Blog Archive

Sunday, November 20, 2022

எங்கள் ப்ளாக் சவுடால் போட்டி பாகம் 2 November 19 ,2011

வல்லிசிம்ஹன்
கதை  முடிகிறது.

இரண்டாம், இறுதி பாகம்

ராஜகுமாரன்
 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


 ஜோசியர் அலறிய அலறலில், தூங்கிக் கொண்டிருந்த அரசனும் விழித்துக் கொண்டு ஓடிவந்தான்,.
என்ன  ஆச்சு. கண்டுபிடிச்சீட்டீங்களா  வழியை என்றவனைப்
பார்த்துக் கண்ட கொடூர கனவைச் சொன்னார்.

நிற்கிற பாம்பா...ஓ  சோனா? என்ன ரொம்பக் குழப்பமா இருக்கே.
நம் விஞ்ஞானக் கூட  தலைவரைக் கேட்கணும் என்றபடி
அவரை அழைத்துவரக் கட்டளையிட்டான்.

நரைத்த தலைமுடி, அதைவிட நரைத்த தாடி கணக்கிட முடியாத வயது இந்த வித லட்சணங்களுடன்
விஞ்ஞானியும் வந்தார்.

விவரம் கேட்டதும் அடடா பாகவதத்தில் சொன்ன விஷயமெல்லாம் நடக்கிறதே.
ராஜன், மழையில்லாத நேரத்தி மழை, வெணும் நேரம் பெய்யாமல் இருப்பது,
கடும் வெய்யில்,கடும் குளிர் எல்லாத்துக்கும் இந்த ஓசோனே
தான்  காரணம்.
அது தற்போது சில இடங்களில் கிழிந்த சர்க்கஸ் கூடாரத் துணி
போல இருக்கிறது.
அதையும் தாண்டி இந்த ராக்ஷசன் அந்த ராஜகுமாரனைக் கொண்டு
போயிருக்கிறான் என்றால் வேற்றுக்கிரக மனிதனாகத் தான்  இருக்கணும்.

ஏன் ஜோசியரே அந்தப் பாம்புக்குக் கால் இருந்ததா பார்த்தீரா என்றார்.

ஓ! இருந்ததே கால்கள் மேல்தான் அது நின்று கொண்டிருந்தது."

அரசனுக்கு விபரீதமாகப் பயம் தொற்றிக் கொண்டது.
பாம்புக் கிரகமா.
அங்கே எப்படிப் போவது.நம் குதிரைகள் பறக்காதே
என்று  காதைச்  சொறிந்து லொண்டான்.
காதில்தான் அத்தனை அறிவுசம்பந்தப்பட்ட நரம்புகளும்
இருப்பதாக விஞ்ஞானி ஏற்கனவே சொல்லி இருந்தார்.

உடனே  கிடைத்த யோசனையும் அதை நிரூபித்தது.
ராஜாதி  ராஜ புங்கவர்மன்
அந்தஇத்தாலிய வியாபாரி கொடுத்த பெகாசஸ்  குதிரை இருக்கே. அவன் சொன்ன விலைக்கு
மறுபேச்சில்லாமல்  பதினாறாயிரம் பொற்காசுகளைக் கொடுத்தோமே.
அது பறக்குமா பறக்காதா என்று  பரிசோதனை கூடச்  செய்யவில்லையே!!


ஆஹா  அது மட்டும் நடந்துவிட்டால் என்று துள்ளிக் குதித்தான்.
கொண்டு வாருங்கள் அந்தக் குதிரையை. உடனே பறக்கவேண்டும் என்று

கட்டளையிட ,பெகாஸஸ் குதிரையும் வந்தது.
சந்திரலேகா பட  ரஞ்சன் போலத் தாவிக் குதித்து ஏறினான்
நம் மன்னன்.
மன்னன் ஏறிய அடுத்த நிமிடம் வான் நோக்கிப் பறந்தது பெகாஸஸ்.
வாயுமனோவேகத்தில் ஒசோன் லேயரைக் கடந்து

பாம்புக் கிரகத்தை அடைந்தது.
அது கீழே இறங்கிய வேகத்தில் அங்கு சுருண்டிருந்த ஊர்வன எல்லாம் விலகின.

ராஜகுமாரனும் தெரிந்தான். அடுத்த நொடியில் நம் வீர தீர ராஜராஜ சிவாஜி மன்னன்
அவனை அலேக்காகத் தூக்கிக்
குதிரையில் வைத்துக் கொண்டு  பூமியை நோக்கிப் பறந்தான்.

அவர்கள் இறங்குவதற்கும்  பாம்பு மனிதன்  தங்கத் தவளையைப் பிடிக்க வருவதற்கும்
சரியாக இருந்தது.

ராஜராஜ சிவாஜியின் வீரவாள் பாம்புமனிதன் கழுத்தில் விழ
அவன் உயிர் பிரிந்தது.

ராஜகுமாரனும் ராஜகுமாரியும் இணைந்து
வணங்கினார்கள் அவரை.!!

11 comments:

ஸ்ரீராம். said...

சுபம்!  சுவாரஸ்யமாய் முடித்திருப்பதோடு, சிவாஜியை வேறு கொண்டு வந்திருக்கிறீர்கள்!  சூப்பர்.

Geetha Sambasivam said...

ஆஹா! அவரை வந்து விட்டதே! இதுக்கு நானும் அவரைனு முடியறாப்போல் கதை எழுதினேன். தேடிப் பார்க்கிறேன். நன்றி வல்லி. அந்தக்கால நினைவுகளை மீட்டெடுத்ததற்கு.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

கதைப் பதிவு அருமை. கதையை இறுதிக் யில் சுபமாக முடித்துள்ளீர்கள். நல்ல அழகான அதுவும் சுருக்கமான எழுத்து. ஓ.. அவரை என்ற இடத்திலிருந்து தொடங்கிட வேண்டுமா? சுவாரஷ்யமான பதிவுகள்.போட்டிகள்.தாங்கள் பகிர்ந்த சிவாஜி கணேசனின் படம் அருமையாக உள்ளது.(திருவருட்செல்வர் படமோ?)பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

கோமதி அரசு said...

கதை மிக அருமை. முன்பே படித்து இருந்தாலும் மீண்டும் படிக்க நன்றாக இருக்கிறது.

ராஜராஜன் புகழ் இப்போது பேசபடும் காலத்தில்
மீண்டும் உங்கள் பழைய கதை இடம்பெற்றது சிறப்பு.
ராஜராஜ சிவாஜி பாம்பை கொன்று ராஜகுமாரி, ராஜகுமாரை இணைத்தது மகிழ்ச்சி.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா எபி சுட்டிக்குப் போய் அந்தக் கதையையும் வாசித்து வந்தேன் கதை தலைப்பு, போட்டி கதை பகிர்தல் எல்லாம் பார்த்ததும் அட இது கௌ அண்ணாவாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். அதே பதிவு போட்டதும் அவரே!!!

அதான் ஸ்ரீராம் மறந்திருக்கார் போலும்!!! ஹிஹிஹிஹி

நீங்கள் எழுதிய இரு பகுதிகளும் வாசித்தேன். சூப்பர் கற்பனைமா உங்களுக்கு. பேரன் பேத்திகளுக்கு எல்லாம் கதை சொல்லிய அனுபவம்!!!!! நீங்க உங்க பாட்டிகிட்டருந்து கேட்ட அனுபவம்??!!

சுவாரசியமா எழுதியிருக்கீங்க....

ரசித்து வாசித்தேன். நல்ல ஃபேண்டசி கதை!.. இப்போதைய வார்த்தைகளையும் உட்படுத்தி...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஒரு வாரமாக வர நினைத்து டைம் ஷெட்யூல் செய்ய முடியாமல்...இப்பவும் கூட டைம் ஷெட்யூல் பண்ண முடியலை.,,,குதித்துவிட்டேன். ஆனா தொடரணுமே பார்ப்போம்...எல்லாம் ஸ்மூதாகும் வரை வழக்கமான ஷெட்யூல் வரும் வரை கொஞ்சம் அப்படியும் இப்படியுமாதான்...

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
ஆமாம். ராஜ வேஷத்துக்கு அவரை த்தான்
போட வேண்டும். நன்றி மா. எபி வழியாக நாங்களும்
வளர்ந்தோம் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
எப்போதும் வளமாக இருக்க வேண்டும்.
அவரை ந்னு முடியச் சொல்லி சவால்
வைத்து நம்மையும் எழுத வைத்தார்கள்.
நீங்கள் எழுதியதையும் பதிவிடுங்கள்.
நம் நினைவுகள் என்றும் நலமாக இருக்கட்டும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
எப்பொழுதும் நலமுடன் இருங்கள் மா.

ஆமாம். நாங்கள் அனைவரும்
சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்தோம்.

இப்பொழுது கொஞ்சம் சுணக்கமாக
நான் உணர்கிறேன்.
மீண்டும் படிக்க ஆரம்பித்தால் எல்லாம் சரியாகிவிடும்.

ஆஹா சரியாகக் கண்டுபிடித்தீர்கள். மன்னவன் வந்தானடி
பாட்டு வரும் இல்லையா.
அதில் வரும் போஸ். திருவருட்செல்வர் படம் தான்.
மிக மிக நன்றிமா. நல்ல பதிவுகள் கண்ணில் பட்டால்
பதிவிடுகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி மா,
வாழ்க வளமுடன்.
நீங்களும் எழுத ஆரம்பித்து விட்டீர்களே
அப்போது!!

ராஜராஜ சோழன் நிறைய யூடியூபில் வலம் வந்து இப்போது
கொஞ்சம் ஓய்ந்திருக்கிறது என்று
நினைக்கிறேன்.:)

நீங்கள் அப்பவும் படித்து இப்பவும் படிப்பது இன்னும் சந்தோஷம்.

உற்சாகம் நிறைந்த வேளை அப்போது.
அப்படி இப்படி சுற்றிக் கதையை முடித்தேன் அப்போது.

உங்கள் ரசனைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதா ரங்கன் மா,
என்றும் வளமுடன் இருங்கள்.
ஆஹா, அடியைப் பிடிடா பாரத பட்டா
கதையாகப் பழைய காலத்துக்கேப்
போய்ப் படித்து விட்டீர்களா. அதுதான் கீதா.

ஆமாம் அப்போது கௌதமன் ஜிதான் கதைகளுக்கு சவால்,
க கே க கதை எல்லாத்துக்கும் அழைப்பு கொடுத்துப் பரிசு கொடுத்துக் கௌரவித்தார்.
நிறைய பேர் எழுதிக் கொண்டிருந்த காலம்.

ஏஞ்சல் , அதிரா, எல்லோரையும் இப்போது காண்பதே
இல்லையே.

அருமையாகப் பாராட்டினதுக்கு நன்றி மா.