முன் என்று நினைக்கிறேன்) வழங்கிய கதை பாட் காஸ்ட்.
வாரம் மூன்று நாட்கள் கேட்ட நினைவு.
இப்பொழுது படமாக வரப் போகும் நிலையில்
இன்னும் பிரம்மாண்டமாக வர இருக்கிறது.
இது வரையில் கற்பனையில் தான்
நந்தினி, வந்தியத்தேவன், குந்தவை, வானதி
என்று மணியம் அவர்களின் கைவண்ணத்திலும், பின்னாட்களில் வினு
அவர்களின் ஓவியங்களிலும்
கண்ட பாத்திரங்கள்...
பெரிய பழுவேட்டரையர், சின்ன பழுவேட்டரையர்,செம்பியன் மாதேவி, ஆழ்வார்க்கடியான்,
மதுராந்தகர் இன்னும் பல நபர்கள்.
அந்தந்த அத்தியாயங்களின் தலைப்பு என்று சுவாரஸ்யமாகத் தொடர்ந்த காலம்.
பார்த்திபன் கனவு வந்த போது
ஜெமினியும் வைஜயந்தியும், திரு ரங்காராவும்
சில கற்பனைகளை நிறைவேற்றினார்கள்.
பின்னர் சிவகாமியின் சபதத்தில்
சிவகாமியும் நரசிம்மனுமாக,
எம்.ஜி ஆர் சரோஜாதேவி நடித்த கலங்கரை விளக்கத்தில்
சிறிதே திருப்தியுடன் காணமுடிந்தது.
பார்த்திபன் கனவு படத்தில் ரங்கா ராவ் சிவகாமிக்காகக்
கண் கலங்குவது கூட நினைவில் இருக்கிறது.
இதோ 30 செப்டம்பர் கண்முன்னே காணப் போகிறோம்
வந்தியத்தேவனையும் மற்றவர்களையும்.
மணி ரத்னம் அவர்களின் படைப்பில்
சோடை போகாத காவியமாக இது இருக்கும்
என்றே நம்பத் தோன்றுகிறது.
இந்தப் படத்துக்கான நூற்றுக் கணக்கான
வீடியோக்கள். மனத்தில் பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.
காத்திருப்போம்:)
வாழ்க வளமுடன்.
10 comments:
இரண்டு மணிநேரம் நாற்பத்தேழு நிமிடங்கள் ஓடும் படம் என்று எங்கோ படித்தேன். எல்லோர் ஆர்வமும் ஏறி இருக்கும். நம்பிக்கைகள் பொய்க்காதிருக்கட்டும்!
அன்பின் ஸ்ரீராம் ,
என்றும் நலமுடன் இருக்க வேண்டும்.
நிஜமாகவே நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.
நல்லதே நடக்கட்டும்.
வணக்கம் சகோதரி
உண்மைதான். ஓவியங்களோடு கதை படித்து ரசித்திருந்த நாம் இப்போது நேரிடையாக அந்தந்த பாத்திரங்களை காணப் போகிறோம். இது இந்தக்கதை படிக்காத இளைய தலைமுறைகளுக்கு ஒரு சுவாரஸ்யமாகத்தான் இருக்கும். அவர்கள் மட்டுமின்றி, நாமும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கிறோம். நல்லதாகவே படம் வெளிவந்து நன்மை பயக்கட்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நான் வரலை என்று சொல்லிவிட்டேன். பெண் பாட்காஸ்டைச் சில நாட்கள் கேட்டுக்கொண்டிருந்தாள். அனைவரும் 5ம் தேதி செல்கின்றனர். (அதுவரை மனைவி என்னுடன் பயணம் மேற்கொள்ளுவதால்)
நாம் படித்த பொன்னியின் செல்வனை, நாம் படித்து, பல காலமாய், மனதில் நிறுத்தி வைத்திருக்கும் காட்சிகளைத் திரையில் கொண்டு வருவது என்பது அவ்வளவு எளிதல்ல, காத்திருப்போம், பார்ப்போம்
நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கிறது அம்மா.
பேரனுக்கு பிடித்த பாட்டு நன்றாக பாடுகிறான்.
பொன்னி நதி பாட்டு பாடுகிறான்.
பாண்டி சேரி வானொலி கதை பகிர்வு கேட்டு இருக்கிறேன், கானாவில் கதை சொல்கிறார்கள் சில நேரம் கேட்கிறேன்.
படம் எல்லோர் எதிர்ப்பார்ப்பையும் திருப்தி படுத்துமா என்று தெரியவில்லை.
கதாபாத்திரங்கள் மணியம் ஓவியம், வினு ஓவியம் போல மனம் கவருமா தெரியவில்லை.
கதை சொல்லியும் நன்றாக சொல்கிறார்.
வந்தியதேவன் நினைப்பு பகிர்வு அருமை.
அன்பின் கமலா ஹரிஹரன் மா,
என்றும் நலமுடன் இருங்கள்.
பொன்னியின் செல்வன் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும்
(60,70 வயதுக்காரர்களுக்கு)
சிறிய வயது நினைவுகளைக் கிளப்பும்.
எல்லோருடைய எதிர்பார்ப்புகளையும்
நிறைவேற்றுவது கடினம் தான்.
திரு.மணி ரத்தினம் அவர்களின் இமாலய முயற்சி
வெற்றி பெறட்டும்.
இயல்பான பின்னூட்டத்துக்கு மிக நன்றி மா.
அன்பின் முரளிலா, உங்கள் பயணத்துக்கு வாழ்த்துகள்.
பாட்காஸ்ட் எளிதாக இருந்தது.
பொ.செ தொடர்ந்து படித்தவர்களுக்கு
ஒவ்வொரு உரையாடலும் நினைவில் இருக்கும்.
திரு மணி ரத்தினம் அவர்களின் உழைப்புக்கு வெற்றி கிடைக்கட்டும்.
நன்றி மா.
Post a Comment