சாஸ்திரத்தில் பட்டாசு கொளுத்தச் சொல்லப் பட்டுள்ளதா? தீபாவளிக்கு மத்தாப்பு அவசியம் கொளுத்த வேணடும். அதன் வெளிச்சம் நமது முன்னோர்களை சொர்க்கம் செல்ல உதவுகிறது. (ஆதாரம்)
தீபாவளிக்கு ஏன் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. மற்ற வெடிகளை வெடிப்பது பற்றி சாஸ்திரத்தில் ஏதும் இல்லாவிட்டாலும், அவசியம் மத்தாப்பு கொளுத்த வேண்டும் என்று சொல்கிறது.
"ஸ்மிருதி கௌஸ்" என்ற ஸ்தோத்திரத்தில், இதுபற்றி சொல்லப்பட்டுள்ளது. ...
"துலா ஹம்ஸ்தே ஸஹஸ்ராம்சௌ ப்ரதோஷே பூத தர்ஸ்யோ:
உல்கா ஹஸ்தா நரா:குர்யு:பித்ரூணாம் மார்க தர்சனம்"
என்ற இந்த ஸ்லோகத்தில் "துலா மாதமான ஐப்பசியில், அதாவது தீபாவளியன்று, "உல்கா' எனப்படும் நெருப்பை கையில் பிடியுங்கள் என்கிறது. அதாவது, மத்தாப்பு கொளுத்த வேண்டும். இதில் வரும் "பூத' என்ற வார்த்தை சதுர்த்தசியைக் குறிக்கும்.
அதாவது, நரக சதுர்த்தசி.
தீபாவளி நல்வாழ்த்துக்கள்.....#தீபாவளிஸ்பெஷல்
💥🔥🌟🌟🌟💫💫💥💥💥💥💥💥💥✨
தீபாவளி_பண்டிகை 5 நாட்கள் கொண்டாடப்பட வேண்டும் என சாஸ்த்திரம் சொல்கிறது.
பொதுவாக தீபாவளி எனும் வட மொழி சொல்லுக்கு தீப ஆவளி என்று பொருள் ஆவளி என்றால் வரிசை என கொள்ளவும்.ஆக தீபங்களை வரிசையில் வைப்பது தீபாவளி.
அந்த வகையில் வருகிற
22-10-2022 சனிக்கிழமை. இன்றய தினம் மாலை நேரத்தில் பிரதோஷ காலத்தில் கன்றுடன் கூடிய பசுவை பூஜிக்க வேண்டும். இதற்கு #கோவத்ஸ_துவாதசி என்று பெயர்.வத்சலா என்றால் குழந்தை என்று பொருள்.பொதுவாக எந்த ஒரு பெரிய அளவிலான பண்டிகை கொண்டாட வேண்டும் என்றாலும் முதலில் கோ பூஜை செய்ய வேண்டும். தீபாவளி பண்டிகை என்பது நரகாசுரன் எனும் தன் மகனை பூமா தேவியின் அம்சமான சத்யபாமா ஸ்ரீ கிருஷ்ணர் முன்னிலையில் கொன்ற தினமாகும். எனவே கன்றுடன் கூடிய பசுவை இன்று வழிபடுவதால் நம் குழந்தைகள் சொல்படி கேட்டு நடக்கும் நல்ல பிள்ளைகளாக வளருவார்கள்.இன்று ஒரு நாளாவது பசும்பால்,தயிர் உணவில் தவிர்க்க வேண்டும். பால் முழுவதும் அல்லது போதுமான அளவு கன்றுக்குட்டி குடிக்க செய்ய வேண்டும். இதன் மூலம் நம் குழந்தைகள் நல்ல வழியிலும் சொல் பேச்சு கேட்டு நல்லவர்களாக வளருவார்கள்.
23-10-2022 ஞாயிற்றுக்கிழமை இன்று மாலையில் யம திரயோதசி.
#யமதீபம்.
கடந்த ஒரு மாதம் முன்பு மஹாளய பக்ஷ காலம் இருந்திருக்கும்.
அப்போது எம லோகத்திலிருந்து வந்திருந்த நம் முன்னோர் நினைவாக நாம் தர்ப்பணம் செய்திருப்போம்.
அவர்கள் மீண்டும் யம லோகம் செல்ல அவர்களுக்கு செல்லும் பாதையில் வெளிச்சம் காட்ட தென் திசை நோக்கி வீட்டிற்கு வெளியே, வாசலில் வீட்டில் உள்ள உறுப்பினர்கள் ஒருவருக்கு ஒரு தீபம் வீதம் மாலை நேரத்தில் தெற்கு நோக்கி வீட்டிற்கு வெளியே வாசலில் வைக்க வேண்டும். இதனால் அந்த வருடம் முழுதும் முன்னோர் ஆசியினால் வீட்டில் உள்ளோருக்கு பெரிய அளவில் நோய் உண்டாகாது.அறிவியல் படி ஐப்பசி கார்த்திகை மாதங்களில் சூரியனின் வெளிச்சம் குறைவாக பகல் பொழுது குறைந்து இருக்கும்.ஜோதிட ரீதியாக சூரியன் நீசம் பெறும் போது கண்ணுக்கு தெரியாத பூச்சிகள் கொசு வைரஸ் போன்ற நுண்கிருமிகள் அதிகம் உற்பத்தி ஆகி அதனால் மக்களுக்கு நோய் ஏற்படும். இதனை தவிர்க்க தினசரி மாலையில் தீபம் வைக்க வேண்டும். மேலும் பண்டிகை காலங்களில் அதிக இனிப்பு பதார்த்தங்கள் சாப்பிடுவதால் உண்டாகும் நோய் விலக தீபம் ஏற்றி வைக்க வேண்டும். இதனால் அடுத்த 5 நாட்களும் தீபம் வைக்க வேண்டும். அடுத்து தன திரயோதசி
,#தன்வந்திரிஜெயந்தி தினம்.இன்று பண்டிகைக்கான பொன் ஆபரணங்கள் வாங்க கொள்ள சிறந்த நாள்.பொதுவாக அக்ஷய திருதியை விட இன்று நகைகள் வாங்குவது உத்தமம். இன்று மருத்துவ கடவுளான தன்வந்திரி பகவானை வழிபட நெடிய நோய்கள் குணமாகும். ஆரோக்கியம் மேம்படும்.அடுத்து அன்று இரவு மறுநாள் அதிகாலை (24-10-2022 திங்கட்கிழமை)
#நரகசதுர்தசியமசதுர்தசி_ஸ்நானம். யம தர்ப்பணம்.
இன்று அதிகாலை சூர்ய உதயத்திற்கு முன்பே எழுந்து நல்ல எண்ணெய் எனப்படும் எள்ளு எண்ணையில் உடல் முழுதும் தேய்த்து அதில் வாசனை திரவியங்கள் அக்தர் ஜவ்வாது,புஷ்பங்கள் போன்றவை கூட சேர்த்து கொள்ளலாம். வெந்நீரில் குளிக்க வேண்டும். அதில் நாயுருவி இலை, சுரைக்காய் கொடி இலை போன்றவை கொண்டு தலையை சுற்றி போட்டு விட்டு, குளிக்க வேண்டும். வெந்நீரில் சேர்த்து கொள்ளலாம். இதனால் லக்ஷ்மீ கடாக்ஷம் உண்டாகும்.இதன் பொருள் என்ன என்றால் பொதுவாக சூர்ய உதயத்திற்கு முன்பு எண்ணெய் தேய்த்து குளித்து வர கூடாது என்பது சாஸ்திரம். ஆனால் இந்த நரக சதுர்தசியில் மட்டும் செய்யலாம்.இதனால் ஆரோக்கியம் உண்டாகும்.உடல் சூடு குறையும்.அதனால் வியாதிகள் நீங்கும்.மருத்துவ செலவுகள் குறையும், சேமிப்பு உண்டாகும் அது தான் லக்ஷ்மீ கடாக்ஷம்.இவ்வாறு குளித்து விட்டு சூரிய உதயத்தில் கிழக்கு நோக்கி இருந்து கொண்டு யமனுக்கும் சித்ர குப்தனுக்கும் யம தீர்த்தம் என தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனை தாய் தந்தை உள்ளவர் இல்லாதவர் என அனைவரும் செய்யலாம். ஜோதிட ரீதியாக இந்த தீபாவளி பண்டிகை திதியை அடிப்படையாக கொண்டு உள்ளது.திதிக்கு சூர்ய சந்திரர்கள் மட்டுமே முக்கியம்.சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள இடைவெளி தொலைவை திதி என்கிறோம்.இவ்வாறு சதுர்தசியில் குளித்து விட்டு #யமதர்ப்பணம் செய்து விட்டு பின்னர் குடும்பத்தோடு தெய்வ பூஜைகள் செய்து பின்னர் மாலையில் தீபம் வைக்க வேண்டும். மத்தாப்பு போன்ற வெளிச்சம் தரும் வெடிகளை சந்தோஷமாக வைக்க வேண்டும். இவ்வாறு 24-10-2022 திங்கட்கிழமை #_தீபாவளி
அன்று கொண்டாட வேண்டும்.அடுத்து அன்று மாலையில் அமாவாசை வருகிறது. அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்து சுக்கிரனின் ராசியான வீடான துலாம் ராசியில் உள்ள நாள் . அதனால் அன்றைய தினத்தில் மாலை நேரத்தில் #லக்ஷ்மீகுபேரபூஜை செய்ய வேண்டும். லக்ஷ்மீ குபேர படம் அல்லது கலசம் வைத்து 21 எண்ணிக்கையில் அரளி மொட்டு அரளி இலை அப்பம் பக்ஷணம் வைத்து முந்தைய நாள் வாங்கிய ஆபரணங்கள் கொண்டு தன்னை நன்கு அலங்காரம் செய்து கொண்டு வீட்டில் உள்ள நகைகளை பூஜையில் வைத்து அலங்காரம் செய்து வழிபட வேண்டும். மேலும் இன்று 25-10-2022 செவ்வாய்க்கிழமை *#கேதாரகௌரிவிரதம்* பூஜை செய்ய வேண்டும்,சிவனுக்கு கேதாரேஸ்வரர் என்கிற திருநாமம் உண்டு.அன்னை பார்வதி தேவி இருந்த விரதம் ஆகையால் கேதார கௌரி விரதம் என்பார்கள். இன்று வீட்டில் கலசம் வைத்து 21 முடிச்சு உள்ள மஞ்சள் சரட்டை வைத்து கலசத்துக்கு அலங்காரம் செய்து 21 எண்ணிக்கையில் பழம், வெற்றிலை பாக்கு, அப்பம் போன்றவை வைத்து பூஜிக்க வேண்டும். பின்னர் சுமங்கலி பெண்கள் தன் வலது கையில் சரடை கட்டி கொள்ளவும்,21 சுமங்கலி பெண்களுக்கு தானம் செய்யவும். இதனால் குடும்பத்தில் எப்போதும் இடர்கள் வராது,ஒற்றுமை சந்தோஷம் நிலைத்து நிற்கும்.
இன்று மாலை நேரத்தில் உல்காதனம் செய்ய வேண்டும். உல்கா என்றால் எரியும் நெருப்பு கட்டை .பொதுவாக கம்பளி ஆடைகளை ஏழை எளியோர்க்கு தானம் செய்ய வேண்டும். ஏனென்றால் துலா ராசியில் தான் சனி உச்சம் பெறுகிறது.மேலும் அறிவியல் படி அடுத்து பனிக்காலம் ஆரம்பிக்கிறது.எந்த ஒரு பண்டிகையும் நாம் மட்டும் சந்தோஷபடுவதற்காக உண்டாக்க வில்லை. நம்மை சுற்றி உள்ளோரை சந்தோஷப்படுத்த உண்டாகி உள்ளது.
இன்று கிரஹணம் ஏற்படுவது பற்றி இன்னொரு பதிவில் கொடுக்கிறேன்.
அடுத்து 26-10-2022 புதன்கிழமை.
அன்று கார்த்திக சுத்த பிரதமை.இன்றய தினம் முதல் அடுத்த மாதம் துவங்குகிறது.இது சந்திரமான கணக்கு .பொதுவாக அன்று கார்திக மாதம் முதல் நாள்.பொதுவாக ஜோதிட ரீதியாக கால புருஷனுக்கு மறைவு ராசியான விருச்சிக மாதம் முழுவதும் தீபம் ஏற்றி வைத்து வருவது நல்லது.எந்த பாவத்தின் பலனும் அதன் ஏழாம் பாவம் குறிகாட்டும்.அதன் படி விருசிகத்திற்கு 7ம் பாவத்தில் தான் கார்த்திகை நக்ஷத்திர மண்டலம் உள்ளது.அதன் உருவம் ஜோதி சுடர் வடிவம்.எனவே அன்றிலிருந்து 30 நாட்கள் #அகண்டதீப_பூஜை என தினமும் மாலை நேரத்தில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். இதனால் கடன் தீரும்.மேலும் கடந்த 3 நாட்களாக நமக்காக இருந்த பண்டிகை இன்று பசு கன்றுக்குட்டி ஆடு போன்ற வாயில்லா ஜீவ ராசிகளுக்கும் நன்மை உண்டாக அவற்றை பூஜிக்க வேண்டும். நம்மை நம்பி உள்ளதாக நாம் நம்பி கொண்டிருக்கும் பசு ஆடு நாய் பூனை கோழி போன்ற பிராணிகளுக்கு இன்று உணவு அளிக்க வேண்டும்.அதனை இன்று துன்புறுத்த கூடாது.அடுத்து கடைசி நாள் பண்டிகை.இன்று கோ க்ரீடின பிரதிபட் என்று பெயர், நமக்கு உதவும் பசுக்களை இன்று பூஜை செய்ய வேண்டும்.
26-10-2022 புதன்கிழமை
#யமதுவிதியை இன்று சகோதரர்கள் அவர்தம் சகோதரிகள் அழைப்பை ஏற்று சகோதரிகள் இல்லம் சென்று சகோதரர்களுக்கு சகோதரிகள் கையாலே தலை வாழை இலையில் விருந்து உணவு கொடுக்க வேண்டும். இதற்கு ஒரு புராண கதை சொல்ல படுகிறது.அதன் படி எமனின் சகோதரி யமுனா தன் அண்ணனான யமனை ஒரு நாள் உணவு அளிக்க பரிமாற அழைத்தார்.ஆனால் யம லோகத்தில் சதா நேரமும் உயிரினங்களின் இறந்த பின்பு அதன் ஆத்மாக்கள் வந்த வண்ணம் இருந்ததால் அதனை கவனிக்கவே நேரம் சரியாக இருந்தது.இதனால் சகோதரி யமுனைவின் அழைப்பை ஏற்று வர இயலாது போனது.இந்த சமயத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்த பின்னர் யம லோகத்தில் வரும் ஆத்மா எண்ணிக்கை குறையவே யமனுக்கும் வேலை குறைந்தது. அப்போது தான் தன் சகோதரியின் அழைப்பு ஞாபகம் வந்தது. உடனே யமுனையிடம் சென்று படையல் உண்டு விட்டு ,இது போல் யார் ஒருவர் தன் சகோதரி கையால் இன்று உணவு உண்ணுகிறானோ அவர்க்கு நரக பயம் இல்லை என யமுனாவிற்கு வரமளித்தார்.இவ்வாறு இன்று சகோதரர்கள் தன் வீட்டில் உணவு உண்ணாமல் தன் சகோதரி வீட்டில் உணவு உண்டு ஒருவருக்கு ஒருவர் பரிசு பொருட்களை பரிமாறி கொண்டு சந்தோஷமாக இந்த தீபாவளி கொண்டாட வேண்டும்..
அனைவரும் இன்புற்று வாழ இறைவன் அருளவேண்டும்.
5 comments:
அட்வான்ஸ் தீப ஆவளி வாழ்த்துக்கள் மா... இந்தியாவில் வெடிகள் வெடிக்கும் நேரம் சொல்லி இருக்கிறார்கள் எனினும் பெரும்பாலும் அவற்றை யாரும் மதிக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
அன்புச் சகோதரிக்கு தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்
எவ்வளவு கதைகள், நம்பிக்கைகள்!!!
என்றாலும் மற்றதை எல்லாம் தவிர்த்து, சகோதர சகோதரி பாசப் பிணைப்பை வலுவாக்கும் அந்த விஷயம் பிடித்தது. அதுவும் கொடுத்து வைத்தவர்கள் ஒரு சிலரே!!!
கீதா
தீபாவளி பற்றிய பதிவு அருமை.
நிறைய விஷயங்கள் இருக்கிறது.கேரளாவில் வெடி வழிபாடு உண்டு அம்மனுக்கு.
மத்தாப்பு மட்டுமாவது கொளுத்த வேண்டும் என்று சாரும் , நானும் மாத்தாப்பு கொளுத்தினோம். ஒரு டப்பா மட்டும். அப்புறம் மீதி மத்தாப்புக்களை தங்கை பேரனுக்கு கொடுத்து விட்டேன்.
இந்த முறை மத்தாப்பு வாங்கவில்லை.
பலகாரம் தம்பி, தங்கைகள் வீட்டிலிருந்து வந்தது.
வடையும் ஒரு இனிப்பும் நாளை காலை செய்து வழிபட வேண்டும்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
தாமதமான தீபாவளி வாழ்த்துகள்.
Post a Comment