Blog Archive

Wednesday, May 25, 2022

சின்ன வெங்காயம் பயன்கள்.

வல்லிசிம்ஹன்


 சின்ன வெங்காயம் பயன்கள்.

ஜலதோஷம் வந்தால் ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு தின்று, வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறையும், தும்மல், நீர்க்கடுப்பு குணமாகும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தக்கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும். மூல நோய் இருப்பவர்கள் உணவில் அதிகமாக வெங்காயம் சேர்ப்பது நல்லது.''



++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 

சின்ன வெங்காயத்தின் 10 மருத்துவ பயன்கள் !

சின்ன வெங்காயம் உடலுக்கு மிகவும் நல்லது .சின்ன வெங்காயத்தில் கால்சியம் , மினரல் ,வைட்டமின் ,ஐயன் ,பொட்டாசியம் ,பாஸ்போரோஸ் இது போன்ற சத்துகள் உள்ளது .பெரிய வெங்காயத்தை விட சின்ன வெங்காயத்தில் அதிக சத்து உள்ளது .ஆனால் நாம் பெரிய வெங்காயத்தை உரிப்பது எளிமை என்று பெரிய வெங்காயத்தை பயன் படுத்துகிறோம் ,சின்ன வெங்காயத்தில் மட்டுமே அதிக அளவு சத்து உள்ளது .இதில் சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் முழுமையான சத்து கிடைக்கும் .இதனால் தினமும் ஒரு சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள இரத்த குழாயில் அடைக்கும் கொழுப்பை கரைத்து இதய நோய் வராமல் தடுக்கும்.

சின்ன வெங்காயத்தின் 10 மருத்துவ பயன்கள் !
 யுரிக் அமிலம் அதிகமாக நம்முடைய சிறுநீரக பையில் சேர்வதால் தான் கற்கள் உருவாகிறது ,இதற்கு தினமும் சின்ன வெங்காயம் சாப்பிட்டால் கற்கள் கரைந்து ஓடிவிடும்.

  வயது ஆக  ஆக மூட்டு வலி வரும் இதற்கு சின்ன வெங்காயம் நல்ல மருந்து ,இரவு உறங்குவதற்கு முன் சின்ன வெங்காயம் சாப்பிட்டு வந்தால் இருமல் ,சலி ,நுரை ஈரலில் அடைப்பு ,மூக்கடைப்பு போன்ற பிரச்னை தீரும்.

பல் வலி ,பல் ஈறில் வீக்கம் இருப்பவர்கள் சின்ன வெங்காயம் மெல்லலாம் ,இதனால் வாய் தூறு நாற்றம் வராது .இரவு உறங்குவதற்கு முன் சின்ன வெங்காயம் எடுத்து கொண்டால் நரம்பு தளர்ச்சி வராது ,உடலும் பலம் பெரும்.



    இரவு தூக்கம் வர வில்லை என்று கூறுபவர்கள் சின்ன வெங்காயத்தை மென்று இளசுடான தண்ணீரை குடித்தால் இரவு நன்றாக தூக்கம் வரும்.

 
Related: வயிற்றுப்புண்(Gastric ulcer or peptic ulcer) மற்றும் குடல் புண் (Duodenal ulcer) அதிகப்படியான பாதிப்பு மற்றும் அதன் தீர்வுகள்
  சின்ன வெங்காயத்தை சாப்பிட்டால் உடலில் உள்ள கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்கும்.

   செரிமானம் ,வயிற்று பிரச்னை குணமாகும்,நோய் எதிர்ப்பு சக்தி கூடுவதற்கு சின்ன வெங்காயம் எடுத்து கொள்ளலாம்.

  சிலர்க்கு மூக்கில் இருந்து இரத்தம் வருகிறது என்றால் சின்ன வெங்காயத்தின் சாறை மூக்கில் தினமும் 2 சொட்டு விடுவதனால் சீக்கிரமாக குணமாகும்.

     இதனுடன் காது வலி தொடர்ச்சியாக இருப்பவரும் 2 சொட்டு விடுவதனால் குணமாகும் .சின்ன வெங்காயத்தை தேனுடன் கலந்து சாப்பிட்டால் மூலம் சமந்தமான பிரச்னை குணமாகும்.

     சின்ன வெங்காயத்தை வேகவைத்து சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிட்டால் சீக்கிரமாக நல்ல பயன் கிடைக்கும்.

20 comments:

ஸ்ரீராம். said...

ஆம், என் அப்பா மூல நோய் இருந்ததால்தான் அவ்வப்போது வெங்காயம் வதக்கி சாப்பிடுவார்.  தாளிக்கும் கரண்டியிலேயே இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு அம்மா வதக்கித் தருவார்.

ஸ்ரீராம். said...

எங்கள் அம்மா காலங்களில் பெரிய வெங்காயம் பெரும்பாலும் உபயோகித்ததே இல்லை.  எப்பவும், எதிலும்  சின்ன வெங்காயம்தான்.  இப்படி மருத்துவ குங்கங்கள் கொண்ட வெங்காயத்தையும், பூண்டையும் அசைவம் மாதிரி ட்ரீட் செய்கிறார்களே...!!!

ஸ்ரீராம். said...

சிறுவயதில் காலையில் நீராகாரம் சாப்பிடும்போது சின்ன வெங்காயத்தைதான் பச்சையாக பச்சக் என்று கடித்து சாப்பிடுவோம். வதக்கும்போது இருப்பதை விடவும் சற்று காரம் தூக்கலாகவே இருக்கும்! ஆனால், என்னிடம் பேசும் எதிராளிக்குதான் பாவம் கஷ்டம்!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
என்றும் நலமுடன் இருங்கள்.

எங்க தாத்தாவுக்குப் பாட்டி கொடுப்பார்.
எங்க அப்பாவுக்கு அம்மா சின்ன வெங்காயம் தயிர்
சேர்த்து தருவார். அப்பாவுக்கு அல்சர் இருந்தது.

எங்களுக்கு காலை உணவு பழைய சாதம்,மோர் , வெங்காயம்:)
அது போல ரசித்து சாப்பிட்ட நாட்களை நினைக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

எங்கள் அம்மா காலங்களில் பெரிய வெங்காயம் பெரும்பாலும் உபயோகித்ததே இல்லை. எப்பவும், எதிலும் சின்ன வெங்காயம்தான். இப்படி மருத்துவ குங்கங்கள் கொண்ட வெங்காயத்தையும், பூண்டையும் அசைவம் மாதிரி ட்ரீட் செய்கிறார்களே...!!''

எனக்கும் புரியவில்லை. பெரிய வெங்காயமாவது
அசிடிக்.
சி வெ நல்லதே.
அதை சாப்பிட்டுவிட்டுப் பல் தேய்த்து விட்டு வெளியில் செல்லலாம்:)

ஓ உங்க வீட்டிலும் இந்த சி வெ ,பமி காம்போ
உண்டா. க்ரேட் மா. நன்றி ஸ்ரீராம்.

நெல்லைத்தமிழன் said...

இப்போவும் தெரிந்தவர்களிடத்தில், அவ்வப்போது நான் வெங்காயம் சாப்பிடுவேன் என்பதைக் குற்ற உணர்ச்சியுடன்தான் சொல்கிறேன்.

அது வாய் மணத்தைக் கெடுப்பதால் பசங்களுக்குப் பிடிப்பதில்லை.

Geetha Sambasivam said...

நாங்களும் சின்ன வெங்காயமே அதிகம் பயன்படுத்துகிறோம். காலையில் பழையதுடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்துச் சாப்பிட்டதுண்டு. கல்யாணம் ஆகி வரும் வரை பெரிய வெங்காயத்தைப் பார்த்ததில்லை.

வெங்கட் நாகராஜ் said...

சின்ன வெங்காயத்தின் பலன்கள் இங்கே சொன்னது சிறப்பு.

Thulasidharan V Thillaiakathu said...

ஆமாம் அம்மமா சின்ன வெங்காயம் அதிகம் பயன்படுத்துகிறோம். அதுவும் முன்பு எல்லாம் பழைய சாதம் சி வெ கடித்து சாப்பிடுவதுண்டு இப்பவும் அவ்வப்போது. பெரும்பாலும் காலையில் கொஞ்சம் நீராகாரம். ஊரில் இருந்த வரை அம்மாவும் அப்பாவின் அம்மாவும் எங்களுக்கென்று தனியாகச் சின்ன வெங்காயம் சேர்த்து ஏதேனும் செய்து தருவார்கள். திருநெல்வேலிப்பக்கங்களில் சி வெ தான் அதிகம் பயன்படுத்துவதுண்டு.

இப்போதும் பெரிய வெங்காயம் வாங்கினாலும் சி வெ பார்த்துவிட்டால் வாங்கிவிடுவேன்.

இதோ இப்போதுகூட ராத்திரிக்கு மோர் சாதம்தான் இன்று. அதற்கு சி வெ தான் வதக்கிக் கொண்டிருக்கிறேன்!!!!!!

அப்பாவும் சாப்பிடுவார் அதனால் இங்குப் பிரச்சனை இல்லை.

ஆனால் எங்கள் வீட்டில் ஏதோ நாங்கள் அசைவம் சாப்பிடுவதைப் போலச் சொல்வார்கள். ஹாஹாஹாஹாஹா

கீதா

மாதேவி said...

ஸ்ரீராம் கூறியதுபோல நாங்கள் சிறுவர்களாக இருந்த காலத்தில் சின்னவெங்காயம்தான் வீடுகளில்.
சின்னவெங்காயத்தின் மணமும் ருசியும் பெரிய வெங்காயத்தில் வராது.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவு அருமை. சின்ன வெங்காயத்தின் பலன்களை முழுமையாக அறிந்து கொண்டேன். முன்பெல்லாம் இதன் பயன்பாடு எங்கள் இல்லத்திலும் அடிக்கடி இருந்து வந்தது. இப்போது எப்பவாவது என குறைந்து விட்டது. சின்ன வெங்காயம் இனி அடிக்கடி சேர்க்க வேண்டும்.தாங்கள் தந்த பயனுள்ள தகவல்களுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முரளிமா,
என் தந்தையும் இப்போது எங்கள் பெரிய மகனும்
சி வெ சாப்பிடவில்லை.
குற்றம் இருப்பதாகத் தெரியவில்லை.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.

சின்ன வெங்காயத்தின் மீது அம்மா அப்பாவுக்கு நல்ல நம்பிக்கை.
பர ந்யாசம் செய்த பிறகு விட்டு விட்டார்கள்.
அது வயிற்றுக்கு நல்லது செய்ததால்
அவர்களுக்குப் பிடித்தது.

என் சின்ன வயதில் , தலையில் வந்த புண்ணுக்கு
ஸ்ரீஹரி வைத்திய முறையில்
சின்ன வெங்காயம் வதக்கி அரைத்துப் பற்றுப்
போட்டு குணப்படுத்தினார் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதா ரங்கன்,
எப்போதும் நலமுடன் இருங்கள்.
எங்கள் பாட்டி அப்பாவோட அம்மா, சிவெ, கீரை மசியல் அடிக்கடி செய்வார்.

அதனால் தான் எங்க அம்மாவுக்கும் அந்த வழக்கம் வந்தது.
அம்மாவோட அம்மா வீட்டில்
வெங்காயமே ஆகாது:(
நம் அப்பாவுக்கு வெங்காயம் இல்லாமல் சாப்பாடே இறங்காது.

என்ன நல்ல வதக்கல் இருந்தாலும்
வெங்காயம் நறுக்கி வைக்க வேண்டும்.

இப்போ நினைத்தாலும் நறுக்கி வைக்காத
நாட்களுக்காக வருத்தமாக இருக்கு.
உங்கள் அப்பாவும் சாப்பிடுவது மகிழ்ச்சி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,
நலமுடன் இருங்கள்.

''ஸ்ரீராம் கூறியதுபோல நாங்கள் சிறுவர்களாக இருந்த காலத்தில் சின்னவெங்காயம்தான் வீடுகளில்.
சின்னவெங்காயத்தின் மணமும் ருசியும் பெரிய வெங்காயத்தில் வராது.''

இதைத்தான் சொல்ல வந்தேன். பெரிய வெங்காயத்தில்
நல்ல குணம் இருக்கிறதா, இல்லையா என்று. தெரியவில்லை
நன்றி மா.

Geetha Sambasivam said...

ஆமாம், ரேவதி, எனக்கும் சொல்ல மறந்து விட்டது. சாதாரணமாகவே தலைக்குத் தேய்த்துக்குளிக்கும் எண்ணெயில் அம்மா சின்ன வெங்காயம் போட்டுக் காய்ச்சுவார். பிரசவம் முடிஞ்சதும் காய்ச்சும் எண்ணெயில் சின்ன வெங்காயம், வசம்பு, கொம்பு அரக்கு, வெந்தயம், நெல்லிமுள்ளி எல்லாம் தட்டிப் போட்டுக் காய்ச்சுவார். அந்த எண்ணெய் தான் தலைக்கும்/உடம்புக்கும். உடலில் வெயிலினால் வரும் வேர்க்குரு/கொப்புளங்கள் போன்றவற்றிற்கும் இது நல்ல பலன் தரும்.

கோமதி அரசு said...

சின்ன வெங்காயத்தின் பயன்கள் பகிர்வு அருமை.
ருசியான உணவுக்கு சின்ன வெங்காயம்தான்.

வல்லிசிம்ஹன் said...

@கமலாஹரிஹரன்,
அன்பின் கமலாமா,
நாங்கள் திருமங்கலத்தில் இருக்கும் போதுதான்
நிறைய சின்ன வெங்காயம் கிடைத்தது. ருசியாக இருக்கும். பின்னர் திண்டுக்கல்லிலும்
கிடைத்தது.

மருத்துவ குணங்கள் இருப்பதால் சிவே நல்லபடியாக
உபயோகிக்கலாம்.
''இல்லத்திலும் அடிக்கடி இருந்து வந்தது. இப்போது எப்பவாவது என குறைந்து விட்டது. சின்ன வெங்காயம் இனி அடிக்கடி சேர்க்க வேண்டும்.தாங்கள் தந்த பயனுள்ள தகவல்களுக்கு மிக்க நன்றி''

காலங்களுக்கு ஏற்ப பயனும் மாறுகிறது அம்மா.
இங்கே இனி பயன்படுத்த நினைக்கிறேன். பித்ரு தினங்கள் அல்லாத நாட்களில்

பயன்படுத்தாலும்
தாமதமாகப் பதில் எழுதுவதற்கு மன்னிக்கணும்.
நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
நலமுடன் இருங்கள்.

''எண்ணெயில் சின்ன வெங்காயம், வசம்பு, கொம்பு''

இதுதான் என் அம்மா செய்த மருந்து.
15 நாட்களில் தலை புண் சரியானது.
எனக்கு
முடி அடர்த்தியாக இருக்கும். அம்மாவுக்கு
எப்பொழுதுமே தலையில் புண் வந்தால்
பயம்.

பாவம் கண்ணாகப் பார்த்துக் கொண்டாள்.

உங்களுக்கும் இது தெரிந்திருப்பது. மிக, மிக மகிழ்ச்சி.
நன்றி மா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.
தங்கை தான் இந்தக் கட்டுரை எல்லாம் அனுப்புகிறாள்.
உண்மையிலேயே எனக்கு இவ்வளவு விவரம் தெரியாது.
என் அம்மாவுக்குத் தெரிந்திருந்து
எனக்கு அதிசயமாக இருந்தது மா.
நன்றி தங்கச்சி.