Blog Archive

Wednesday, April 20, 2022

நயாகரா மறக்க முடியாத அனுபவம் 3


வல்லிசிம்ஹன்

அனைவரும் வளமாக வாழ வேண்டும்.இது ஒரு மீள் பதிவு. 
ஆகஸ்ட் 2008 இல் நயாகராவை இரண்டாம் தடவையாகக்
காணச்சென்ற போது,
படங்கள் மட்டும் தான் எடுத்தேன்.
அப்போது வீடியோ எடுத்துப் பதிவு செய்யத் தெரியாது.

அருவியின் பல படங்களில் மகளும்,அவள் குழந்தைகளும் 
இருப்பதால்  இங்கே பதிய முடியவில்லை.

back to old:)😑😏😐😆😈😖😕😔
ஆகஸ்ட் 8ஆம் தேதி காலை அம்மாவின் மறதி தெளிவாக எல்லாராலும் விலாவாரியாக
விவாதிக்கப்பட்டது.
மற்ற இரண்டு பேரும் தொலைவில் ஐஎஸ்டி பேசும் தூரத்தில் இருந்ததால் அவர்களுக்கு செய்தி போகவில்லை.
பெண் உடனேயே நீ உட்கார்ந்துக்கோம்மா .விழுந்துவிடாதே ஏதாவது செய்து உன்னை க் காப்பாற்றி விடுகிறேன்'' என்று ஆறுதல் சொன்னாள்:). எனக்கு பெரிய கஷ்டமாக இல்லை. உள்ளூர கொஞ்சம் பயம்.
அடுத்த பிளான் நாங்கள் கனடா விசாவுக்குப் போவது,
மகள் சிகாகோவில் அவளுடைய வைத்தியரிடம்(  டாக்டர் லதா நாக்பால்)
 நிலைமையைச் சொல்லி மருந்து ப்ரிஸ்க்ரிப்ஷன் கேட்பது.
அவள் சிகாகொவுக்குப் போன் போடும்முன் நான் வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டுவிட்டேன்.

..அவங்க கிட்டெ என் மருந்து பேரை மட்டும் எழுதிக் கொடுத்துவிட்டு கிடைக்கணுமே சாமின்னு பிள்ளையார்கிட்டச் சொல்லிட்டு அப்புறம் ராகவேந்திரர் கிட்ட ஒரு அப்ளிகேஷன் கொடுத்துவிட்டுக் கனடியன் அலுவலகத்துக்குப் போனோம்.
எல்லாவற்றையும் ஆராய்ந்து ஒரு மணிநேரத்தில் விசா
வந்து வாங்கிக் கொள்ளச் சொல்லவும் நாங்கள் அங்கியே உட்கார்ந்துவிட்டோம்.
ஒருவழியாக வீடு வந்து சேரும்போது மணி ஒன்று.
அதற்குள் மகள் டாக்டரிடம் பேசி,திரும்பிப் போனதும் அவளுக்கு உண்டான குசல விசாரிப்புகளைச் சொல்லுவதாகச் சொல்லி(KIND Enqueries and  thank you money gift:) )

ப்ரிஸ்க்ரிப்ஷனை லோக்கல் சிவிஎஸ் மருந்துக்கடையில் சொல்லிவிட்டாள்.


எனக்கு வெட்கம் ஒரு புறம் அவமானம் ஒரு புறம். பிரச்சினை தீர்த்துக் கொடுத்தாளே மகராஜின்னு நன்றி ஒரு புறம்.
நண்பருக்கு நன்றிகள் சொல்லிவிட்டு வண்டியை எடுத்து பெட்ரோல் ஸ்டேஷனுக்கு வந்தோம்.
அங்கேயிருந்து மருந்துக்கடையில் அவர்கள் கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொல்லி, 30 டாலர் மனசு
ஆகாமல் கொடுத்துவிட்டு வெளியே வந்தோம்.
'ஆம்லாங் ஏ' நம்ம ஊரில இந்த விலைக்கு ஐந்து ஸ்ட்ரிப் வாங்கி இருக்கலாம்.
எப்படியோ நிலைமை கட்டுக்கு மீறாமல் காப்பாற்றித் தந்த அந்த டாக்டரம்மாவைச் சொல்லணும்.
இவ்வளவு முயற்சியும் எடுத்துக் கொண்ட மகளையும் சொல்லணும்.

present tense  pun intended.
அவளுக்கு இப்பவும் அந்த வேலை இருக்கிறது.(2022)
மாதா மாதம் எனக்கு வேண்டும் என்கிற  இரண்டு மருந்துகளுக்கும் 
கடைக்கு  ஞாபகப் படுத்தி எடுத்து
வைக்கச் சொல்லி வெளியே போகும் போது 
வாங்கி வந்துவிடுவாள்.
மற்ற மருந்துகள் இந்தியாவிலிருந்து வரவழைப்பதும் அவளே.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இப்போத  2008க்குப் போகலாம்.
மருந்துக்கடையிலிருந்து வெளி வந்து சூசன் அம்மா சொல்கிறதைக் கேட்டுக் கொண்டு ஆர்சார்ட் லேக் அண்ட்
13 மைல் ரோடில்  (அதுதான் பெயர்) திரும்பினோம்.
இந்த ஒரு திருப்பத்துக்கப்புறம் இனிமேல் ஒரே நகைச்சுவைதான் சரியா.

இந்தத் திருப்பத்தில் பின்னாலிருந்து வந்த ஒரு வெள்ளைக்கார அம்மா எங்க வண்டி பம்பரை ஒரு தட்டு தட்டிவிட்டு
வண்டியைக் குறுக்கே போய்க் கொஞ்சம் தள்ளி நிறுத்தினாள்.
நாங்கள் அலறிவிட்டோம்.
அவள் இடித்த சைடில் இருந்த சின்னது அதோட கார்சீட்டில் ஷாக் அடித்த மாதிரி அழ ஆரம்பித்துவிட்டது.
அன்று நாங்கள் டொரண்டோ கிளம்பப் போவதில்லை என்பது தெளிவாகியது.
ஏனெனில் கொஞ்ச நேரத்தில் போலீஸ் மாமாவும் வந்துவிட்டார். மிசிகன் சட்டப்படி இரண்டு பேரும் ம்யுச்சுவல்
செட்லிங் செய்து கொள்ளலாம் என்று சொல்லிவிட்டுப் போனார்.
மாப்பிள்ளை இன்ஷுரன்ஸுக்கும், கார் ரிப்பேருக்கும் போன் செய்ய ஆரம்பித்தார்.
நாங்கள் வண்டியில் உட்கார்ந்து கொண்டு கேட்டுக் கொண்டிருந்தோம்.
சிங்கம் நடுரோடில் நின்ற காருக்கு அவசிய சிகித்சை செய்தார்.
ஒரு இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும், கிளம்பி வந்த நண்பர் வீட்டுக்கேப் போய்ச் சேர்ந்தோம்.
விருந்தோம்பலில் சலிக்காத அந்தப் பெண்ணை நான் மறக்க முடியாது.

மீண்டும் பார்க்கலாம்.


அதனால் நயாகராவின் முக்கிய அங்கங்களை
யூடியூபிலிருந்து எடுத்துப் பதிவிடுகிறேன்.
கீதா சாம்பசிவம் சொல்வது போல
சில வீடியோ வரவில்லை என்றால் 

நேரே  இணையத்தில் பார்க்கலாம். 
வாழ்வின் மறக்க முடியாத நீர்வீழ்ச்சியும் அதனுடைய
magical attraction   உம் மறக்க முடியவில்லை.
நான் இன்னும் நம் ஊர் குற்றாலம் கூடப்
பார்த்ததில்லை என்பதை இங்கே சொல்ல வேண்டும்:))))))))))))))))))))))))))))))))


15 comments:

கோமதி அரசு said...

நயாகரா நீர்வீழ்ச்சி காணொளிகள் அருமை. அதுவும் கடைசி காணொளி மிக அருமை. வானவில்லும், பறவை பறப்பதும் மிக அருமை.

வானவில் தெரிவதை நிறைய படம் எடுத்தோம் நாங்களும்.
மருந்து வாங்கியது மகிழ்ச்சி.
பிள்ளியயார், ராகவேந்திரா உங்கள் கோரிக்கையை நிறைவேற்றி விட்டார்கள்.

நண்பர் வீட்டு விருந்தோம்பல் மறக்க முடியாதுதான் .
குற்றாலம் பிள்ளைகளுடன் போய் வாருங்கள். ஜூன் மாதம் வருவதால் நேரமிருந்தால் பார்க்கலாம்.

ஸ்ரீராம். said...

நம்மூரில் நினைத்த மாத்திரையை நினைத்தை நேரத்தில் நினைத்த கடையில் வாங்கலாம் - ப்ரிஸ்க்ரிப்ஷன் கூட இல்லாமல்!  ஆனால் அங்கே அது செல்லாதே!  நானும் அம்லாங் ஏ தான் சாப்பிடுகிறேன்!  இரவு வேறு மாத்திரை! 

நயாகரா காணொளிகள் அருமை.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி மா. வாழ்க வளமுடன்.
ஆமாம் கணக்கில்லாமல் அற்புத வானவில்களைப் பார்த்தோம்.

நீர்த்திவலைகள் மேலே எழும்ப,
சூரியன் ஒளி அதை ஊடுருவ ஒரே கோலாஹலம்
தான்.
மறக்க முடியாத மகிழ்ச்சி.
நீங்கள் உடனே வந்து பின்னூட்டம் இட்டது
இன்னும் சிறப்புமா.

அந்த டாக்டர் இன்னும் க்ளினிக் நடத்திக் கொண்டிருக்கிறார்.
நம்ம ஊர் குஜராத்திலிருந்து வந்த ஒரு பத்து டாக்டர்களாவது இங்கே
இருக்கிறார்கள். மற்ற வைத்தியர்கள் தமிழ் நாடு, ஹைதிராபாத்
என்று நிறைய பேர்.
அவர்களுக்கு இந்திய பெற்றோர்களின் நிலை
நன்றாக விளங்குகிறது.

தொடர்ந்து படிப்பதற்கு நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

குற்றாலம் பிள்ளைகளுடன் போய் வாருங்கள். ஜூன் மாதம் வருவதால் நேரமிருந்தால் பார்க்கலாம்.''


ஈசன் மனம் வைக்கட்டும் மா.
நான் எதற்காவது ஆசைப் பட்டு ஏமாற விரும்பவில்லை.
பிள்ளைகளும் அவர்கள் குடும்பங்களும்

அவர்களது திட்டங்களும் ஒத்துப் போக வேண்டும்.


வல்லிசிம்ஹன் said...

அட! ஸ்ரீராம் ஆம்லாங்க் ஏ இன்னும் உபயோகத்தில் இருக்கா!!!!
ஆம்லாங்க் ஏ+ இன்னோரு ரத்த அழுத்த மாத்திரை சாப்பிட்டு வந்தேன்.
இப்போது அதை எல்லாம் டயபெடிஸ் செண்ட்டரில் மாற்றி விட்டார்கள்.

டெலிஸ்டா 40 இரண்டு வேளை, சுகர் மாத்திரை வெவ்வேறு இரண்டு வேளை,
க்ரெஸ்டார் ஒரு வேளை.

மதியம் எகோஸ்பிரின்.
இங்கே இன்சுரன்ஸ் கிடைக்கிறது. இருந்தும், கையை
விட்டும் போகும்.

இப்போது அங்கே வரும்போது வாங்கிக் கொண்டு வர வேண்டும்.
நீங்களும் பதிவை ரசித்ததற்கு நன்றி மா.

KILLERGEE Devakottai said...

தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அம்மா.

காணொளிகள் கண்டேன்
ஸ்விட்சர்லாண்ட் ஷாப்பன்கௌஸ் நீர்வீழ்ச்சியும் இப்படித்தான் இருக்கிறது அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவகோட்டை ஜி,
நலமுடன் இருங்கள்.
ஸ்விஸ் நாட்டின் லாட்டர் ப்ரென்னன்
கிராமத்தில் இருக்கும் இந்த நீர்வீழ்ச்சியை
அருகிலிருந்தும் தொலைவிலிருந்தும் ரசித்திருக்கிறோம்.

இன்னும் பல அருவிகள் அங்கே இயற்கை அழகில்
ஆரவாரத்துடன் இருக்கின்றன.

இந்த நயாகாரா அகலத்திலும் நீர் வரத்திலும்
உலகத்தில் முதல் இடத்தில் இருக்கிறது.
ஆஃப்ரிக்காவின் விக்டோரியா அருவியும் உண்டு.
இந்த அருவிகள் விழும் தண்ணீர் அளவுகள்.
எல்லாவற்றையும் கணக்கில்
எடுத்துக் கொள்ள வேண்டும்.

Thulasidharan V Thillaiakathu said...

ஆ காலையில் போட்ட கமென்ட் வரவே இல்லை போல! ப்ளாகர் ரோபோ தான் அனுப்பியது இப்போது கமென்டும் இங்க போகவிடலை போல...

ஆகஸ்ட் 8ஆம் தேதி காலை அம்மாவின் மறதி தெளிவாக எல்லாராலும் விலாவாரியாக
விவாதிக்கப்பட்டது.//

ஹாஹாஹாஹா அடுத்த வரியும் வாசித்து சிரித்துவிட்டேன்....ஐஸ்டி வரி!!!!!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஹப்பா எப்படியோ மருந்து கிடைத்தது மகளின் பொறுமையும் உடனடிச் செயலும் மிகவும் பாராட்ட வேண்டிய ஒன்று.

ஹாஹாஹா நானும் மகனும் போலீஸ் மாமா என்றுதான் சொல்வது நீங்களும் அப்படியே....அந்த நிகழ்வும் எப்படியோ ஒரு வழியாய் முடிந்ததே இழுத்தடிக்காமல்...அதென்ன ம்யூச்சுவல் செட்டிலிங்க்? அந்தப் பெண்மணிதானே இடித்தார் அப்போ அவங்கதானே தரணும் இல்லையோ?

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அதாவது நீங்களே உங்களுக்குள் பஞ்சாயத்து செஞ்சுக்கோங்கன்னா?

அப்புறம் எப்போது ட்ரொண்டோ கிளம்பினீர்கள்? பஞ்சாயத்து உடனே முடியலையோ?

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

நயாகரா அனுபவம், உங்கள் மருந்து கிடைத்த அனுபவம் எல்லாம் சுவாரசியமாகப் பகிர்ந்திருக்கிறீர்கள்.

அந்த போலீஸ் அந்தப் பெண்மணியை ஃபைன் பண்ணவில்லையா?

நயாகரா படத்தில்ம் இப்படிக் காணொளியிலும் பார்த்து ரசித்துக் கொள்கிறேன்

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா நயாகரா எத்தனை வாட்டி பார்த்தாலும் அலுக்காது. இப்போதைக்கு உங்கள் காணொளிகள் ...

கீதா

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

நலமா? பதிவு அருமையாக உள்ளது.நயாகரா நீர்வீழ்ச்சி படங்கள் நன்றாக உள்ளது. இரண்டாவது படம் இன்னமும் முழுமையாக பார்க்கவில்லை. பார்க்கிறேன்.பிரயாண தகவல்கள் அடங்கிய இந்தப் பதிவும் படிக்க நன்றாக உள்ளது. மேலும் நீங்கள் விளக்கங்கள் தர அறிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

தங்கள் மகள் தங்கள் மீது அந்த பிரயாணத்தில் மட்டுமல்லாது, இப்பவும் அன்பான அக்கறையுடன் செயல்பட்டு மருந்துகள் வாங்கித் தந்து தங்கள் உடல்நலனை கவனித்துக் கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது. மனமார்ந்த பாராட்டுகளை அவர்களிடம் தெரிவிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Geetha Sambasivam said...

அருமையா எழுதி இருக்கீங்க அனுபவங்களை. நல்லவேளையாய்க் கார் இடித்ததோடு போனதே. நல்ல நேரம் தான் அதுவும். மாத்திரைகளையும் எப்படியோ வாங்கி விட்டீர்கள். அதுவும் மிகவும் சந்தோஷமே.

நான் நம்ம ஊர்க் குற்றாலம் பார்த்துட்டேன். மற்றும் சில/பல அருவிகள் ஊட்டி,கொடைக்கானலில் பார்த்திருக்கேன். நயாகராவெல்லாம் போகலை. சாப்பாடுப் பிரச்னை தான்! வேறே என்ன? எங்கே கிளம்பினாலும் ஒரு நாள், இரண்டு நாள் தாக்குப் பிடிக்கும். பின்னர் ஆரம்பிச்சுடும். ஆகவே பயம். :(

வெங்கட் நாகராஜ் said...

மாத்திரை கிடைத்தது மகிழ்ச்சி என்றால் விபத்து வேதனை. பயணத்தில் தடங்கல். மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.