Blog Archive

Saturday, August 06, 2022

எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

வைடமின் பி 12 குறைபாடு
++++++++++++++++++++++++++++


இந்தியாவில் நாம் தினசரி உண்கின்ற உணவுகள் ஆரோக்கியமானதாக கருதப்பட்டாலும் பல்வேறு காரணங்களால் இன்றும் அந்த உணவுகளில் பல குறைபாடுகள் உள்ளன. இரும்பு, வைட்டமின் டி, வைட்டமின் ஏ மற்றும் அயோடின் போன்றவற்றால் ஏற்படும் குறைபாடுகள் அதிகமாக மக்களுக்கு தெரிந்த குறைபாடுகளாகும். உண்மையில் இந்திய உணவில் தொடர்ந்து ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ளன.

இந்தியர்களில் சுமார் 74 சதவீதத்தினர் வைட்டமின் பி 12 ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்களாக உள்ளனர். மேலும் 50 முதல் 55 சதவீத மக்கள் வைட்டமின் பி 12 குறைபாடு காரணமாக மருத்துவ குறைப்பாட்டை கொண்டுள்ளனர்.

​வைட்டமின் பி 12 என்றால் என்ன?
+++++++++++++++++++++++++++++++++++++++++++

வைட்டமின் பி 12 நீரில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும். ஆனால் வைட்டமின் பி 12 ஐ நமது உடலால் இயற்கையாக தயாரிக்க முடியாது. இந்த வைட்டமின் மூளை ஆரோக்கியம், நரம்பு திசு ஆரோக்கியம் மற்றும் சிவப்பு இரத்த அணுக்கள் உருவாக்கம் ஆகியவற்றிற்கு உதவுகிறது.

உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு வைட்டமின் பி 12 முக்கிய பங்களிக்கிறது. மேலும் உடலில் உள்ள கொழுப்பு அமிலங்களின் ஆற்றல் உற்பத்தியிலும் இது முக்கிய பங்கை வகிக்கிறது. வைட்டமின் பி 12 ஃபோலிக் அமிலத்தை உறிஞ்சுவதற்கு உடலுக்கு உதவி செய்வதால் உடலின் ஆற்றல் அளவு அதிகரிக்கிறது.

​வைட்டமின் பி 12 நன்மைகள்
சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்க உதவுகிறது.

உடலின் ஆற்றல் மட்டங்களை மேம்படுத்துகிறது.

உடல் செயல்திறனை மேம்படுத்துகிறது.

அறிவாற்றல் திறனை மேம்படுத்துகிறது மற்றும் மூளை பாதிப்பை தடுக்கிறது.

மனசோர்வை தடுக்கிறது.

கண் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.



​வைட்டமின் பி-12 குறைபாட்டின் அறிகுறிகள்
-12-
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வைட்டமின் பி 12 குறைப்பாட்டால் பல்வேறு வகையான அறிகுறிகள் ஏற்படுகின்றன. அவற்றில் உடனே தெரியும் அறிகுறி என்றால் நமது தோலானது வழக்கத்திற்கு மாறாக வெளிர் அல்லது மஞ்சள் நிறத்தில் இருப்பது. மேலும் உணவில் வைட்டமின் பி 12 குறைப்பாட்டால் உடல் சோர்வு, மன சோர்வு, நினைவக பிரச்சனைகள் மற்றும் குழப்பம் ஆகியவை ஏற்படுகிறது. மலச்சிக்கல் மற்றும் பசியின்மையும் இதில் அடங்கும்.

மேலும் தொடர்ச்சியான வைட்டமின் குறைபாடுகளால் கடுமையான அறிகுறிகள் ஏற்படுகின்றன. கை மற்றும் கால்களில் உணர்வின்மை, கூச்ச உணர்வு, 
இரத்த சோகை மற்றும் நரம்பு பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்றன. எனவே நமது உணவில் போதுமான அளவில் வைட்டமின் பி 12 சேர்த்துக்கொள்வது மிக முக்கியமாகும்.

​வைட்டமின் பி 12 உணவுகள்
-+++++++++++++++++++++++++++++++++++++++++உணவுகளில் இருந்து மட்டுமே கிடைக்க கூடியது. இறைச்சி, மீன், முட்டை மற்றும் பால் பொருட்கள் ஆகியவற்றில் அதிக அளவு 
வைட்டமின் பி 12 கிடைக்கிறது. ஆனால் சைவ உணவு உண்பவர்கள் தங்கள் தினசரி தேவையான வைட்டமின் பி 12 அளவை பெறுவது கடினமாகும்.

சைவ விரும்பிகளுக்காக சந்தைகளில் கிடைக்கும் வைட்டமின் பி 12 பொருட்களாலும் பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. மேலும் அவற்றில் வைட்டமினின் அளவு மிக குறைவாகவே உள்ளன. இரைப்பை அசெளகரியம், வீக்கம் போன்றவை 
இதனால் ஏற்படும் பக்க விளைவுகளாக உள்ளன.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மேற்கொண்ட விவரங்கள் சென்னையில் அறிந்து கொண்டவை.

முன்பெல்லாம் பி12  இஞ்செக்ஷன் மூன்று தடவை 
போட்டுக் கொண்டாலயே தெம்பு வந்துவிடும்.
எனக்கு, மகன் மருமகளுக்கு இந்தக் குறைபாடு 
இருப்பதாகச் சொன்னார்கள்.இன்னும் இந்த வலிகள் தொடர்கின்றன.
சென்னை ரத்தப் பரிசோதனையில் தெரிந்து கொண்ட குறைபாடுகளைச்
சீக்கிரமே சரி செய்ய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்..


நானாவது பரவாயில்லை. ஓய்வாக உட்காரலாம்.
மற்றவர் ஓடும் வயதாயிற்றே!!!

நம் வழியில் இதைச் சரிப்படுத்த முயற்சிக்கலாம்.

வெகு நாட்கள் ,அதாவது கிட்டத்தட்ட 42 நாட்கள்!!
எழுத்தை விட்டு விலகி இருந்ததில்லை.

நிறைய எழுத்தை, எங்கள் ப்ளாகை ,நட்புகளின் பதிவுகளைப்
படிக்கவில்லை. 
அனைவரிடமும்  என்ன சொல்வது என்று
தெரியாமல் விலகி இருந்து விட்டேன்.

அதிக அளவு அசதியே காரணம். 
நிம்மதி கொடுத்தது சென்னை நாட்கள். சென்னையின் சத்தம்,
தமிழில் பேசிய  விடுதி பணியாளர்கள்
எல்லாமே போனஸ். 
வீட்டின் முழு சீரமைப்பு காரணமாக மகனால் என்னை வெளியே
அழைத்துச் செல்ல முடியவில்லை.

கடைசிவாரம் வீட்டுக்குச் சென்று வர முடிந்தது.
எத்தனையோ கோட்டைகள் கட்டியபடி ஆரம்பித்த
விடுமுறை  பண செலவழிப்பு +உறவினர்களைக் காண
முடியாத நிலையில் பூர்த்தியானது.
மீண்டும் சென்னை நாட்கள் எப்போதாவது கிடைக்கும் 
என்று நம்புகிறேன். அன்பு நட்புகளுக்கு வணக்கம்.





வைட்டமின் பி 12 மனிதர்களுக்கு இன்றியமையாத ஒரு வைட்டமின் ஆகும். எனவே அவற்றை பெறுவதற்கான சரியான உணவை தேர்ந்தெடுப்பது முக்கியமாகும். மேலும் அவற்றை தேவையான அளவில் உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளவும். தினசரி குறிப்பிட்ட அளவு வைட்டமின் பி 12 எடுத்துக்கொள்ள வேண்டும்

16 comments:

KILLERGEE Devakottai said...

வணக்கம் அம்மா நலமா ?

தங்களது பதிவு கண்டதில் மகிழ்ச்சி நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள் வாழ்க நலம்.

நெல்லைத் தமிழன் said...

பால் எவ்வளவுதான் எடுத்துக்கொள்வது? தினசரி உணவில் அது இல்லை.

ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்கள் பதிவைப் படிக்கிறேன். சந்தோஷம்.

Thulasidharan V Thillaiakathu said...

ஆமாம் அம்மா இந்த விட்டமின் குறைபாடு பற்றி கூகுள் பல கட்டுரைகளை அனுப்பிக் கொண்டே இருக்கிறது.

அடடா உங்களுக்கும் குறைபாடு இருக்கா? சரியாகிடும் அம்மா...

நீங்கள் சொல்லியிருப்பது அனைத்தும் சூப்பர் பாயின்ட்ஸ்!

சைவம் சாப்பிடுபவர்களுக்குன்னா நீங்க சொல்லியிருப்பது போல் பால பால் பொருட்கள்...நீங்க இப்ப ஸ்விஸ்ஸில் இருப்பதால் ஸ்விஸ் சீஸ் விட்டமின் பி 12 க்கு நல்ல உணவுன்னு சொல்வதுண்டு எனவே அதுல லோ கலோரி இருக்குனா சாப்பிடலாம்னு நினைக்கிறேன்.

ஃபோர்ட்டிஃபைட் சீரியல்ஸ் அங்க நல்லா கிடைக்குமே அதுவும் சாப்பிடலாம்.

சப்ளிமென்ட்ஸ்

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

மீண்டும் சென்னை வாய்ப்பு கிடைக்கும் அம்மா. உங்கள் உடம்பும் அதுக்குள்ள இன்னும் தெம்பு ஆற்றல் பெற்றுவிடும்!!நல்லது நடக்கும்!

கீதா

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

நலமா? எப்படியிருக்கிறீர்கள்? ஊருக்கு நலமாக வந்தாயிற்றா? நீங்கள் இல்லாமல் பதிவுலகில் எங்களுக்கும் தினமும் வெறிச்சென்று இருந்தது. உங்கள் அன்பான வரவை தினமும் தேடிக்கொண்டிருந்தோம்.

பி12விட்டமின் பற்றிய பதிவு நன்றாக உள்ளது. இப்போதுள்ள காலகட்ட உணவில் இதன் குறைபாடுகள் நீங்கள் சொல்வது போல் அதிகமாகத்தான் உள்ளது. அனைத்து மக்களுக்கும் இந்த விட்டமின் குறைபாடுகள் நிறைய தெரிகிறது.இதன் குறைவால் ஏற்படும் நோய்களின் விளைவுகள் அதி பயங்கரமாகத்தான் உள்ளது. தாங்கள் தங்கள் உடல் அசதியை நன்றாக போக்கிக் கொள்ள ஓய்வெடுக்கவும்.எங்களையெல்லாம் பிரிந்திருந்த வேதனையை நீங்களும் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். உடம்பை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்.உடல் அசதிகள் எல்லாம் நன்றாக குணமானதும் பிறகு பதிவுலகிற்கு வரலாமே.... பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

ஸ்ரீராம். said...

நேற்றுதான் நினைத்தேன். அம்மாவை இன்னமும் பிளாக் பக்கம் காணோமே.. ஊர் சென்று நாளாச்சே என்று... மீண்டும் தொடங்கி விட்டது சந்தோஷம். உடல்நிலையில் கவனம் வையுங்கள். உற்சாகமாக இருங்கள்.

ஸ்ரீராம். said...

முன்பெல்லாம் ஆஸ்டோகால்சியம் B 12 என்கிற மாத்திரை சந்தையில் கிடைக்கும்.  சரிவிகிதத்தில் கால்சியமும், பி காம்ப்ளெக்ஸும் கலந்த மாத்திரை.  இப்போது கிடைக்கிறதோ இல்லையோ தெரியாது.

Geetha Sambasivam said...

ஒரு வழியாய் ஒன்றரை மாதத்திற்குப் பின் இணையம் வந்துட்டீங்க. உடல் நலத்தைக் கவனித்துக் கொள்ளவும். பி12 க்கு நான் தினமும் மாத்திரை சாப்பிட்டு வருகிறேன் பல வருஷங்களாக! எப்போது யு.எஸ்? இப்போ வயிறு பரவாயில்லையா? கவனமாக உணவு எடுத்துக்கொள்ளுங்கள்.

மாதேவி said...

உங்கள் விடுமுறையின் பின்பு .மீண்டும் பகிர்வுகள் தொடர்வது மகிழ்ச்சி.

திண்டுக்கல் தனபாலன் said...

உடல்நலம் முதலில்...

நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் அம்மா...

கரந்தை ஜெயக்குமார் said...

உடல் நலனைக் கவனித்துக் கொள்ளுங்கள் சகோதரி

Thulasidharan V Thillaiakathu said...

மீண்டும் இணையம் பக்கம் வந்தமை நன்று. உங்கள் உடல் நலம் சீராகிவிடப் பிரார்த்தனைகள்.

பி12 பற்றி வீட்டிலும் பேச்சு எழுவதுண்டு, கூடவே வேறு பல விட்டமின்கள், உடல் ஆரோக்கியம் என்று, மூன்று பிள்ளைகளுமே மருத்துவம் படிப்பதால் அவ்வப்போது எழுவதுண்டு.

துளசிதரன்

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவ கோட்டைஜி,
என்றும் நலமுடன் இருங்கள்.

நெடு நாட்கள் கழித்து உங்களைச் சந்திப்பதில்
மிக மகிழ்ச்சிமா. கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முரளிமா,
என்றும் நலமுடன் இருங்கள்.

வைட்டமின் டி குறைபாடும் , இதுவும் சேரும்போதுதான்
விளைவுகள் உறைக்கின்றன.
அதுவும் நம்மூரில் டாக்டர் விளக்கிச் சொன்னதும் தான் தெரிகிறது.

பால் கூட அதிகம் எடுக்க முடியாது.
வயிறு தாங்காது.
நன்றி மா. கடக்கலாம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் அனைவருக்கும் வணக்கம். பலவித

வலிகளால் இயலாமை. மீண்டும் வர வேண்டும்
என்று நம்புகிறேன்.
அன்புக்கு நன்றிகளும் வணக்கங்களும்.

கோமதி அரசு said...

முடிந்த போது பதிவு போடுங்கள்.
உடல் நலத்தை பார்த்து கொள்ளுங்கள்.

வெளி நாட்டினருக்கு வைட்டமின் டி குறைபாடு பெரும்பாலும் இருக்கும் வெயில் குறைவு என்பதால் என்பார்கள். இப்போது நம் நாட்டினருக்கும் குறைபாடு இருக்கிறது எங்கிறார் மருத்துவர்.
அடுக்கு மாடி குடியிருப்பு வெயிலே பட மாட்டேன் என்கிறது. வத்தல் வடகம் போடுவதும் போச்சு.

மாத்திரைகளாக எடுத்து கொள்வதை விட வெயில் படுவது போல நடக்க சொல்கிறார் மருத்துவர்.