய்யப்படுகிறது.
தல வரலாறு
கோவை, புலியகுளம் பகுதியில் அமைந்து உள்ளது முந்தி விநாயகர் கோயில். இங்கே, அருள்பாலிக்கும் விநாயகப் பெருமான், ஆசியாவிலேயே மிகப்பெரிய விக்கிரகத் திருமேனியர் எனப் போற்றுகின்றனர், பக்தர்கள்.
21 சிற்ப கலைஞர்களின் உழைப்பு-6 ஆண்டு பலன்- ஓர் அழகிய முந்தி விநாயகர். இச்சிலையை செய்ய பெரிய கல்லை தேர்வு செய்வது என்பது எளிதான காரியம் அன்று.
பல இடங்களில் தேடி அலைந்து முடிவில் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி எனும் ஊரில் 20 அடி ஆழத்தில் இருந்து எந்த பின்னமும் இல்லாத பாறையைத் தேர்வு செய்து வெட்டி எடுத்தனர்.
பின் அங்கேயே வைத்து தோராயமாக விநாயகப் பெருமான் உருவில் செதுக்கி எடுத்தனர். முந்தி விநாயகர் சுமார் 19 அடி 10 அங்குல உயரமும் 11 அடி 10 அங்குல அகலமும் 8 அடி கனமும் கொண்டவராக, சுமார் 190டன் எடை (1,90,000 கிலோ) – எடை கொண்டவராகத் திகழ்கிறார்.
கல்லடி பட்டாலும் படலாம், கண்ணடி படக்கூடாது! கண் திருஷ்டி பரிகாரங்கள்
இதற்கென தயார் செய்யப்பட்ட தனி ஊர்தியில் ஏற்றி கோவிலின் இருப்பிடத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
பிரத்தியேகமாக ஒரு சாய்வு தளம் அமைத்து நிலைக்கு கொண்டுவர மட்டும் 18 நாட்கள் பிடித்தன. படுக்கை வசமாக வைத்து துல்லியமாக வடிவமைக்கப்பட்டு நுணுக்கமாக உருவாக்கினர்.
எந்த ஒரு இயந்திரத்தின் துணையும் இல்லாமல் இரும்பு சங்கிலி மற்றும் உருளைகளின் உதவியால் முழுதும் மனித சக்தியாலேயே இச்சிலையை நிலைக்குக் கொண்டு வந்து ஸ்தாபித்தனர்.
இந்த கோயில், அந்தப் பகுதி மக்களால், கடந்த 98-ம் வருடம், ஜகத்குரு ஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் தலைமையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
சிறப்பம்சம்
- ஆசியாவின் மிகப்பெரிய இந்த விநாயகர் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது.
- விநாயகர் துதிக்கையில் அமிர்த கலசம்
- இடது காலில் மகாபத்மம்.
பிரார்த்தனை
சரஸ்வதி பூஜை அன்று குழந்தைகளுக்கு நாக்கில் பிரணவ வடிவாகிய விநாயகரின் மூல மந்திரத்தை எழுதி கல்விப் பயணத்தைத் தொடங்கி வைக்கின்றன.
ராகு, கேது தோஷங்கள், நவகிரஹ தோஷங்கள் நிவர்த்திக்காக நவகோள்கள் கோவில் கொண்ட ஸ்தலங்களுக்குச் சென்று வழிபடுவதை விட, கணங்களுக்கு எல்லாம் நாயகனாகத் திகழும் இம் முந்தி விநாயகனைத் தொழுது போற்றினால் எல்லா தோஷங்களும் நிவர்த்தி ஆகின்றன என முழுமையாக நம்புகின்றனர்.
சக்தி வாய்ந்த விநாயகரின் திருஅருளால் தன்னை நாடிவந்த பக்தர்களின் வேண்டுதல், தடைபெற்ற திருமணம், குழந்தை பாக்கியம், குடும்ப நலம் போன்ற வேண்டுதல்களை நிறைவேற்றி வைக்கிறார்.
முந்தி விநாயகரை வணங்கினால், அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெருகும். பதினாறு வகை பேறுகளும் பெற்று, பெருவாழ்வு வாழலாம்.
[5:28 AM, 11/24/2022] Revathi Narasimhan: 🙏🙏🙏
13 comments:
வினை யாவும் தீர்க்கும் விநாயகனை வணங்குவோம்.
புதிய ஆலயத்தை அறிந்துகொண்டேன். நன்றி
பங்களூர் Dதொட்ட பிள்ளையாரை விடப் பெரியவராக இருப்பார் என்று நினைக்கிறேன். நாங்கள் கோயம்புத்தூரில் 99 வரை இருந்தோம். பிரதிஷ்டை செய்த போது தகவல் தெரிந்தது ஆனால் சென்று பார்க்கவில்லை. இங்கு Dதொட்ட பிள்ளையாரைப் பார்த்திருக்கிறேன். படத்தில்தான் பார்க்கிறேன் கோயம்புத்தூர் பிள்ளையாரை. விவரங்கள் தெரிந்துகொண்டேன்
கீதா
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள முக்குறுணிப் பிள்ளையாரை விட பெரியவரா?
கோவைக்கு பல தவனை சென்றிருந்தும் இந்த புலியகுளம் விநாயகரைப் பற்றி கேள்விப்பட்டதில்லை, புளியங்குளம் சென்றதும் இல்லை.
Jayakumar
முந்தி விநாயகர் சிறப்புகள் படித்து இன்புற்றோம். ஆசியாவின் மிகப்பெரிய விநாயகர் சிலை என்பது கூடுதல் தகவல்.
அருமை சகோதரி
அன்பின் ஸ்ரீராம்,
என்றும் நலமுடன் இருங்கள்.
சிரமங்கள் வரும்போது இறைவனை அதிகமாக நினைக்கிறோம். அதிலும்
வினாயகர் முதல் இடத்தில் இருக்கிறார்.நன்றி மா.
அன்பின் முரளிமா,
என்றும் நலமுடன் இருங்கள்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அன்பின் கீதா ரங்கன் மா,
என்றும் நலமுடன் இருங்கள்.
தொட்ட என்றாலே பெரிய என்ற அர்த்தம்
வருகிறதோ.
பிள்ளையார் நினைக்கும் போதே அருமை.அவர் பெரிதாகவும் இருப்பது மிக மிக
மகிழ்ச்சியா இருக்கும்.
இவரைப் பற்றி இப்பொழுது தான் கேள்விப் படுகிறேன்.
ஆஞ்சனேயருக்கும் இவருக்கும் பெரிய பெரிய கோவில்கள்
எப்பொழுதும் வந்து கொண்டே இருக்கின்றன.
நன்றி மா.
அன்பின் ஜெயக்குமார் ஐயா,
வணக்கம்.
''மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள
முக்குறுணிப் பிள்ளையாரை விட பெரியவரா? ''
நான் இவரே முக்குறுணிப் பிள்ளையார் என்று நினைத்தேன்.
என் தம்பி மதுரையில் தான் இருக்கிறார்.
பிறகுதான் விவரம் படித்தேன்.
நாங்கள் கோவை சென்று பல காலம்
ஆகி விட்டது.
பிள்ளையார் பட்டி பிள்ளையாரும் பெரிதாக இருப்பார் என்று நினைவு.
நன்றி மா.
அன்பின் ஜெயக்குமார் ஐயா,
வணக்கம்.
''மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள
முக்குறுணிப் பிள்ளையாரை விட பெரியவரா? ''
நான் இவரே முக்குறுணிப் பிள்ளையார் என்று நினைத்தேன்.
என் தம்பி மதுரையில் தான் இருக்கிறார்.
பிறகுதான் விவரம் படித்தேன்.
நாங்கள் கோவை சென்று பல காலம்
ஆகி விட்டது.
பிள்ளையார் பட்டி பிள்ளையாரும் பெரிதாக இருப்பார் என்று நினைவு.
நன்றி மா.
அன்பின் மாதேவி நலமாப்பா.
அத்தனை பதிவுகளுக்கும் வந்து கருத்து சொல்லி இருக்கிறீர்கள்.
நன்றி மா.
நம் பிள்ளையார் வினைகளைத் தீர்த்து அருளட்டும்
மிக மிக நன்றி
அன்பின் கரந்தை ஜெயக்குமார்.
Post a Comment